WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
கிரேக்க அரசாங்கம்
படகுத்துறை வேலை நிறுத்தக்காரர்கள் மீது இராணுவச் சட்டத்தை சுமத்துகிறது
By Christoph Dreier
7 February 2013
use this version to print | Send
feedback
செவ்வாய் மாலையில் கிரேக்க அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்துவரும்
படகுத் துறைத் தொழிலாளர்கள் மீது இராணுவச் சட்டத்தை சுமத்தி, அவர்களது மறிப்பு
வரிசைகளை உடைப்பதற்கு பொலிஸையும் திரட்டியது. வேலை இழப்புக்கள் மற்றும் ஊதிய
வெட்டுக்களை எதிர்த்தும், பாக்கி இருக்கும் ஊதியங்களைக் கோரியும் தொழிலாளர்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழிலாளர்கள் சிலர் பல மாதங்களாக ஊதியங்களைப்
பெறவில்லை.
வேலைநிறுத்தம்,
கிரேக்கத் தரைப்பகுதிக்கும் நாட்டின் பல தீவுளுக்கும் இடையே கடல் போக்குவரத்தை
மூடி, விமான நிலையம் இல்லாத சிறு தீவுகளில் உணவுத் தட்டுப்பாடுகளையும்
ஏற்படுத்தியிருந்தது.
படகுத்துறை ஊழியர் தொகுப்பு கடந்த வியாழனன்று வேலைநிறுத்தத்தை
தொடங்கினர். பணிநிறுத்தம் முதலில் 48 மணி நேரத்திற்கு என இருந்தது; பின்னர் இன்னும்
48 மணி நேர காலங்களுக்கு என்று இரு முறை விரிவாக்கப்பட்டது; பின்னர் இது
அரசாங்கத்தால் முறியடிக்கப்பட்டுவிட்டது.
புதிய ஜனநாயகக் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசாங்கம், சமூக ஜனநாயக
PASOK,
இடது
ஜனநாயகம் ஆகிய கட்சிகளையும் அடக்கியுள்ளது, செவ்வாய் பின்னிரவில் நெருக்கடிகால
அதிகாரங்களை பயன்படுத்தி “குடிமக்கள் அணிதிரள்வு” வடிவத்தை உறுதி செய்தது—அதாவது
படகுத்துறைத் தொழிலாளர்கள் இராணுவப் பணியில் கட்டயமாக ஈடுபடுத்தப்படுவர் எனக்கூறி
அவர்களை பணிக்குத் திரும்ப உத்தரவிட்டது. ஆணையை மீறும் தொழிலாளர்கள் ஐந்து
ஆண்டுக்காலம் வரை சிறைத்தண்டனை பெறக்கூடும்.
புதன் காலை, பொலிசார் மத்திய துறைமுகமான பிரேயஸை ஆக்கிரமித்து,
வேலைநிறுத்தத்தை முறியடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அறிமுகப்படுத்துவதை
தடுக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபடுவதைத் தடுத்தனர்.
PNO
எனப்படும் கடலுக்குள் செல்வோர்
தொழிற்சங்கம் இராணுவச் சட்டம் சுமத்தப்படுவதற்கு எதிர்வினையாற்றும் வகையில்
உடனடியாக வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டது. கிரேக்கத்தின் இரண்டு பெரிய
தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள்
ADEDY (அரசு
ஊழியர்கள் கூட்டமைப்பு) மற்றும்
GSEE (கிரேக்கத்
தொழிலாளர்கள் பொதுக்கூட்டமைப்பு) புதன் அன்று ஆட்டிக்கா பிராந்தியத்தில் ஆதரவு
வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன –இதில் ஏதென்ஸ், பைரீயஸ் இரண்டும்
அடங்கும்.
ஆனால் ஆதரவு வேலைநிறுத்தங்கள் குறைந்த வரம்பை உடையவை. பஸ்களும்
டிராம்களும் அவற்றின் கிடங்குளில் நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே இருந்தன; பொதுப்
பணிகளில் பரந்த வேலைகள் ஏதும் கிட்டத்தட்ட நடக்கவில்லை. புதன் நண்பகலில்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரேயஸில் கூடி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் துறைமுகத்தில் இருந்து கடல் துறை
அமைச்சரகம் வரை அணிவகுத்துச் சென்றனர்.
ஏதென்ஸில் சுரங்க இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க
எடுக்கப்பட்ட இராணுவச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் துறைமுகத்
தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவச் சட்டம் சுமத்தப்பட்டுள்ளது. கிரேக்க அரசாங்கம்,
அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறி, எத்தகைய திறமையான வேலைநிறுத்த நடவடிக்கை மீதும்
நடைமுறைத் தடையை சுமத்துகிறது. இது சர்வதேச சட்டங்களை மீறுவதாகும்; அவை கட்டாயத்
தொழிலாளர் பணியை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள வரம்புகளுக்குள்தான் அனுமதிக்கின்றன.
வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அகற்றுவது, வேலைநிறுத்தம் செய்யும்
தொழிலாளர்களை குற்றத்தன்மை உடையவர்களாக ஆக்குவது என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பு
கிரேக்க கேர்னல்களின் பாசிச ஆட்சி நடந்தபோது நிலவிய பொலிஸ் அரச நிலைமைகளுக்குத்தான்
இட்டுச் செல்லுகின்றன.
கிரேக்க அரசாங்கம் இப்பொழுது இராணுவச் சட்டத்தை நான்கு வெவ்வேறு
சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை மீண்டும்
பணிக்குத் திரும்பக் கட்டாயப்படுத்தியுள்ளது; இது ஐரோப்பிய ஒன்றியம்
கிரேக்கத்திற்கு சிக்கன நடவடிக்கைகளை ஆணையிடத் தொடங்கியதில் இருந்து நடந்துள்ளது.
2010ல் வாகன சாரதிகளுக்கு எதிராக இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது; 2011ல்
வேலைநிறுத்தம் செய்த குப்பைத்துறை தொழிலாளர்களுக்கு எதிராகவும் மீண்டும் இம்மாதம்
சுரங்க இரயில் தொழிலாளர்கள் மற்றும் படகுத்துறைத் தொழிலாளர்களுக்கு எதிராகவும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள்,
தொழிற்சங்கங்களின் அடையாள
எதிர்ப்புக்களுக்கு அப்பால் சென்று வணிக நலன்களை தீவிரமாகப் பாதிக்கும்
நடவடிக்கைகளை எடுக்க முற்படுகையில், அவர்கள் அரசாங்கத்தால் கட்டாமாக வேலைக்குத்
திரும்புமாறு செய்யப்படுகின்றனர். ஏற்கவே பல்லாயிரக்கணக்கான வேலைகளை அழித்து,
ஊதியங்களையும் ஓய்வூதியங்களையும் பெரிதும் குறைத்துவிட்ட இடைவிடாச் சிக்கன
நடவடிக்களுக்கு எதிரான திறமையான கூட்டு எதிர்ப்பு எந்த வகையில் இருந்தாலும், அவை
நடைமுறையில் சட்டவிரோதம் என அறிவிக்கப்படுகின்றன; இது வலதுசாரி புதிய ஜனநாயகக்
கட்சியால் மட்டுமின்றி,
PASOK, DIMAR
எனப்படும் ஜனநாயக இடது (சிரிசாவில் இருந்து பிளவுற்ற ஓர்
அமைப்பு—தீவிர இடதுக் கூட்டணி) ஆகியவற்றாலும் அவ்வாறே கூறப்படுகின்றன.
வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை நடைமுறையில் அகற்றியிருப்பது பொலிஸ்
மிருகத்தனம் மற்றும் பொலிஸ் அரச வழிவகைகள் பெருகியிருப்பதுடன் இணைந்து வந்துள்ளது.
கடந்த வாரம், அனார்க்கிச பின்னணியை கொண்ட நான்கு சந்தேகத்திற்குரிய கொள்ளையர்கள்,
பொலிசாரால் கைது செய்யப்பட்டபின் மோசமாக தாக்கப்பட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு பொலிசார் இதேபோன்ற நடவடிக்கையை பாசிச எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது மேற்கொண்டனர். மிக அதிக பொலிஸ் அதிகாரிகள்
Chrysi Avgi
கட்சி எனப்படும்
கோல்டன் டோன் பாசிசக் கட்சியின் ஆதரவாளர்கள் என்பது நன்கு அறியவந்துள்ளது.
கிரேக்கத்தில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை மீதான தாக்குதல், மற்ற
ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு,
ஆதரவுடன் நடத்தப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய
மத்திய வங்கியுமான முக்கூட்டு என அழைக்கப்படுவது, கிரேக்க அரசாங்கம் எடுக்கும்
ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, குறிப்பிட்ட கிரேக்க அமைச்சரகங்களைக்
கண்காணிக்கவும் பார்வையாளர்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில்,
கிரேக்கப் பிரதமர் அன்டோனிஸ் சமரஸ் (ND)
ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலை சந்திக்க பேர்லினுக்கு சென்றிருந்தபோது
சமூகநல வெட்டுக்களில் சிறிதும் குறைப்பு கூடாது எனத் தெளிவாகக் கூறப்பட்டார்.
வங்கிகள் மற்றும் ஊக வணிகர்களின் கோரிக்கையை திருப்திப்படுத்த
கிரேக்க மக்களை சமூக இழி நிலையில் ஆழ்த்தியபின், கிரேக்க அரசு இப்பொழுது தொழிலாள
வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்கு அப்பட்டமான அடக்குமுறையைக் கையாள்கிறது.
