தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
US to expand assassination program to northern Africa வட ஆபிரிக்காவில் படுகொலைத் திட்டத்தை அமெரிக்கா விரிவாக்குகிறது
By Joseph
Kishore use this version to print | Send feedback ஒபாமா நிர்வாகமானது அல்ஜீரியா மற்றும் பிற வடமேற்கு ஆபிரிக்க நாடுகளில் அதனுடைய டிரோன் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மற்றும் CIA ஆல் “கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை” விரிவுபடுத்தப்படுவதற்கான தயாரிப்பு யோசனைகளுக்கு இடையே இன்னும் பாதுகாப்பான முறையில் நிறுவனமயப்படுத்துவதற்கான உலகப் படுகொலைத் திட்டம் நடைபெறுகின்றன. சனிக்கிழமை வெளிவந்த Wall Street Journal இன் முதல் பக்க அறிக்கையின் தலையங்க அறிவிப்பின்படி, “அமெரிக்கா ‘கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை’ விரிவுபடுத்தும் முயற்சியான” டிரோன் விரிவாக்கத் திட்டத்தின் உடனடி இலக்கு ஒரு அல்ஜீரியரான மொக்தார் பெல்மொக்தார் ஆவார்; இவர் ஜனவரி மாதம் அல்ஜீரியாவில் அமெனஸ் என்னும் இடத்தில் இயற்கை எரிவாயு நிலையத்தைக் கைப்பற்றிக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள நடைபெற்ற நடவடிக்கைக்கு பொறுப்பேற்றவராவார். பல்தேசிய நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்படும் முக்கிய எரிசக்தி நிலைய வளாகத்தை அல்ஜீரிய இராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதால் 69 பேர்கள் கொல்லப்பட்டார்கள். Journal இல் தெரிவித்திருப்பதன்படி, “டிரோன்களின் மூலமாகவோ, பிற விமானங்களோ, அல்லது அமெரிக்கப் படைகளோ எவைகளாயினும் சரி திரு. பெல்மொக்தருக்கான வேட்டையில் இன்னும் நேரடி ஈடுபாடு தேவை என சில அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். அத்தகைய முயற்சிக்கு இராணுவத்தின் சிறப்புப் பிரிவுப் படைகளின் மேல் நம்பிக்கைவைக்க முடியும் என்றும், CIA யிடமிருந்து உதவியைப் பெறலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.” பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், யேமன் மற்றும் வடகிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியா ஆகிய நாடுகளிகளில் இதுவரை படுகொலைகள் குவியப்படுத்தப்பட்டன. வடமேற்கு ஆபிரிக்காவில் டிரோன் மூலம் படுகொலை விரிவாக்கம் என்பது வட ஆபிரிக்காவில் அனைத்து முக்கிய ஏகாதிபத்தியச் சக்திகளுடைய குவியத்தின் ஒரு தீவிரப்படுத்தப்பட்ட பகுதியாக இருக்கிறது —இங்கே தான் 2011ஆண்டில் நடைபெற்ற அமெரிக்கத் தலைமையிலான லிபியப் போர் மற்றும் தற்பொழுது நடைபெறும் மாலியில் பிரெஞ்சுத் தலைமையிலான போர்ப் பகுதியாகும். அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு படைகளின் அந்தஸ்து உடன்பாட்டை ஒரு டிரோன் தளத்தை நிறுவுவதற்கு நைஜரில் பெற்றுள்ளது. நைஜரின் வடக்கே அல்ஜீரியாவும் மேற்கே மாலியும் உள்ளன. புவியியல் தடையோ அல்லது தேசிய இறையாண்மை வேறுபாட்டை கருதாமலோ அமெரிக்கக் குடிமக்கள் உட்பட யாரையும் அது படுகொலை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளதாக ஒபாமா நிர்வாகத்தின் நிலைப்பாடு இருக்கிறது. “கொலை