தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : மாலிThe role of Germany in the war in Maliமாலிப் போரில் ஜேர்மனியின் பங்கு
By Wolfgang Weber use this version to print | Send feedback ஒரு மாதத்திற்கு முன்பு பிரெஞ்சு படையினர் டாங்கிகள் மற்றும் போர் விமானங்களுடன் மேற்கு ஆபிரிக்க நாடான மாலி மீது படையெடுத்தன. அப்பொழுது முதல் ஜேர்மனி, இக்காலனித்துவ போரில் தன் ஈடுபாட்டை ஒவ்வொரு வாரமும் விரிவாக்கிக் கொண்டு வருகிறது. பேர்லின் அரசாங்கம் உடனே பிரெஞ்சுப் படையெடுப்பிற்கு தன் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்து, துருப்புக்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றை மேற்கு ஆபிரிக்க பொருளாதார ஒன்றியம் (ECOWAS) போர்ப்பகுதிக்கு அனுப்புவதற்கு இரண்டு டிரான்ஸால் (Transall) போக்குவரத்து விமானங்களை கொடுத்தது. இதற்கிடையில் பேர்லின் மற்றொரு போக்குவரத்துச் சாதனத்தையும் கொடுத்துள்ளது. ஜேர்மன் இராணுவம் விரைவில் டாக்காரில் (செனெகல்) ஒரு உதவித்தளத்தை கட்டியது. இங்கிருந்துதான் உதவியளிக்கும் படையான 75 துருப்புக்களுடன் டிரான்ஸால் விமானம் செயல்படுகிறது. போருக்கு நிதியளிக்கும் ஐக்கிய நாடுகளின் “நன்கொடையாளர் மாநாட்டில்”, மொத்த தொகையான 456 பில்லியன் அமெரிக்க டாலரில் பேர்லின் உடனடியாக 20 மில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்துள்ளது. இது மாலி இராணுவத்தை வலுப்படுத்தவும், மாலிக்கான ஆபிரிக்க தலைமையிலான சர்வதேச ஆதரவுப்பணிக்கு (AFISMA) நிதியளிக்கவும் உதவும். பாதுகாப்பு மந்திரி தோமஸ் டி மஸியர் (Christian Democratic Union CDU) முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கடந்த வார இறுதியில் கூறியது போல், ஜேர்மன் இராணுவம் 40 பொறியியலாளர்களை ஐரோப்பிய பயிற்சி பணிக்கு (EUTM Mali) அளிக்கும். இவர்கள் மாலியில் இருக்கும் படைகளுக்கு பயிற்சி கொடுப்பதுடன், ECOWAS இற்கும் போர் நடவடிக்கை நடத்தப் பயிற்சியளிக்கும். கடந்த வாரம் செவ்வாயன்று “மாலிக்கு துருப்புக்கள் வழங்குபவர்” மாநாட்டில் பேர்லின் 40 இராணுவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துணைப் பிரிவினரை அனுப்பி, ஒரு போர்க்கள மருத்துவமனையை வழங்கி அதைச் செயல்படுத்தவும் செய்யும் என பேர்லின் அறிவித்தது. ஜேர்மன் இராணுவ விமானத்தின் உதவியை பிரெஞ்சு அரசாங்கம் கோரியபோது ஏற்கனவே தொழில்நுட்பரீதியாக அதற்கு தயார் செய்யப்பட்டுவிட்டது. வான் வெளியிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முடியாவிட்டால், பிரெஞ்சு குண்டுபோடும் விமானங்களும் போர் விமானங்களும் பிரான்சு அல்லது ஆபிரிக்காவில் உள்ள தங்கள் தளங்களில் இருந்து மாலியில் தங்கள் நடவடிக்கைகளுக்காக மிக நீண்ட தூரங்களுக்குப் பயணிக்க முடியாது. இந்த நடவடிக்கைகளின் போரில் ஈடுபடும்தன்மை மற்றும் மாலிப் படையினர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி ஆகியவை மறுக்கப்பட முடியாததால், அவை மத்திய பாராளுமன்றத்தில் ஒப்புதலைப் பெற வேண்டும். இது மார்ச் மாத ஆரம்பத்தில் ஒப்புதலைத் தர வேண்டும். சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பாதுகாப்பு மந்திரி தோமஸ் டு மஸியர் மற்றும் வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்ல ஆகியோர் தாங்கள் “பிரான்ஸுடன் ஒற்றுமை” என்பதற்காகவும் “பயங்கரவாதிகளுக்கு