தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The ICFI Defends Trotskyism 1982 -1986 Documents of the Struggle against the WRP Renegades
Fourth International: A Journal
of International Marxism. ICFI நான்காம் அகிலத்தைப் பாதுகாக்கிறது 1982 -1986 WRP விட்டோடிகளுக்கு எதிரான போராட்டத்தின் ஆவணங்கள் Editorial use this version to print | Send feedback 1986 பிப்ரவரியில் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) வெளியேறியதில் உச்சம் கண்டதான அனைத்துலகக் குழுவிற்குள்ளான போராட்டத்தின் முக்கியமான ஆவணங்களை நான்காம் அகிலம் (Fourth International) இன் இந்த இதழில் நாம் இங்கு மறுபிரசுரம் செய்கின்றோம். இந்த ஆவணங்கள் ஆரம்பத்தில் அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவம் செய்த பிரிவுகளின் உள்விவாதத்தில் வெளியிடப்பட்டவையும், முழு அங்கத்தவர்களிடையேயும் முழுமையாக விவாதிக்கப்பட்டவையும் ஆகும். முந்தைய பதிப்பில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமையின் சீரழிவு குறித்த அனைத்துலகக் குழுவின் மிக விரிவானதொரு பகுப்பாய்வினை நாம் வெளியிட்டோம். "1973-1985: தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்தது” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை சென்ற ஆண்டின் இலையுதிர் காலத்தில் தொழிலாளர் புரட்சிகரக் கட்சியின் உருக்குலைவு என்பது சந்தர்ப்பவாதத்தின் விளைபொருள் என்பதை நிறுவியது. ஒரு தசாப்த காலத்துக்கும் அதிகமான WRP இன் அரசியல் பாதையை மிக மிகக் கவனமாய் ஆய்வு செய்ததன் அடிப்படையில், ஹீலியும், பண்டாவும், மற்றும் சுலோட்டரும் 1970களின் ஆரம்பத்தில் இருந்தே பப்லோவாதத் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர் என்பதையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தை நிராகரித்திருந்தனர் என்பதையும், அத்துடன் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் மறுதலித்தனர் என்பதையும் அனைத்துலகக் குழு நிரூபித்துக் காட்டியது. இதன் அடிப்படையில், சர்வதேச அளவிலும் மற்றும் பிரிட்டனிலும் WRP தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டுக் காட்டிக் கொடுத்திருந்தது என்பதையும், அனைத்துலகக் குழுவை அழிப்பதற்கு நனவுடன் வேலை செய்தது என்பதையும் அந்த அறிக்கை நிறுவிக்காட்டியது. இந்த ஆவணத்தை ஓடுகாலிகளின் அனைத்துப் பிரிவினரும் இறுகிய மௌனத்துடன் எதிர்கொண்டதை இட்டு அனைத்துலகக் குழுவுக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. ஹீலி அல்லது சுலோட்டர் தலைமையில் இருந்த WRP இனுள்ளான போட்டிக் கன்னைகளும் சரி அல்லது மைக்கேல் பண்டா தலைமையிலான கம்யூனிஸ்ட் மன்றம் (Communist Forum) என்று அழைக்கப்படுகின்றதாயினும் சரி, இந்த ஆவணம் இருப்பதை அறிந்தவர்களாக காட்டிக்கொள்ளவில்லை. அவர்களது பரஸ்பர மௌனம் என்பது பல வருடங்களுக்கும் தாங்கள் கூட்டாகத் தலைமை கொடுத்த ஒரு அமைப்பின் தலைவிதி குறித்த எந்தவொரு மார்க்சிச ஆய்வையும் வழங்குவதற்கு அவர்கள் திறனற்று இருந்ததன் ஒரு வெளிப்பாடு மட்டுமே. இன்னும் மோசமானது என்னவெனில், வேலைத்திட்டம் அல்லது முன்னோக்கு பற்றிய அவர்களின் வேறுபாடுகள் என அவர்கள் கூறிக்கொண்டவை பற்றிக்கூட ஹீலி பண்டா அல்லது சுலோட்டர் எவ்விதமான விரிவான விளக்கத்தையும் உருவாக்கவில்லை. சத்தமோ கோபமோ எவ்வித அர்த்தமற்றவை என்ற சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. அமைப்புரீதியான இத்தனை குருதிகொட்டி கொண்டிருந்தபோதிலும், இவர்களில் ஒருவருமே தாங்கள் ஏன் பிளவுபட்டோம் என்பதை உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயத்தின் நிலைப்பாட்டில் இருந்து விளக்கவில்லை. அதற்குக் காரணம், அடிப்படையான கருத்துவேறுபாடுகள் அவர்களுக்குள் இல்லை, மாறாக அனைத்துலகக் குழுவுடனேயே இருந்தது. பழைய குழுவாதத் தலைமையானது WRPக்குள்ளாக இனியும் கட்டுப்படுத்த முடியாதவொரு மாபெரும் அமைப்பு நெருக்கடிக்கு முகம் கொடுத்தபோது பண்டாவும் சுலோட்டரும் ஹீலியுடன் முற்றிலும் ஒரு கோட்பாடற்ற அடிப்படையில் முறித்துக் கொண்டனர். அரசியல் நெருக்கடிக்கான உண்மையான மூலாதாரத்தைப் பற்றிய ஆய்வு எதனையும் தவிர்ப்பதற்காக “புரட்சிகர ஒழுக்கநெறி” (ஆரம்பத்தில் பில் ஹண்டரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்று) என்ற மத்தியதர வர்க்க முழக்கத்தை சிடுமூஞ்சித்தனமாய் பயன்படுத்திக் கொண்டனர். 1985 செப்டம்பருக்கு முன்னதாக பண்டாவும் சுலோட்டரும் அனைத்துலகக் குழுவின் மீது ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையை திணிப்பதற்கும் அத்துடன் ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்கு முனைந்த அனைவரையும் அதிகாரத்துவரீதியாக ஒடுக்குவதற்கு மற்றும் அழிப்பதற்கும் ஹீலியுடன் ஒத்துழைத்து வேலை செய்தனர். ஆனால் WRPக்குள்ளான நெருக்கடியை போலி அதிகாரத்துவ வகையில் தீர்ப்பதற்கு அனைத்துலகக் குழுவின் ஒரு தீர்மானகரமான பெரும்பான்மை ஒப்புக்கொள்ள போவதில்லை என்பதையும், அது பிரிட்டிஷ் பிரிவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளை மீள்ஸ்தாபகம் செய்ய தீர்மானகரமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்ட கணம் முதலாகவே பண்டாவும் சுலோட்டரும் WRPஐ ICFI இல் இருந்து உடைப்பதற்கு வெறிகொண்டு இயங்கினர். இந்த இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் WRP இன் அரசியல் காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக அனைத்துலகக் குழுவும், அமெரிக்காவில் இருந்த அதன் ஆதரவான பிரிவான வேர்க்கர்ஸ் லீக்கும் (தொழிலாளர் கழகமும்)நடத்திய போராட்டத்தினை உள்ளடக்கிய பரந்த வரலாற்றுப்பதிவுகளை கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளையும் வேலைத்திட்டத்தையும் பாதுகாப்பதன் அடிப்படையில் அமைந்தது என்பதை இது மறுக்கவியலாத வண்ணம் விளங்கப்படுத்துகிறது. ஆனால் மறுபக்கத்திலோ, WRP இன் நிலைப்பாடு என்பது, 1985க்கு முன்பும் பின்பும், இக்கோட்பாடுகளுக்கான ஒரு குரோதமான வெறுப்பின் குணாதிசயத்தையே கொண்டதாய் இருந்திருக்கிறது. முதல் பார்வைக்கு WRP இனுள் ஒரு மாபெரும் எழுச்சி தோன்றியது போல் காட்சியளித்த போதிலும், அதன் அரசியல் பயணப்பாதை என்பது பிளவுக்கு முன்னதாக அது இருந்ததில் இருந்து கணிசமாக மாறுபட்டதில்லை. பல வருடங்களாக WRP தலைமை 1963 இல் பப்லோவாத-அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP)மறுஇணைவுக்கு எதிராக ஹீலி பாதுகாத்த புரட்சிகரக் கோட்பாடுகளுடன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ஹீலியின் மதிப்பினை பெரிதுபடுத்துவதனூடாக ட்ரொட்ஸ்கிசத்தை தான் கைவிட்டதை மறைக்க முயன்று வந்தது. WRPக்குள்ளாக பிளவு வெடித்ததை ஒட்டி, அதன் நிலைப்பாட்டுக்கும் பப்லோவாதிகளின் நிலைப்பாட்டுக்கும் எந்த அடிப்படையான வித்தியாசமும் இருக்கவில்லை. ஹீலி ஆளுகையின் பொறிவு என்பது பழைய ஆளும் குழுவான ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரை பிரித்ததே தவிர அதன் எந்த ஆதரவான பிரிவினிடத்திலும் திருத்தல்வாத நோக்குநிலையிலிருந்து ஒரு மாற்றத்தையும் அது உருவாக்கி விடவில்லை. பண்டாவும் சுலோட்டரும் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரியும் தங்களது முடிவை நியாயப்படுத்துவதற்காக பரப்பிவிட்ட பொய்களிலேயே மிகவும் படுமோசமானது என்னவென்றால் ICFI உண்மையில் ஹீலியுடன் மோத விரும்பவில்லை என்றும் ஹீலியின் அமைப்புக்குள்ளேயே இருந்த ஒரு சதிக் குழு தூண்டுதலளித்ததற்குப் பின்னரே அது விருப்பமற்று மோதல் களத்திற்குள் இழுக்கப்பட்டது என்றும் கூறியமையே. ICFI இன் பிரிவுகளும் வேர்க்கர்ஸ் லீக்கும் தமது சொந்த “ஹீலிவாத”த்தில் இருந்து உடைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை என்பதான பண்டா-சுலோட்டரின் நிலைப்பாட்டிற்கு இந்த கட்டுக்கதையே அடிப்படையாக இருந்தது. இத்தொகுதியில் இருக்கும் ஆவணங்களில் முன்வைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பதிவுகள் இந்த அவதூறுகளை மறுக்கின்றன. ஆவணப் பதிவுகளே அதற்கான விளக்கமளிக்கின்றன என்று ஆசிரியர்கள் நம்புகின்ற போதிலும் கூட, வாசகருக்கு உதவுவதற்காக நாங்கள் இந்த சுருக்கமான அறிமுகத்தை அளிக்கின்றோம். 