ஆனால் இன்றைய கிரேக்கம்தான் நாளைய ஐரோப்பாவின் முகம் ஆகும். கிரேக்கம்,
கண்டம்
முழுவதும் சிக்கன நடவடிக்களை பரப்ப முதல் வேகம் கொடுத்ததைப்போல், அது பொலிஸ் அரச
முறைகளுக்கு திரும்பியிருப்பதும் ஐரோப்பா முழுவதும் இருக்கும் அரசாங்கங்களால்
பின்பற்றப்படும்.
இந்த தாக்குதல்களை சுமத்துவதற்கு ஒரு தவிர்க்க முடியாத பங்கை
கிரேக்கத்திலும் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிற்சங்கங்கள் வகித்துள்ளது. சிக்கன
நடவடிக்களுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கலைத்து குறைமதிப்பிற்கு
உட்படுத்துவதில் கிரேக்கத் தொழிற்சங்கங்களுடைய இடைவிடா முயற்சிகள் இல்லையென்றால்,
உறுதியற்ற சமரசின் அரசாங்கம் தப்பிப் பிழைப்பது சாத்தியமில்லாததாகும்.
ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் உட்குறிப்பாக அல்லது வெளிப்படையாக
கிரேக்கத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்கின்றன;
எப்படி தங்கள் நாடுகளில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவை ஒத்துழைப்பு
கொடுக்கின்றனவோ, அதேபோல் இவை வேலைநிறுத்தங்கள் நடைமுறையில் குற்றத்தன்மை உடையனவாகச்
செய்யப்படுவதை அக்கறையுடன் எதிர்ப்பதில்லை.
ஐரோப்பிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின்
(European Trade Union
Confederation -ETUC), செய்தித்
தொடர்பாளர் எமானுவலா போனாசினா உலக சோசலிச வலைத்
தளத்திடம் அவருடைய அமைப்பு
கிரேக்க படகுத்துறை தொழிலாளர்களை பாதுகாக்கும் அல்லது கிரேக்கத்தில் ஜனாநாயக
உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்க்கும் நடவடிக்கைத் திட்டம் எதையும்
கொண்டிருக்கவில்லை என்றார். இப்பிரச்சினை விவாதத்திற்குக்கூட வரவில்லை. இதேபோன்ற
உதறித்தள்ளும் பதில்தான் DGB
எனப்படும் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பில் இருந்தும் வந்துள்ளது.
PTO
இணைந்துள்ள,
சர்வதேசப் போக்குவரத்து
தொழிலாளர்கள் கூட்டமைப்பு
(International Transport Workers Federation -ITF),
அதன் விடையிறுப்பை சமரஸிற்கு ஒரு எதிர்ப்புக் குறிப்பை அனுப்பியுள்ளதுடன்
நின்றுவிட்டது. ITF
செய்தித் தொடர்பாளர் சாம் டாசன் உலக
சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்: “PTO
எங்களை அரசாங்கத்துடன்
நேரடியாகத் தலையிடுமாறு கோரியது, நாங்கள் அதைச் செய்துள்ளோம். இன்னும் ஏதேனும் உதவி
தேவை என்றாலும் ITF
ஐ அது
நம்பலாம்.”
கிரேக்கத்தில் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் செயல்களுக்கு எதிரான
தொழிலாளர்களின் சீற்றத்தை அடக்குவதற்கு ஒரு சில அடையாளச் செயல்களில் மட்டுமே
ஈடுபட்டுள்ளன. சுரங்க இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் கடந்த மாதத்தில்
அடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை ஒரு சில சிறிய ஒற்றுமை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு
செய்தன; இவற்றையும் அவை விரைவாக முடித்துக் கொண்டன, அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல்
தராத வகையில். புதன் கிழமை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதே போன்ற தன்மையைத்தான்
கொண்டுள்ளன.
தொழிற்சங்கங்கள் முக்கிய ஆதரவை போலி இடது அமைப்புக்களான சிரிசா,
கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி
(KKE)
போன்றவற்றிடம் இருந்து
பெறுகின்றன. சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் சமீபத்தில் பேர்லினுக்கும்
வாஷிங்டனுக்கும் சென்று அமெரிக்க, ஜேர்மனிய அரசாங்கங்களுக்கு அவருடைய கட்சி எந்த
ஆபத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று உறுதிப்பாட்டை கொடுத்து, கிரேக்கக்
கடன்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்தார். சிப்ரஸ்
பலமுறையும் அரசாங்கத்தை கவிழ்க்க அல்லது சமரஸை இராஜிநாமா செய்யவைக்கும் விருப்பத்தை
சிரிசா கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.
கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அலேகா பாபரிகா,
பிரேயஸில் ஆர்ப்பாட்டத்திற்கு
தலைமை தாங்கி அணிவகுத்தவர், படகுத்துறைத் தொழிலாளர்களுடன் ஒற்றுமை தேவை என அழைப்பு
விடுத்தார். அதேநேரத்தில்
PNO (கடலுக்குள் செல்வோர்
தொழிற்சங்கம்)
க்குள் வலுவான பிரதிநிதித்துவம் உடைய
கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பான
PAME,
வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு மையப் பாத்திரத்தை வகித்துள்ளது. |