சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!
|
|
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
ஐக்கிய
அரசின்
இளைஞர்கள்
2013ம்
ஆண்டில்
மந்தமான
வேலை
வாய்ப்புக்களைத்தான்
எதிர்நோக்குகின்றனர்
By Joe Mount
5 February 2013
use this version to print | Send
feedback
ஐக்கிய
அரசில் 16 முதல் 25 வயது வரை இருக்கும் வேலையற்ற இளைஞர்களுடைய எண்ணிக்கை மீண்டும்
உயரும் என தொழிற் கட்சியுடன் பிணைந்துள்ள Institute of Public Policy Research (IPPR)
நடத்திய ஆய்வு ஒன்று கணித்துள்ளது. 2011 இலையுதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 1
மில்லியனை எட்டியது; 1980க்குப் பின் முதல் தடவையாக ஐந்தில் ஒரு இளைஞர்
வேலையின்மையில் உள்ளனர்.
IPPR ஆய்வு கிட்டத்தட்ட 86,000 தொழிலாளர்கள், அனேகம் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்,
இந்த ஆண்டு வேலையின்றி இருப்பர் என்று கணித்துள்ளது; தொடுவானம் வரை
முன்னேற்றத்திற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் வட மேற்கில் இருக்கும் எனக்
கணிக்கப்பட்டுள்ளது; இங்கு மேலும் 64,000 வேலையற்ற இளைஞர்கள் இருப்பர், லண்டனில்
53,000 மற்றும் யோர்க்ஷயர் மற்றும் ஹம்பெரில் 23,000 என எண்ணிக்கை இருக்கும்.
இந்த வேலை இல்லாத இளைஞரில் பலர் சமீபத்தியப் பட்டதாரிகள். ஆய்வுகள் கடந்த ஆண்டு
மாணவர்களில் 62 வீதத்தினர்தான் பல்கலைக்கழகத்தை முடித்த 6 மாத காலத்திற்குள் ஒரு
வேலையை பெற்றனர் என்று கூறுகிறது. அவர்களில் வேலை பெற்ற பலரும் திறமையற்ற வேலைகளில்
குறைந்த ஊதியங்களில் ஈடுபடும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நீண்ட கால இளைஞர் வேலையின்மை என்பது 2010ல் இருந்து 23% உயர்ந்துவிட்டது என்று
தொழிற்சங்க காங்கிரஸ் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. வடமேற்குப் பகுதி மிகவும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; இங்கு 26,000 இளைஞர்கள் கூடுதலாக ஆறு மாதங்களுக்கு
மேல் வேலையின்மையில் உள்ளனர்; இது 53% அதிகம் ஆகும். நீண்டகால இளைஞர் வேலையின்மை
என்பது 2008ல் இருந்து இரு மடங்காகிவிட்டது, 2000ம் ஆண்டில் இருந்து எட்டு மடங்கு
அதிகமாகிவிட்டது.
கன்சர்வேட்டிவ்/லிபரல் அரசாங்கம் கடந்த ஆண்டில் “வேலைகளைத் தோற்றுவித்தலில்” ஒரு
வெடிப்புத் தன்மை வந்துள்ளதாகக் கூறுகிறது; ஆனால் புள்ளிவிவரங்கள் இது பகுதி நேர
வேலை, பாதுகாப்பற்ற வேலைகள் அதிகரித்துள்ளதை தளமாகக் கொண்டது என்று காட்டுகின்றன.
பகுதி நேரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சமீபத்திய மாதங்களில் 49,000 உயர்ந்து 8.1
மில்லியன் என ஆயிற்று—வேலைசெய்யும் தொழிலாளர் தொகுப்பில் ஐந்தில் ஒருவர் என; மேலும்
மற்றும் ஒரு 72,000 தொழிலாளர்கள் தற்காலிக வேலைகளில் நுழைந்து மொத்த எண்ணிக்கையை
655,000 என ஆக்கியுள்ளனர்.