1982க்கும் 1984க்கும் இடையில், WRP இன் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் மீதும் அது தனக்கு அடித்தளமாய்க் கொண்டிருந்த சடவாத இயங்கியல் குறித்த அகநிலை கருத்தியல் திரிப்பின் மீதுமான ஒரு விரிவான விமர்சனத்தை வேர்க்கர்ஸ் லீக்கின் தேசியச் செயலரான டேவிட் நோர்த் வழங்கினார். அப்போதும் அனைத்துலகக் குழுவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்ததான பிரிட்டிஷ் பிரிவின் தலைமை வேர்க்கர்ஸ் லீக்குடனான அமைப்புரீதியான அத்தனை உறவுகளையும் துண்டிக்க அச்சுறுத்தியதைத் தொடர்ந்தே நோர்த் இந்த விமர்சனத்தைத் திரும்பப் பெற்றார் என்பதை இந்த விமர்சனத்திற்கு WRP இன் தரப்பில் இருந்து எந்த எழுத்துமூலமான பதிலும் இருக்கவில்லை என்கிற உண்மை நிரூபிக்கிறது. இயங்கியல் குறித்த ஹீலியின் எழுத்துக்கள் மீதான நோர்த்தின் விமர்சனத்தில் தாங்கள் உடன்படுவதாக 1982 அக்டோபரில் நோர்த்திடம் தெரிவித்திருந்த பண்டாவும் சுலோட்டரும், அதற்குப் பின் ஏறக்குறைய உடனடியாக, தத்துவ கருத்துவேறுபாடுகள் குறித்தும் அவற்றின் தெளிந்த அரசியல் தாக்கங்கள் குறித்த மேலதிக விவாதத்தினை ஒடுக்குவதற்கு ஹீலியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டனர். அப்போதிருந்து, இயங்கியல் சடவாதத்தின் அபிவிருத்தியில் ஹேகலின் முக்கியத்துவத்தை வேர்க்கர்ஸ் லீக் ஊக்குவிக்க தவறியதாய் போலியாகக் குற்றம்சாட்டி வேர்க்கர்ஸ் லீக்கிற்கு எதிராக ஒரு தாக்குதலை உருவாக்க சுலோட்டர் முனைந்தார். ஹீலி மற்றும் அவரது கன்னை நடவடிக்கைகளுடனான அவரது தொடர்பு அடிப்படையில் பப்லோவாதத்தின் உள்ளடக்கமாயிருந்த அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது என்பது விரைவில் தெளிவாகியது. 1983 டிசம்பரில் நோர்த்துக்கு அவர் எழுதிய கடிதம், கிரெனடாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் சமயத்தில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான போராட்டத்தின் மீது வேர்க்கர்ஸ் லீக் “அளவுக்கதிகமாய் முக்கியத்துவத்தை” கொடுப்பதாக தாக்கியதுடன், இத்தகைய அளவுக்கதிகமான முக்கியத்துவம் “நடைமுறைவாதத்தின் அடையாளத்தைத் தாங்கி நிற்போரின் கரங்களில் ஒரு ஆயுதமாக மாறும்” என்று அது கூறியது. [பார்க்க. பக். 27]. இக்கடிதத்திற்கு நோர்த் எழுதிய டிசம்பர் 27, 1983 தேதியிட்ட பதிலில் சுலோட்டர் முன்னெடுக்கும் நிலைப்பாட்டை” வேர்க்கர்ஸ் லீக் ஏற்றுக் கொண்டால், அது நேரடியாக அப்பட்டமான சந்தர்ப்பவாதத்திற்கே இட்டுச் செல்லும்” என்று எச்சரித்தார். அவர் மேலும் கூறினார்: ”’தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீன’த்தின் மீதான அழுத்தம் என்பது அனைத்துலகக் குழுவிற்குள்ளாக ‘மிகவும் அளவுக்கதிகமானது’ என, அதிலும் குறிப்பாக தொழிலாள வர்க்கம் இன்னும் தாராளவாதிகளிடம் இருந்து முறித்துக் கொண்டிராத ஒரு நாட்டில் இருக்கும் ஆதரவான ஒரு பிரிவின் அறிக்கை தொடர்பாக சித்தரிக்கப்படுகின்றது என்ற எண்ணமே எனக்கு உளைச்சலைத் தந்துள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு மார்க்சிசக் கட்சியின், எல்லாவற்றுக்கும் முதலாய் அமெரிக்காவில், அமைப்புரீதியான, அரசியல்ரீதியான மற்றும் தத்துவார்த்தரீதியான வேலைகள் அனைத்துமே துல்லியமாக இந்த அரசியல் சுயாதீனத்தை வெற்றிகொள்வதை நோக்கியே செலுத்தப்படுகின்றன. ”...1961 முதல் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு(SWP)க்கு எதிரான மொத்தப் போராட்டமும், அதேபோல் போல்ஷிவிசத்துக்கான போராட்டத்தின் ஒட்டுமொத்த வரலாறும் இந்தக் கேள்வியின் மீது தான் தொங்கியிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் என்ற கருத்தை தழுவிக் கொள்வதிலிருந்து அந்நியப்பட்டு, உலகெங்கிலும் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் திருத்தல்வாதிகள் அதன்மீது இடைவிடாத தாக்குதலையே தொடுத்து வந்திருக்கின்றனர். SWP இன் நவ-ஸ்ராலினிசம் என்பது திரு.பார்ன்ஸ் அவர்களின் மூளையில் உதயமானதல்ல, மாறாக முதலாளித்துவ நெருக்கடியின் புதிய கட்டத்திற்கும் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக திட்டவட்டமான பதிலிறுப்பிலிருந்தே எழுந்தது. இந்த வழியில் பப்லோவாதமானது ஏகாதிபத்திய அழுத்தங்களை தொழிலாளர்’ இயக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான கடத்தியாக சேவை செய்கிறது. கடந்த காலத்தில் நான் உங்களிடம் பலமுறை வலியுறுத்தியதுபோல், துல்லியமாக இந்தப் புள்ளியில் தான் அனைத்துலகக் குழு அதன் சொந்த மட்டங்களில் இருப்பவர்களில் ஏதேனும் திருத்தல்வாத சுவடு கண்ணில்படுகிறதா என்பது குறித்து மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு, அதே நேரத்தில் பப்லோவாதத்திற்கு எதிராக அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும். பப்லோவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தை கடந்து வந்துவிடவில்லை என்பதில் நீங்கள் நிச்சயம் உடன்படுவீர்கள்.” [பக். 32-33] இந்தக் கடிதத்திற்கும் சரி ஒரு மாதத்திற்குப் பின்னர் WRP இன் பொதுச் செயலாளராக ஆன மைக் பண்டாவிற்கு நோர்த் எழுதிய கடிதத்திற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை. “முடிவுகள் வழிமுறைகள் இரண்டிலுமே வரலாற்றுரீதியாக பப்லோவாதத்துடன் நாம் தொடர்புபடுத்திப் பார்த்து வந்திருப்பவற்றுக்கு ஒத்த நிலைப்பாடுகளை நோக்கிய ஒரு அரசியல் சாய்வின் அறிகுறிகள் பெருகுவதைக் கண்டு” வேர்க்கர்ஸ் லீக் ஆழமான உளைச்சல் உற்றதாக நோர்த் அறிக்கையளித்தார். [பார்க்க பக். 35] ”பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக - எல்லாவற்றுக்கும் முதலில் அதன் கண்ணோட்டம் நமது சொந்தப் பிரிவுகளுக்குள்ளாக வெளிப்பாடுகள் காண்பதற்கு எதிராக - நமது போராட்டத்தை புதுப்பிக்க” நோர்த் அழைப்பு விடுத்தார். “SWP நவ ஸ்ராலினிஸ்டுகள் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மீது தொடுத்த தாக்குதல்களுக்கு தனது பதிலை வழங்குவதற்கும் அத்துடன் நிரந்தரப் புரட்சித் தத்துவம் தான் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு அசைக்கமுடியாத விஞ்ஞான அடித்தளமாகத் திகழ்கிறது என்பதை விளங்கப்படுத்துவதற்குமான காலம் அனைத்துலகக் குழுவிற்கு நிச்சயம் வந்துசேர்ந்திருக்கிறது” என்று அவர் அறிவித்தார். [பார்க்க பக். 38] 1984 பிப்ரவரி 11 அன்று, அனைத்துலகக் குழுவின் ஒரு கூட்டத்தில் (பல பிரிவுகளை இந்தக் கூட்டத்தில் இருந்து WRP தன்னிச்சையாக விலக்கி வைத்திருந்தது) நோர்த், ‘WRP இன் அரசியல் பரிணாம வளர்ச்சியானது உலகெங்கும் SWP இன் தலைமையில் திருத்தல்வாதக் குழுக்கள் ட்ரொட்ஸ்கிசத்தை மறுதலித்ததை பிரதிபலிப்பதாக இருக்கிறது’ என்று WPR ஐ வெளிப்படையாக எச்சரித்தார். அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தினுள் WRP வீழ்ச்சியடைவதற்கான பல வெளிப்படையான உதாரணங்களை அவர் பட்டியலிட்டு காட்டினார். வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனங்களுக்கு பகுத்தாய்ந்த பதில் எதுவும் இல்லை; உடனடியாய் பிளவுபடுவதற்கான அச்சுறுத்தல் தான் வந்தது. எப்படியிருப்பினும், WRP ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை தான் கைவிட்டதைப் பாதுகாத்து பேசுவதற்கு ஏதாவது இருந்தது என்றால், அது கிளீவ் சுலோட்டரிடம் இருந்து வந்தது. அனைத்துலகக் குழுவின் பத்தாவது காங்கிரசுக்கு அவர் தயாரித்தளித்த தீர்மானத்தில் சுலோட்டர் உறுதிபடக் பின்வருமாறு கூறியிருந்தார்: “இன்றைய வரலாற்று நிலைமைகளில், ஒரு பக்கத்தில் இயங்கியல் சடவாதப் பயிற்சியின் அடிப்படையிலமைந்த ஒரு புரட்சிகரக் கட்சிக்கும் இன்னொரு பக்கத்தில் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தில் பொதுவாக பற்றிப்பிடித்திருக்கும் குழுக்களுக்கும் இடையிலான பிரி கோடுகள் வரையப்பட்டுள்ளன. இக்கோடுகளானது புரட்சிக்குத் தயாரிப்பு செய்வதற்கும் எதிர்ப்புரட்சிக்கு சேவை செய்வதற்கு தயாரிப்பு செய்வதற்கும் இடையிலமைந்ததாய் இருக்கின்றன.” வேர்க்கர்ஸ் லீக்கையும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பாதுகாக்கின்ற வேறு எவரொருவரையும் முளைவிடும் எதிர்ப்புரட்சியாளர்களாக முத்திரை குத்தும் நோக்குடனான இந்த சூழ்ச்சியான சூத்திரம் WRP இன் திருத்தல்வாத வகையில் அத்தனையையும் நியாயப்படுத்துகின்ற தத்துவார்த்த வழியை உருவாக்கும் ஹீலி மரபின் உயர்ந்த போதகராக சுலோட்டர் ஆற்றிய மிக முக்கியமான பாத்திரத்தை அம்பலப்படுத்துகிறது. இயங்கியல் மீதான முதிய போலி அறிஞனின் ஏளனப்படுத்தலை சுலோட்டர் பாதுகாத்தார் என்றால் அதற்குக் காரணம் ட்ரொட்ஸ்கிசத்தின் மீதும் அனைத்துலகக் குழுவின் மீதும் WRP தொடுத்த இடைவிடாத தாக்குதலுக்கான மறைப்பை அது வழங்கியது என்பது தான். (சுலோட்டர் ஹீலியுடனான ஒரு தனியான உரையாடலில் வேர்க்கர்ஸ் லீக்கிற்கு எதிராக “எந்த நிபந்தனையுமற்ற” ஒரு போராட்டத்திற்கான அவசியத்தின் மீது வலியுறுத்தியிருந்தார் [பார்க்கவும் பக். 