WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு தயார் செய்கிறது
By Pierre Mabut and Antoine
Lerougetel
9 February 2013
Back to screen version
ஜனாதிபதி
பிரான்சுவா ஹாலண்டின் பிரெஞ்சு
சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் பரந்த வேலையின்மை
மற்றும் தொழிற்சாலை
மூடல்களுக்கு
எதிராக போராடும் தொழிலாளர்களை
கண்காணிக்க இரகசிய பணிப்பிரிவையும்,
போலிசையும் திரட்ட உத்தரவிட்டுள்ளது.
பிரெஞ்சு உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் செவ்வாயன்று அவருடைய அரசியல் போலீஸ்,
பணிநீக்கங்களுக்காவும் ஆலைகள்
மூடல்களுக்காகவும் குறிக்கப்பட்டுள்ள அலைகளில் தொழிலாளர்களின் வளர்ந்து வரும்
எழுச்சியை உளவு பார்க்க
முழுமையாக திரட்டப்பட்டுள்ளனர் என்பதை
வெளிப்படுத்தினார்.
“சமூக
உள்
அதிர்வுகள்
அல்லது
வெடிப்புக்கள்”
அபாயத்தின் காரணமாக
இந்த
நடவடிக்கை
அவசியமானது
என்றார்.
BFM
தொலைக் காட்சி அவரை
பேட்டி காண்கையில், “சமூகச் சீற்றம் உள்ளது, இது பொருளாதார மற்றும் நிதிய
நெருக்கடி, வேலையின்மை, வறுமை, பணிநீக்கங்கள் ஆகியவற்றினால் விளைந்துள்ளது. பல
ஆண்டுகளாக இது உள்ளது.” என்றார்.
ஜனவரி
30ம்
திகதி,
பொலிஸ்
உளவுத்துறைப்
பிரிவு
(Les services de renseignement de la police -SDIG)
தொழிலாளர்
அமைதியின்மை
வெடிக்கக்கூடிய
ஆபத்தில்
நிறுவனங்களில்
நடக்கும்
நிகழ்வுகளை
“உன்னிப்பாக”
கண்காணிக்குமாறு
ஓர்
உத்தரவைப்
பெற்றது.
இந்த
உத்தரவு
போலிசை,
தொழிலாளர்
நடவடிக்கைகள்,
திட்டங்களை
கண்காணிக்குமாறும்,
“மோதல்கள்
தீவிரமடைந்து,
உற்பத்திக்கு
அச்சுறுத்தல்கள்
ஏற்படுமோ
என்பதை
கவனிக்கவும்”
உத்தரவிடப்பட்டுள்ளது.
“ஒரு
பொருளாராச்
சரிவு
நேரத்தில்.....
ஆபத்திற்குரிய
நிறுவனங்கள்
அல்லது
பிரிவுகளில்
நிலைமையை
நெருக்கமாகக்
கண்காணித்தல்
முக்கியமாகும்.”
என்றும்
அது
குறிப்பிட்டுள்ளது.
PSA Peugeot-Citroën, Renault, Goodyear, Petroplus
சுத்திகரிப்பு ஆலை மற்றும்
ஆர்சிலர்மிட்டல் பிளோரஞ்ச் எஃகு அலை என தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை தக்க வைத்துக்
கொள்ள போராட்டம் நடத்தும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு பொலிஸுக்கு வால்ஸ்
அறிவுறுத்தல் கட்டளைகளைக் கொடுத்துள்ளார். தொழிற்சங்க
அதிகாரத்துவங்களோ அரசாங்கத்தின்
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை முறையாகக் காட்டிக்
கொடுத்ததன் மூலம் தன்னை இழிவுடுத்திக் கொண்டுவிட்ட
நிலையில்,
அத்தகைய போராட்டங்கள்,
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவிடக்கூடிய
சாத்தியப்பாடுகளை அவர் தெளிவாக அறிந்துள்ளார். முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட
தொழிற்துறை மோதல்கள் குறைவுதான் என்று ஒப்புக்கொண்ட வால்ஸ், “சமூக வெடிப்புக்களின்
ஆபத்து” உள்ளது என்றார்.
