சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK horsemeat scandal spreads to Europe

ஐக்கிய இராச்சியத்தின் குதிரை இறைச்சி மோசடி ஐரோப்பாவிற்கும் பரவுகிறது

By Barry Mason
12 February 2013

use this version to print | Send feedback

மாட்டிறைச்சி என முத்திரையிடப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளில் குதிரை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து பெப்ருவரி 9ம் திகதியன்று சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் (DEFRA) திணைக்களத்தில் அவசரக் கூட்டம் ஒன்றை ஐக்கிய இராச்சியத்தின் சுற்றுச்சூழல் செயலாளரான ஓவன் பாட்டெர்சன் கூட்டினார்.

ஜனவரி மாதம் மில்லியன் கணக்கான மாட்டிறைச்சி பேர்க்கர்கள் (beef burgers) குதிரை இறைச்சியையை கொண்டுள்ளன என்பது அறியப்பட்டதை தொடர்ந்து டெஸ்கோ (Tesco) பல்பொருள் அங்காடிகளிலிருந்து விற்பனை செய்யப்படாமல் திரும்பப் பெறப்பட்டன. இது Findus ஆல் தயாரிக்கப்படும் பதனிடப்பட்ட இறைச்சி உணவான மாட்டிறைச்சி லசான்ய உணவில் குதிரை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

Findus ற்கு அதனுடைய பொருட்களில் கலப்புக் குறித்து ஜனவரி 29ல் தெரிவிக்கப்பட்டது; ஆனால் அது தயாரித்த உணவுப் பொருட்களை பெப்ருவரி 7 அன்றுதான் FSA (Food Standard Agency) இடம் தெரிவித்தபின் திரும்பப்பெற்றுள்ளது. அதனுடைய மாட்டிறைச்சி லசான்ய உணவுப்பொருட்கள் 18 ஐப் பரிசோதித்தபின், 11ல் குதிரையிறைச்சி 60 முதல் 100 சதவிகிதம் வரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டோம் வாட்சன் கருத்துப்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் Findus ற்கு விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றைப் பற்றிய பிரச்சினை குறித்து எச்சரிக்கப்பட்டது; ஆனால் Findus இதை மறுத்துள்ளது. அல்டி (Aldi) பல்பொருள் அங்காடித் தொடர்களும் பதனிடப்பட்ட மாட்டிறைச்சி உணவுப் பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

பாட்டெர்சன் கூட்டிய அவசர கூட்டத்திற்கு நான்கு பெரிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோ, செயின்ஸ்பரி, அஸ்டா மற்றும் மாரிசன்ஸ் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். அதைத்தவிர சில்லறை விற்பனை நிறுவனங்களும் முக்கிய உணவுத் தயாரிப்பாளர்களும் வந்திருந்தனர்.

மோசடிக்கு பதிலளிக்க, பாட்டெர்சனுக்கும் கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணி அரசாங்கத்திற்கும் பல வாரங்கள் பிடித்துள்ளன. பாட்டெர்சனின் கருத்தான, தனது குடும்பமும் பதப்படுத்தப்பட்ட லசான்ய உணவுகளில் ஒன்றை உட்கொள்ளுவது குறித்து முற்றிலும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியிருப்பதிலிருந்து உதாசீனத் தன்மையின் அளவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மாடுகளில் BSE (Bovine Spongiform Encephalopathy) நெருக்கடி மே 1990 ஆம் ஆண்டில் வந்தபோது கன்சர்வேட்டிவ் விவசாய மந்திரியான ஜோன் கும்மர் கூறியவற்றைத்தான் இவருடைய கருத்துக்களும் எதிரொலிக்கிறது. அரசாங்கம் மாட்டிறைச்சி கழிவுகளை மனிதர்கள் உட்கொள்ளக்கூடாது என்று தடை செய்த பின்னர், கம்மர் பகிரங்கமாகத் தனது நான்கு வயது குழந்தை கோர்டிலியாவிற்கு ஒரு ஹாம்பர்க்கரை பைத்திய மாட்டு நோய்” நெருக்கடி இருக்கும்போது கொடுத்தார். பின்னர், BSE தான் புதிய வகையான Creutzfeldt-Jakok நோய் (nvCJD) மனிதர்களிடையே பரவக் காரணம் என்று நிரூபிக்கப்பட்டது; தொற்றுக்குட்பட்ட மாட்டிறைச்சி மற்றும் அதனுடைய உப உணவுகளிலிருந்து தயாரிக்கப்படும்  உணவுப் பொருட்களால் ஒரு நரம்புச் சிதைவு தொடர்புடைய நோய் ஏற்படுவதற்கான மூலகாரணி அதில் இருந்தது.

