World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Former Italian Prime Minister Berlusconi praises Mussolini

முன்னாள் இத்தாலியப் பிரதம மந்திரி பெர்லுஸ்கோனி முசோலினியை புகழ்கிறார்

By Marianne Arens
8 February 2013

Back to screen version

இத்தாலியின் முன்னாள் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி, ஜனவரி 27 ஹோலோகாஸ்ட் (Holocaust) நினைவு நாளைப் பயன்படுத்தி பாசிச டியூஸ்பெனிடோ முசோலினியைப் புகழ்ந்தார். “அவருடைய மோசமான தவறான இனவாதச் சட்டங்கள் இருந்தபோதிலும்கூடமுசோலினிநிறைய நல்லவிடயங்களையும் செய்துள்ளார்என்று பெர்லுஸ்கோனி கூறினார்.

ஷாவாவிற்கு (Shoah) இத்தாலியின் பொறுப்புஜேர்மனியுடன் ஒப்பிடத்தக்கது அல்லஎன்று பெர்லுஸ்கோனி தொடர்ந்து கூறினார். ஹிட்லரின் அழுத்தத்தின் கீழ் செயல்பட்ட முசோலினிக்கு அது ஒருகடினமான செயலாகும்”. இத்தாலியர்கள் நாஜிக்களின் இனக் கொள்கைகளை வெறுமே பொறுத்துக் கொண்டனரே ஒழிய, “ஆரம்பத்தில் அது பற்றி உண்மையில் அறிந்திருக்கக் கூட இல்லைஎன்றார் அவர்.

இத்தாலியில் அரசியல் தலைவர்கள் உடனே பெர்லுஸ்கோனி அறிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தத் தொடங்கி, 76 வயதான பில்லியனரின் ஆத்திரமூட்டல்களைசிறு குற்றம்என்று விவரித்தனர்.

பதவி விலகிச்செல்லும் பிரதம மந்திரியான மரியோ மோன்டிஒரு துரதிருஷ்டகரமான சொற்றொடரை தவறான நாளில், தவறான இடத்தில்பெர்லுஸ்கோனி பயன்படுத்தியுள்ளார் என்று கடுமையுடன் கூறினார். அவருடைய கருத்துக்களுக்கு முன்பு, பெப்ருவரி 24 பாராளுமன்ற தேர்தல்களை தொடர்ந்துமோன்டி பெர்லுஸ்கோனியுடைய  PdL (சுதந்திர மக்கள்) கட்சியுடனான கூட்டை நிராகரிக்கவில்லை என்றும் ஆனால் பெர்லுஸ்கோனி புதிய நிர்வாகத்தில் முக்கிய பதவியை எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் விடுத்தார் என அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

Christian Democrat Pierferdinando (UDC) கட்சியின் காசீனி, பெர்லுஸ்கோனி அபத்தமாக பேசியுள்ளார்என அறிவித்தார். நாட்டின்இடதுஎன அழைக்கப்படும் அரசியல்வாதிகளும் இந்நிகழ்ச்சி பற்றிச் சுருக்கமாக கருத்துத்தெரிவித்து அடுத்த தலைப்பிற்குச் சென்றனர்.

ஜனநாயகவாதிகளின் தலைவரும் பிரதம மந்திரிப் பதவிக்கான முன்னணி வேட்பாளருமான பிர் லுயிகி பெர்சானி நினைவு நாளை “தேர்தல் பிரச்சாரத் தந்திர நாளாகபெர்லுஸ்கோனி செய்துவிட்டார் என்று புகார் கூறினார். புக்லியாவின் பிராந்திய தலைவரான நிச்சி வெண்டோலா (இடது, சுற்றுச்சூழல் மற்றும் சுதந்திரம்- SEL) பெர்லுஸ்கோனியை தவறாகப் பேசுபவர், மௌனமாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூறப்பட வேண்டியவர்என்று விவரித்தார்.

பாசிசம் பற்றிய தன் கருத்துக்களை பெர்லுஸ்கோனி ஹோலோகோஸ்ட் நினைவுச் சின்னமாக மிலான் மத்திய புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்ட அரங்கு 21” இன் அங்குரார்ப்பண வைபவத்தில் வெளிப்படுத்தினார். இந் நினைவுச் சின்னம் பாஸிஸ்ட்டுக்கள் பிறரை நாடுகடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மறைக்கப்பட்ட இரயில் நிலத்தடிப் பாதையை சுற்றி நிறுவப்பட்டுள்ளது.