ஆளும் வர்க்கம் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்களின் முதுகுகளில்
இருத்தியுள்ளது; தன் தாக்குதலை மிகவும் பாதிப்பிற்கு உட்படுபவர்கள்மீது நடத்துகிறது.
JSA எனப்படும் வேலைதோடுவோர் படியைக் கோரும் இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நிதி
கிட்டத்தட்ட 10% சரிய இருப்பதைக் காண்பர்; இதற்குக் காரணம் கடந்த மாதம் பொதுநலப்
பணங்களின் மீது ஆண்டு வரம்பு 1% என்பது ஒரு பகுதியாக வந்துள்ளது. இது, 25 வயதிற்கு
உட்பட்டவர்களுக்கு வீட்டு நலன்கள் கொடுப்பது திரும்பப் பெறப்பட்டுவிட்டதைத்
தொடர்ந்து வந்துள்ளது; இதைத்தவிர வேலையில்லாத இளைஞர்களுக்கு கொடுக்கப்படும்
ஆதரவுகளிலும் வெட்டுக்கள் வந்துள்ளன – இவற்றிற்கான நிதியில் 98 மில்லியன் பவுண்டுகள்
செலவு வெட்டுக்களினால் கால் பகுதி குறைந்துவிட்டது.
இதன் நோக்கம் இளைஞர்களை சம்பளமில்லாத தொழில் செய்யும் இடங்களில் இருத்துவது, இதற்கு
“பயிற்சி வகுப்புக்கள்” என்று பெயர்; இவை அனைத்து “புதிய வேலைகளிலும்” ஐந்தில் ஒரு
பங்கு என்று உள்ளன. சம்பளமில்லாத தொழில் திட்டங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்நீதி
மன்றத்தால் சட்டபூர்வமானவை என தீர்ப்பளிக்கப்பட்டன; இது ஆயிரக்கணக்கான வேலையில்லாத
தொழிலாளர்களை ஊதியமில்லாமல் உழைப்பதற்கும், இல்லாவிடின் அவர்கள் JSA ஐ இழக்க
நேரிடும் என்ற நிலைக்கும் தள்ளியுள்ளது. இத்திட்டங்களின் வரம்பு தெரியவில்லை;
ஏனெனில் தனியார் துறை நிறுவனங்களோடு அரசாங்க உடன்பாடுகளின் விவரங்கள்
வெளிவிடப்படவில்லை.
அரசாங்கத்தின் புதிய இளைஞர் ஒப்பந்தம், முந்தைய இளைஞர் திட்டங்களுக்குப் பதிலாக
வந்துள்ளது, இளம் தொழிலாளர்களுக்கு ஆதரவு ஏதும் கொடுக்கவில்லை; மாறாக, தனியார்
நிறுவனங்களுக்கு வேலைகளைக் கொடுக்க ஊக்கம் அளிக்கும் வகையில் உதவித் தொகைகளைக்
கொடுக்கிறது.
இருண்ட வருங்கால வாய்ப்புக்கள் என்பவை படித்தல் என்பது பெரும்பாலோரால் இயலாது என்ற
நிலைக்கு வந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ளது; ஒரு சராசரி பட்டப்படிப்பு படித்த மாணவர்
53,000 பவுண்டுகள் கடனை முகங்கொடுக்கிறார், பட்டப்படிப்பு முடிந்தபின் உறுதியற்ற
வருங்காலத்தைத்தான் எதிர்கொள்கிறார்.