எதிரான ஐரோப்பிய பாதுகாப்பிற்காகவும்தான்” செயல்படுவதாக சலிக்காமல் கூறுகின்றனர். இதே உண்மையற்ற போர்ப்பிரச்சாரத்துடன்தான் ஈராக்கிற்கு எதிரான போரை அமெரிக்கா நியாயப்படுத்தியது. பாரிஸும் பேர்லினும் போரின் இலக்குகள் இஸ்லாமிய மக்ரெப்பில் (AQIM) இருக்கும் அல்குவைடா, மேற்கு ஆபிரக்காவில் உள்ள ஒற்றுமை, ஜிஹாத்திற்கான இயக்கம் (MUJAO) போன்ற குழுக்களை அகற்றுவது என்று கூறுகின்றன. இந்த அமைப்புக்களுக்குத்தான் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அவற்றின் நட்பு நாடுகளான கட்டார், சவுதி அரேபியா ஆகியவற்றால் முயம்மர் கடாபிக்கு எதிரான போரில் நிதியும், ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன. சிரியாவில், அல் குவைடாவுக்கு வெகு நெருக்கமானவை அல்லது அதனுடன் இணைந்து இயங்குபவை அல்லது அதற்கு உள்ள அல்-நுஸ்ரே (al-Nusra) போன்ற அமைப்புக்கள் NCSROD எனப்படும் சிரிய புரட்சி மற்றும் எதிர்தரப்பு சக்திகளின் தேசியக் கூட்டணியின் ஒரு பகுதி ஆகும். இது நேட்டோ சக்திகளாலும் வளைகுடா நாடுகளாலும் “சிரிய மக்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள்” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அசாத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக இவற்றிற்கு ஆயுதங்களும் நிதிகளும் அளிக்கப்படுகின்றன. மாலியில் நடக்கும் போர் ஒரு அழுக்கு நிறைந்த காலனித்துவ போராகும். இது ஒன்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” அல்ல. மாறாக சஹேலை (Sahel) இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, நீண்டக்கால அளவில் அதன் இன்னமும் பயன்படுத்தப்படாத மிக அதிக இயற்கைவளங்களை கொள்ளயடித்தலுக்காக நடப்பதாகும். அங்கு ஆட்சி நடத்தும் தேசிய முதலாளித்துவ ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையும், மக்களால் வெறுக்கப்படுபவையுமாகும். அவை அதிகாரத்தில் தொற்றிக் கொண்டு இருப்பதற்குக் காரணமே எழுச்சிகளை பிரெஞ்சு இராணுவத்தின் உதவியால் அடக்குவதால்தான். இந்த இலக்கை ஒட்டி, பிரான்ஸ் அதன் முன்னாள் காலனிகளில் கடற்படைப் பிரிவுகள், டாங்குகள், போர் விமானங்கள் ஆகியவற்றுடனான தளங்களை பாதுகாத்துக்கொள்ளும். இதற்கு ஈடாக, பிரான்ஸும் பிற வெளிநாட்டு சுரங்க நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் மலிவான விலைக்கு நிலம் பெறுதல், சுரண்டும் உரிமைகள் மற்றும் சுரங்கத்துறையில் சலுகைகள் ஆகியவற்றை பெறுகின்றன. பிரான்ஸ் மாலிப் படையெடுப்பின்போது அண்டை நாடுகளில் உள்ள அதன் இராணுவத் தளங்களையும் பயன்படுத்துகிறது. சஹேலுக்கு எதிரான அதன் போரில் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளால் உதவியளிக்கப்படுகிறது. லிபியப் போர் போலவே, பிரித்தானியா உடனடியாக தன் ஆதரவை அறிவித்தது. நிதி மற்றும் ஆயுதங்களை தவிர, பிரதம மந்திரி கமெரோன் சில நூறு படையினரையும் அனுப்புவதாக கடந்த வாரம் உறுதியளித்துள்ளார். நைஜரில் ஒரு நிரந்தர இராணுவத் தளத்தை நிறுவ இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 300 பேர் கொண்ட ஓர் உயர்பயிற்சி பிரிவைத்தவிர, அங்கு ஆளற்ற விமானங்களான டிரோன்களும் நிலைகொள்ளும். அவை கண்காணிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளை சகேல் மீது நடத்தும் திறன் உடையவை ஆகும். ஒரு அமெரிக்க டிரோன் தளம் தெற்கு மாலியிலுள்ள நகரான பர்கினா பாசோவிலும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்களில், மாலியும் அதன் அண்டை நாடுகளும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அவற்றின் உள்ளூர் ஆபிரிக்க நட்பு நாடுகளினதும் இராணுவங்களின் தலையீட்டு அரங்காக மாறிவிட்டன. ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டுள்ள 4,000 பிரெஞ்சு படையினரை தவிர, ஜேர்மனிய டிரான்ஸால் விமானங்கள் 7,000 ECOWAS படையினர் அனுப்பி வைக்கப் பயன்படுத்தப்படும். அவர்களுடன் நூற்றுக்கணக்கான அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜேர்மனியத் துருப்புக்களும் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியவை லிபியாவிற்கு எதிரான போருடன் ஆபிரிக்க கண்டத்தை தமது நேரடி காலனித்துவ ஆட்சிக்குள் கொண்டுவருவதற்காக புதிய சுற்றுப் போர்களை ஆரம்பித்தன. அந்நேரத்தில், பேர்லின் அரசாங்கம் வெளிப்படையான ஜேர்மன் பங்கு பெறுதலுக்கு எதிராக முடிவெடுத்து இருந்தது. அது ஒன்றும் சமாதானத்தின் மீதான வேட்கை என்பதால் அல்ல. மாறாக சீனா, ரஷ்யா ஆகியவற்றை கருத்திற் கொண்டாகும். அவை இரண்டும் மூலதனங்கள் மற்றும் வணிக உடன்பாடுகள் மூலம் லிபியாவில் மிக அதிகளவு ஈடுபாடு கொண்டவையும் ஜேர்மன் வணிகத்தில் கணிசமான வர்த்தக பங்கைக் கொண்டவையுமாகும். இதைத்தவிர, ஜேர்மன் இராணுவம் அத்தகைய பரந்த, நீடித்த இராணுவ நடவடிக்கைக்கு உரிய தயாரிப்புக்களை கொண்டிருக்கவில்லை. ஆப்கானிஸ்தான், ஆபிரிக்க முனை இன்னும் பிற போர்ப்பகுதிகளில் துருப்புக்களை ஈடுபடுத்தியுள்ள நிலையில், வெளிநாட்டு நடவடிகைகளுக்கான அதன் செயற்திறன் தீர்ந்துவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் சமூக ஜனநாயகம் (SPD) மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தால் சர்வதேச செயற்பாடுகளுக்காக இராணுவத்தை திறமை மிக்க போரிடும் படையாக மறுகட்டமைப்பு, மறுஆயுதமாக்கல் செய்தமை இப்பொழுது நெருக்கடியில் உள்ளது. பின்னர் பாதுகாப்பு மந்திரியாக வந்த கார்ல் தியோடோர் சூ கூட்டன்பேர்க் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம் CSU) இராணுவத்தில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்டதைவிட, ஊடகங்களில் அதிக கவர்ச்சிகரமான தோற்றமளிப்பதன் மூலம் தனக்கென ஒரு பெயரையும் புகழையும் உருவாக்கிக்கொண்டார். கூட்டன்பேர்க் இறுதியில்தனது ஒரு ஆராய்ச்சி கட்டுரைக்கு பிறர் கருத்துக்களை திருடிய ஊழலை ஒட்டி இராஜிநாமா செய்ய நேர்ந்தது. அவருக்குப் பதிலாக கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தோமஸ் டு மஸியர் மார்ச் 2011ல் பதவிக்கு வந்தார். இது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவை லிபியா மீது குண்டு போடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்தது. டு மஸியர் அமைதியான ஆனா திறமையாக ஒருங்கிணைப்பவர் எனக் கருதப்படுபவர் ஆவார். சிறுவயதில் இருந்தே இவர் ஜேர்மன் இராணுவத்தை நன்கு அறிந்தவர். அவருடைய தந்தை உல்ரிச் டு மஸியர், ஹிட்லரின் உயர் இராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் 1950கள், 1960 களில் இராணுவ அதிகாரி, மேல்நிலை அதிகாரி என்ற முறையில் நவீன இராணுவத்தை கட்டியமைத்தார். தோமஸ் டு மஸியர் “இராணுவத்தினை மறுஒழுங்கமைப்பதை” தொழில்நேர்த்தித் திறனுடன் முன்னோக்கி கொண்டு சென்றார். இது 2012இல் அமைச்சரக மற்றும் தலைமை இராணுவக் கட்டுப்பாட்டு