பிரெஞ்சுப் பொலிஸ் எதிர்ப்புத் தெரிவிக்கும் தொழிலாளர்ளை கண்காணிப்பதுடன் தம்மை
மட்டுப்படுத்திக்
கொண்டுவிடவில்லை. அவர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர்.
புதன் அன்று 1,500 க்கு
மேற்பட்ட
தொழிலாளர்கள் ஆர்சிலர்மிட்டல்
உடைய
ஐரோப்பிய எஃகு ஆலைகளில் இருந்து
ஸ்ட்ராஸ்பேர்க்கில் இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் கூடி பெல்ஜியத்தில்
லியேஜ், லுக்சம்பேர்க்கில் ஷிபிளொஞ்ச்,
பிரான்சில்
பிளோரஞ்ச்
ஆகிய
இடங்களில்
இருக்கும்
ஆலைகள்
மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களின் தொழிற்சங்கத் தலைவர்கள்
பாராளுமன்றத் தலைவர் மார்ட்டின் ஷுல்ஸ் உடன் பேச்சுக்களை நடத்தினர்.
பெல்ஜியத்தில் இருந்து வந்த 23 வாகனங்கள் ஸ்ட்ராஸ்பேர்க்கில் இருந்து 9 கி.மீ.
தொலைவில் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டன. வாகனங்களும், பயணிகளும் முற்றிலும்
சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வாகனங்கள் பாராளுமன்றத்தில் செல்ல போலீசார் அழைத்துச்
செல்லும்வரை காத்திருக்க
வேண்டியிருந்தது; இதையொட்டி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாயிற்று.
“எங்களைக் கொள்ளைக்காரர்கள் போல் அவர்கள் நடத்துகின்றனர்” என்று லியேஜ் இல் இருந்து
வந்த ஒரு
தொழிலாளி
குறிப்பிட்டார்.
பிளோரஞ்சில் இருந்து இரண்டு வாகஙன்கள் நிறைய வந்திருந்த தொழிலாளர்களும்
இதேமுறையில்தான் நடத்தப்பட்டனர். இச்சோதனைகள் அரச வக்கீலால் உத்தரவிடப்பட்டன;
ஏனெனில் ஜனவரி 29 அன்று பெல்ஜியத்தில் நடந்த வன்முறை நிகழ்வில் ஐந்து பொலிசார்
காயமுற்றனர்.
பொலிசார் ஐரோப்பிய பாராளுமன்றத்தை நெருங்கவிடாது தொழிலாளர்களை தடுத்தவுடன், அவர்கள்
“இங்கு ஒருவரும் பிரெஞ்ச்சுக்காரர் இல்லை; நாங்கள் எஃகுத் தொழிலாளர்கள்.” என்று
கூச்சலிட்டனர். “கட்டிடத்தில் இருந்து 300 மீட்டர்களுக்கு இடையே நான்கு
நெடுஞ்சாலைகளிலும் கலகப்பிரிவுப் பொலிசாரால் சூழப்பட்ட நிலையில், அவர்களால் மேலே
அணிவகுத்துச் செல்லவும் முடியவில்லை, அவர்கள் ஒலி எழுப்பியதும் கேட்கப்படவில்லை.
எப்படியும் முன்னேறவேண்டும் என்ற முயற்சித்த சீற்றமுற்ற தொழிலாளர்கள்
கண்ணீர்ப்புகைக் குண்டினால் தடுக்கப்பட்டனர். தொழிலாளர்கள் அதற்கு விடையிறுக்கும்
வகையில், முட்டைகள், பாட்டில்கள், கற்குவியல்கள் மற்றும் அவர்கள் கைகளில்
அகப்பட்டதை வீசினர். 25வயது பெல்ஜிய எஃகுத் தொழிலாளி ஜோன் டேவிட் ஒரு கண்ணை
இழந்தார். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பாரிசில் ஃபிளன்ஸ் ரெனோல்ட் ஆலையில் உள்ள தொழிலாளர்கள் வால்ஸ் உத்தரவிட்டுள்ள
பொலிஸ் துன்புறுத்தலை பெருகிய முறையில் அனுபவித்தனர். தொழிலாளர்
பொதுக்கூட்டமைப்பின்
பிரதிநிதியான
(CGT)
அலி
கயா
“இலக்கம்
குறிப்பிடாத வாகனங்களில் அதிக பொலிசார் இருந்தனர்.... தொழிற்சங்கப் பிரதிநிதிகளை
பொலிசார் தொடர்பு கொண்டனர்” என்றார்.