93]). 1982 முதல் 1984 வரையில் WRPக்கும் வேர்க்கர்ஸ் லீக்கிற்க்கும் இடையிலான மோதலின் வரலாறு, ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரால் அது அதிகாரத்துவ முறையில் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த போதிலும் கூட, அனைத்துலகக் குழுவிற்குள் இருந்த அடிப்படையான அரசியல் மற்றும் தத்துவார்த்த பேதங்களை எடுத்துக் காட்டியது. இது 1985-86 இன் போராட்ட அபிவிருத்தி மீதான ஒரு மதிப்பீட்டிற்கு அவசியமானதாகும். ஜூலை 1, 1985 அன்று WRP தலைமைக்குள்ளாக வெடித்தெழுந்த அவலட்சணமானதொரு மோசடியான பெண் காரியாளர்களிடம், அதில் சிலர் வயதுகுறைந்தவர்கள், ஹீலி முறைதவறி பாலியல் தொந்தரவு செய்து வந்திருந்தார் என்பதை நீண்ட காலம் அவரிடம் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவரிடம் இருந்து வந்த ஒரு கடிதம் அம்பலப்படுத்திய சமயத்தில் அமைப்பின் உயர்ந்த மட்டத்திற்குள்ளாக எந்தளவிற்கு அரசியல் அழுகி நாற்றமெடுத்திருக்கிறது என்பதை மேற்பரப்பிற்கு மட்டுமே கொண்டு வந்திருந்தது. கட்டுப்பாட்டுக் குழுவின் மூலமாக ஒரு விசாரணையைக் கூட்டுவதற்கு கட்சியின் உறுப்பினர்கள், பிரதானமாக WRP மத்தியக் குழு உறுப்பினர் டேவ் ஹைலண்ட், மேற்கொண்ட முயற்சிகளை நிறுத்திவிட முயலுவதன் மூலமாக ஹீலியும் பண்டாவும் சுலோட்டரும் கொஞ்ச காலத்திற்கு இந்த நெருக்கடியை சமாளித்தனர். பிரிட்டிஷ் அமைப்பில் ஒரு நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பெரும் தொகையைத் திரட்டுவதற்காக அனைத்துலகக் குழுவின் ஒரு கூட்டத்திற்கு ஆகஸ்ட் 17, 1985 இறுதியில் WRP தலைமை அழைப்பு விட்டிருந்தபோது அப்போதும் கூட தலைமையின் மீதான மோசடி குறித்த ஒரு வார்த்தையும் கூட கூறப்படவில்லை. ஆனால் செப்டம்பரிலும் அக்டோபரிலும், இந்த மோசடி பற்றிய செய்தி இன்னும் அதிகமான WRP உறுப்பினர்களிடையே அறியப்பட்டதற்குப் பின்னர்தான், பிரிட்டிஷ் அமைப்புக்குள்ளாக நடந்து வந்த விவகாரங்களின் உண்மையான நிலையை அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டன. அந்த ஒட்டுமொத்தக் குழுவின் தலைமையும் முற்றாக மதிப்பிழந்திருந்த நிலையில், WRP இன் சாதாரண உறுப்பினர்களை பொறுத்தவரை அனைத்துலகக் குழு மட்டுமே உண்மையான அதிகாரத்துக்குரியதாக இருந்தது, குறிப்பாக மறைக்கப்பட்டிருந்த முந்தைய மூன்று ஆண்டுகளில் வேர்க்கர்ஸ் லீக் முன்வைத்திருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த விமர்சனங்களை முதன்முறையாக அவர்கள் அறிந்து கொண்டனர் என்பதால். அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்ட ஒரு எழுத்துமூலமான அக்டோபர் 5 1985 தேதியிட்ட அறிக்கையில், சுலோட்டர் பின்வருமாறு அறிவித்தார், “நோர்த் எனது முழுமையான ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தார், இந்த ஆதரவையும் நம்பிக்கையையும் தோழர் பண்டாவும் பகிர்ந்து கொண்டார்.” [பார்க்க பக். 48] அனைத்துலகக் குழுவிற்கு முழுமையான விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு நோர்த்தின் நிலைப்பாடுகளுடன் முழுமையான உடன்பாட்டையும் கூறி சுலோட்டர் எழுதினார்: “நோர்த் கூறுவதை ஒரு முழுமையான புறநிலை ஆய்வுக்கு உட்படுத்துவீர்கள் என்றும், பின் அனைத்துலகக் குழு எட்டியிருக்கும் மட்டத்திற்கு நிகராகவும், அதனைத் தாண்டியும் செல்லும் பொருட்டு புரட்சிகர சக்தி மற்றும் ஆதாரவளத்தின் ஒவ்வொரு துளியையும் திரட்டுவதில் எங்களுடன் இணைவீர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். ”அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் இது மிக நிர்ணயகரமானதும் நேர்மறையானதுமான படியாக நிரூபணமாகும் என்பதிலும், அத்துடன் எல்லாம் சேர்ந்து நமது பிரிவுகள் அனைத்தையும் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் தீர்மானகரமாய்த் திரும்புவதற்கும் அனைத்துலகக் குழுவின் உண்மையான வெற்றிகளைக் கட்டியெழுப்புவதற்கும் ஆயுதபாணியாக்க முடியும் என்பதிலும் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” [ பார்க்க பக். 48] அந்த சமயத்தில் ஒட்டுமொத்த அனைத்துலகக் குழுவுமே ஒரு சீரழிந்த ஹீலியவாத அமைப்பு தான் என்ற எண்ணம் சுயவருத்தத்தில் இருந்த கிளீஃப் சுலோட்டருக்கு உதயமாகி இருக்கவில்லை. ஆகவே அவர் WRP நா.அ.அ.கு.வை காட்டிக் கொடுத்திருந்தது என்பதையும் அதனை பிரிட்டிஷ் அமைப்பின் தேசிய நலன்களுக்குக் கீழ்ப்படுத்த முனைந்தது என்பதையும் உடனடியாக ஏற்றுக் கொண்டார். சிறந்த நாடாளுமன்ற மரபின்படி, அனைத்துலகக் குழுவின் செயலாளர் பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்வதற்கும் கூட அவர் முன்வந்தார். பிரிட்டனுக்கு அவர் திரும்பியதும், WRP மத்திய குழுவுக்கு அக்டோபர் 12 அன்று ஒரு அறிக்கை அளித்தார். அதில் பெரும்பகுதி நோர்த் 1982 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதிய ஆவணங்களில் இருந்து உருவப்பட்டதாக இருந்தது. மத்திய குழுவிடம் அவர் இதையும் கூறியிருந்தார்: ஹீலியின் சீரழிவின் ”உள்முக இயங்குமுறை எத்தனை விநோதமானதாக தனித்துவமானதாக இருந்தாலும்” அந்த நிகழ்முறையானது ஒரு திட்டவட்டமான அரசியல் குணநலனைப் பெற்றிருக்கிறது – பப்லோவாத திருத்தல்வாதம் மற்றும் அனைத்துலகக் குழுவின் காரியாளர்களை அழிக்கும் தன்மை ஆகியவை தான் அது.” WRP இல் இருந்து ஹீலி குற்றம்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டமான 1985 அக்டோபரில் அனைத்துலகக் குழு செய்த வேலையானது WRP இன் மத்திய குழுவுக்கு 1985 டிசம்பர் 11 தேதியிட்டு வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு அனுப்பிய கடிதத்தில் (காணவும் பக். 77-100) விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் - இதன் உண்மைகளின் துல்லியத்தை WRP ஒருபோதும் சவால் செய்திருக்கவில்லை - WRPக்குள்ளாக அதன் மோதல் கன்னைகளுக்கு இடையில் ஒரு விவாதத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு ICFI மேற்கொண்ட முயற்சிகளையும் அத்துடன் அமைப்புரீதியான திடீர்த் தீர்வுகளுக்கு அது காட்டிய எதிர்ப்பையும் பதிவு செய்கிறது. இது ICFI இந்த நெருக்கடியை துல்லியமாக மதிப்பிட்டிருந்த நிலைக்கும் பண்டா மற்றும் சுலோட்டரின் முற்றான அடிபணிந்த நிலைக்கும் (இவர்கள் இருவராலும் தமது அமைப்பு நிலைகுலைந்ததற்கான எந்தவொரு விளக்கத்தையும் வழங்குதற்கு இயலவில்லை) இடையிலான பெரும் வித்தியாசத்தை எடுத்துக் காட்டியது. இந்த காலகட்டத்தின் போதுதான், அதாவது கட்சிக்குள்ளான நெருக்கடிக்கு அத்தியாவசியமான அரசியல் பிரச்சினைகளை புதைத்து விடுகின்ற கன்னைரீதியான ஒரு தீர்வினை ICFI ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பதை சுலோட்டரும் பண்டாவும் உணர்ந்து கொண்ட போதுதான் அனைத்துலகக் குழுவில் இருந்து உடைந்து செல்வதற்கான தமது முதல் முயற்சிகளை அவர்கள் செய்தனர். ஆயினும், WRP உறுப்பினர்களுக்கு முன்பாக அனைத்துலகக் குழுவுக்கு எதிராக பகிரங்கமாய் செயல்பட இயலாத பலவீனமான நிலையில் தான் அவர்கள் அப்போதும் இருந்தனர். WRPக்குள்ளாகவும் அனைத்துலக இயக்கத்திற்குள்ளாகவும் ஹீலி காரியாளர்களைத் திட்டமிட்டு துஷ்பிரயோகம் செய்திருந்ததற்கான மறுக்கவியலாத ஆதாரத்தை கவனமாக ஆய்வு செய்ததற்குப் பின்னர், அக்டோபர் 25 அன்று, கட்சியிலிருந்து வெளியேற்றும் ஒரு தீர்மானத்தை ICFI நிறைவேற்றியது. “ICFI இன் அரசியல் ஆளுமையை வெளிப்படையாக அங்கீகரிப்பதன் அடிப்படையிலும் அதன் முடிவுகளுக்கு பிரிட்டிஷ் பிரிவு கீழ்ப்படிவதன் அடிப்படையிலும் WRP இன் உறுப்பினர் உரிமையை மறுபதிவு செய்து கொள்ள” அழைக்கும் இன்னொரு தீர்மானத்திற்கு ஆதரவாக, WRP இன் மத்திய குழுவில் பெரும்பான்மையை பிரதிநிதித்துவம் செய்த பண்டா மற்றும் சுலோட்டர் வாக்களித்தனர்." [பார்க்க. பக். 