நடவடிக்கைகள்” “நடைபெறும் நாட்டின் இசைவைப் பெற்றால்” சட்டபூர்வம் எனவும் அல்லது அந்த அரசாங்கம் “அச்சுறுத்தலை அடக்க இயலாது அல்லது விருப்பமற்றது” என உறுதியானால் போதும் என்றும் கடந்த வாரம் நீதித்துறையின் வெள்ளைத்தாள் கசிய விடப்பட்டதில் வாதிட்டுள்ளது—வேறுவிதமாகக் கூறினால், இலக்கு வைக்கப்பட்டுள்ள நாட்டின் அரசாங்கத்தின் மனப்பாங்கைப் பொருட்படுத்தாமல் என்று பொருளாகும். அதிகாரத்திற்கு வந்தபின், ஒபாமா மிகப் பெரிய அளவில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் டிரோன் மூலம் படுகொலைகளை விரிவாக்கியுள்ளார். பாக்கிஸ்தானில் மட்டும் 2,300 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்; இதில் வெள்ளியன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 9 க்கு மேற்பட்டவர்களின் கொலைகளும் அடங்குகின்றன. பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் கருத்துப்படி, கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் இவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணக் குடிமக்கள் ஆவார்கள். ஆனால் பெருகிய முறையில் டிரோன் தாக்குதல்களை உலகெங்கிலும் அதனுடைய இராணுவ நடவடிக்கையின் மத்திய கருவியாக டிரோன் படுகொலையை அமெரிக்கா கருதுகிறது. ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அமெரிக்க ஆதரவுடைய அரசாங்கங்களுடன் மோதும் சக்திகளை இலக்கு வைக்கும் ஒரு கருவியாகவும் இருக்கிறது, இதில் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் கட்டாயமாக ஈடுபட வேண்டியதில்லை. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது இந்த மிகப் பெரிய அமெரிக்க இராணுவவாதத்தின் விரிவாக்கத்திற்கு ஒரு போலிக் காரணம்தான். “ஏனெனில் எந்த அளவிற்கு இக்குழு அமெரிக்காவை நேரடியாக அச்சுறுத்துகிறது மற்றும் அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக தாக்குதல் சதிகளுக்குத் திட்டமிடுகிறது என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன” என்று அல் கெய்டாவுடன் தொடர்புடைய குழுவான மெக்ரப் மீது தாக்குதல்கள் நடத்துவது குறித்து நிர்வாகத்திற்குள் சச்சரவுகள் உள்ளதாக Journal குறிப்பிடுகிறது. உண்மையில், லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை அகற்றியும் கொலையும் செய்த இரத்தம் தோய்ந்த போரில் அல் கெய்டா தொடர்புடைய சக்திகள் அமெரிக்காவுடன் ஒன்றுபடுத்தப்பட்டன; அதே போன்ற குழுக்கள்தான் இப்பொழுது சிரியாவில் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டுள்ள உள்நாட்டுப் போரிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன. பொதுவாக, வட ஆபிரிக்கா பெருகிய முறையில் ஒரு மத்திய புவிசார் அரசியல் பிராந்தியமாக காணப்படுவதுடன், கணிசமான இயற்கை எரிவாயு இன்னும் பிற மூலோபாய ஆதார வளங்களை விநியோகிக்கும் இடமாகவும் காணப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இடையேயான மோதலுக்கு ஒரு முக்கியமான நிலையிடமாகவும் இருக்கிறது. ஒபாமாவின் கீழுள்ள இராணுவத்தின் ஆபிரிக்க கட்டளையகத்தின் (AFRICOM) கணிசமான விரிவாக்கம் நடைபெற்றுள்ளது; அத்துடன்கூட கண்டத்தில் நிரந்தர இராணுவத் தளங்களை