கம்மருடைய சாகசம், BSE யினால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பலமுறை அரசாங்கம் மறுத்த தன்மையின் ஒரு பகுதியாகும். ஜனவரி 2012 வரை, கிட்டத்தட்ட 176 பேர் பிரிட்டனில் nvCJD  யினால் இறந்துள்ளனர். இது உடலில் இருக்கும் காலம் உறுதியாகத் தெரியாததால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாமல் இருக்கிறது.

அவசர கூட்டத்தை தொடர்ந்து, இன்னும் அதிக உணவுக் கலப்பட விவகாரங்கள் வெளிப்படலாம் என்று பாட்டெர்சன் எச்சரித்தார். 28 பெயரிடப்படாத உள்ளூர் அதிகாரிகளை சோதனைகளை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளதுடன், தன்னுடைய திணைக்களத்திற்கு வார இறுதிக்குள் முடிவுகளைத் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். கலப்பு ஒருவேளை தற்செயலாக நடந்திருக்கலாம் என ஏற்பதற்கில்லை, ஒரு “சர்வதேசக் குற்றச் சதித்திட்டத்தின்” விளைவாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார். பொலிசார் FSA வைச் சந்தித்துள்ளனர்; ஆனால் விசாரணை எதையும் இன்னும் தொடங்கவில்லை.

இந்த மோசடி பிரான்சிற்கும் பரவியுள்ளது; Findus பிரான்ஸ் ஆனது அதனுடைய பொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தழுவிய சுகாதார எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“போலந்து மற்றும் இத்தாலிய மாபியாக் குழுக்கள் பல மில்லியன் பவுண்டுகள் ஏமாற்று மூலம் மாட்டிறைச்சிக்குப் பதிலாக குதிரை இறைச்சியை மாற்றும் முறையை உணவு உற்பத்திக்காலத்தில் செய்கின்றனர் என்று பெப்ருவரி 10ம் திகதி வல்லுனர்களால் அறிவிக்கப்பட்டிருந்தாக Observer தெரிவித்துள்ளது. கால்நடை மருத்துவர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பன்றி இறைச்சி அல்லது குதிரை இறைச்சி போன்ற மலிவான மாற்றீடுகளாக கிடைக்கும்போது மாட்டிறைச்சியெனக் கையெழுத்திடுமாறு அச்சுறுத்தப்படுகின்றனர்.... அயர்லாந்திற்குச் சென்ற சில இறைச்சிகள் போலந்திலிருந்து விநியோகம் செய்யப்பட்டவை; போலந்து நாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் 25,000 குதிரைகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரஷ்யா மற்றும் பால்டிக் அரசுகளில் செயல்படும் கும்பல்கள் இந்த மோசடி இறைச்சி வணிகத்தில் பங்கு கொண்டுள்ளன என்பதை தொழில்துறை ஆதாரங்கள் Observer இடம் தெரிவித்துள்ளன.