50] இந்தக் கூட்டத்தை ICFI இன் கிரேக்க மற்றும் ஸ்பானியப் பிரிவுகள் புறக்கணித்தன. ICFIக்குள்ளாக ஜெரி ஹீலியின் தனிநபர் உத்தரவுகளை தவிர்த்து வேறு எந்த அதிகாரமும் இருக்கவில்லை என அவை அறிவித்தன. ஒரு நாள் கழித்து, ஹீலி ஆதரவு சிறுபான்மை பிரிவின் பிரதிநிதிகள் WRP மற்றும் ICFI இல் இருந்து பிரிந்தனர். அக்டோபர் 25க்குப் பிந்தைய போராட்டத்தின் அபிவிருத்தி குறித்து இந்தத் தொகுதியில் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை இங்கு விரிவாக ஆய்வதற்கு அவசியமில்லை. ஹீலியுடன் உடைத்துக்கொண்ட அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக WRP அக்டோபர் 25 தீர்மானத்தை மறுதலித்து செயல்படவும் (இந்தத் தீர்மானத்தை WRP இன் மத்தியக் குழு அக்டோபர் 26 அன்று ஒருமனதாக வழிமொழிந்திருந்தது, பின் இத்தீர்மானம் அக்டோபர் 27 அன்று WRP இன் சிறப்பு மாநாட்டுக் கூட்டத்தில் எந்த எதிர்ப்பு வாக்குமின்றி நிறைவேற்றப்பட்டது) அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொள்வதற்கும் தொடங்கியது. எப்படி ஹீலி பிரிட்டிஷ் அமைப்பினால் மேலாதிக்கம் செய்யப்படாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத ஒரு அனைத்துலகக் குழுவை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லையோ, அப்படியே பண்டாவும் சுலோட்டரும் கூட அதற்குத் தயாராக இல்லை. WRPக்குள்ளான வெடிப்புக்கு முன்னர் நிலவிய நிலைக்கு இனி திரும்ப முடியாது என்பதையும், ஹீலியுடனான பிளவுக்கு முன்னர் WRP ஆல் பின்பற்றப்பட்டு வந்த சந்தர்ப்பவாதப் பாதை தொடர்வதை அனைத்துலகக் குழு எதிர்க்கும் என்பதையும், பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதன் மீதும் WRPக்குள்ளாக ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை மீளமைப்பு செய்வதன் மீதும் அனைத்துலகக் குழு வலியுறுத்தும் என்பதையும், அனைத்துலகக் குழுவிற்குள்ளாக ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்ற ஒரு ஒழுங்குமுறையான அமைப்பாக WRP இனி செயல்பட வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து கொண்ட தருணத்தில் இருந்து பண்டாவும் சுலோட்டரும் ஒரு பிளவுக்கு வேலை செய்யத் தொடங்கினர். இதனை செய்து முடிப்பதில் சுலோட்டர் தான், பில் ஹண்டரின் உதவியுடனும் மற்றும் ஏராளமான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் (ஜி.பில்லிங், டி.கெம்ப் மற்றும் சி.ஸ்மித்) உதவியுடனும் முக்கிய பாத்திரம் ஆற்றினார். ட்ரொட்ஸ்கிச அடித்தளங்கள் குறித்து ஏறக்குறைய முற்றாக எந்தக் கல்வியும் ஊட்டப்படாதவர்களாகவும் அனைத்துலகக் குழுவினைக் குறித்து எதுவுமே அறியாதவர்களாகவும் இருந்த WRP உறுப்பினர்களின் நோக்குநிலை பிறழ்வை பயன்படுத்திக் கொண்டு, சுலோட்டரும் WRP அமைப்பினுள் இருந்த பிறரும் ICFIக்கு எதிரான ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை தொடக்கினர். இந்தப் பிரச்சாரம் அனைத்துலகக் குழு முழுவதும் சமமானதொரு சீரழிவுக்குள் இருந்ததாகக் கூறிய ஒரு பொய்யின் மீது கட்டியெழுப்பப்பட்டிருந்தது. ICFI இற்குள்ளான பிளவை ஒழுங்கமைப்பதற்கும் பிரிட்டனிலும் மற்றும் உலகெங்கிலும் இருந்த பப்லோவாத, மத்தியவாத மற்றும் கூறப்போனால் ஸ்ராலினிச அமைப்புகளுடனும் கூட கூடிவேலை செய்வதை ஆரம்பிப்பதற்கும் குள்ளத்தனத்துடன் பயன்படுத்தப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான திசைதிருப்பலே அன்றி இது வேறெதுவும் இல்லை. ICFI குறித்து எந்த முன்கூட்டிய விவாதமும் இல்லாமலே, சுலோட்டர் இலண்டனின் Friends Hall இல் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அனைத்துலகக் குழுவை பொதுவில் தாக்கியதோடு அதன் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையை அமெரிக்க SWPக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போலிஸ் முகமைகள் ஊடுருவியது மற்றும் கையகப்படுத்தியதைக் கொண்டு கேள்விக்குட்படுத்தினார். 1985 நவம்பர் 26 அன்று நடந்த இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கில் திருத்தல்வாதிகள் பங்குபெற்றனர். பப்லோவாத, மத்தியவாத மற்றும் ஸ்ராலினிச சக்திகளின் அத்தனை வகைகளுடனும் மீளக் கூடிக்கொள்வதை நோக்கி WRP விரைவாக சென்று கொண்டிருந்தது என்பதை அந்த Friends Hall கூட்டம் தெளிவாகக் காட்டியது. அதன் சிறந்த அடையாளமாக சுலோட்டர் பொது அரங்கில் கைகுலுக்கியது யாருடனென்றால் முன்னணி ஸ்ராலினிசவாதியும் ட்ரொட்ஸ்கிச விரோதத்தில் நிபுணருமான மொண்டி ஜோன்ஸ்ரோன் உடன் ஆகும். ஃபிரண்ட்ஸ் ஹால் கூட்டத்திற்கு முன்பாக, சுலோட்டர் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் (Security and the Fourth International)உடனோ அல்லது அதன் கண்டறிவுகளுடனோ கொஞ்சம் கூட கருத்துபேதம் இருந்ததாகக் காட்டியதில்லை. இன்னும் சொன்னால், ஆறு வாரங்களுக்கு முன்பாகத் தான் அவர் அதனை வேக்கர்ஸ் லீக்கின் மத்திய குழுவின் முன்னால் உறுதிப்பட அதை பாதுகாத்துக் கூறியிருந்தார். இந்த விசாரணையை ஆரம்பிப்பதில் சுலோட்டர் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தார் என்பதோடு 1975 இல் அமெரிக்காவில் இந்த விடயம் தொடர்பாக நடந்த முதல் பொதுக் கூட்டத்தில் சிறப்பு உரையும் நிகழ்த்தினார். இந்த விசாரணையை அதன் அத்தனை கட்டங்களிலும் கவனமாகப் பின் தொடர்ந்து வந்தவராக இவர் இருந்தார். SWPக்குள்ளாக அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் முகவர்கள் இருந்தது தொடர்பான அலன் கெல்ஃபாண்டின் வழக்கு தொடர்பான அத்தனை உண்மைகளும் சுலோட்டருக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன. 1983 மார்ச் மாதத்தின் விசாரணையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ ஆவணங்களில், அவர் கெல்ஃபாண்டின் சார்பில் தேவையானால் “நிபுணத்துவமான சாட்சியாக” சாட்சியமளிக்க கூட, அவரின் சம்மதம் பெற்றே குறிப்பிடப்பட்டிருந்தார். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் மீதான தாக்குதல் இரண்டு நோக்கங்களுக்காய் சிடுசிடுப்புடன் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது: முதலாவது, கெல்ஃபாண்ட் வழக்கில் தீர்ப்பு இன்னும் நிலுவையில் இருந்த நிலையில் வேக்கர்ஸ் லீக்கிற்கு எதிரான ஒரு கன்னை ஆயுதமாக; இரண்டாவது, உலகெங்கிலும் WRPக்கும் திருத்தல்வாத அமைப்புகளுக்கும் இடையில் என்ன தடைகள் எஞ்சியிருந்தாலும் அவற்றை அகற்றுவது. சுலோட்டரை பொறுத்தவரை 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதில் இருந்து எழுந்த மிகமுக்கியமான வரலாற்று மற்றும் அரசியல் கேள்விகள் குறித்து அவரே விரிவாக எழுதியிருக்கிறபோதிலும் இவை அவரது உடனடி அரசியல் இலக்குகளுக்கான ஒரு முட்டுக்கட்டையாக இருந்தன. ஃபிரண்ட்ஸ் ஹாலில் சுலோட்டரின் நடவடிக்கைகளை கண்கண்ட ICFI இன் ஜேர்மன் பிரிவான Bund Sozialistischer Arbeiter (BSA) இன் பீட்டர் சுவார்ட்ஸ் WRP மத்தியக் குழுவை பின்வருமாறு எச்சரித்தார்: “கடந்த ஆறு வார காலத்தில் தோழர் சுலோட்டரின் நடவடிக்கைகளை நெருக்கமாய் கவனித்ததில் எனக்கு உறுதியாகத் தெரிவது என்னவென்றால், அவர் தனது சொந்த அரசியல் பாதையை பின்பற்றிச் செல்கிறார், அதனை அவர் யாருடனும் விவாதிக்க விரும்பவில்லை, இதன்மூலம் ஹீலியை வெளியேற்றிய பின்னர் WRP இனுள் நிலவக் கூடிய அரசியல் குழப்பத்தை WRP உடைப்பதற்குப் பயன்படுத்துகிறார். “ஒரு தொழிற்கட்சி ஆட்சியோ அல்லது தொழிற்கட்சி கூட்டணி அரசாங்கமோ ஆட்சிக்கு வருகின்ற பட்சத்தில் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முதலாளித்துவ வர்க்கத்திற்கு தவிர்க்கவியலாததாக ஆகக் கூடிய ஒரு ‘பரந்த இடது’க்குள்ளாக WRPஐக் கலைக்கின்ற பாதையாகும் அது. இந்த வழியில் தான் ஒரு மக்கள் முன்னணி வகையிலான வடிவங்கள் எழுகின்றன. “ஹீலியின் தலைமையின் கீழ் நடந்த அரசியல் சீரழிவினை மறுதலிப்பதல்ல இது, மாறாக அதனை வேறொரு வடிவத்தில் தொடர்வதே ஆகும்.” [பார்க்க பக்கம். 