World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Pope resigns amid deepening crisis for Catholic Church

கத்தோலிக்க திருச்சபையில் ஆழமடைந்துவரும் நெருக்கடிக்கு மத்தியில் போப்பாண்டவர் இராஜிநாமா செய்கிறார்

By Bill Van Auken
13 February 2013

Back to screen version

 போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட், ஜோசேப் ராட்சிங்கர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளமையானது சர்வதேச அளவில் ஆளும் வட்டங்களுக்குள் ஆச்சரியத்தையும் கவலையையும் தூண்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோன், ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகு மற்றும் பலரும் வெளிப்படுத்திய உணர்வுகளானது அடிப்படையில் 85 வயது ராட்சிங்கரின் தனிப்பட்ட விதியினால் உந்துதல் பெறவில்லை.

மாறாக, இராஜிநாமா பற்றி அரசாங்கங்களையும் நிதிய உயரடுக்குகளையும் கவலை கொள்ளச் செய்திருப்பது உலகெங்கிலும் இருக்கும் சமூக, அரசியல் பிற்போக்குத்தனத்தின் முக்கிய கோட்டைகளில் ஒன்றான ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குள் ஆழமடைந்துவரும் நெருக்கடி ஒன்றின் அடையாளம் என்பதுதான்.

பதவியில் இருக்கும்  போப்பாண்டவர் இராஜிநாமா செய்திருப்பது நவீன சகாப்தத்தில் முன்னொருபோதும் நிகழாத செயலாகும். தானாகவே இராஜிநாமா செய்த கடைசி  போப்பாண்டவர் ஐந்தாம் செலஸ்டைன் ஆவார். இவர் 1294ம் ஆண்டு ஐந்து மாதங்கள் பதவியில் இருந்தபின், தான் பதவிக்கு தகுதியற்றவர் என அறிவித்து இராஜிநாமா செய்தார். விதிவிலக்காக ஒரு சிலர் கட்டாயமாக அகற்றப்பட்டதைத்தவிர, பதவியிலிருந்த ஒவ்வொரு  போப்பாண்டவரும் இறக்கும் வரை திருச்சபைத் தலைவராக இருந்துள்ளனர்.

ராட்சிங்கர்  அவருடைய சீர்குலைந்துவரும்  உடல்நிலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரிய பணியைப் போதுமான முறையில் நிறைவேற்றும் திறன் இல்லாமல் செய்துவிட்டதுஎன்று திங்களன்று கூறியுள்ளார்.

ஆனால் செவ்வாயன்று வத்திகான் செய்தித் தொடர்பாளர்போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் இராஜிநாமா செய்ய எடுத்துள்ள முடிவு ஆரோக்கிய குறைவினால் அல்ல, வயதாவதால் ஏற்படும் தவிர்க்க முடியாத பலவீனமான தன்மையினால்என்று தெளிவுபடுத்தினார். “அவருடைய பொதுவான உடல்நிலை சாதாரணமாக 86 வயதை நெருங்கும் ஒரு மனிதருடையதைப் போல்தான் உள்ளதுஎன்று மேலும் தெரிவித்தார்.

ஒப்புமையில் நன்றாகத்தான் உள்ளார்என்று ஜேர்மனியில் நிருபர்களிடம் பேசிய போப்பாண்டவரின் சகோதரர் ஜோர்ஜ் ராட்சிங்கர் கூறியுள்ளார். அவர் உடல்நலத்தைத் தவிர வேறு காரணங்களிருக்கலாம்   என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருச்சபைக்குள் பல சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இந்த சம்பவங்கள் பிரச்சனைகளை கொண்டுவந்துள்ளன. உதாரணமாக Pius Brotherhood உடனான உறவு அல்லது வத்திகானுக்குள் இருக்கும் ஒழுங்கீனங்கள் அதாவது, உணவுக்கு பொறுப்பானவர் வெளியிட்டுள்ள சில தவறான செயல்கள் போன்றவைஎன்றார் அவர்.

Pius Brotherhood என்பது, இரண்டாம் வத்திக்கானுக்கு -Vatican II- மூர்க்கமான எதிர்ப்பாக, 1960களில் பிரெஞ்சு ஆண்டகை Marcel François Marie Joseph Lefebvre ஆல் நிறுவப்பட்ட பழைமைவாத வலதுசாரி கத்தோலிக்க பிரிவாகும். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் அரசியல், சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களுக்கு திருச்சபை மேலிடம் அடிபணிந்துபோவதற்கு எதிராக உருவாக்கப்பட்டதாகும்.