நிறுவும் திட்டங்களும் உள்ளன. மாலி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நைஜர், நைஜீரியா, புர்கினா பாசோ, செனேகல், டோகோ மற்றும் கானாவிற்கு அமெரிக்கச் சிறப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. CIA மற்றும் இராணுவம் நடத்தும் படுகொலைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் பெருகிய முறையில் நம்பியிருப்பதானது, அரசியல் ஸ்தாபனப் பிரிவுகளிலிருந்து இன்னும் பாதுகாப்பான முறையில் இந்நடவடிக்கையை நிறுவனமயப்படுத்தி, அதற்கு ஒரு சட்டபூர்வத்தன்மை என்னும் மறைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற அழைப்புகளுக்கு எரியூட்டியுள்ளது. இத்திட்டங்கள் இன்னும் முக்கியமாக அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்வது குறித்த வெள்ளைத்தாள் கடந்த வாரம் கசிய விட்டபின் எழுப்பப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகள் மீது பரந்த செயல்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய குடிமக்களை எந்த முறையான சட்ட வழிமுறையும் இன்றி அது கொல்ல முடியும் என்பதும், குறிப்பாக நிறைவேற்றுப் பிரிவுகளின் மீதும் இராணுவ உளவுத்துறை அமைப்பின் மீதும் வரம்பற்ற அதிகாரத்தை முக்கியமாக கொடுப்பதாகவும் நிர்வாகத்தின் வாதங்கள் உள்ளது. ஆயினும்கூட, அரசியல் மற்றும் செய்தி ஊடக ஸ்தாபனங்களுக்குள், திட்டத்தை நிறுத்துவதற்கான அழைப்போ, யார் இதை முதலில் நடைமுறைக்கு கொண்டுவருபவர் மற்றும் கண்காணிப்பவர் பொறுப்புக் கூற வேண்டும் என்னும் அழைப்போ கிட்டத்தட்ட இல்லை. கடந்த வாரம் ஒபாமாவின் தலைமை பயங்கரவாத எதிர்ப்பு தலைமை ஆலோசகரும் CIA க்கான ஒபாமா நியமித்த தலைவருமான John Brennan இன் பதவியை உறுதி செய்வதற்கான செனட் குழுக் கூட்டமானது படுகொலைத் திட்டத்திற்கு இருகட்சி ஆதரவைத்தான் தெளிவுபடுத்தியுள்ளது. Brennanதான் படுகொலைத் திட்டத்தை வழிநடத்தியிருக்கிறார். ஒரு செனட்டர் கூட Brennan னுக்கு எதிராக வாக்கு அளிக்கப்போவதாக அறிவிக்கவில்லை; அவர் இந்த வாரத்திலேயே எளிதில் பதவியில் உறுதிப்படுத்தப்படுவார். அமெரிக்கக் குடிமக்களை ஜனாதிபதி படுகொலை செய்வது குறித்த விமர்சனங்கள் தந்திரோபாய மற்றும் நடைமுறைசார்ந்த பிரச்சினைகளாகத்தான் குறுக்கப்பட்டுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கப் பக்கத்திலிருந்து கருத்தை எடுத்துக் கொண்டவர்களான சில காங்கிரஸ் உறுப்பினர்களும் கருத்துத் தெரிவிப்பவர்களும் அரச படுகொலைக்கு ஒரு போலித்தன சட்டப்பூர்வ ஒப்புதல் முத்திரையும் நீதித்துறை விசாரிப்பைச் செய்ய ஒரு இரகசிய நீதிமன்றமும் நிறுவப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். நியூ யோர்க் டைம்ஸில் சனிக்கிழமை பிரசுரித்துள்ள கட்டுரையில் (“Debating a Court to Vet Drone StrikesK), “டிரோன் தாக்குதல்களை செயற்படுத்துவதற்கு மறைவிலிருக்கும் அதிகாரத்துவத்தின் பரந்த அதிருப்தி என்பதை எதிர்கொள்ளும் வகையில், உளவுத்துறைக் கண்காணிப்புச் சட்ட மாதிரியில் ஒரு நீதிமன்றம் அமைப்பதில் அக்கறை வந்துள்ளது—அதாவது இது காங்கிரசால் செய்யப்படலாம், அதையொட்டி கண்காணிப்பானது ஒரு கூட்டாட்சி நீதிபதியினால் நியாயப்படுத்தப்படும்—சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் இலக்கு