74] டிசம்பரில் அனைத்துலக கட்டுப்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையானது, WRP அனைத்துலகக் குழுவின் முதுகுக்குப் பின்னால் பிற்போக்குவாத மற்றும் பாட்டாளி வர்க்கமற்ற சக்திகளுடன் பணம்திரட்டும் உறவுகளுக்குள் நுழைந்திருந்தது என்பதையும், அது தொழிலாள வர்க்கத்தின் மீதான நேரடியான காட்டிக்கொடுப்புகளுக்கு பொறுப்பாய் இருந்தது என்பதையும் நிறுவியது. அந்நடவடிக்கைகள் ட்ரொட்ஸ்கிச விரோதப் பாதையை அடிப்படையாகக் கொண்டிருந்தன, அதற்கு WRP ஒட்டுமொத்தத் தலைமையும் பொறுப்பானதாக இருந்தது என்பதால் 1985 டிசம்பர் 16 அன்று அனைத்துலகக் குழு பிரிட்டிஷ் பிரிவை இடைநீக்கம் செய்தது. WRP இன் தலைமை “WRPக்குள்ளாக சர்வதேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மறுநிறுவல் செய்வதற்கு” வேலை செய்கின்ற பட்சத்தில் அதன் அங்கத்துவம் மீண்டும் வழங்கப்படும் என்பதையும் அது தெளிவாகக் கூறி விட்டது. இவ்வாறாக ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட அடித்தளங்களாக ICFI வரையறை செய்திருந்த ”கம்யூனிச அகிலத்தின் முதல் நான்கு காங்கிரஸ்களின் (1919-1922) தீர்மானங்கள்; இடது எதிர்ப்பாளர்களின் தளம் (1927); இடைமருவல் வேலைத்திட்டம் (1938); பகிரங்கக் கடிதம் (1953)மற்றும் மோசடியான SWP-பப்லோவாதிகள் மறுஇணைவு (1961-63)” ஆகியவற்றிற்கு WRP இன் ஆதரவை மறுவுறுதி செய்கின்றதொரு தீர்மானத்திற்கு ஆதரிப்பதற்கு சுலோட்டர், சைமன் பிரானி, ரொம் கெம்ப் மற்றும் டேவ் ஹைலன்ட் ஆகியோர் கொண்ட பிரிட்டிஷ் பிரதிநிதிக் குழுவை ICFI நியமித்தது. [பார்க்க பக். 102] WRPக்குள்ளாக அனைத்துலகக் குழுவை ஆதரிக்கும் ஒரு சிறுபான்மை போக்கிற்கு தலைமை கொடுத்த ஹைலன்டை தவிர, பிரிட்டிஷ் பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தனர். WRP உடன்படுவதாகக் கூறி வந்திருந்த அதே கோட்பாடுகளை வெறுமனே மறு உறுதி செய்வதாக இருந்த இந்த தீர்மானத்தின் மீதான தங்களின் வாக்களிப்பு நிலை குறித்து சுலோட்டர், பிரானி மற்றும் கெம்ப் எந்த விளக்கமும் அளிக்க ஒரேயடியாக மறுத்தனர். ஆனால் அவர்களது நடவடிக்கையின் அரசியல் அர்த்தம் என்பது தெளிவாக இருந்தது. ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட அடித்தளங்களை மறுதலித்ததில், அவர்கள் ஹீலியுடனான பிளவுக்கு முன்னதாக இருந்த WRP இன் கொள்கைகளது உள்ளடக்கமாய் இருந்த ஒட்டுமொத்த பப்லோவாத சந்தர்ப்பவாதப் பாதைக்கு ஆதரவாக தாங்கள் நிற்பதை அறிவித்துக் கொண்டிருந்தனர். முந்தைய தசாப்தத்தின் போது WRP இன் குணாம்சமாக இருந்த அதே சந்தர்ப்பவாத ட்ரொட்ஸ்கிச-விரோதப் பாதையைத் தான் சுலோட்டர்-பண்டா கன்னை தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருந்தது என்பதை அந்த வாக்கெடுப்பு மறுக்கவியலா வண்ணம் நிரூபித்தது. அதனால் தான் அனைத்துலகக் குழுவிற்கும் தொழிலாளர் புரட்சிகரக் கட்சிக்கும் இடையிலான உடைவு தவிர்க்கவியலானதானது. சுலோட்டர்-பண்டா கன்னை அக்டோபர் 25 தீர்மானத்தை மறுதலித்ததுடன் 1986 ஜனவரி-பிப்ரவரியில் இந்த உடைவு மேற்கொள்ளப்பட்ட விதமானது , உத்தியோகபூர்வ சிறுபான்மையின் அரசியல்சட்ட உரிமைகளை மீறியதுடன் நடைபெறவிருந்த WRP இன் எட்டாவது காங்கிரஸில் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் பங்கேற்று விடாமல் தடுப்பதற்காக போலிசை அழைத்தது ஆகியவை சுலோட்டர் மற்றும் ஹண்டரின் ”புரட்சிகர ஒழுக்கநெறியின்” உண்மையான வர்க்க உள்ளடக்கத்தை அம்பலப்படுத்தியதோடு WRP ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்ட ரீதியாக முறித்துக் கொண்டதையும் மற்றும் திருத்தல்வாத முகாமுக்கு தாவியதன் முழுமை பெற்ற வெளிப்பாடாகவும் அமைந்தது. இந்தப் பிளவுக்கான அரசியல் தளத்தினை மைக்கேல் பண்டா உருவாக்கித் தந்தார். இவரது “ஏன் அனைத்துலகக் குழு புதைக்கப்பட்டு நான்காம் அகிலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்கான 27 காரணங்கள்” என்ற ஆவணம் நான்காம் அகிலத்துடன் தொடர்புபட்டிருந்த ஒரு நபர் இதுவரை எழுதியதிலேயே ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான மிக நச்சுத்தனமான ஒரு கண்டனமாக இருந்தது. இந்த ஆவணத்தை எழுதிக் கொண்டிருந்த சமயத்திலேயே கூட, பண்டா இலங்கையில், 1963 இல் லங்கா சம சமாஜக் கட்சி ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்குள் கால்பதிப்பதற்கு வடிவமைத்துத் தந்தவர்களில் ஒருவரான அப்பட்டமான சந்தர்ப்பவாதி கொல்வின் டி சில்வா உடன் அரசியல் உறவுகளை புதுப்பித்துக் கொண்டிருந்தார். பண்டாவின் வசைமாரியைத் தொடர்ந்து “அனைத்துலகக் குழுவை கலை” என்ற ஒரு தீர்மானத்தை வெளியிட்டது. இவ்வெளியீடானது அனைத்துலகக் குழுவை ஒரு “கம்யூனிச விரோத” அமைப்பாகச் சித்தரித்தது. அதன்பின், பண்டா WRP இல் பிரிந்து சென்று “கம்யூனிஸ்ட் மன்றம்” என்று அழைக்கப்படும் ஒரு நவ-ஸ்ராலினிச விவாதக் குழுவை ஆரம்பித்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியில் இருந்து இதுவரையிலும் பிளவு குறித்து விளக்கமளிக்கும் ஒரேயொரு பொது அறிக்கையும் கூட வெளியாகவில்லை. பண்டாவின் “27 காரணங்கள்” மற்றும் அனைத்துலகக் குழு மற்றும் டேவிட் நோர்த் மீதான முதல்-பக்கக் கண்டனம் ஆகியவை Workers Press 1986 பிப்ரவரி 7 பதிப்பில் இடம்பெற்றது WRP மத்திய குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே நடந்தேறிய விடயமாகும் என்று கூறி பண்டா விட்டுச் சென்ற நெடியில் இருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதற்கு சுலோட்டரும், பிரானியும் மற்றும் ஹண்டரும் பின்னர் முயற்சி செய்தனர். எந்தவொரு மார்க்சிச அமைப்பிலும், இத்தகையதொரு ஒழுங்குமீறல் என்பது கட்சி வெளியேற்றத்திற்கான உடனடி முகாந்திரமாக இருக்கும். ஆனால் பண்டாவோ அவரது ஆதரவாளர்களோ வெளியேற்றப்படவில்லை. மாறாக ஒரு அங்கீகாரம் பெற்ற சிறுபான்மையை WRP இன் எட்டாவது காங்கிரஸில் பங்குபெற விடாமல் தடுக்கவும் பின் அவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றவும் சுலோட்டரும், ஹண்டரும், பிரானியும் பண்டாவுடனேயே கூடி வேலை செய்தனர். இதில் ஹண்டரின் பாத்திரம் சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது. ஏனென்றால் பண்டாவின் வசைமழை மீதான அவரது நொண்டி விமர்சனம் திருத்தல்வாத வட்டங்களில் அவரை ஒரு இலக்கிய சிங்கம் போன்று ஆக்கியிருக்கிறது. அவரது “மைக்கல் பண்டாவும் வரலாற்றின் மோசமான மனிதர் தத்துவமும்” பப்லோவாதிகளுக்கு உடன்பாடாக இருந்தது ஏனென்றால் பண்டாவுடனான அவரது கருத்துவேறுபாடு 1953க்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகளுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது; அதாவது அனைத்துலகக் குழுவையோ அல்லது திருத்தல்வாதத்திற்கு எதிரான அதன் போராட்டத்தையோ அவர் எவ்விதமும் பாதுகாத்திருக்கவில்லை. இது நிச்சயமாக கவனமில்லாமல் செய்யப்பட்டதல்ல. நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருப்பதைப் போல, அவர் தான் “புரட்சிகர ஒழுக்கநெறி” பிரச்சாரத்தில் முக்கியமான உந்துசக்தியாக இருந்தார் என்பதுடன் குறிப்பாய் அற்பமானதொரு விதத்தில் ’புரட்சிகர ஒழுக்கநெறி’ தான் இடைமருவல் வேலைத்திட்டத்தின் “அச்சாக”த் திகழ்ந்தது என்று கூறிக் கொள்ள முயற்சி செய்தார். “ஹீலியின் நடவடிக்கையால் கோபமுற்று அவரது கட்சி நீக்க நடவடிக்கையில் பங்குபெற்ற ஒவ்வொரு தோழரும் பதிலளித்த கேள்வி இதுதான்: தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் புரட்சிகர முன்னணிப் படைக்கும் என்ன விதமான தலைவர் அவசியமாக இருக்கிறது?”