Lefebvre மற்றும் Pius Brotherhood ஆகிய இரண்டும் பிரான்சில் பாசிச விச்ஷி ஆட்சி, பிராங்கோவின் ஸ்பெயின், சலாசரின் போர்த்துக்கல் மற்றும் ஆர்ஜென்டினாவின் ஜோர்ஜ் விடேலாவின் இராணுவ சர்வாதிகாரம், சிலியின் ஒகுஸ்டோ பினோசே உடைய சர்வாதிகாரம் ஆகியவற்றிற்கு ஆதரவை கொடுத்த அரசியல் பிற்போக்குத்தனத்தின் மிக மோசமான வடிவமைப்புக்களுடன் அடையாளம் காணப்பட்டவையாக இருந்தன. பிரான்சில் இது வலதுசாரித் தீவிர தேசியவாத ஜோன் மரி லு பென் ஆதரித்து முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்து குடியேறுவதை கடுமையாக எதிர்த்தன.

ஆரம்பத்தில் இரண்டாம் வத்திகானுக்கு ஆதரவு கொடுத்து அதில் பங்கு பெற்றிருந்த ராட்சிங்கர், பின்னர் அதனுடைய உறுதியான எதிரியாக ஆனார்; குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா இன்னும் பிற இடங்களில்விடுதலை இறையியல் கொள்கையை முன்னெடுக்க திருச்சபைக்குள் அதனுடைய முடிவுகளை ஆதரித்தவர்களுக்கு எதிரானவரானார். திருச்சபையுடன் Pius Brotherhood மீண்டும் ஒருங்கிணைக்க முற்பட்டு, 2009ல் அப்பிரிவில் தப்பிப் பிழைத்திருந்த நான்கு பிஷப்புகள் மீது மதத்தை விட்டு ஒதுக்கி வைத்திருந்த தடையையும் நீக்கியிருந்தார். .

இதன் பின் இந்த இணைப்பிற்கு இடையே, சுவிட்சர்லாந்தின் Pius Brotherhood இன் தலைவரான பாதிரியார் Bernard Fellay பகிரங்க உரை ஒன்றில் யூதர்களைதிருச்சபையின் விரோதிகள்என்று விவரித்தார்.

ராட்சிங்கரின் சகோதரர் எழுப்பியுள்ள பிரச்சினைகளில் மிகவும் கவலை கொடுப்பது வத்திலீக்ஸ் Vatileaks- மோசடி ஆகும். இதில் வத்திக்கான் உள் ஆவணங்கள், கடிதங்கள், இராஜதந்திர தந்திகள் தொடர்புபட்டவை போப்பின் உணவுக்கு பொறுப்பானவரால் எடுக்கப்பட்டு இத்தாலிய செய்தியாளர்களுக்கு கசிய விடப்பட்டன.

இந்த ஆவணங்கள் வத்திக்கான் ஒப்பந்தங்களில் நிதி மோசடியை சுட்டிக்காட்டுவதுடன், வத்திக்கான் வங்கி என பொதுவாக அறியப்பட்டுள்ளதுடன் மத சேவைக்கான நிறுவனம் (Institute for Works of Religion) பணச் சலவை செய்தது குறித்த விசாரணையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுகின்றன.

இந்த ஆவணங்களில் ராட்சிங்கருக்கு எதிரான சதித்திட்டம் பற்றி எச்சரித்த ஒரு கடிதமும் உள்ளது. இக்கடிதத்தில் புனித பீடத்தின் செயலாளரும் மற்றும் வத்திகானின் இரண்டாவது மூத்த நபரான டர்சிசியோ பெர்டோன இன் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலிய செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் கடிதத்தை, கடந்த 35 ஆண்டுகளாக போப்பாண்டவரின் பதவியை வகித்து வந்த திருச்சபைக்குள் இருக்கும் இத்தாலிய பிரிவிற்கும் ஜேர்மனி மற்றும் போலந்து பிரிவிற்கும் இடையே அதிகாரப் போராட்டத்தின் கசப்பான நிரூபணம் எனக் காட்டின.