கிட்டத்தட்ட 75 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான பிரித்தானியாவின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்று உணவு உற்பத்தியாகும்; பிற தொழில்களைப் போலவே இது ஐரோப்பிய மற்றும் உலகம் தழுவி விநியோகம் செய்யும் தொடர் நிறுவனங்களை நம்பியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட Silvercrest இனால் வழங்கப்பட்ட குதிரை இறைச்சி அடங்கியிருந்த பேர்கர்கள் டெஸ்கோ மற்றும் பேர்கர் கிங் மற்றும் பிறவற்றிற்கும் விநியோகிக்கப்பட்டவைகளிடமிருந்து திரும்பப் பெறப்பட்டன; Silvercrest ற்கு அயர்லாந்தைத் தளமாகக் கொண்ட McAdam Foods ஆல் வழங்கப்பட்டன; McAdam Foods ற்கு Hull ஐ தளமாகக் கொண்ட Flexi Foods வழங்கியது; இந்நிறுவனம் பச்சை இறைச்சியை இரண்டு போலந்து நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியது.

Findus மற்றும் அல்டி ஆகியவை பிரெஞ்சு நிறுவனமான Comigel இடமிருந்து இறைச்சியைப் பெற்றன; Comigel அதனுடைய இறைச்சிகள் சிலவற்றை ருமேனியாவிலிருந்து வாங்குகிறது. குதிரை இறைச்சி உண்பது மனித ஆரோக்கியத்திற்குத் தீமை இல்லை என்றாலும், குதிரை இறைச்சியின் மூலங்கள் மனித உணவுச் சங்கிலிக்குள் நுழைவது குறித்துக் கவலைகள் உள்ளன. குதிரைகளை குணப்படுத்தப் பயன்படும் மருந்து ஒன்று அதாவது phenylbutazone (bute) குதிரை இறைச்சியிலிருந்து மனித உணவுச் சங்கிலியில் நுழைந்தால் அது தீவிர இரத்த நோயான aplastic anaemia என்பதை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய விளைவுகளையொட்டித்தான் மனிதர்களுக்கு ஒரு மருந்தாக bute தடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, ருமேனியாவிலிருந்து குதிரை இறைச்சி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன; ஏனெனில் ஒரு தொற்றிப்பரவும் வைரஸ் நோயான equine infectious anaemia என்பது அந்நாட்டில் உள்ளது. குதிரைகளின் AIDS எனவும் அறியப்பட்டுள்ள இந்நோயானது ருமேனிய குதிரைத் தொகுப்பில் இருப்பதால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவைகளை உயிருடன் ஏற்றுமதி செய்வது கூட தடுக்கப்பட்டது. இந்த வியாதி மனிதர்களுக்கு ஆபத்தைக் கொடுக்கவில்லை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள், ஆனால் அது இருப்பது பிற சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்த மோசடி, செலவுகளைக் குறைத்து, பல பில்லியன் பவுண்டுகள் இலாபங்களை அதிகரிக்கும் நிறுவனங்களின் உந்துதலுடைய விளைவாக இருக்கிறது. இதன் விளைவாக, பிரித்தானியா மற்றும் பிற நாடுகள் பெருகிய முறையில் உணவுக் கலப்படம் தொடர்புடைய மோசடிகள், முன்பு 18ம் நூற்றாண்டுக் காலத்தில் இருந்த நிலையைபோல், இப்பொழுது காண்கின்றன.

“இன்னும் மலிவான உணவிற்கான உந்துதல், உலகளாவிய தன்மை, சிக்கல் வாய்ந்த நிலை, இன்னும் அதிக பரவலைக் கொள்ளும்போது உணவுச் சங்கிலித் தொடரானது கூடுதல் அழுத்தங்களுக்கு உட்படுகிறது என்று பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மான்செஸ்டர் வணிகக் கூடத்தின் கரேல் வில்லியம்ஸ் இதை “சாதாரண விபத்து” என்று கூறுகிறார்—அதாவது தொந்திரவிற்கு உட்பட்ட பதனிடுவோர் “இந்த வாரம் மிக மலிவான உடன்பாட்டைக் காண விரும்புதல்” என்பதாலும் விலங்குகளின் உடற்பகுதிகளின் சர்வதேச வர்த்தகம் நடைபெறுவதாலும் ஏற்படுகிறது என்று கூறுகிறார்”