இது ஒரு குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதியின் மொழியே அன்றி ஒரு புரட்சிகர மார்க்சிச வாதியின் மொழி அல்ல. 1985 அக்டோபருக்கும் 1986 பிப்ரவரிக்கும் இடையில் WRP இன் அபிவிருத்தி குறித்து, அதாவது ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்தான முறிவை அது நிறைவு செய்து கொண்டிருந்தவொரு சமயத்தில், ஆரவாரம் பொங்க ஹண்டர் எழுதினார்: “போராட்டத்தின் யதார்த்த நிலையின் விளைவாக நமது கட்சியில் சிந்தனையிலான ஒரு மாபெரும் அபிவிருத்தி நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிளவு தான் ஒவ்வொரு தோழரையும் அடிப்படைப் பிரச்சினைகளை சிந்திக்கக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.” இப்போது இந்த “மாபெரும் சிந்தனை அபிவிருத்தி”யின் விளைவை மதிப்பீடு செய்வது சாத்தியமாக இருக்கிறது. அனைத்துலகக் குழுவுடனான பிளவுக்குப் பின்னர், WRP தனது Workers Press ஐ ஒரு பொதுச் சுவர் போல ஆக்கியிருக்கிறது, அதில் எல்லா திருத்தல்வாத மற்றும் ஸ்ராலினிசக் குழுக்களும் தமது ட்ரொட்ஸ்கிச விரோதச் செய்திகளை பதிவிட வரவேற்கப்படுகின்றனர். ட்ரொட்ஸ்கிசத்தின் மேல் எந்த அளவுக்குத் தாக்குதல் நடந்தாலும் அவலட்சணமாய் கருதப்பட்டு நிராரிக்கப்படுவது கிடையாது. ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய கண்டனத்தை சுமந்து வருகிறது. ஜூலை 26 இதழில், ஜெஃப் பார் என்பவரிடம் இருந்தான ஒரு கடிதம் பிரசுரமாகி இருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில் தொழிற்சங்கம் தொடர்பான பிரச்சினையில் லெனினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் இருந்த நன்கறிந்த வேறுபாட்டை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மோசமானதொரு பாதையில் அவர் கூறுகின்றார்: “ஹீலியின் கீழான WRP இன் நிலை என்பது 1920-21 இல் தொழிற்சங்கங்கள் குறித்த விவாதத்தில் லெனினது பக்கத்தைக் காட்டிலும் ட்ரொட்ஸ்கியின் பக்கத்திற்கு மிக நெருக்கமானதாக இருந்தது.” Workers Press இன் ஆகஸ்டு 2 இதழானது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாலான ஒரு ஸ்ராலினிசக் குழுவுக்கு திறந்து விடப்பட்டது. இவர்கள் தி லெனினிஸ்ட் என்கிற ஒரு குப்பையை வெளியிட்டனர். இந்த பிற்போக்குவாதிகள் ட்ரொட்ஸ்கிசத்தை அதன் “பொருத்தமின்மையை வெளிப்படுத்தியதற்காக” கண்டனம் செய்வதற்கு இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலைப்பாடு உலகெங்குமான ஸ்ராலினிச கட்சிகளை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாக அங்கீகரிக்க மறுத்ததன் ஒரு விளைபொருளாகும். 1933 இல் கம்யூனிச அகிலத்திலிருந்து ட்ரொட்ஸ்கியின் உடைவை நிராகரித்து தி லெனினிஸ்ட் பின்வருமாறு எழுதியது: ”நான்காம் அகிலம் ஒன்றைக் கட்டுவதை நோக்கிய புதிய போக்கானது உண்மையில் இப்போது போலவே அப்போதும் பிரதானமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஒழுங்கமைந்திருந்த பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பிரிவின் ஒரு தோற்கடிப்புவாத கைவிடுதலாக இருந்தது.” “ட்ரொட்ஸ்கிஸ்டுகளைக் கொன்றது நியாயமா அல்லது தவறா” என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் விட்டு விட்டு அந்தக் கடிதம் தொடர்ந்து சென்றது. அதே இதழின் எதிர்ப் பக்கத்தில், ரொம் கோவென் என்பவரிடம் இருந்தான ஒரு கடிதம் பிரசுரமாகி இருந்தது. அவர் எழுதினார்: “புரட்சிகரத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை சிரச்சேதம் செய்திருப்பதும் வர்க்கத் தலைவர்களாகும் சாத்தியத்துடன் இருந்தவர்களை மூலதனத்தின் முகவர்களுக்கு வாலாகவும் மற்றும் தலைமை நெருக்கடியை தூண்டிவிடுபவர்களாகவும் ஆக்கியிருக்கிற ட்ரொட்ஸ்கிசம் ஒரு புரட்சிகர மார்க்சிசப் போக்கு என்பது ஒரு கற்பனையான கருத்தே”. வெகுகாலம் ஹீலியின் கல்வித்துறை தவளைக் குஞ்சு போல் இருந்தவர் என்பதோடு இன்னுமொரு “புரட்சிகர ஒழுக்கநெறி” போராளியான சிரில் ஸ்மித் ஆகஸ்டு 23 இதழில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் புரட்சி பற்றிய கருத்தை பகிரங்கமாகத் தாக்கினார். ஹங்கேரி புரட்சியின் 13வது ஆண்டு தினத்தை நினைவுகூரும் ஒரு கட்டுரையில், 1956 இல் அனைத்துலகக் குழு எடுத்த நிலைப்பாடு குறித்து ஸ்மித் பின்வருமாறு கூறுகின்றார்: ”....இரண்டு தசாப்தங்களுக்கு முந்தைய ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடுகளை பாதுகாக்கின்ற மட்டத்திற்கு, நாங்கள், தத்துவார்த்த ரீதியாகவும் சடத்துவ ரீதியாகவும் எங்களது ஆதாரவளங்கள் வரம்புக்குட்பட்டு இருந்ததாகவே நான் நினைக்கிறேன். “1950களின் புதிய உலகத்தை 1930களின் தத்துவார்த்த கட்டமைப்பினுள் புகுத்துவதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம்... “ஒவ்வொரு கட்டத்திலும் இந்தத் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் போராடுவது என்று ட்ரொட்ஸ்கியே செய்து வந்ததற்கு பதிலாக ட்ரொட்ஸ்கியின் நாளில் ‘சரி’யாக இருந்த தத்துவத்தைக் கொண்டிருப்பதுடன் சுலபத்தில் திருப்தியடைபவர்களாக நாங்கள் இருந்தோம்.” Workers Press ஆகஸ்டு 30 இதழ் டாம் கோவெனிடம் இருந்தான இன்னொரு கடிதத்தை வெளியிட்டிருந்தது. ”ரஷ்ய அதிகாரத்துவத்தின் அத்தனை பலவீனங்களுடனும் சோவியத் அமைப்பின் உண்மையான சாரம் அதுதான் என்பதாக ட்ரொட்ஸ்கி தவறாய் புரிந்து கொண்டு விட்டிருந்தார்” என்று இதில் கோவென் விஞ்சவியலாத அறியாமையுடன் அறிவித்திருந்தார். “மேற்பரப்புக்குக் கீழாக ஊடுருவிப் பார்த்து, அபிவிருத்தி செய்யப்படும் சோசலிச அமைப்புமுறையின் மானுட உருவகமாக இருந்த சோவியத் மக்கள் தான் அந்த அமைப்புமுறையின் உண்மையான சாரத்தை உள்ளடக்கியிருந்தனர் என்பதை ட்ரொட்ஸ்கி உணரவில்லை.” ஸ்ராலினிசத்திடம் அடிபணிய ஆலோசனையளித்து கோவென் கூறுகிறார்: ”ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர இயல்பு குறித்த ட்ரொட்ஸ்கிச ஆய்வில் இருந்து வெளிவரும் பெரும் பலவீனம் என்னவென்றால், அது பொலிவியா, சிலோன் போன்ற ஒரு பின்தங்கிய மற்றும் தனிமைப்பட்ட நாட்டில் புரட்சிக்கான போராட்டத்தில், குறிப்பாக உலகரீதியாக ஒரு புரட்சிகர பின்னடைவான காலகட்டத்தின்போது, இயக்கத்திற்கு ஒரு உலக புரட்சிகர முன்னோக்கினை இல்லாது செய்து விடுகிறது என்பது தான். ”சோவியத் உதவி இல்லையென்றால் கரீபியனில் நடந்த புரட்சிகள் பிறந்த கொஞ்ச நாட்களிலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்க முடியுமா? உலகப் புரட்சிக்கு ஒருவர் காலம் குறித்து விட முடியாது; எப்போதும் தனிமைப்பட்டு நிற்றலும் இயலாது. ”இவ்வாறாக சோவியத்துகளுடனான நெருக்கமான உறவுகளுக்குரிய முன்னோக்கு இன்றி இருப்பதானது ட்ரொட்ஸ்கிசத்தை தயக்கத்திற்கும், ஊசலாட்டத்திற்கும், இறுதியாக ஒரு சர்வதேசக் களமாகவும் உலக ஏகாதிபத்தியத்தில் இருந்து பாதுகாக்கும் அங்கியாகவும் சந்தேகத்துக்குரிய ‘இடது’ கூறுகளுடனும் உலக சமூக ஜனநாயகத்துடனும் ஐக்கியம் கொள்வதற்கும் இட்டுச் செல்கிறது. இதன் விளைவுகள் நமக்கு நன்கு தெரியும், சிலோனிலும் பொலிவியாவிலும் அது விளங்கப்பட்டிருக்கிறது.” இவை வெறுமனே ஒரு அர்த்தமற்ற ரொம் கோவெனின் பார்வைகள் அல்ல. Workers Press இல் ஸ்ராலினிச பிரச்சாரம் வெளியிடப்படுவதை விரும்புகின்ற WRP தலைமை தமது வசதிக்காகப் பயன்படுத்திக் கொண்ட வாகனம் தான் அவர். பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை WRP தலைமை ஒட்டுமொத்தமாக நிராகரித்திருந்தது என்ற உண்மையில் இருந்து இது வெளிப்படுகிறது. ஹீலி நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை நடைமுறையில் கைவிட்டிருந்தார், இப்போது அது உத்தியோகபூர்வமாக WRP தலைமையாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஹீலி செய்த ஊழல் மற்றும் காட்டிக் கொடுப்பைக் குற்றம் சாட்டி, சைமன் பிரானி Workers Press ஜூலை 12 இதழில் பின்வருமாறு எழுதுகிறார், “பிரச்சினையின் வேராக இருப்பது இயக்கத்தின் அரசியல் சீரழிவு: ஜனநாயக மற்றும் தேசிய நோக்கங்களுக்கான போராட்டங்கள் எவ்வாறு சர்வதேச சோசலிசப் புரட்சிக்குள்ளாக பாய்கின்றன என்பதைக் காட்ட ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தில் இருந்து எடுத்து ட்ரொட்ஸ்கி சூத்திரப்படுத்திக் காட்டிய நிரந்தரப் புரட்சி தத்துவம் கட்டுரைகளிலும் உரைகளிலும் குறிப்பிடப்பட்டதே தவிர இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சினைகளுக்குப் பதில் கூறும்படி ஒருபோதும் அபிவிருத்தி செய்யப்படவில்லை. ”வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்திகள் - குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தின் நீட்சி, சீனப் புரட்சி