மட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், மூன்றாம் கட்டமாக நடவடிக்கை மட்டத்தில் பல பிரிவுகளில் கட்டளையிடும் தகமைகள் என்றழைக்கப்படுவதை உருவாக்குவதுடன் ஆரம்பமானது. உதாரணமாக ஜனவரி 15ம் திகதி, மாலியில் முதல் பணிக்கு சரியான நேரத்தில், புதிய, உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ள இராணுவ மத்திய திட்டமிடல் நிலையம் ஏர்ஃபேர்ட்டில் திறக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டின்கீழ் 15,000 இராணுவத்தினர் உலகம் முழுவதுமான நடவடிக்கைகளுக்கான இராணுவ பணிப் பிரிவுகள், ஆயுதங்கள், போக்குவரத்து, உடை, உணவு ஆகியவற்றை விநியோகிக்கும் பணிகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தனர். இவ்வகையில் லிபியப் போருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஜேர்மனி ஆரம்பத்தில் இருந்தே ஏனைய பிரதான சக்திகளுடன் மாலியில் நடக்கும் காலனித்துவப் போரில் “சம பங்காளியாக” உள்ளது. மூனிச் பாதுகாப்பு மாநாட்டின்போது, Süddeutsche Zeitung பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், டு மஸியர் இம்மாற்றத்தின் முக்கியத்தை வலியுறுத்தினார். 6,000 படையினருக்கும் மேல் வெளிநாட்டில் நிலைகொள்ளச் செய்யப்பட்ட நிலையில், ஜேர்மனி ஐரோப்பிய தரங்களுக்கேற்ப கணிசமான பங்களிப்பைக் கொடுக்கிறது என்றார். பிரான்ஸ் 2,700 துருப்புக்களைத்தான் அனுப்பியுள்ளது, பிரித்தானியா 11,000 பேரை பல பணிகளுக்கு அனுப்பியுள்ளது என்றார். “நம் தலையீடு 1992இல் கம்போடியாவில் மருத்துவப் பணிகளுடன் தொடங்கியது, ஆனால் இப்பொழுது ஜேர்மன் இராணுவம் போரிடவும் முடியும் என்பது தெளிவாகிவிட்டது.” இதே நேர்காணலில் டு மஸியர் இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ல் திரும்புவது குறித்து நினைக்கவில்லை என்றும் அங்கு குறைந்தப்பட்சம் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் இருக்கப்போவதாகவும் தெளிவுபடுத்தினார். இப்பணி அதன் தற்போதைய வடிவத்தில் 2014 முடிவில் முடிந்துவிடும். “ஆனால் வேறு வகையில் ஆப்கானிஸ்தானில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். இதனால் முந்தைய முயற்சிகள் வீணாகப் போகாது. அதாவது, அந்நாட்டினர் நீடித்த உறுதிப்பாடு வேண்டும் என விரும்பினால்.” அத்தகைய கொள்கை உள்நாட்டில் அரசியல் ஆதரவு இன்றி செயல்படுத்தப்பட முடியாமா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் விடையிறுத்தார்: “ஆம். முடியும். ஆனால் நியாப்படுத்துவதை நாங்கள் மாற்றுவோம்... சர்வதேச பணிகள் என்பவை .... உண்மையடிப்படையில் விளக்கப்பட வேண்டும், காரணங்கள் மிகவும் பரிதாபகரமானதாக இருத்தல் கூடாது.” வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், 1990களில் ஆப்கானிய நடவடிக்கையின் ஆரம்ப்தில் ஜேர்மனிய அரசாங்கம் அவர்கள் “மனித உரிமைகளை பாதுகாத்தல்”, “கிணறுகள், பள்ளிகள், மருத்துவமனைகளை கட்டுவதில்” அக்கறை கொண்டுள்ளது என்று கூறியது என்றால், எதிர்காலத்தில் போர்கள் ஜேர்மனிய நலன்களை பற்றிக் குறிப்பிட்டு, நியாயப்படுத்தப்பட்டு வெளிப்படையாக பெரும் தியாகம், செலவுகள் தேவை எனக் கூறப்படும். தற்பொழுது மாலியில் போர் நடவடிக்கைகள் நேட்டோ, ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐரோப்பிய ஒன்றியம் என்னும் தற்போதிருக்கும் நட்பு