தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : துனிசியா General strike, mass protests shake US-backed Islamist regime in Tunisia துனிசியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்லாமியவாத ஆட்சியைப் பொது வேலைநிறுத்தம், வெகுஜன எதிர்ப்புக்கள் அதிர வைக்கின்றன
By Barry Grey
use this version to print | Send feedback பல்லாயிரக்கணக்கான துனிசியர்கள், மதசார்பற்ற எதிர்த்தரப்பு அரசியல்வாதி சோக்ரி பெலாய்ட் மரணத்திற்கு துக்கம் தெரிவிக்கவும், அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள இஸ்லாமியவாத அரசாங்கத்தை அகற்றக்கோரியும் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். UGTT எனப்படும் துனிசிய பொதுத் தொழிலாளர் சங்கத்தால் ஓர் ஒருநாள் பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது; இதையொட்டி ஆலைகள், வங்கிகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கடைகள் தலைநகரிலும் பிற நகரங்களிலும் மூடப்பட்டன; அதேபோல் அரசாங்கத்திற்குச் சொந்தமான துனிஸ் விமானமும் அதன் பயணங்கள் அனைத்தையும் இரத்து செய்தது. ஆனால் பஸ் போக்குவரத்து தொடர்ந்து நடந்தது. கடந்த 35 ஆண்டுகளில் துனிசியாவில் நடைபெற்ற முதல் வேலைநிறுத்தம் இதுதான். மக்கள் முன்னணிக் கூட்டில் உள்ள 12 கட்சிகளில் ஒன்றான இடது தாராளவாத ஜனநாயக தேசாபிமான இயக்கத்தின் முக்கிய உறுப்பினரான பெலாய்ட் புதன் அன்று அவர் துனிஸ் மாவட்டத்தில் உள்ள ஜெபெல் அல் ஜலௌட் வீட்டை விட்டுப் புறப்படுகையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்ட ஒரு நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எவரும் கொலைக்குக் உரிமை கூறிக் கொள்ளவில்லை என்றாலும், பெலாய்ட்டின் விதவை, என்னாஹ்டா கட்சி (Ennahda party) அரசாங்கம் தீவிர வலது சலாபிஸ்ட்டுக்களுடன் இணைந்து தன் கணவரைக் கொலைசெய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பெலாய்ட், என்னாஹ்டாவைத் தீவிரமாக விமர்சித்து வந்தார்; இது முஸ்லிம் சகோதரத்துவத்தில் இருந்து தோன்றியது. சலாபிஸ்ட்டுக்கள், சினிமாக்கள், நாடக அரங்குகள், மதுபான விடுதிகள், மதச்சார்பற்ற குழுக்களை சமீபத்தில் தாக்குவதற்கு அனுமதித்தது என்று என்னாஹ்டாவைக் குறைகூறினார். பலமுறை தான் மரண அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்; பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரியிருந்தார். வெள்ளியன்று பெலாய்ட்டின் வீட்டிற்கு அருகே 50,000த்திற்கும் அதிகமான மக்கள் கூடி, அவர் புதைக்கப்பட்ட ஜல்லஸ் கல்லறைக்கு அணிவகுத்துச் சென்றனர். அரசாங்க எதிர்ப்பு மற்றும் புரட்சிகர கோஷங்களான “மக்களுக்கு ஒரு புதிய புரட்சி வேண்டும்”, “மக்கள் ஆட்சியின் வீழ்ச்சியை விரும்புகின்றனர்” என்று முழக்கமிட்டனர். “ரொட்டி, சுதந்திரம் மற்றும் சமூக நீதி” என்றும் துக்கம் கடைப்பிடித்தவர்கள் கோஷமிட்டனர்; இது 2011 புரட்சியின் முக்கிய கோஷங்களில் ஒன்றாகும். இறுதிச் சடங்குகளின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் என்னாஹ்டாவின் தலைவர் ரஷிட் கன்னொச்சியை “கசாப்பு வெட்டுபவர், கொலைகாரர்” என்று அழைத்தனர். அல்ஜசீரா தொலைக்காட்சியில் தோன்றிய ஒரு என்னாஹ்டா அதிகாரி “வெளிநாட்டுக் கரங்களை” வன்முறைக்குக் குற்றம் சாட்டி, “துனிசியாவில் வெளிநாட்டு உளவுத்துறைக் கருவிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்று அச்சுறுத்தும் வகையில், தெரிவித்தார். ஆட்சி இவ்வளவு பெரிய அணிவகுப்பைக் கட்டுப்படுத்த, தலைக்கு மேல் இரண்டு பாதுகாப்புத் துறை ஹெலிகாப்டர்கள் பறந்தன; வெறுக்கப்படும் பாதுகாப்பு