மற்றும் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஆகியவை - லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி உருவாக்கிய சூத்திரங்களுக்குள் கச்சிதமாய் பொருந்தவில்லை.” விடயங்கள் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் சூத்திரங்களுக்குள் “கச்சிதமாய்” பொருந்தவில்லை என்று இயல்பான அறியாமையுடன் கூறியதையும் தவிர - இந்த மகத்தான மார்க்சிஸ்டுகள் தங்களது தத்துவார்த்தக் கருத்தாக்கங்களை யதார்த்தத்தை கச்சிதமாக அல்லது வேறுவிதமாக “பொருத்தி” க் காண்பதற்கான “சூத்திரங்களாக”ப் பார்க்கவில்லை - நிரந்தரப் புரட்சித் தத்துவம் குறித்த பிரானியின் வரையறையும் கூட அப்பட்டமான பொய் ஆகும். அது வெறுமனே “ஜனநாயக மற்றும் தேசிய நோக்கங்கள் எவ்வாறு சர்வதேச சோசலிசப் புரட்சிக்குள் பாய்கின்றன” என்று விளக்குவதல்ல. பதிலாக, பின் தங்கிய நாட்டிற்குள்ளேயே கூட முதலாளித்துவப் புரட்சியின் ஜனநாயக வேலைத்திட்டமானது சோசலிசப் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் மூலமாக அல்லாமல் நிறைவு செய்யப்பட முடியாது என்பதை அது நிறுவிக் காட்டுகிறது. நிரந்தரப் புரட்சித் தத்துவம் குறித்த பிரானியின் தவறான பிரதிநிதித்துவம் முதலாளித்துவ தேசியவாதிகள் தொடர்பான ஒரு அரசியல் பாதையை, தனது அத்தனை அடிப்படைகளிலும் ஹீலி முன்னெடுத்ததை ஒத்த ஒன்றை, நியாயப்படுத்துவதற்கு சேவைசெய்கிறது. ஹீலி மத்திய கிழக்கிலான முதலாளித்துவ தேசியவாதத்திற்கு தகவமைத்துக் கொண்டார் என்றால், பிரானி ஏறக்குறைய ஹீலி தனது காட்டிக்கொடுப்புகளை மறைப்பதற்கு முன்னதாகப் பயன்படுத்திய அதே குதர்க்கவாத சூத்திரமாக்கல்களை பயன்படுத்தி ஐரிஷ் குடியரசுவாதத்திற்கு தகவமைத்துக் கொள்கிறார்: ” Sinn Fein அல்லது IRA க்காக பேசுவதற்கு நான் முயலவில்லை: அவர்களே அதைச் செய்து கொள்வார்கள். “தவிரவும் தேசியப் போராட்டம் மற்றும் சோசலிசம் தொடர்பாக அவர்களின் கருத்துகள் எங்களுடையதில் இருந்து மாறுபட்டவை. அவர்கள் மார்க்சிஸ்டுகள் அல்ல அப்படிக் கூறிக் கொள்வதுமில்லை.” IRA இன் கருத்துகள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னெடுக்கிறதா இல்லையா, அவர்களது கண்ணோட்டம் தேசியப் போராட்டத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியுமா முடியாதா என்பது பற்றி பிரானி எதுவும் கூறவில்லை. அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்ததற்கு பின்னரான WRP இன் புத்திஜீவித்தன பிரயாசங்களின் இறுதி வெற்றி Workers Press செப்டம்பர் 13 இதழில் கொண்டாடப்பட்டது. இதில் சிரில் ஸ்மித்தின் பின்வரும் பிரகடனம் இடம்பெற்றிருந்தது: “(i)ஒரு சமயத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு விஞ்ஞான ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையாக இருந்த ‘திருத்தல்வாதி’ என்கிற வார்த்தை இப்போது வெறுமனே திட்டுவதற்கான ஒரு வார்த்தையாக மாறியிருக்கிறது என நினைக்கிறேன். “(ii)ஐக்கிய செயலகத்துடன் தொடர்புபட்ட அமைப்புகளைக் குறித்து பேசும்போது பப்லோவாதிகள் என்று அடைமொழியிடுவதை நாம் நிறுத்த வேண்டும். அது விவாதத்தைக் களங்கப்படுத்தி விடுகிறது. “(iii)கியூபாவை ஒருவகையான முதலாளித்துவ அரசாக (நாம் ஒருபோதும் அது என்னவகை என்று உண்மையில் இதுவரை விளக்கவில்லை)குணாதிசயப்படுத்துவது அபத்தமானது.” ஹீலியின் தனிநபர் ஊழலை வெளிப்படுத்தல் WRPக்குள்ளான வெடிப்புக்கு சூழ்நிலை உருவாகுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அதிகமான வேறுஎதையும் வழங்கியதாக சுலோட்டரும் அவரது கூட்டாளிகளும் நேருக்குநேர் கூறமுடிந்து வெகுகாலம் கடந்து விட்டிருக்கிறது. சுலோட்டர் இது குறித்து பல ஆண்டுகளாய் விவரமறிந்தவராய் தான் இருந்தார். ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாய் ஹீலியும், சுலோட்டரும் மற்றும் பண்டாவும் வளர்த்தெடுத்திருந்த ட்ரொட்ஸ்கிச-விரோத சந்தர்ப்பவாத நிலைப்பாடு இப்போது புரட்சிகர மார்க்சிசத்தின் எல்லாக் கோட்பாடுகளையுமே வரைமுறையின்றி மறுதலிப்பதிலும் திருத்தல்வாதத்திற்கு நிபந்தனையின்றி சரணடைவதிலும் தனது பூரணமான வெளிப்பாட்டைக் கண்டிருக்கிறது. ஸ்மித் போன்ற மனிதர்கள் தமது சொந்த சிந்தனையின் அபிவிருத்தியை விளக்குவதற்கான கடமைப்பாடும் கூட கொண்டிருக்கவில்லை. கியூபாவை ஒரு தொழிலாளர் அரசு என பப்லோவாதம் பெயர்குறிப்பது ஒரு அரசின் தன்மை குறித்த மார்க்சிச பயிற்றுவித்தலின் ஒரு திருத்தம் என்று கூறி இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்திற்கு அவர்கள் எதிர்த்து வந்துள்ளனர். இப்போது, கல்வியியல் நாடோடியான ஸ்மித் இவை அத்தனையும் “அபத்தம்” என்று கூறி நிராகரிக்கிறார். நிற்க. இந்த மட்டத்தில் செயல்படுகின்ற ஒரு மனிதர் நிச்சயமாக என்னவகை சமூக வகையாக இருக்க முடியும் என்றால், தனது சேவைகளை விற்பனை செய்கின்ற ஒரு ஊழலடைந்த நடுத்தர-வர்க்க புத்திஜீவியாகத் தான் இருக்க முடியும். இதுபோன்ற மனிதர்களை WRPக்குள் இருக்க விட்டதும் செல்வாக்கான பொறுப்புகளை வகிப்பதற்கும் கூட அனுமதித்ததும் ஹீலியின் பெரிய குற்றங்களில் ஒன்று. பிரதிபலனாக அவர்கள் ஹீலியின் மதிப்பிற்கு முட்டுக்கொடுத்து அவரை விமர்சனத்திலிருந்து பாதுகாத்தனர். இந்த அபிவிருத்திகளில் சுலோட்டரின் தனிப்பட்ட பங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். குறிப்பிடத்தக்கவிதமாக, அனைத்துலகக் குழுவுடனான பிளவிற்குப் பின்னர் கிளீஃப் சுலோட்டரின் பெயர் தாங்கி ஒரேயொரு கட்டுரையும் கூட வெளியாகவில்லை. 25 வருடங்களாக தன்னுடன் அடையாளம் காணப்பட்ட தத்துவார்த்த நிலைப்பாடுகளை எவ்வாறு அவர் நிராகரிக்க நேர்ந்தது என்பது பற்றிய எந்த அரசியல் விளக்கத்தையும் அவர் வழங்கவில்லை. 1981 ஆம் ஆண்டிற்கு மிக சமீபத்தில் தான் சுலோட்டர் (வேர்க்கர்ஸ் லீக்கின் ஒரு உறுப்பினரான ஆல்பேர்ட் டிராக்ஸ்டெட் சக ஆசிரியராக இருந்த ஒரு புத்தகத்தில்) பின்வருமாறு எழுதினார்: “முதலாளித்துவ வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசிற்கும் முழுமையாய் கீழ்ப்படிகின்ற இந்த குட்டி முதலாளித்துவ ஜனநாயகம் தான் இன்றைய ஸ்ராலினிச இயக்கத்தின் வர்க்க உள்ளடக்கமாக இருக்கிறது, இதே அடிப்படையில் தான் ‘புதிய இடது’ வகையறாவைச் சேர்ந்த ’மார்க்சிஸ்டுகள்’ (இவர்களில் ஏர்னஸ்ட் மண்டேல் போல, ட்ரொட்ஸ்கியின் நான்காம் அகிலத்தை இன்னமும் பின்பற்றி வருவதாக சபதம் செய்கின்ற சிலரும் இருக்கின்றார்கள்) அரசு மற்றும் முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த பிரச்சினையில் ஸ்ராலினிஸ்டுகளின் அதே முகாமில் காணக் கிடைக்கின்றனர். ஸ்ராலினிசக் கட்சிகளில் தத்துவார்த்தரீதியாக இப்போது செல்வாக்கு செலுத்துகின்ற குட்டி-முதலாளித்துவ ஜனநாயக நீரோட்டமானது - இதற்கு மகுடம் சூட்டியது போல் இருப்பவர் தான் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் ஜான்ஸ்டோன் [ஆம், ஃபிரண்ட்ஸ் ஹாலில் சுலோட்டருடன் கைகுலுக்கிய அதே மொண்டி ஜான்ஸ்டோன் தான்] - மோசடியான ‘நான்காம் அகிலத்தின் ஐக்கியச் செயலக’த்தில் இருக்கும் மண்டேலின் சிஷ்யர்களிடம் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் இந்தப் போக்குக்கான ‘தத்துவார்த்த’ வாகனம் பெர்ரி ஆண்டர்சனின் புதிய இடது திறனாய்வு.... (New Left Review)
