சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Vadim: German documentary chronicles a family destroyed by immigration authorities

வாடிம்: குடியேற்ற அதிகாரிகளால் அழிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை சித்தரிக்கும் ஜேர்மன் ஆவணப்படம்

By Bernd Reinhardt
24 January 2013

use this version to print | Send feedback

கார்ஸ்டன் ராவ் மற்றும் ஹாவ்க வென்ட்லரால் இயக்கப்பட்டது


வாடிம் 19 வயதில் பாரிஸில்

ஜேர்மன் ARD தொலைக்காட்சி, கார்ஸ்டன் ராவ் மற்றும் ஹாவ்க வென்ட்லரின் இயக்கத்தில், பல விருதுகளை-வென்றிருக்கும் ஒரு சிறந்த ஆவணப்படத்தை சமீபத்தில் ஒளிபரப்பியது.

குடும்பத்தையும் வீட்டையும் இழந்த நிலையில், இந்த பூமியில் தனக்கான ஓர் இடமில்லையென்பதை உணர்ந்து, 23 வயதான வாடிம்.கே. ஹம்பேர்க் நகரில் 2010ல் தற்கொலை செய்துகொள்கிறான்.

சோவியத் ஒன்றியத்தின் உடைவை அடுத்து, இவனது பெற்றோர் 5 வயதான வாடிம் மற்றும் அவனது தம்பியுடன் சேர்ந்து ஜேர்மனியில் புதிய வாழ்வை அமைத்துக் கொள்வதற்காக லாட்வியாவை விட்டு தப்பி ஓடுகின்றனர். லாட்வியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த வரை, அவனது தந்தை ரிகாவில் ஒரு காவல்துறை அதிகாரியாகவும், தாயார் ஒரு பாதுகாப்பு ஆலையிலும் பணியாற்றினர்.

1987ல் லாட்வியன் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஸ்ராலினிசத்துடன் கணக்கு தீர்த்துக்கொள்வதற்காக எழுந்த அந்த இயக்கம், லாட்வியாவிற்கான சுதந்திரத்தினையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு சக்திகளை திரும்பப் பெறுவதையும் கோருகின்ற தேசியவாத சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் தொகையில் ரஷ்ய மொழி பேசும் பிரிவினராக இருந்த வாடிமின் பெற்றோர், திடீரென தாங்கள் தாக்கப்படுவதாக உணர்ந்தார்கள். 1991 இன் லாட்வி சுதந்திரத்திற்குப் பின், தந்தை வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்.

1992ல், இக்குடும்பம் ஹம்பேர்க்கில் அரசியல் புகலிடம் கோரியதில் நம்பிக்கை வைக்கிறது. அந்த விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக, ஜேர்மனியின் நேர்மையான ஜனநாயகம், அதன் பல-கட்சி அமைப்புமுறை ஆகியவற்றின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தன் குடும்பத்திற்காக ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக ஒரு வேலையை தேடிக் கொண்டு, தன் குழந்தைகளை அங்கு வளர்க்க விரும்புவதாகவும் தந்தையார் குறிப்பிட்டார்.



Vadim

இந்த குடும்பம் முதலில் வந்தடைவது புகலிடம் தேடுவோருக்கான ஒரு  குடியிருக்கும் கப்பலாகும். பின்னர் நான்கு பேர் கொண்ட இக்குடும்பத்திற்கு ஒரு சிறு அறை ஒதுக்கப்படுகிறது. 1995ல், இவர்களின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஜேர்மன் அதிகாரிகளால் இவர்களை லாட்வியாவிற்கு திருப்பி அனுப்ப முடியாததால், இக்குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சகித்துக்கொள்ளப்பட்ட இருப்பிட அந்தஸ்த்து ஒதுக்கப்படுகிறது. புதிய லாட்வி அரசு எந்த ரஷ்யர்களையும் லாட்விய குடிமக்களாக அங்கீகரிப்பதை விரும்பவில்லை. எனவே, அவர்கள் நாடற்றவர்களாகின்றனர்

1998ல், ஜேர்மனியும் லாட்வியாவும் நாடுதிரும்பல் பற்றிய ஓர் ஒப்பந்தத்திற்கு உடன்படுகின்றன. பின்னர், அவர்களது சட்ட ஆலோசகரின் படி, இக்குடும்பம் எந்த நேரத்திலும் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற நிலையை எதிர் நோக்கியுள்ளது. 2005 வரை இந்த நிச்சயமற்ற நிலை தொடர்கிறது. வாடிம்மிற்கு 18 வயதானதும், ரு நாள் நள்ளிரவு போலிஸ்காவலர்கள் அவர்களின் அறைக்குள் நுழைகின்றனர். ஒட்டுமொத்த அவநம்பிக்கையில், வாடிம்மின் தாயார் தன் கைகளை கிழித்துக் கொள்கிறாள், அதனால் அவள் மனநல ஆலோசனைக்கு அழைத்து செல்லப்படுகிறார், அவனது தந்தையாரோ நாடுகடத்தப்படவுள்ளோருக்கான  சிறையில் அடைக்கப்படுகிறார்