பொலிசுக்கு பதிலாக இராணுவத்தை திரட்டியது. எனினும் பொலிசார் கல்லறைக்கு வெளியே அணிவகுப்பை நடத்தி வந்த எதிர்ப்பாளர்கள்மீதும், உள்துறை அமைச்சரகத்திற்கு அணிவகுத்து வந்த ஆர்ப்பாட்க்காரர்கள் மீதும் கண்ணீர்ப்புகைக் குண்டை இயக்கினர். மேலும். அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பொலிசார் துனிசில் 150 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர் என தெரிவித்தார். நாட்டின் முக்கியமான பொட்டாஷ் சுரங்கத் தொழில் மையமான கப்சா என்னும் தெற்கு நகரத்திலும் அரசாங்க எதிர்ப்பாளர்களை கலைப்பதற்குப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டை இயக்கினர். இந்நகரம் பெலாய்ட்டிற்கு ஆதரவான ஒரு கோட்டையாகும். சௌசுவில் எதிர்ப்பாளர்கள் மாநில கவர்னர் உடைய இராஜிநாமவைக் கோரினர். கிட்டத்தட்ட 10,000 பேர் துனிசியப் புரட்சியின் பிறப்பிடம் என்று நன்கு அறியப்பட்ட தெற்கு நகரான சிடி போசிட் இல் அணிவகுத்தனர். அங்குதான் 2010ல் முகம்மது பூவாசாசி பொலிஸ் அவருடைய காய்கறி வண்டியைப் பறிமுதல் செய்தபோது, எதிர்ப்புத் தெரிவித்து தன்னையே தீக்கிரையாக்கிக் கொண்டார். பூவாசாசியின் இறப்பு வெகுஜன எதிர்ப்புகளின் வெடிப்பை ஏற்படுத்தியது, வேலைநிறுத்தங்களை தூண்டியது; இவை UGTT சார்பு ஆட்சியால் கட்டுப்படுத்தமுடியவில்லை: இதுதான் அடுத்தமாதம் பென் அலி நாட்டை விட்டு ஓட வழிவகுத்தது. சில வாரங்களுக்குப் பின் எகிப்தில் புரட்சி வெடித்து, அது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவுடைய சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 2011 கடைசியிலும், 2011 தொடக்கத்திலும் நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பின் மிகப் பரந்த முறையில் துனிசியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெடிப்பு முபாரக் வீழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு நிறைவு நாளுக்குச் சில நாட்கள் முன்பு நடந்துள்ளது. பெலாய்ட் கொலை நாட்டை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது, இது அரசியலமைப்பை இயற்றுவதற்காக அக்டோபர் 2011 தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று என்னாஹ்டா பதவிக்கு வந்த சிறிது காலத்திற்குள் ஏற்பட்ட அடக்கிவைக்கப்பட்டுள்ள சமூகச் சீற்றத்தின் வெடிப்பிற்கு தூண்டுகோலாயிற்று. சீற்றத்தின் மூலகாரணம், அரசாங்கத்தின் பொலிஸ் அடக்குமுறை மற்றும் சலாபிஸ்டுகள் வன்முறையை அதன் எதிர்ப்பாளர்கள்மீது பயனபடுத்தியது மட்டுமல்ல. மேலும் அடிப்படையில், இது பரந்த வேலையின்மை மற்றும் பெரும் வறிய நிலை என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பென் அலியின் மேற்கத்தைய ஆதரவு பெற்ற 25 ஆண்டுகள் நடைபெற்ற சர்வாதிகாரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைக்கைக்கு நிவாரணம் கிடைக்காததில் கிளைபரப்பியுள்ளது. துனிசியாவில் முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஆட்சி, வாஷிங்டன் ஆதரவைக் கொண்டுள்ள ஒரு முதலாளித்துவ ஆட்சி ஆகும். என்னாஹ்டா அரசாங்கம் அமெரிக்க- நேட்டோ போர் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெற்றதற்கு ஆதரவைக் கொடுத்தது. தற்பொழுது இது சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒரு தற்காலிக கடன் பெறுவதற்கான விதிகள்குறித்துப் பேச்சுக்களை நடத்துகிறது; இதில் துனிசிய தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளும் அடங்கும். புதன்கிழமை பெலாய்ட் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்த சில மணி நேரத்திற்குள் துனிஸ் சாலைகளில் தடுப்புக்கள் வைக்கப்பட்டது, மக்கள் கூட்டம் குறைந்த