ஊதியமில்லாத பயிற்சிப் பணிகள், சட்டவிரோதமானவை என்றாலும், சில துறைகளில்
நுழைவதற்குத் தேவையாக உள்ளன. ஐந்தில் ஒரு இளைஞர், வேலை கிடைக்கும் என்னும்
நம்பிக்கையில், ஊதியம் ஏதும் பெறாமல் உழைப்பதற்கு சில காலத்திற்கு ஒத்துக்
கொள்கின்றனர். இது தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு மேலும் ஒரு நிதியத் தடையை
ஏற்படுத்தியுள்ளது; ஏனெனில் செல்வந்தர் குடும்பங்களில் இருந்து வருபவர்கள்
ஊதியமில்லா பணியைச் செய்ய மூன்று மடங்கு அதிகம் வருவர் என்று National Union of
Students உடைய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
முதலாளிகள் இந்த ஊதியமற்ற பயிற்சிகளைப் பயன்படுத்தி இளைஞர்களை சுரண்டுவதுடன் பணியிட
உரிமைகளையும் தாக்குகின்றனர். பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் பொதுவாகத் தனிப்பட்ட
கடமைகளையும் கைவிட்டு, நீண்ட மணி நேரம் உழைக்க வேண்டும்.
நிதி கொடுத்து அளிக்கப்படும் பயிற்சி வேலைகள் கிட்டத்தட்ட இல்லை எனப் போய்விட்டன.
தேசிய பயிற்சிப் பணி வலைத் தளத்தில் வெளிவந்த 106,510 பயிற்சிப் பணிகளுக்காக
1,100,000 விண்ணப்பங்கள் குவிந்தன; இந்த வலைத் தளம் மொத்தப் பணிகளில் 80%ஐ 2012ம்
ஆண்டில் பட்டியல் இட்டது. ஒவ்வொரு பணிக்கும் பத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள்
போட்டியிடுகின்றனர்.
ஒரு வேலை கிடைக்கும் அளவிற்கு அதிருஷ்டம் படைத்தவர்கள், வாரம் சராசரி 170
பவுண்டுகளில் வாழ்க்கை நடத்த வேண்டும்; பயிற்சிப் பணியாளர்களுக்கு ஒரு மணி
நேரத்திற்கு 2.65 பவுண்டுகள் குறைந்தப்பட்ச ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இது
இதே வயதுக் குழுவிற்குத் தேசிய குறைந்தப்பட்ச ஊதியத்தில் பாதி என்னும் கேலிக்கூத்து
ஆகும்.
இப்படி அரசியல் வகையில் ஏதோ அரியதைச் செய்வது போல் காட்டிக் கொள்வது, பிரித்தானிய
உயரடுக்கு வேலையற்றோரை “பணி செய்ய மறுப்பவர்கள் போல்” அரக்கத்தனமாக பெருகிய முறையில்
காட்டுவதின் ஒரு பகுதி ஆகும்; இது கௌரவமான ஊதியம் கொடுக்கும் வேலைகள் அரிதாகப்
போய்விட்டதை மறைக்கிறது. அரசாங்கப் புள்ளி விவரங்கள் ஆளும் கூட்டணி அதிகாரத்திற்கு
வந்ததில் இருந்து பயிற்சிப் பணிகளின் எண்ணிக்கை 70%க்கும் மேல் அதிகரித்துவிட்டது
எனக்காட்டுகிறது. ஆனால் இவற்றில் 40% பேர், இருக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்குக்
கொடுக்கும் மறுபயிற்சி என்பதின் கீழ் வந்துள்ளனர்; அவர்களில் பெரும்பாலனவர்கள் 25
வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பிற பணிகளும் மிகவும் குறைந்த ஊதியம் கொடுப்பவை,
அதிகப் பயிற்சி தேவையற்ற பணிகள் துறையில் இருக்கும் வேலைகளும் ஆகும்.