வாடிம் ஃப்ராங்பேர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு, ஒரு விமானத்தில் ஏற்றப்படுகிறார். விரைவில், அவன் தன் சொந்தநகரான ரிகாவை சென்றடைகிறான். அவன் பையில் €10 [$13.00] இருக்கிறது. அவனால் லாட்வியன் மொழியையும், ரஷ்ய மொழியையும் சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் ஒரு ஜேர்மன் குடிமகன் அல்ல என்பதால் ஜேர்மன் தூதரகம் அவனுக்கு உதவ மறுக்கிறது. கடைசியாக வீடற்றவர்களுக்கான இல்லம் ஒன்றில் அவனுக்கு ஓரிடம் கிடைக்கிறது. அவன் லாட்வியக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கிறான். ஏனைய 4,50,000 ரஷ்யர்களுடையது போன்று இவனது விண்ணப்பமும் நிராகரிக்கப்படுகிறது.


Vadim

பின்பு அவன் சட்டவிரோதமாக ஜேர்மனிக்கு திரும்பி, பின்னர் ஃபிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் தங்கிவிட முயற்சிக்கிறான், ஆனால் பலனில்லை. 2006ல் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். ரிகாவில் பயிற்றப்படாத தொழிலாளியாக ஒரு ரஷ்ய நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைக்கிறது. வெளிப்படையாக, லாட்வியாவில் ரஷ்ய முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்

பின்னர் 2008 நெருக்கடி ஏற்பட்டு, ஒரு பகுதி வேலையாட்கள் நீக்கப்பட்டனர். அவனது முறை வந்தபோது மீண்டும் அவன் ஜேர்மனிக்கு போகிறான். அவன் பெற்றோர் இனி நாடுகடத்தலை எதிர்கொள்ளவில்லை. இருவருமே உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதுடன் அவர்களுக்கு உளவியல் மருத்துவமும் தேவைப்படுகிறது. வாடிமிற்கு அவன் மூர்க்கத்தனமாக வெளியேற்றப்பட்ட தன் சொந்த நகரமான ஹம்பேர்க்கே அவனது கடைசி இடமாகின்றது.

வாடிமின் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், ஒரு சக பணியாளர், ஒரு வக்கீல், அக்குடும்பத்தின் சட்ட ஆலோசகர், வாடிமின் முதல் காதலி மற்றும் வாடிமை அறிந்திருக்கும் பலரும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ராவும் வென்ட்லரும் வழங்குகின்றனர். மக்களுக்கு இயல்பான வாழ்வினை மறுக்கின்ற கொடூர சட்டங்களால், இரண்டு குழந்தைகளடங்கிய ஒரு குடும்பம் கிட்டத்தட்ட இருபது வருட காலகட்டத்தில் எப்படி திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்கிற முடிவு உணர்வுபூர்வமாகவும் மற்றும் பயங்கரமாகவும் இருக்கிறது.

பாரிய நம்பிக்கை மற்றும் மிகுந்த மகிழ்ச்சிக்கான எதிர்பார்ப்புகளுடன் வாடிம் தன் வாழ்வை ஆர்ரம்பிக்கின்றான். விரைவில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கான பாலர் பாடசாலை மற்றும் குழந்தைகள் செல்வதற்கான அடுத்த பாடசாலைகள்   பற்றி யோசிக்கிறார்கள். ஜேர்மன் குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தங்கள் குழந்தைகள் வளர்வதற்கு அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். வாடிம் அவர்களது தேவாலயத்தில் ஓர் உதவியாளனாககூட ஆகிறான்.

குழந்தைகள் இசைக்கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்கின்றனர். வாடிம் பல நண்பர்களுடன் சமமாகப் பழகும், ஒரு வெளிப்படையான சிறுவன்.

ஆனால் பெற்றோர், தங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்களை புகலிடம் தேடுபவர்களென்றும் இனரீதியில் ஜேர்மன் குடியேற்றவாசிகள் அல்ல என்பதை அறிந்துகொண்டதையிட்டு பயப்பட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அடிக்கடி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருப்பதாக உணர்கிறார்கள். அவர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. வேலை செய்யக்கூடாது என்ற தடை குறிப்பாக அப்பாவை மேலும் மேலும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது.

குடியுரிமை அலுவலகத்திற்கு செல்வதென்பது காலையில் 4 மணி முதல் 5 மணிக்கு எழ வேண்டும் என்று அம்மா சொல்கிறாள். அவள் தன் குழந்தைகளை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டியிருக்கிறது. கட்டிடத்தின் முன்பு ஒரு நீண்ட வரிசை. நுழைவாயில் திறந்ததும் திடீரென மக்கள் சீட்டினைப் பெறுவதற்காக ஓடுகின்றனர். விடுபட்டவர்கள் அடுத்த நாள் வர வேண்டும். தள்ளுப்பாடுகள் ஏற்பட்டு, அடிதடியாகிவிடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் மக்களை இழுத்து தள்ளுகின்றனர்.

