சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Class tensions in Europe at the breaking point

ஐரோப்பாவில் வர்க்கப் பதட்டங்கள் உடைவின் விளிம்பில்

Peter Schwarz
11 February 2013

use this version to print | Send feedback

ஐரோப்பாவில் வர்க்கப் பதட்டங்கள் துரிதமாக உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச நிதி நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தாமல் ஆளும் வர்க்கம் ஓயப் போவதில்லை. போருக்கு பிந்தைய காலத்தின் சமூக தேட்டங்களை அழிப்பதும் சீனா மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடத்தக்க மட்டத்திற்கு ஐரோப்பாவில் சம்பளங்களை குறைப்பதுமே அதன் நோக்கமாக உள்ளது.

ஐந்து அடுத்தடுத்த சிக்கன நடவடிக்கை திட்டங்களின் மூலமாக கிரீஸ் மக்களின் பெருந்தொகையினர் வேலைவாய்ப்பின்மைக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளப்பட்டிருப்பது வெறும் ஆரம்பம் மட்டுமே. போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்லோவேனியா, ரோமானியா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி இவை அனைத்துமே இதேபோன்ற சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிரான்சுவா ஹாலண்ட் பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக கடந்த வசந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் ஒருதீவிரமான சிந்தனைசெயல்முறை மாற்றத்திற்குள்அவர் சென்றிருப்பதாக Süddeutsche Zeitung விஷமத்துடன் குறிப்பிட்டது. அவருக்கு முன்னர் இருந்த நிக்கோலோ சார்க்கோசி சமூகசீர்திருத்தம்குறித்து நிறையப் பேசினார், ஆனால் சிறியளவே நடத்திமுடித்தார் என்று அச்செய்தித்தாள் குறிப்பிட்டது. ஆனால் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த புதிய ஜனாதிபதியோ அதிக ஆர்ப்பாட்டமின்றி கணிசமானசீர்திருத்தங்களை” - அதாவது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைதொடக்கியிருப்பதாக அது கூறியது.

ஹாலண்டின் அரசாங்கம் தொழிலாளர் செலவை 20 பில்லியன் யூரோ வரை குறைத்திருக்கிறது, உழைப்பு சந்தையை மிகவும்நெகிழ்வானதாகஆக்கத் தொடங்கியிருக்கிறது, அத்துடன் அரசு செலவினத்தை ஒவ்வொரு ஆண்டும் 12 பில்லியன் யூரோ வரை குறைப்பதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. இருப்பினும் இது வெறும் தொடக்கம் மட்டுமே என்கிறது Süddeutsche Zeitung. “பல தசாப்தங்களாக நடத்தப்படாதிருந்த சீர்திருத்தங்களின் வரிசையை நடத்தும் வேலை அதற்கிருக்கிறது.”

ஜேர்மனியில் செப்டம்பரில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டு முன்னணி வேட்பாளர்களாகிய கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தை (CDU) சேர்ந்த சான்சலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) சேர்ந்த பியர் ஸ்ரைன்புறூக் ஆகிய இருவருமே ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதை நிபந்தனையின்றி ஆதரவளிப்பவர்கள் என்பதோடு தேர்தலுக்குப் பின் புதிய சமூக தாக்குதல்களை தொடக்குவதற்கும் உறுதி பூண்டிருக்கின்றனர்.

இந்த சமூக எதிர்ப்புரட்சியுடன் கைகோர்த்து ஒரு இராணுவவாதம் புத்துயிர்ப்பு பெறுகின்றது. கடந்த காலத்தில் கண்டத்தின் ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவை அடியொற்றி தலையீடு செய்தன, அல்லது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போரில் போல பெரும்பாலும் ஒதுங்கிக் கொண்டன என்றால், அவை இப்போதுஆபிரிக்காவுக்கான புதிய போட்டியில் ஆக்கிரமிப்பதில் தலைமை வகிக்கின்றன. லிபியாவுக்கு எதிரான போர் பெரும்பாலும் ஒரு பிரெஞ்சு முன்முயற்சியாக இருந்தது, மாலியில் பிரான்ஸ் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. வளங்கள் செறிந்த இந்தக் கண்டத்தை மறுகாலனியாதிக்கத்திற்கு உட்படுத்துவதில் தாங்களும் உடனடியாகப் பங்கு கொள்கின்ற அவசரத்தில் இருக்கும் பிரிட்டன் மற்றும் ஜேர்மனி பிரான்சுக்கு இராணுவ ஆதரவை உறுதியளித்திருக்கின்றன.