இந்த நிலைமைகள் தங்கள் சூழ்நிலையைச் சமாளிக்க முடியாத உணர்வில் இளைஞர்களை
தள்ளுகின்றன. Prince’s Trust அறிக்கை ஒன்றின்படி, மந்த நிலையானது, வேலையில்
இருக்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினரையும், கல்வியில் இல்லாத இளைஞர்களில்
பாதி பேரையும், அதே போல் வேலை அல்லது பயிற்சி இல்லாத இளைஞர்களில் பாதிப் பேரையும்
பாதிக்கிறது. இந்த இளைஞர்களில் பத்தில் ஒருவர் தாங்கள் தங்கள் பிரச்சினைகளை
தீர்ப்பதற்கு வழியில்லை என்று உணர்ந்துள்ளனர். மற்றொரு அறிக்கையில், இந்த அறக்கட்டளை
இளைஞர்களில் கால் பகுதியினர், வறிய பின்னணியில் இருந்து வருபவர்கள், நல்ல வேலை
பெறும் நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்றும், வயதுக்கு வந்தவர்களுக்கு ஏற்ற
வகையில் ஒரு கௌரவமான வேலையை, வாழ்க்கைத் தரத்தை பெறும் வாய்ப்பு இல்லை என்றும்
உணர்வதாக கண்டறிந்துள்ளது.
இதேபோன்ற சூழ்நிலைதான் ஐரோப்பா நெடுகிலும் இளைஞர்கள் முகங்கொடுப்பதாகும். அங்கு
சராசரி வேலையின்மை விகிதம் முன்னோடியில்லாத வகையில் 23.7 என இந்த வயதுக்
குழுவினருக்கு உள்ளது. கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் பெரும்பான்மையான இளைஞர்கள்
வேலையில் இல்லை; இளைஞர் வேலையின்மை சமீபத்தில் அந்த இரு நாடுகளிலும் 56% ஐக்
கடந்துவிட்டது.
தொழிற் கட்சி சார்புடைய Work Foundation உடைய கருத்தின்படி, OECD (பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நாடுகளின் அமைப்பு) நாடுகளில் இளைஞர் வேலையின்மை
என்பதில் இப்பொழுது கிரேக்கத்திற்கும், ஸ்பெயினுக்கு அடுத்தாற்போல் மூன்றாம்
இடத்தில் ஐக்கிய அரசு உள்ளது என்று தெரிகிறது. இந்த எண்ணிக்கை முன்னோடியில்லாத
அளவிற்கு இத்தாலி மற்றும் போர்த்துக்கல்லில் 49% எனவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்
30% என்றும் உள்ளது; பிந்தையதில் ஸ்லோவாக்கியா, லாட்வியா ஆகியவை அடங்கும்.
இளைஞர் வேலையின்மை ஐக்கிய அரசில் 2008ல் இருந்து மற்ற G8 நாடுகளில் இல்லாத அளவிற்கு
வேகமாக உயர்ந்துள்ளது; இது 2011 வரையிலான ஆண்டுகளில் G8 நாடுகளின் சராசரியான 15%
உடன் ஒப்பிடுகையில் 35% உயர்ந்துவிட்டது.
இளைஞர்கள் முகம் கொடுக்கும் இந்தப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலைமைக்குப் பொறுப்பு
பல போலி இடது கட்சிகளிடம்தான் உள்ளது; அவைதான் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஒரு
இடது மறைப்பை அளிக்கின்றன; அவையோ உயரும் வேலையின்மை, சிக்கன நடவடிக்கைகளுக்கு
எதிரான எந்த எதிர்ப்பையும் அணிதிரளவிடாமல் செய்ய முறையாக உழைக்கின்றன.
இளைஞர்களை முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தில் அரசியலளவில் அமைப்பதை
எதிர்க்கும் Socialist Workers Party, Socialist Party ஆகியவை Youth Fight for Jobs
என்பதை தனிப் பிரச்சினையான பிரச்சாரங்களாக கொண்டுள்ளன; அவை அரசாங்கம் அல்லது தொழிற்
கட்சி நடத்தும் உள்ளூர் கவுன்சில்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை
அடித்தளமாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு தருணத்திலும், அவர்கள், தொழிற்சங்கங்கள் இளம்
வேலையற்றவர்களுக்கான ஒரு போராட்டத்தை எடுக்க முடியும் என்ற திவாலான மாயையை
பரப்புகின்றனர். |