ஜேர்மன் கடவுச்சீட்டு கிடைக்கும் என்று இப்பொழுதும் அந்த குடும்பம் நம்புகிறது. வாடிமால் ஜிம்னாசியம் (Gymnasium- கல்வியில் சிறந்தவர்களுக்கான இரண்டாம்நிலைப் பள்ளி) செல்ல முடிவதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி. அவன் பியானோவுடன் கூடுதலாக பசூனும் (இசைக்கருவி) வாசிக்க ஆரம்பிக்கிறான். அம்மா மிகுந்த மன அழுத்தம் மற்றும் உளப்பிணியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு முன்னாள் சமுக பணியாளர் தெரிவிக்கிறார். வெளிப்படையாகவே திறமைசாலியாக இருந்த போதிலும், 2001ல் வாடிம் பாடசாலையை விடவேண்டியிருக்கிறது, அதனால் மறுபடியும் ஆறு மாதங்களுக்குள் ஹாப்ட்ஸ்க்கூலுக்கு (Hauptschule-கல்வியில் குறைவான திறமையுள்ளவர்களுக்கான) வந்து சேர்கிறான்.

முடிவில், ஜேர்மன் அதிகாரிகள் வாடிம் பள்ளியில் 10ம் வகுப்பை முடிக்க கூட அனுமதிக்க மறுக்கின்றனர். பள்ளி வருடம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அவனை நாடு கடத்துகின்றனர்.

எதிர்பார்த்திருக்கும் மற்றும் நிலைத்த துன்பங்கள் யாவும் இறுதியாக குடும்பத்தினை உடைக்கிறது. குடும்பத்திற்குள் மேலும் மேலும் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. தங்களின் நிலைமைக்காக குழந்தைகள் தங்கள் தந்தையை குறைகூறுகின்றன. குழந்தைகள் தன்னை அலட்சியப்படுத்துவதாக தாயார் நினைக்கிறாள். வாடிம்மின் இறப்புக்கு பின், குடும்பத்தை பாதுகாக்கத் தவறியதான குற்றச்சாட்டுக்கள் அவளை  துன்பப்படுத்துகின்றன.

ஹம்பேர்க் குடியுரிமை அதிகாரிகளின் தலைவரான ரால்ஃப் போர்ன்ஹாஃப்ட் மட்டும் தொலைபேசியில் பேச விரும்புகிறார். தன் அலுவலத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான நீண்டகால கூட்டுறவை குறிப்பிடுகிறார். அரசியல்வாதிகள் அலம்பிவிட்டு பின் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர். அவர்கள் கொண்டுவருவதை..... (...) நாங்கள் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. நாங்கள் மோசமான வேலையை செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்.

அகதிகள் மற்றும் புகலிடம் தேடுவோர்களது பாதுகாப்பாளராக தங்களை காட்டிக்கொள்ளும் பசுமைக்கட்சிக்காரரை போர்ன்ஃப்ஹாஃப்ட் வெளிப்படையாக குறிப்பிடுகிறார். அவர்கள் அரசாங்கத்திற்குள் வந்தவுடன், அவர்களும் இந்த சட்டங்கள் எதையும் மாற்ற மறுக்கிறார்கள். அவரும் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) ஒரு உறுப்பினராக இருப்பதாக இத்திரைப்படம் சிறப்பாக குறிப்பிட்டிருக்க இயலும். போர்ன்ஹாஃப்ட் வலது-சாரி அரசியலுக்கும் அதிகாரத்துவ திமிருக்கும் இடையிலான உடல்ரீதியான தொடர்பாக இருக்கின்றார்.

கிட்டத்தட்ட 87 ஆயிரம் மக்கள் அகதிகள் சட்டத்தால் ஜேர்மனியில் வசிப்பதற்கு குறுகிய-கால வசிப்பிட அனுமதியுடன் சகித்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுள் ஏறக்குறைய 60 சதவீதம் பேர் அந்நாட்டில் 6 வருடங்களுக்கும் மேலாக வசிக்கின்றனர்.

ஜேர்மனிக்கும் லாட்வியாவுக்குமிடையேயான நாடுதிரும்பல் ஒப்பந்தம் 1998இல் சமூக ஜனநாயக கட்சி- பசுமைக்கட்சி கூட்டு அரசாங்கத்தின் கீழ் அடையப்பட்டது. மற்றவர்களினதுடன் சேர்ந்து அப்போதைய உள்துறை அமைச்சரான ஒட்டோ ஸில்லியின் (SPD) கையொப்பத்தையும் அது கொண்டிருக்கிறது.

***

வாடிம் ஆவணப்படம் ஜேர்மன் மொழியில் ARD’s வலைப்பக்கத்தில் Mediathek பகுதியில் காணக்கிடைக்கிறது.