உள்நாட்டுக் கொள்கை மட்டுமல்லாது வெளிநாட்டுக் கொள்கையிலும் ஹாலண்ட் ஒருதீவிரமான சிந்தனைசெயல்முறை  மாற்றத்திற்குசென்றிருக்கிறார் தான். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது  ”பிரான்ஸாப்பிரிக்கா” (Françafrique)கொள்கையுடன், அதாவது முன்னாள் பிரெஞ்சுக் காலனிகளில் ஊழலடைந்த முடியாட்சி வகை ஆட்சியாளர்களை ஆதரிக்கும் கொள்கையுடன், முறித்துக் கொள்வதற்கு உறுதியளித்திருந்தார். இப்போது மாலியில் அவர் ஒரு காலனித்துவ படையெடுப்பாளரின் ஆடையைத் தரித்திருக்கிறார்.

இந்த தலைகீழ் மாற்றத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணங்கள் ஒரு கணிசமான பாத்திரத்தை ஆற்றுகின்றன. மாலியிலான தலையீட்டின் மூலம் ஹாலண்ட் ஒரு ஜனாதிபதியாக தனது உண்மையான பண்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் உள்நாட்டில் தனக்கான அங்கீகாரத்தை வலுப்படுத்தியிருக்கிறார் என்றும் Nouvel Observateur ஆதரவாக எழுதியது.

சமூக எதிர்ப்புரட்சியை எதிர்ப்பதற்கும் தமது வேலைகளையும் கடந்த காலத்தில் வென்றெடுத்த சமூக வெற்றிகளையும் பாதுகாப்பதற்கும் முனைகின்ற தொழிலாளர்கள், முந்தைய தசாப்தங்களில் செயல்படுத்திய போராட்ட வழிமுறைகளின் அடிப்படையில் அது சாத்தியமில்லை என்ற யதார்த்தத்திற்கு முகம் கொடுக்கின்றனர்.

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி மட்டுமல்ல, ஒரு காலத்தில் சமூக சீர்திருத்தத்துடன் தொடர்புபடுத்தி அடையாளம் காணப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சிகள் அனைத்துமே இன்று முழுக்க சிக்கன நடவடிக்கைகளுக்கும் கடந்த கால சீர்திருத்தங்களை அழிப்பதற்கும் உறுதிபூண்டவையாக இருக்கின்றன. பிரிட்டனில் தொழிற்கட்சி தலைவர் டோனி பிளேயரும் ஜேர்மனியில் சமூக ஜனநாயகக்கட்சித்  தலைவரான ஹெகார்ட் ஷ்ரோடரும் விட்டுச் சென்ற பாதச் சுவடுகளை ஸ்பெயினில் ஜோஸே சப்பாதேரோவும் கிரீஸில் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவும் பின்பற்றிச் செல்கின்றனர்.

அதேபோல பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் வால்கள் போல உருமாற்றம் பெற்றிருக்கும் தொழிற்சங்கங்களானவை வேலைவெட்டுகளையும் ஊதிய வெட்டுகளையும் திணிப்பதில் பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு அங்கம் போல செயல்படுகின்றன. அரசியல் மட்டத்தில் இவை சமூக எதிர்ப்பை அரசிற்கு அச்சுறுத்தலாக இல்லாத அடையாள ஆர்ப்பாட்டங்களின் மட்டத்திற்குள் ஒடுக்கப்படுமாறு அல்லது மட்டுப்படுத்தப்படுமாறு பார்த்துக் கொள்கின்றன.

பெருநிறுவன இலாபத்திற்கும் அரசாங்கக் கொள்கைக்கும் மிகத் தீவிரமான பின்விளைவுகளை கொண்டு அச்சுறுத்துகின்ற எந்தவொரு தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெளிப்பாட்டிற்கும் ஐரோப்பிய அரசாங்கங்கள், வேலைநிறுத்தத் தடைகளையும் மற்றும் வழமையாக சர்வாதிகாரங்களுடன் தொடர்புபட்டதான அரச வன்முறை வழிமுறைகளையும் செயல்படுத்துவதன் மூலம் பதிலளிக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக, ஸ்பெயினில் சப்பதேரோவின் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை திரட்டியது.