பட்சம் 12 நகரங்களில் என்னாஹ்டா அலுவலகங்களை தாக்கியது. வியாழன் அன்று, என்னாஹ்டாவின் தலைமைச் செயலர் தேசிய தொலைக்காட்சியில் அரசாங்கத்தை கலைத்து அதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்படாத தொழில்நுட்ப வாதிகளுடைய ஆட்சியை பாராளுமன்ற தேர்தல்கள் ஜூன் மாதம் நடக்க இருப்பது வரை நியமிக்க திட்டம் கொண்டிருப்பதாகக் கூறினார். மக்கள் சீற்றத்தைத் தணிக்கும் நோக்கமுடைய இந்த அறிவிப்பு அதற்கு மாறாக எரியூட்டியது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் துனிஸ் மையப்பகுதியில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மேசை நாற்காலிகள், கோப்புக்கள் மற்றும் கருவிகளைத் தெருக்களில் வீசி எறிந்தனர். இதை எதிர்கொள்ளும் வகையில் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். கஃப்சாவில் நூற்றுக்கணக்கான கல்லைவிட்டு எறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசின் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை எதிர்கொண்டனர். இராணுவம் சிடி போசிட் இல் பரந்த எதிர்ப்புக்களை கையாள நிலைப்படுத்தப்பட்டது. பிரதம மந்திரி ஜெபாலி “சார்பற்ற” மற்றும் தொழில்நுட்ப அரசாங்கம் தேவை என்று கூறியது அவருடைய கட்சியால் நிராகரிக்கப்பட்ட அளவிலேயே வியாழன் பின்னிரவில் துனிசிய ஆட்சியின் நெருக்கடி கூடுதலாயிற்று. என்னாஹ்டா கட்சி, துனிசியாவிற்கு ஒரு “அரசியல் அரசாங்கம் தேவை” என்றும் அது அக்டோபர் 2011 தேர்தல்களை ஒட்டி இருக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அன்றே நான்கு எதிர்த்தரப்புக் குழுக்கள், பெலாய்டின் மக்கள் முன்னணி முகாம், துனிசியாவிற்கான அழைப்பு என்னும் கட்சி (நிடா ரோனஸ்), அல் மசர் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவை தாங்கள் தேசிய அரசியலமைப்புச் சட்ட மன்றத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தன. UGTT மக்கள் எதிர்ப்புக்கள் ஒரு புதிய புரட்சிகர எழுச்சியாக விரிவடைந்துவிடுமோ என்னும் அச்சத்தில், இயக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக வெள்ளியன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அறிவித்தது. மக்கள் முன்னணி முகாம் ஹம்மா ஹம்மாமி தலைமையில் மாவோயிச தொழிலாளர் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. ஹம்மாமியும் அவர் கட்சியும் நீண்ட காலமாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தைத் திசை திருப்பும் வகையில்தான் செயல்படுகின்றன; துனிசிய தொழிலாளர்களை தாராளவாத, மதசார்பற்ற முதலாளித்துவ பிரிவுகளுக்குள் பிணைக்க முற்படுகின்றன. தற்போதைய நெருக்கடியிலும் அதே பங்கைத்தான் கொண்டுள்ளன. மக்கள் முன்னணியில் பிணைந்திருக்கும் நான்கு முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் ஒன்று, நிடா ரோனஸ் (துனிசியாவிற்கான அழைப்பு) ஆகும். இது 86 வயதான பெஜி கைடி எசெப்சியின் தலைமையில் உள்ளது; அவர், சர்வாதிகார ஆட்சிகள் ஹபிப் பௌர்கிபா மற்றும் பென் அலியின் ஆட்சிகளின் கீழும் நீண்டகாலமாகப் பணியாற்றிய ஒரு அதிகாரி ஆவர். வெள்ளியன்று பிரதம மந்திரி ஜெபாலி சற்று மாற்றங்களுடன் கூடிய புதிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். அவர் தனது அரசாங்கத்தை கலைக்கவில்லை, வெறுமனே அதன் உறுப்பினர்களை மாற்றுவதால் அதற்கு அரசிலமைப்பு சட்டசபை ஒப்புதல் தேவை இல்லை என்றும், தனது கட்சியின் ஆதரவே போதும் என்றும் கூறினார். எனினும் அவருடைய திட்டம் தடுக்கப்பட்டால், அவர் பிரதம மந்திரி பதவியில் இருந்து கீழறங்கப் போவதாக குறிப்புக் காட்டியுள்ளார். |
|
|