தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French Goodyear workers protest against closure of Amiens Nord plantஅமியான் நோர்ட் ஆலை மூடலை எதிர்த்து பிரெஞ்சு குட்இயர் தொழிலாளர்கள் எதிர்ப்பு
By Antoine
Lerougetel and Pierre Mabut use this version to print | Send feedback
செவ்வாயன்று குட் இயர் அமியான் நோர்ட் ஆலையில் இருந்து கிட்டத்தட்ட 800 தொழிலாளர்கள், பிரான்சின் பிற பகுதிகளிலுள்ள 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஆதரவுடன், பாரிஸ் Reuil Malmaison ல் உள்ள நிறுவனத்தின் பிரெஞ்சுத் தலைமையகத்திற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு, தொழிற்சங்க அதிகாரிகள் நிறுவனத்தின் வடக்கு பிரான்சில் உள்ள அமியான் ஆலையை மூடும் திட்டங்களைப் பற்றிய விவரங்களைக் கூறும் அதே நேரத்தில்; இந்த மூடலில் 1,173 வேலைகள் இல்லாமல் செய்யப்படுவதையும் அறிவித்தது. மனிதாபிமானமற்ற நான்கு ஷிப்ட் பணிமுறை ஏற்கப்பட வேண்டும் இல்லாவிடின் பணிநீக்கம் நடக்கும் என்று கூறப்பட்ட நிறுவனத்தின் கோரிக்கைகளை நிராகரித்து கடந்த ஐந்து ஆண்டு காலமாக ஆலையை மூடாமல் வைத்திருக்க குட்இயர் தொழிலாளர்கள் ஒரு சட்டபூர்வ போராட்டத்தை நடத்துகின்றனர். அடுத்தாற்போல் இருக்கும் சகோதர நிறுவனமான டன்லப் ஆலையில், தொழிற்சங்கங்கள் ஆலை மூடல் அச்சுறுத்தல்களுக்கு நிபந்தனையற்று சரண் அடைந்தபின், தொழிலாளர்கள் விரைந்து செயல்படுதல் திட்டத்தை ஒப்புக் கொண்டனர். 2009ல் இருந்து அங்கு ஒரு தற்கொலையும் ஆலையில் நான்கு தற்கொலை முயற்சிகளும் நடந்துள்ளன.
குட்இயர் அமியான் நோர்டில் இருக்கும் அதன் விவசாய டயர்ப் பிரிவை அமெரிக்க குழு டைட்டானுக்கு விற்க முயன்றது; ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் பிரெஞ்சு தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) உற்பத்தி தொடர்ந்து நடைபெற ஐந்து ஆண்டுகள் உத்தரவாதம் கேட்டபின் பேச்சுக்கள் முறிந்து போயின. செவ்வாய் காலையில், சோசலிஸ்ட் கட்சியின் தொழில்துறைப் புதுப்பித்தல் துறை மந்திரியான Arnaud Montebourg டைட்டான் உறுதியாக குட்இயர் ஆலை குறித்து நடத்தும் பேச்சுக்களை நிறுத்திக் கொள்ளுகிறது என தெரிவித்ததை, தொழிலாளர்கள் கேள்விப்பட்டனர்.
பல தொழிலாளர்களும்
“குட்இயர் போக்கிரி முதலாளிகள்” என்று பின்புறம் எழுதப்பட்ட கோஷத்துடன் கூடிய
பணிநேரச் சட்டைகளை அணிந்திருந்தனர். ஒரு பதாகையில் எழுதியிருந்தது: “ஹாலண்ட்,
நீங்கள் என்ன முயல்கிறீர்கள்? எங்களுக்கு அச்சட்டத்தை நீங்கள் அளிக்க வேண்டும்.”
இப்பதாகையில் இருந்த கோஷம் அமியான் நோர்ட்
CGT
முன்னோக்கான ஜனாதிபதி
பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி,
பணி
நீக்கங்களுக்கு தடைவிதிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை
பிரதிபலிக்கிறது.
அணிவகுப்பில் பல நிறுவனங்களில் இருந்து பங்கு பெற்ற சிறு குழுவிலான தொழிலாளர்கள் இருந்தனர்; இதில் மிகப் பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனம் சனோஃபி, PSA , போர்ட், ஆர்சிலர்மிட்டால் ஆகியவற்றின் தொழிலாளர்களும் இருந்தனர். குட்இயர் CGT கிளை ஒரு தேசிய அளவிலான அணிதிரள்விற்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், தேசிய தொழிற்சங்கம் ஏராளமான தொழிலாளர்களை கொண்டுவரும் முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவு. எந்த தேசிய மட்டத்திலான தொழிற்சங்கத் தலைவர்களும் காணப்படவில்லை; ஆனால் அறிவிக்கப்பட்ட மூடலுக்கு முன், செய்தி ஊடகத்தில் இதுபற்றிப் பரந்த தகவல்கள் வந்து கொண்டிருந்தன; இம்மூடல் இப்பகுதியில் ஒரு சமூகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. சமூக நெருக்கடியை எதிர்த்துப் போரிடும் தொழிலாளர்களை கடுமையாக நடத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸின் சமீபத்திய உத்தரவுகளுக்கு இணங்க, (பார்க்க “பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு தயார் செய்கிறது”), கட்டிடத்தை அணுகும் அனைத்து சாலைகளும் சோதனைச் சாவடிகளை கொண்டிருந்தன; ஆயுதமேந்திய, கலகப்பிரிவுப் பொலிசால் தொழிலாளர்களின் பைகள் சோதிக்கப்பட்ட பின்னரே மேலே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் உயரமான தடுப்புவேலிகளுக்குப் பின் இருந்த கலகப் பிரிவு பொலிசாரால் கட்டிடங்களை அணுகாமல் தடுக்கப்பட்டனர். இந்தப் பொலிஸ் பாதுகாப்புக்கள் அவர்களின் மீது எறியப்பட்ட முட்டைகளின் மஞ்சள் கருக்களைக் கொண்டிருந்தன. அவர்கள் எதிர்ப்பாளர்களைக் கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு, தடியடி ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்னேறாமல் தடைசெய்தனர்.