1943ல் இருந்து 1945 வரை ஆயிரக்கணக்கான இத்தாலிய யூதர்கள் இந்த இடத்தில் இருந்து கொலைமுகாம்களான அவுஸ்விட்ஸ்-பெர்க்ஃனவ், பெர்கன்-பெல்ஸன், இத்தாலிய முகாம்களான பொல்ஸானோ,வொசோலி ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டனர். மொத்தம் 8,600 யூதர்கள் இத்தாலியில் இருந்து கொலைமுகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெர்லுஸ்கோனியின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறாக, யூத எதிர்ப்பு இத்தாலிய பாசிசத்தின் மீது வெளியிலிருந்து ஹிட்லராலும் நாஜி ஜேர்மனியினாலும் சுமத்தப்டவில்லை. மாறாக யூதர்களை கொடுமைப்படுத்துதல் இத்தாலிய பாசிசத்துடன் முற்றிலும் இணைந்த செயல் என்பதுடன் முசோலினியின் சொந்த இனச் சிந்தனைப்படியும்தான் இருந்தது. யூதர்கள் சமூக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு, சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இத்தாலியில் அரச பள்ளிகளில் சேருவது தடை செய்யப்பட்டு, வணிகத்திற்கு தலைமை தாங்கக் கூடாது, அரசாங்க நிகழ்ச்சியை நடத்தக்கூடாது, இத்தாலியரை திருமணம் செய்து கொள்ள முடியாது என இருந்தது.

மத்தியதரைக்கடலை சுற்றி ஒரு புதியரோமானியப் பேரரசைதோற்றுவிக்க இத்தாலிய பாஸிஸ்ட்டுக்கள், வட ஆபிரிக்கா மற்றும் யூகோஸ்லேவியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தனர். ஆபிரிக்கர்கள், ஸ்லாவியர்கள் மற்றும் யூதர்களைமனிதகுலத்தை விடத்தாழ்ந்தவர்கள்என வகைப்படுத்தி அவர்களுக்கு எதிராக பாகுபாட்டைக் காட்டினர். “தூய இத்தாலிய இனம்என்னும் வாதம், குறிப்பாக அபிசீனியா, லிபியாவில் படுகொலைகளையும் இனச்சுத்திகரிப்புகளையும் நடத்துவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

வரலாற்றாளர் கார்லோ மோஸ் நிரூபிப்பதுபோல், யூதர்களுக்கு எதிரான இனவாதச் சட்டங்கள் 1938ல் மூன்றாம் குடியரசின் இனவாதக் கொள்கைகளை ஒட்டி முதலில் இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் அவைநீண்டக்காலமாக இருக்கும், பொதுவான பாசிச இனவாதக்கருத்தையும் ஒத்திருந்தன.” (Moos, Carlo: Late Italian Fascism and the Jews, 2008).

வணிக மற்றும் பாலியல் குற்றங்களுக்காக தொடர்ச்சியான  குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள பெர்லுஸ்கோனி திட்டமிட்டே தன் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர வலதை நோக்கித் திரும்பியுள்ளார்.

செனட்டிற்கான அவருடைய வேட்பாளர்களில் ஒருவர் முசோலியின் பேத்தியான அலெஸ்ஸண்ட்ரா முசோலினி ஆவார். பெர்லுஸ்கோனியின் கட்சியான PdL அதன் நீண்டகால முன்னாள் பங்காளி இனவாத வடக்கு லீக்குடன் பிணைத்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி Francesco Storace  தலைமையில் இருக்கும் தீவிர வலதுசாரிக் கட்சிகளான புதிய பாசிச La Destra உடனும் பிணைந்துள்ளது. La Destra வின் உறுப்பினர்களுள் பாசிசத் தலைவரும் நவ-பாசிச Movimento Sociale Itialianao (MSI) வின் நிறுவனரான Giorgi Almirate (1914-1988) இன் வளர்ப்பு மகளான Giuliana De Medici உள்ளார்.

பெர்லுஸ்கோனி தொடர்ச்சியாக தன் அரசியல் வாழ்க்கையில் பாசிஸ்ட்டுக்களை தங்கியிருந்துள்ளார். 1994ம் ஆண்டு பாசிச சர்வாதிகாரம் அகற்றப்பட்டபின் அவர் MSI  ஐ முதல் தடவையாக அரசியலுக்குள் கொண்டுவந்தார். அப்பொழுது MSI வெளிப்படையாக முசோலிக்குத் தன் உடன்பாட்டை கூறிவந்தது. பின்னர் கட்சி தன் பெயரை தேசியக் கூட்டு (NA) என மாற்றிக் கொண்டு பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து PdL அமைத்தது. முன்னாள் MSI தலைவர் Gianfranco Fini  தற்பொழுது மரியோ மோன்டி தலைமையிலான தேர்தல் பட்டியலுக்கு ஆதரவைக் கொடுக்கிறார்.