அமைப்புக்களுக்குள் “நியாயப்படுத்தப்பட்டு” செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் ஜேர்மனிய ஏகாதிபத்தியம் ஏற்கனவே தன் சொந்த நலன்களைத் தொடர்கிறது. மாலியில் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்தபின், ஐந்து நாட்களுக்கு பின்னர் சான்ஸ்லர் இதைத் தெளிவுபடுத்தினார். அப்பொழுது அவர் அண்டை நாடான Cote d’lvoife (ஐவரி கோஸ்ட்) ஜனாதிபதி அலசானே ஔட்டராவை வரவேற்று, ஜேர்மனிய எரிசக்தி மற்றும் விவசாய நிறுவனங்கள் அந்நாட்டில் அதிகளவில் முதலீட்டை செய்யும் என்பதற்கும் உடன்பட்டார். இறுதி செய்தியாளர் மாநாட்டில் அவர் பின்வருமாறு கூறினார்: “ஜேர்மனியில் பல நேரமும் இது பிரெஞ்சு செல்வாக்கு மண்டலம் என்று நினைக்கப்படுகிறது; எனவே நாம் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டாம் என்ற கருத்து உள்ளது. ஜனாதிபதி தன் வருகையை பயன்படுத்தி ஜேர்மனிக்கு இது அப்படி அல்ல என்பதை தெளிவுபடுத்தி, மற்ற நாடுகளும் ஐவரி கோஸ்ட்டில் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.” ஹெரேரோ மற்றும் நாமா என்ற வகையில் தென்மேற்கு ஆபிரிக்காவில் ஜேர்மன் அரசரின் இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தன இனப்படுகொலைகள் நடைபெற்ற 110 ஆண்டுகளுக்குப் பின், இரண்டாம் உலகப் போரின் போது ரொமெல்லின் கொலைகார ஆபிரிக்க தாக்குதலுக்குப்பின், ஜேர்மனி மீண்டும் வெளிப்படையாக “ஆபிரிக்காவிற்கான புதிய போட்டிகளில்” ஒரு காலனித்துவ சக்தியாக செயல்பட்டு வருகிறது. ஜனவரி 17 நடைபெற்ற எம்நிட் கருத்துக்கணிப்பு அமைப்பின் மதிப்பீடு ஒன்றின்படி, ஜேர்மனிய மக்களில் 60% இக்கொள்கையை தெளிவாக நிராகரிக்கின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும் ஆரவாரத்துடன் அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு கொடுக்கின்றன. சமூக ஜனநாயக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் வலதில் இருந்து ஆளும் கூட்டணியை தாக்குகின்றன: ஜேர்மனி இன்னும் விரிவான முறையில் மாலிப் போரில் தீவிர பங்கு கொள்ள வேண்டும் என இடதுகட்சி உத்தியோகபூர்வ போர் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பிரச்சினை “பயங்கரவாதத்தை நிறுத்துதல்”, “மாலியின் உள்மோதல்களை நிறுத்துதல்” என்று கூறுகிறது. ஆனால் ஆபிரிக்க நாட்டில் “வலிமையைப் பயன்படுத்துவது” தவறு என்று கூறி, பயன்படுத்தப்படும் வழிமுறையைத்தான் குறைகூறுகிறது. ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பும் (DGB) ஜேர்மன் இராணுவத்துடன் இணைந்த வகையில் நடைபோடுகிறது. மாலிப்போரின் நடுவே, டு மஸியர் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பை தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். 30 ஆண்டுகளில் இத்தகைய கூட்டம் இதுவே முதலாவதாகும். ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தலைவர் மைக்கேல் சொமர் கூட்டத்தில் நல்ல சூழ்நிலை இருந்தது பற்றி வலியுறுத்தினார். ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் மற்றும் இராணுவமும் இன்னும் கூடுதலாக ஒத்துழைக்கவும் மற்றும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிடவும் ஒப்புக்கொண்டுள்ளன. ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் முன்னைய சமாதான ஊர்வலங்களை குறிப்பிட்டு, எவ்வித முரண்பாடுமில்லாமல் ஜேர்மன் இராணுவமும் ஒரு “சமாதானத்திற்கான அமைப்பு” என குறிப்பிட்டார். |
|
|