உணவுக்கு பொறுப்பானவரான பாவோலோவ் கப்ரியேல், வழக்கின்போது, “தீங்கு மற்றும் ஏமாற்றுத்தனத்தை எதிர்த்துப் போராடவே தான் ஆவணங்களை கசியவிட்டதாக கூறினார். அக்டோபர் 2012ல் திருடிய குற்றத்திற்காக 28 மாதங்கள் சிறைத் தண்டனையை ஒரு இத்தாலிய நீதிமன்றம் அவருக்குக் கொடுத்தபோது, அவர் வத்திக்கானிடம் ஒப்படைக்கப்பட்டு, இரண்டரை மாதங்களுக்கு பின்னர் போப்பாண்டவரினால் மன்னிக்கப்பட்டார்.

வத்திக்கான் வங்கி மற்றும் திருச்சபையின் நிதிகளை சுற்றியிருக்கும் மோசடிகளானது போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டு 33 நாட்களே பதவியிலிருந்து இறந்துபோன மிகவும் குறுகியகால போப்பாண்டவரான முதலாம் ஜோன் போலின் ஆட்சியைத்தான் கூடுதலாக நினைவிற்கு கொண்டுவருகிறது. அந்தப் புதிரான மரணம் வத்திகான் வங்கியில் அதிக பங்குகளை கொண்டிருந்த Banco Ambrosiano இற்கும் வங்கிக்கும் இடையிலான உறவு பற்றிய விசாரணையுடன்  தொடர்புபட்டிருந்தது. அந்த வங்கி சட்டவிரோத நிதி நடவடிக்கைகளில் தொடர்புகொண்டிருந்ததுடன் மாபியா மற்றும் இரகசியமான பாசிச P2 Lodge உடனும் தொடர்பைக் கொண்டிருந்து பின்னர் 1982ல் பல பில்லியன் டொலர்கள் இழப்புடன் வீழ்ச்சியடைந்தது.

ராட்சிங்கருக்கு ஏற்பட்டிருந்த மற்றொரு பெரிய நெருக்கடி அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பாதிரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கும் பாலியல் வல்லுறவிற்குட்பட்டவர்களும் கொண்டுவந்த பாலியல் குற்றச்சாட்டுக்களின் அதிகரிக்கும் தன்மை ஆகும். சிறுவர்களிடம் அதிக அளவில் துஷ்பிரயோகம் நடத்தப்படுகிறது, இக்குற்றங்கள் திட்டமிட்டு திருச்சபை அதிகாரத்துவத்தால் மூடிமறைக்கப்படுகின்றன என்று வெளிவந்ததால் கத்தோலிக்கர்கள் திருச்சபையிலிருந்து அந்நியப்பட்டு போவதற்கு காரணமாகிவிட்டன. அதே நேரத்தில், இது குறிப்பாக வத்திக்கான் நிதியத்திற்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்றான அமெரிக்காவின் திருச்சபைகளிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியாகவும் கொடுக்கப்படுவதால் வத்திக்கானின் நிதி நெருக்கடிக்கு எரியூட்டியது.  

பாலியல் துஷ்பிரயோக தவறுகள் குறித்து ராட்சிங்கர் தற்போது போப்பாண்டவராக இருக்கும்போது கையாள மட்டுமல்லாது அவருக்கு முன்னால் பதவியிலிருந்தபோலந்துப் போப்பாண்டவரான”  Karol Wojtyla பிரச்சினையை திருச்சபை கையாள்வதற்கும் இவரையே நியமித்திருந்தார். அந்த நேரத்தில் கார்டினல் ராட்சிங்கராக அவர் விசாரணைக் குழுவிற்கும், அதன் பின்னர் உருவாக்கப்பட்ட மத நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருக்கூட்டத்தின் தலைவராகவும் இருந்தார்.

அந்தப் பதவியின் அடிப்படையில் தீவிரமாக அவர்விடுதலை இறையியலாளார்களையும் திருச்சபையில் கருத்தடை முறைகள், கருக்கலைப்பு, திருமண முறிவு, ஓரினச் சேர்க்கை, போப்பாண்டவரின் தவறற்ற தன்மை, பாதிரிகளுக்கு பிரம்மச்சார்ய விரதம் போன்றவற்றின் அடிப்படையை யார் கேள்விக்குட்படுத்தினாலும் தீவிரமாக செயல்பட்ட முறை அவருக்குபெரும் குற்ற விசாரணையாளர்என்ற அடைமொழிப் பெயரை, ஜேர்மனியில் பீரங்கி கார்டினால் -Panzerkardinal”- என்பதை கொடுத்தது.