Findus Foods, தனியார் பங்கு நிறுவனமான Lion Capital ஆல் வாங்கப்பட்டது; இதனுடைய தலைவராக பல மில்லியன்களைக் கொண்ட 44 வயதான லிண்டன் லீ என்பவர் Weetabix போன்ற நிறுவனங்களை வாங்கிப் பின்னர் சீனாவிற்கு விற்பது போன்றவற்றின் மூலம் பெரும் பணத்தை ஈட்டியுள்ளார்.

சனிக்கிழமைக் கூட்டத்திற்குப்பின் வெளிவந்துள்ள அறிக்கையில், பாட்டெர்சன் சில்லறை வணிகர்கள், அதாவது பெரிய பல்பொருள் அங்காடி உரிமையாளர்கள்தான் அவர்கள் விற்கும் பொருட்களுக்கு இறுதிப் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என வலியுறுத்தினார்; அதாவது அவர்கள் தங்கள் செயல்களைத் தாங்களே கண்காணிக்க வேண்டும் என்ற வாய்ப்பைக் குறிப்பிடுகிறார். பல்பொருள் அங்காடிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்கள் முடிவுகளை FSA விற்குத் தெரிவிக்க ஒப்புக் கொண்டனர் என்று அவர் கூறினார்.

BSE  நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் FSA  ஆனது கடைசி தொழிற்கட்சி அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. உணவுத் தயாரிப்பு வழிமுறைகளை அது கண்காணிக்கும் திறன் அரசாங்கத்தின் செலவுக் குறைப்புக்களால் குறைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டது. இப்பொழுது FSA  அமர்த்தியுள்ள இறைச்சி ஆய்வாளர்களின் எண்ணிக்கை 800 ஆகும்அதாவது ஆரம்பத்தில் இருந்த எண்ணிக்கையில் பாதியையும் விடக் குறைவு ஆகும்.

ஐக்கிய இராச்சியத்தில் மனிதர்கள் உண்பதற்காக உள்ள உணவில் குதிரை இறைச்சி இருப்பது அயர்லாந்து அரசாங்கத்தின் உணவுத்துறை நிறுவனம் சோதித்த பிறகுதான் கண்டறியப்பட்டது. FSA வழக்கமாக இறைச்சி பற்றிய சோதனையை மேற்கொள்வது இல்லை; மாறாக உளவுத்துறை வழிகாட்டும்” அடிப்படையில்தான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அத்தகைய சோதனை கடைசியாக 2003ல்தான் செய்யப்பட்டது; அப்பொழுது இறக்குமதி செய்யப்பட்ட சலாமியில் குதிரை (equine) DNA  கண்டுபிடிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சிய உணவுச் சங்கிலித் தொடரில் குதிரை இறைச்சி நுழைவது, இறக்குமதிகளின் விளைவு எனத் தோன்றினாலும், ஆய்வுகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களால் பிரித்தானிய கசாப்பு நிலையங்களிலும் இந்த ஆபத்து தோன்றுவது அதிகரிக்கலாம். தற்பொழுது இவைகள் FSA அதிகாரிகளால் ஆய்விற்கு உட்படுகின்றன, ஆனால்  திட்டத்தின்படி ஆய்வு என்பது கசாப்பு நிலையச் சொந்தக்காரர்கள் நடத்துவதுதான். மேலும் குதிரை இறைச்சியிலிருந்து ஆபத்து வருவது அகற்றப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உண்மையான பிரச்சினை இதுதான்: அதாவது குதிரை இறைச்சி வாடிக்கையாக மாட்டிறைச்சி என மாற்றப்பட்டால், மனித உணவுச் சங்கிலித் தொடருக்குள் இன்னும் எத்தனை பிற பொருட்கள் நுழைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?