பெர்லுஸ்கோனி எப்பொழுதுமே இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCI) பின்தோன்றல் அமைப்புக்களில் இருந்து தீவிர எதிர்ப்பை பெறமாட்டோம் என்ற உண்மையில் நம்பிக்கை கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தான் முசோலினியின் சர்வாதிகாரத்தை அடுத்து முற்றிலும் இழிவிற்கு உட்பட்டிருந்த இத்தாலிய முதலாளித்துவத்தை தொழிலாளர்களை தூக்கிவீசுவதில் இருந்து தடுத்தது. இந்த இலக்கை ஒட்டி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ போருக்குப் பிந்தைய அரசாங்கத்தில் கட்சித் தலைவர் பால்மீரோ தொக்லியாட்டி நீதித்துறை மந்திரிப் பதவியை எடுத்துக் கொண்ட அளவில் சேர்ந்தது. 1946ம் ஆண்டு அவர் எல்லா அரசியல் குற்றங்களுக்கும் ஒரு பொது மன்னிப்பு வழங்கினார். எனவே இதனால் இத்தாலி பாசிசத்தின் குற்றங்கள் குறித்த எத்தகைய சட்டபூர்வ விசாரணை அல்லது தண்டனையை முற்றிலும் கைவிட்ட முதல்நாடாயிற்று.

பெர்லுஸ்கோனி நவம்பர் 2011ல் அரசாங்கத் தலைவர் பதவியில் இருந்து இராஜநாமா செய்ததை அடுத்து அவருடைய PdL  கட்சி பாராளுமன்றத்தில் ஓராண்டிற்கு மோன்டி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை அளித்தது. இப்பொழுது பெர்லுஸ்கோனி கவனத்தைத் திசை திருப்பும் வகையில் சமூகச் சீற்றத்தை வலதுசாரித் திசைகளில் செலுத்துகிறார். மற்ற கட்சிகள் அனைத்தும், “இடதுஎனப்படும் அமைப்புக்கள் உட்பட மோன்டியின் சிக்கன நடவடிக்கைகள் தொடர வாதிட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கொடுக்கையில், பெர்லுஸ்கோனி ஜனரஞ்சகவாத தேசியப் பிரச்சாரத்தை நடத்தி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனிய அரசாங்கத்தை இத்தாலியின் சமூகச்சரிவிற்கு குற்றம் சாட்டுகிறார்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு பெர்லுஸ்கோனி முதல்முறை வீடுகள் வாங்கவோருக்கு (IMU) சொத்துவரியை அகற்றுவதாக உறுதிமொழி கொடுத்தார். இவருடைய அரசாங்கம்தான் மார்ச் 2011ல் அதை அறிமுகப்படுத்தியது. அவர் அதிகாரத்திற்கு வந்தபின் மரியோ மோன்டி கணிசமாக பெர்லுஸ்கோனியின் சட்டத்தை அவருடையSalva Italia” திட்டத்தின்கீழ் டிசம்பர் 2011ல் கடுமையாக்கியும் விரிவாக்கமும் செய்து செய்தார். பெர்லுஸ்கோனி தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு மாதத்திற்குள் மரியோ மோன்டி காலத்தில் வசூல் செய்யப்பட்ட எல்லா IMU வரி வருமானங்களையும் திருப்பி தரும் நோக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பின்வந்த அமைப்புக்கள் உட்பட எந்தக் கட்சியும் முசோலினிக்கு பெர்லுஸ்கோனி தெரிவித்த பாராட்டு குறித்துத் தீவிர எதிர்ப்புக்களை எழுப்பவில்லை என்பது அவற்றின் சொந்தக் கொள்கைகளில் வேரூன்றியுள்ளது. அவை தீவிரமாக தொழிலாளர்களின் போருக்குப் பிந்தைய நலன்களை அனைத்தையும அழிக்க தீவிரமாக உழைக்கின்றன; லிபியா, மாலிப் போர்களில் ஆரம்பித்துள்ள ஆபிரிக்க மறு காலனித்துவமாக்கலுக்கும் ஆதரவைக் கொடுக்கின்றன.

இப்பின்னணியில் பெர்லுஸ்கோனி கூறும் முசோலினிநிறைய நல்ல விடயங்களைசெய்துள்ளார் என்பது அச்சுறுத்தும் பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் இயக்கத்தை முசோலினி உடைத்தார்; அதன் சமூக நலன்கள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை அழித்தார், பின் லிபியா மற்றும் அபிசீனியாவில் காலனிப் போர்களை நடத்தினார்.

இன்று இத்தாலிய அரசியல் அதே போன்ற திசையில்தான் செல்லுகிறது. தற்போதைக்கு மோன்டி அரசாங்கம் இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்தோன்றல் அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும் நம்பியுள்ளது. ஆனால் இவை தொழிலாள வர்க்கத்தை நிரந்தரமாக பின்னிழுத்துவைக்க முடியாது. சமூக எதிர்ப்புரட்சி சர்வாதிகார வழிவகைகளில்தான் இறுதியில் சாதிக்கப்பட முடியும்.

ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் இனவாத, தீவிர தேசியவாத மற்றும் பாசிசக் கட்சிகளுடன் கூட்டுக்களை வைக்கின்றனர். இத்தகைய கட்சிகள் ஹங்கேரி, கிரேக்கம், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளின் அரசியல் வாழ்வில் சில காலமாக முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. பெருகிய சமூக அழுத்தங்கள் என்னும் பின்னணியில், இவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சக்திகளாக செயல்படுவதற்குத் ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்படுகின்றன.