இவர் மார்க்சிசத்தைக் கடுமையாக எதிர்த்தவர் என்பது மட்டுமின்றி, அனைத்துவகை சடவாத தத்துவத்தையும், அறிவுவொளி இயக்கத்தையும் எதிர்த்தார். குறிப்பாக கத்தோலிக்க மதம் இழந்துபோவதாக அவர் கண்ட கலாச்சார இதயத்தானமான ஐரோப்பாவில் பிற்போக்குத்தனம் மற்றும் பழமைவாதம் ஆகியவைகளுக்கு இவர் ஊக்கமளித்தார். பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே அவர் சடவாதம் திரும்புவதாக கூறி அதற்கு எதிராக தியாகம் செய்யவேண்டும் என உபதேசித்தார்.

அவருடைய கடைசி சர்வதேச பயணங்கள் ஒன்றின்போது, அவர் மெக்சிக்கோ மற்றும் கியூபாவிற்கு சென்றிருந்தார். அங்கிருக்கும் அரசாங்கங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக வைத்திருந்த தடைகளை அகற்ற வெற்றிகரமாக முயன்றார். வரலாற்றளவில் திருச்சபையானது அடக்குமுறை மற்றும் பிற்போக்குத்தனத்தின் அரணாக இருந்தது. அந்நாடுகளில் ஏற்பட்ட புரட்சி, திருச்சபை மீது தடைகளைக் கொண்டு வந்தன. கியூபாவில், ஐரோப்பிய, குறிப்பாக ஸ்பெயினின் மூலதனம் ஊடுருவ வத்திகான் முன்னணியில் நின்றதுடன், ராட்சிங்கர்சந்தைச் சீர்திருத்தங்களின்திறமையை பற்றி உபதேசித்தார்.

ராட்சிங்கருக்குப் பின், கார்டினல்களின் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் போப்பாண்டவராக, யார் வருவார் என்னும் விவாதத்தில், பெரும்பாலும் அவரால் நியமிக்கப்பட்ட கார்டினல்கள் இருக்கும் நிலையில், அடுத்த போப்பாண்டவர் ஒரு ஆபிரிக்கராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது நடக்கிறதோ இல்லையோ, இத்தகைய கருத்தே பெரிதும் அரசியல் தன்மை வாய்ந்ததுடன், ஒரு வெளிப்படையான முன்னோடியாகவும் இருக்கும். 1978ல் திருச்சபை Wojtyla வை முதல் போலந்து நாட்டுப் போப்பாண்டவராக பணியாற்ற தேடிப்பிடித்தது. அவர் பணியாற்ற வந்தபோது ஒரு ஆழமடைந்து வந்துகொண்டிருந்த நெருக்கடி ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியக் கலைப்பு, கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் கலைப்பு ஆகியவை ஏற்பட்டன. போப்பாண்வர் Wojtyla கீழ், இந்த நிகழ்போக்கில் ஒரு தீவிரமான பாத்திரத்தை திருச்சபை வகித்தது. குறிப்பாக இது ஒற்றுமை இயக்கம் (Solidarity movement) என்னும் பதாகையின் கீழ் வளர்ச்சியுற்ற போலந்து தொழிலாளர்களின் சக்தி வாய்ந்த எழுச்சியை கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க செய்ததுடன் மற்றும்  ஒரு சுயாதீன சோசலிச திசையில் வளர்ச்சி அடையாமலிருக்க உறுதி செய்தது.

ராட்சிங்கருக்கு பின்வருபவராக ஒரு ஆபிரிக்க நாட்டவர்  தேர்ந்தெடுக்கப்படலாம் என்னும் யோசனையானது அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் அவைகளின் நேட்டோ கூட்டணி நாடுகளும் ஆபிரிக்காவில் ஒரு புதிய போட்டியைக் கொண்டுள்ள நிலையில், அவற்றின் போட்டி நாடான சீனாவின் இழப்பில் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி கண்டத்தின் சந்தைகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கு நவ காலனித்துவத்தை திணிப்பதற்கு நோக்கம் கொண்டுள்ள நேரத்தில் வருகிறது.