பிரான்சில், தொழிலாளர்களது அமைதியின்மை வெடிக்கக் கூடிய சிக்கல் கொண்ட நிறுவனங்களில் நிலைமையைஉன்னிப்பாககவனித்து வருமாறும், “மோதல் தீவிரமடைகின்ற காலங்களில் உற்பத்திக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களைகண்காணிக்குமாறும் உள்துறை அமைச்சர் மனுவேல் வால்ஸ் போலிசாருக்கும் உளவுத் துறையினருக்கும் அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஸ்ட்ராஸ்பூர்க்கில் பாரிய ஆட்குறைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த எஃகு ஆலைத் தொழிலாளர்கள் பிரெஞ்சு போலிசாரால் கைது நடவடிக்கைக்கு ஆளாயினர், தேடப்பட்டனர். அத்துடன் கண்ணீர்ப் புகைத் தாக்குதலுக்கும் உள்ளாயினர்.

கிரீஸில் சென்ற வாரத்தில் வேலைநிறுத்தம் செய்த சரக்கு கப்பல் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தம் செய்யும் பொருட்டு அரசாங்கம், சிக்கன நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதற்குப் பின் நான்காவது முறையாக, இராணுவச் சட்டத்தை பயன்படுத்தியது. நீண்ட காலம் சிறையில் தள்ளுகின்ற தண்டனைகளைக் காட்டி, அரசாங்கம் பல மாதங்களாக ஊதியமளிக்கப்படாத தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடித்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, ஏதென்ஸ் சுரங்கப்பாதை தொழிலாளர்கள் நடத்திய ஒரு வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கு இதே அவசர கால அதிகாரங்களை கிரேக்க அரசாங்கம் கையிலெடுத்தது.

வேலைநிறுத்தம் செய்வதற்கான ஜனநாயக உரிமையென்பது, நடைமுறையில், இல்லாதொழிக்கப்பட்டு வருகிறது. எந்த தாக்கம்மிக்க வேலைநிறுத்தமும் சட்டவிரோதமாக்கப்படுகிறது. வெறும் அடையாளமாக நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், சமூக மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமென்பது தொழிலாள வர்க்கத்தை புதிய அரசியல் கடமைகளுக்கு முகம் கொடுக்கச் செய்கிறது. எப்போது சமரசம் மற்றும் சலுகைகளின் பழைய பொறிமுறைகள் அனைத்தும் சமூக மோதலைத் தீர்ப்பதில் தோல்வி காண்கின்றதோ, எப்போது சமூக அழுத்தத்திற்கு அரசாங்கங்கள் அரச ஒடுக்குமுறையைக் கொண்டு மறுமொழியளிக்கின்றனவோ, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குகின்றனவோ, அப்போது வர்க்கப் போராட்டமானது தவிர்க்கவியலாமல் ஒரு கிளர்ச்சி மற்றும் புரட்சிகரத் தன்மையை எடுக்கிறது.

வேலைகளையும், ஊதியங்களையும், மற்றும் கடந்த காலத்தின் சமூக வெற்றிகளையும் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பாதுகாப்பதென்பது இனியும் சாத்தியமில்லாதது எனும்போது, தொழிலாள வர்க்கம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாட்டை அதன் சொந்தக் கரங்களில் கையிலெடுப்பதற்கான அறைகூவலைப் பெறுகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தின் கட்டமைப்பிற்குள் தொழிலாளர்அரசுகளை ஸ்தாபிப்பதற்கும் போராடுகின்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான மற்றும் சர்வதேச வெகுஜன இயக்கம் இதற்கு அவசியமாக இருக்கிறது

இத்தகையதொரு கொள்கையின் பாதையில் ஒரு முக்கியமான முட்டுக்கட்டையாக போலி-இடது கட்சிகளின் ஒரு வரிசை - கிரீஸில் SYRIZA; ஜேர்மனியில் Die Linke; பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை - நிற்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதை இந்த அமைப்புகள் எதிர்க்கின்றன என்பதோடு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அணிதிரட்டலை தடுப்பதற்கும் அவை முனைகின்றன. இவை தொழிற்சங்கங்களை பாதுகாக்கின்றன, சமூக ஜனநாயகக் கட்சிகளின் மீதான பிரமைகளை ஊக்குவிக்கின்றன, அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கின்றன. தனது வலது சாரி அரசியலை இடது ஒலி எழுப்பும் சொற்றொடர்களுக்கு பின்னால் மறைக்க முயல்கின்ற நடுத்தர வர்க்கத்தின் ஒரு வசதியான பிரிவின் உருவடிவாகவே இவை திகழ்கின்றன

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கும் வரவிருக்கும் பெரும் சமூகப் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்கும் இந்தப் போலி-இடது அமைப்புகளை எதிர்ப்பதும் இவற்றின் பிற்போக்குத்தன பாத்திரத்தை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் முன்பாக அம்பலப்படுத்துவதும் தொழிலாளர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.