CGT இன்
பொதுச்
செயலர்
பேர்னார்ட்
தீபோ
உணர்ச்சித்தன்மை
மிக்க
ஆலைகளில்
இத்தகைய
போலிசார்
குவிப்புத்
தவிர்க்கப்பட
வேண்டும்,
ஏனெனில்
இது
ஒரு
“ஆத்திரமூட்டல்”
என்று
கருதப்படலாம்
என்றார்.
அமியானில்
குட்யியிரின்
CGT தலைவரான
மிக்கேல்
வாமன்
அரசியல்
பொலிஸ்
நிலைப்பாடு
கொண்டிருப்பது
“
எங்கள்
நடவடிக்கைகளை
குற்றங்களாக
ஆக்குவதற்காகும்”
என்றார்.
CGT யால்
மேற்கொள்ளப்படும்
இத்தகைய கோளைத்தனம்
மிக்க
வார்த்தை மூலமான
எதிர்ப்புக்கள் அர்த்தமற்றதாகும்.
ஏனெனில்,
பொலிஸ்
தாக்குதலின்கீழ்
வந்துள்ள
போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள
தொழிலாளர்களுக்கு
தொழிற்சங்கம்
எந்த
ஆதரவையும்
கொடுக்கவில்லை.
இதில்
குறிப்பிட்டத்த
அவமானகரமான
உதாரணம்,
2010ல் எண்ணெய் சுத்திகரிப்பு
ஆலையில் ஓய்வூதிய உரிமைகளுக்கான இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்துபோது அதை
முறிப்பதற்கு CGT
உடந்தையாக இருந்ததுதான்.
பாரிசில்
PSA
ஒல்நே
கார்த்தயாரிப்பு
ஆலையில்,
மூன்று
வாரங்களுக்கும்
மேலாக
400 தொழிலாளர்கள்
வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளனர்;
அனைத்து
உற்பத்தியும்
நிறுத்தப்பட்டுள்ளன;
இம்முயற்சி
நிறுவனத்தை
நிதிய
இழப்பீட்டுத்
தொகை,
மறு
வேலை
ஆகியவற்றை
ஆலை
மூடலுக்குப்
பின்
கொடுப்பதற்கு
“தீவிர
பேச்சுக்கள்
நடத்துவதற்கு”
கட்டாயப்படுத்துவதற்காகும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நிறுவனத்தால் மிரட்டப்படுகின்றனர்; நான்கு
தொழிலாளர்கள் பதவி நீக்கத்தை எதிர்கொள்கின்றனர்,
அவர்களில் ஒருவர் இரு
குழந்தைகளின் தாயார் ஆவார். ஆலைக்குள் அதிகாரி ஒருவரை தாக்கியதாக நிறுவனம் பொலிசில்
எட்டு தொழிலாளர்கள்
மீது குற்றம்
சாட்டியுள்ளது.
ஒற்றுமை நடவடிக்கைகளை தடுக்கும்
பொருட்டு தனியார் பாதுகாப்புப்
பிரிவினர் ஒரு படையென ஆலையைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம்
நூற்றுக்கணக்கான கலகப்பிரிவுப் பொலிசார்,
ஒல்நே தொழிலாளர்களுக்கு
ஆதரவாக
PSA Poissy
ஆலையில்
மறியல் செய்வதைத் தடுத்துவிட்டனர்.
மானுவல் வால்ஸ் 2012ல் 38,000 ஆவணமற்ற தொழிலாளர்களை நாடுகடத்தும்போது அவர்களை
ஈவிரக்கமற்று
அடக்கியதைப் போலவே இப்பொழுது
பிரெஞ்சுத் தொழிலாளர்களை
காயாளுகையிலும்
இரக்கமற்றுத்தான் இருப்பார். அந்த எண்ணிக்கை முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி
நாடுகடத்திய எண்ணிக்கையைவிட மிக அதிகம் ஆகும். சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அனைத்துத்
துறைகளிலும் சார்க்கோசி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனக் கொள்கைகளையும்
மிஞ்சிவிட்டது. |