வைத்துக் கொல்லப்படுவதோ அல்லது, குறைந்தப்பட்சம் சந்தேகத்திற்குரிய அமெரிக்கர்களையாவது.” Brennan பதவியை உறுதி செய்யும் குழுக் கூட்டத்தில் உளவுத்துறை செயற்குழுவின் தலைவரும் ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினரான டயேன் பீன்ஸ்டின் திட்டத்திற்கு ஆதரவைக் கொடுத்தார். பிரென்னனே இது “பெறுமதியான விவாதம்” என்று தெரிவித்தார் மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் தானும் திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். பல “சட்ட அறிஞர்கள் மற்றும் பயங்கரவாத வல்லுனர்களைக்” குறிப்பிட்டு, டைம்ஸ் எழுதுகிறது: அதாவது “ஆப்கானிஸ்தான் போர் முடிக்கப்பட இருக்கையில், அல் கெய்டா சிறிய பகுதிகளாகப் பிரிந்துள்ள நிலையில், 2001 ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த காலத்தில் மறைந்துவிட்ட நிலையில், ஒரு புதிய, நம்பகத்தன்மையுடைய, வெளிப்படையான முறை ஒன்று கொடூர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த கடைப்பிடிக்கப்பட வேண்டியது முக்கியமாகிவிட்டது.” “அல் கெய்டாவின்” முக்கிய பிரிவு பாக்கிஸ்தானில் பெரிதும் குறைந்துவிட்ட நிலையிலும், ஒசாமா பின் லேடன் இறந்துவிட்ட நிலையிலும், படுகொலையின் இலக்குகள் இப்பொழுது “நடுத்தரப் போராளிகள் மற்றும் கீழ்நிலை போராளிகளின் கலவையாக இருக்கின்றன. அமெரிக்காவிடம் என்பதைவிட பாக்கிஸ்தான் அல்லது யேமன் அதிகாரிகளிடம்தான் குவிப்பு இருக்கிறது” என்று செய்தித்தாள் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளது. டிரோன் படுகொலைகளின் இலக்கு அல் கெய்டா செயற்பாட்டாளர்கள் அல்ல என்பதையும், தங்கள் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்துப் போராடுபவர்கள் அல்லது வாஷிங்டன் ஆணையை செயல்படுத்தும் அடக்குமுறை ஆட்சிகளுடன் போராடுபவர்கள் என்பதை இது புறக்கணித்து ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது. ஒரு இரகசிய டிரோன் படுகொலை நீதிமன்றம் கூடுதல் “வெளிப்படைத் தன்மைக்கு” வகை செய்யும் என்பதையும், படுகொலைத்திட்டத்தை அரசியலமைப்பு நெறிகளையும் நியாயப்படுத்திவிடும் என்ற கூற்றை முழுமையாக டைம்ஸ் கட்டுரையானது அம்பலப்படுத்துகிறது. அத்தகைய புதிய நீதிமன்றத்திற்கு மாதிரி தற்பொழுதுள்ள FISA நீதிமன்றம் ஆகும் என அது குறிப்பிடுகிறது; இது முழு இரகசியத்துடன் செயல்படுவதுடன், அரசாங்கத்தின் ஒவ்வொரு புதிய கண்காணிப்பு வேண்டுகோளுக்கும் ஒப்புதல் கொடுக்கிறது. “2011இனதும் மற்றும் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 1,745 உத்தரவுகளை மின்னணுக் கண்காணிப்பு, உடல்ரீதியான சோதனை இவற்றிற்கு நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தது; எதையும் நேரடியாக நிராகரிக்கவில்லை என்றும் 30 ஐ மட்டும் திருத்தியது” என்றும் செய்தித்தாள் எழுதுகிறது இந்த நீதிமன்றம் நிறுவப்பட்டால், படுகொலைக்கான அத்தகைய நீதிமன்றம் என வருவது, திட்டத்தை ஒரு “பரிசோதனை செய்ய” வராது. மாறாக அரசு உத்தரவிட்டுள்ள கொலைக்கு அரசாங்க நிறுவனங்களில் இன்னும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒரு கருவியாகத்தான் இருக்கும். |
|
|