அமியான் நோர்ட் ஆலையின் CGT பிரதிநிதி மிக்கேல் வாமன், பேச்சுக்களை முடித்து வெளியேவந்து, ஆலையை எதிர்த்து இன்னும் நீதிமன்றங்களில் போராட முடியும் என்று கூறி, “நீதிமன்றங்களுக்கு பெரும் பீரங்கியைக் கொண்டு செல்வோம். எமது சட்டக் கிடங்கில் இருக்கும் ஆயுதங்களில் 10%க்கூட இன்னும் நாம் பயன்படுத்தில்லை.... அரசாங்கம் இப்பொழுது நடுங்குகிறது என்றால், அது தொடர்ந்து நடுங்கும்” என்றார். உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய தொழிலாளர்கள் இப் பேச்சுகளுக்கு அதிக நம்பகத்தன்மை ஒன்றையும் கொள்ளவில்லை. ஒருவர், “கூடவே இழுக்கப்பட்டுவந்தது போதும் என நான் நினைக்கிறேன். முடிவு என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றார். மற்றொருவர், “நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம், அதுதான் முக்கிய உணர்வு.” தங்கள் உணர்வை வெளிப்படுத்தி கூறமுடியாத நிலையிலே பல தொழிலாளர்கள் இருந்தனர்.
ஓர் இளம் குட்இயர் தொழிலாளி ஜோன் பிரான்சுவா, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் தொழிலாளர்களை காப்பாற்றுமா என்பது குறித்து என்ன நினைக்கிறார் எனக்கேட்கப்பட்டபோது, விடையிறுத்தார்: “நான் ஹாலண்டிற்கு வாக்களித்தேன். ஆறு ஆண்டுகளாக குட்இயரில் இருக்கும் நிலைமைக்கு அவர் பொறுப்பல்ல. ஆனால் சார்க்கோசி போலவே இவரும் உள்ளார். இவர்கள் இருவருமே முதலாளித்துவ முறையைத்தான் ஆதரிக்கின்றனர். CGT ஆலைக்கிளை ஒரு போராட்டத்தை நடத்துகிறது; ஆனால் CGT யின் வக்கீல் பியோடோர் ரிலோவ் மற்றும் மிக்கேல் வாமனின் திட்டமான பணிநீக்கங்களுக்கு எதிரான சட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு சட்டம் நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குவதில்லை.
“தேசியத் தொழிற்சங்கம்
எங்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை.
CGT
பொதுச் செயலர் தீபோ
பணிநீக்கத்தை 50,000 யூரோக்களுடன் எங்களை ஏற்கச் சொல்கிறார். இது இரண்டு ஆண்டு
ஊதியத்தைவிட ஒன்றும் அதிகம் இல்லை. இன்று அவர் எங்கே?’ மற்றொரு தொழிலாளி கூறினார்: “நான் கசப்புணர்வில் உள்ளேன். ஒன்பது மாதங்களாக நிர்வாகம் எங்களுக்கு ஏதும் கொடுக்கவில்லை. டைட்டான் வாங்க இருப்பது என்பது வெற்றுப் பேச்சு. இதில் ஒன்றில் அனைவருக்கும் வேலை இல்லாவிடின் ஏதும் இல்லை. தீபோ நாங்கள் கையெழுத்திட வேண்டும் என விரும்புகிறார். அவர் ஒரு முறைதவறிப் பிறந்தவர்.” Jean-Yves கூறினார்: “நான் குட்இயரில் 42 ஆண்டுகளாக உழைக்கிறேன். ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளேன்; ஆனால் இங்கு இளம் தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லை. நிர்வாகம் முதலீடுகள் எதையும் செய்யவில்லை. அவர்கள் ஆலை அழிந்து போகட்டும் என விட்டுள்ளனர். பணம்தான் அனைத்தையும் ஆள்கிறது. குட்இயர் ஒரு இலாபகர நிறுவனம், அவர்கள் அமைப்புமுறையை சாதகமாக பயன்படுத்துகின்றனர். பல நாட்டுத் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக மற்றவரை மோதவிடுகின்றனர். இப்பொழுது சீனத் தொழிலாளர்களிடையேயும் தொழிற்சங்கம் வந்துவிட்டது, ஒரு கௌரவமான ஊதியத்திற்குப் போராடுகின்றனர். “இது அனைத்துமே நிதி விவகாரம். தொழிலாளர்களுக்கு அவர்களுடைய பங்கு கொடுக்கப்பட வேண்டும். மொத்தத்தில் எத்தனை பில்லியன்கள் நிதி உருவாக்கப்படுவதை பாருங்கள். “அரசியல்வாதிகள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் எங்கள் மட்டத்திற்கு வர முடியாது. இடதோ வலதோ எல்லாம் ஒன்றுதான். தொழிலாளர்களின் எண்ணப்பார்வையில் இருந்து விடயங்களை அறிந்து கொள்ளும் மக்கள் நமக்குத் தேவை.” |
|
|