“ஆண்டர்சன், பிளாக்பேர்ன் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு மார்க்சிசத்தை நிராகரிப்பதற்கான பெரும் சுதந்திரம் மண்டேலின் ‘நான்காம் அகிலத்தின் ஐக்கியச் செயலக’த்தின் வேலைத்திட்ட மற்றும் கொள்கை அறிக்கைகளில் கிடைப்பதை விடவும் அதிகமாய் New Left Review இல் கிடைக்கக் காண்கிறார்கள். இது ஒரு தொழில் பங்கீடு. பாரம்பரியத்தின் பேரிலும் மற்றும் அப்பட்டமான ஏமாற்று வேலையின் காரணத்திற்காகவும் ஐக்கியச் செயலகத்தின் அரசியல் அறிக்கைகள் அரசு மற்றும் ஜனநாயகம் குறித்த விடயத்தில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் மரபுவழி நிலைப்பாடுகளுக்கு குறைந்தபட்சம் உதட்டுச் சேவையேனும் செய்தாக வேண்டியிருக்கிறது. ஆண்டர்சனுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. மண்டேலுக்கான அவரது அரசியல் விசுவாசம் பார்வையில் இருந்து மறைந்திருப்பதால், மார்க்ஸ் மற்றும் லெனினை நிராகரிப்பதை இந்தக் கட்டத்தில் மண்டேலால் முடிவதைக் காட்டிலும் மிகவும் வெளிப்படையாகவும் மிகவும் தீவிரமாகவும் அவரால் செய்ய முடிகிறது. (அரசு, அதிகாரம் & அதிகாரத்துவம், நியூ பார்க் பப்ளிகேஷன்ஸ், பக் 14-15) இப்போது ஐக்கிய செயலகத்தால் “புனிதப்படுத்தப்பெறும் மார்க்சிசத்தின் மீதான குட்டி முதலாளித்துவ ஜனநாயகத் திரிப்பை ஜோசப் ஹான்சன் ஏற்கனவே முன்கணித்திருந்தார்” என்றும் “நாடாளுமன்ற பெரும்பான்மைகளின் மூலமாக சோசலிசத்துக்கான பாதை எனும் ஸ்ராலினிஸ்டுகளின் கட்டுக்கதைக்கு ஹான்சன் உதவியும் வசதிகளும் வழங்கினார்” என்றும் இன்னுமொரு பத்தியில் சுலோட்டர் குற்றம் சாட்டியிருந்தார். (அதே புத்தகம், பக். 19) இந்த துணிவுகரமான முதிர்வடைந்த மதிப்பீடுகள் எல்லாம் தன் மீது ஹீலியால் திணிக்கப்பட்டன என்று சுலோட்டர் இப்போது கூறுவாரா? அல்லது ஹீலியின் தனிநபர் மோசடியே முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த மண்டேலின் மனோபாவத்தை ஒரு சாதகமான வெளிச்சத்தில் மறுபரிசீலனை செய்வதற்கு என்னைத் தள்ளியது என்று சுலோட்டர் அறிவிப்பாரா? அவ்வாறாயின் மார்க்சிசத்தைக் காட்டிக்கொடுத்தவர்களின் குற்றங்களுக்காய் மார்க்சிசத்தின் மீது குற்றம் சாட்டி அந்த மோசடியான அடிப்படையில் வெளிப்படையாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் முகாமுக்குக் கட்சிமாறுகின்ற முதல் மனிதரல்ல சுலோட்டர். WRP இன் சீரழிவின் அரசியல் மற்றும் தத்துவார்த்த அம்சங்கள் மீது கவனத்தைக் குவிக்காமல் அதற்குப் பதிலாக ஹீலியின் அரசியல் சிதைவின் அவலட்சண அந்தரங்க வடிவங்கள் மீது குவிப்பதற்கு சுலோட்டர் செய்கின்ற முயற்சிகளில் அவரது தரப்பிலான இந்த நகர்வு ஏற்கனவே முன்கூட்டிகாட்டிக் கொண்டிருக்கிறது. [1985 நவம்பர் 26 தேதியிட்டு நோர்த்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் ”ஹீலியின் இந்த தனிநபர் முரட்டுத்தனம் மற்றும் பயமுறுத்தல் தான் இந்த வர்க்க அரசியல் மற்றும் தத்துவார்த்த உள்ளடக்கம் மிகவும் மோசமாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்திக் கொண்ட வடிவமாக இருந்தது” என்று சுலோட்டர் கூறியிருந்தார்.] [காணவும் பக். 66] ஹீலியின் ஆதரவாளர்கள் “தனிமனித உரிமைகள் விடயத்தில் ஒவ்வொரு பாசிச நிலைப்பாட்டிற்கும் நெருக்கமாய் இருந்தனர், அவர்களைப் பொறுத்தவரை இந்த உரிமைகள் கட்சியின் தேவைகளுக்காக ஒன்றுமற்றதாக குறைக்கப்பட்டு விடுகிறது” என்று சுலோட்டர் கூறியிருந்ததை சென்ற டிசம்பர் சமயத்திலேயே வேர்க்கர்ஸ் லீக் பிரச்சினையாக முன்வைத்தது. அவர் கூறியதற்குப் பதிலாக வேர்க்கர்ஸ் லீக் எச்சரித்தது: “தோழர் சுலோட்டர் இந்தப் பத்தியை மீண்டும் கவனமாக வாசிப்பாரானால், முதலாளித்துவ தாராளவாதிகளின் கம்யூனிச-விரோத வாய்வீச்சுடன் வலிமையான ஒற்றுமைகளை அவர் கவனிக்க முடியும். ‘தனிமனித உரிமைகள்’ என்று அவர் குறிப்பிடுவதன் பொருள் என்ன? வர்க்கம் காட்டாத இந்தக் குழப்பமான வாசகம் அவர் தனது பகுப்பாய்வை இறுதி வரை சென்று சிந்தித்துப் பார்க்கவில்லை (இந்த இடத்தில் தாராள மனதுடன் சொல்கிறோம்)என்பதையும் மூடத்தனமான ஒப்பீடுகள் மற்றும் ஒப்புமைகளின் மட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் விளங்கப்படுத்துகிறது.” [பார்க்க பக். 90] அந்த அரசியல் புள்ளிக்கும் சரி அல்லது அனைத்துலகக் குழுவால் எழுப்பப்பட்ட வேறு எந்த பிரச்சினைக்கும் சரி சுலோட்டர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை என்பதைக் கூறவும் தேவையில்லை. எப்படியோ, ICFIக்கு எதிராய் ஹீலியுடன் அவர் கொண்டிருந்த கூட்டணி ஹீலியின் “முரட்டுத்தனம் மற்றும் வம்புவேலை” குறித்த அச்சத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவரது திருத்தல்வாதப் பாதையுடனான உடன்பாட்டின் அடிப்படையிலானது என்ற நமது கருத்தை நிரூபிப்பதற்கு சுலோட்டர் உத்தியோகபூர்வ பப்லோவாத அமைப்புகளுடன் முறைப்படியாகவும் பகிரங்கமாகவும் உறவுகளைத் தொடரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஹீலியுடனான பிளவுக்கு முன்னர் மற்றும் பின்னர் WRP இன் அரசியல் பாதை குறித்த ஒரு ஆய்வில் இந்த நிரூபணம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சுலோட்டரின் WRP ஜூன் மாதம் நடந்த அச்சுறுத்தலான எட்டாவது காங்கிரசின் மூன்றாவது அமர்வில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “நான்காம் அகிலத்தின் திருத்தல்வாத ஐக்கிய செயலகத்தை நோக்கி ஒரு திட்டவட்டமான அணுகுமுறையை நாம் உருவாக்க வேண்டும்...”என்று அத்தீர்மானம் வலியுறுத்தியது. வெளிப்படையாக மௌனமாக இருத்தல் என்பது சுலோட்டர் செயல்படாமல் இருக்கவில்லை என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து (மிக சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றிருந்தார்) அனைத்துலகக் குழுவை தாக்குவதற்கான மத்தியவாத அமைப்புகளின் ஒரு சர்வதேச கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முனைந்து கொண்டிருக்கிறார். மிக நெருக்கமாக அவர் சேர்ந்து வேலை செய்வதில் (மீண்டும் நினைவில் கொள்ளவும், இந்தக் கூட்டணி உருவானதற்கான அரசியல் அடிப்படையை விளக்குகின்ற ஒரேயொரு பொது அறிக்கையும் கூட இல்லாமல்) ஒன்று நகுயல் மொரெனோ -Nahuel Moreno- தலைமையிலான தீவிர வலதுசாரி பப்லோவாதப் போக்கு. பெரோனிசத்திடம் இந்த நகுயல் மொரெனோ சரணடைந்தது அர்ஜெண்டினாவில் இரத்தம் தோய்ந்த இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட இட்டுச்சென்ற காலகட்டத்தில் அர்ஜெண்டின தொழிலாள வர்க்கத்தின் காட்டிக் கொடுப்பில் ஒரு முக்கிய பாத்திரம் ஆற்றியது. மொரெனோவின் அமெரிக்க ஆதரவாளர்கள் ( இவர்களுடன் தான் சுலோட்டர் சமீபத்தில் அரசியல் விவாதங்களை நடத்தியிருக்கிறார் ) ’அமைதி மற்றும் சுதந்திர’ (Peace and Freedom Party) கட்சியின் உறுப்பினர்களாக வெளிப்படையாக செயல்படுகின்றனர். இந்த முதலாளித்துவக் கட்சியின் சுற்றுவட்டாரத்திற்குள்ளாக சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் தேர்தல் கூட்டுகளை உருவாக்குவதை மையப்படுத்தியே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சியின் இடது பிரிவுக்குக் குறைச்சலில்லாத ஒன்றுடனான சுலோட்டரின் உறவுகள் வேர்க்கர்ஸ் லீக்கின் மீதான அவரது வன்மம், மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் மீதான அதன் “அளவுக்கதிகமான முக்கியத்துவ” த்திற்கு அவரது நீண்டகால ஆட்சேபம் ஆகியவற்றின் உண்மையான அரசியல் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது. பெரு நாட்டின் Liga Comunista நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை மறுதலித்து, அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டு [பார்க்க. பக். 190-194], தனது சொந்த அமைப்பைக் கலைத்த பின்னர், சுலோட்டர் ICFI-விரோத ஓடுகாலிகள் மற்றும் மொரெனைட்டுகள் இடையே ஒரு தூய குட்டி-முதலாளித்துவ ஜனநாயக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தேர்தல் கூட்டணியை ஒழுங்கமைப்பதற்கு லிமாவுக்கு விரைந்தார். 1985 ஜூலை மற்றும் அக்டோபருக்கு இடையே WRP நிலைகுலைவதற்கு தூண்டிய சீரழிவு தொடர்ச்சி கண்டதையும் பண்புரீதியாக ஆழமடைந்தயுமே சுலோட்டர் கன்னையின் அரசியல் பரிணாம வளர்ச்சி குறித்து நிற்கிறது என்பதை இந்த அபிவிருத்திகள் அனைத்தும் மறுக்கவியலா வண்ணம் நிரூபணம் செய்கின்றன. அவசியத்தின் பொருட்டு, இந்தத் தொகுதியில் இருக்கும் பெருமளவான விடயங்கள் சுலோட்டர் -பண்டா போக்கிற்கு எதிரான போராட்டத்தைப் பேசுகிறது. ஹீலியின் போக்கில் எஞ்சியதன் பரிணாமம் குறித்த இன்னுமொரு விரிவான ஆய்வினை வருங்காலத் தொகுதிக்காய் குறித்து வைக்கிறோம். சவாஸ் மிஷேல் தலைமையிலான கிரேக்கத் தொழிலாளர் சர்வதேசக் கழகம் (Greek Workers Internationalist League) கோட்பாடற்ற முறையில் நீங்கியது குறித்து ICFI அளித்த எச்சரிக்கைகள் ஏற்கனவே ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதை அத்தகையதொரு பகுப்பாய்வு உறுதிப்படுத்தும். நாடகத்தனமாக “தொழிலாளர் புரட்சிகரக் கட்சி”யாக உருமாறிய பின் இந்த கிரேக்க ஹீலிவாதிகள் அசுரவேகத்தில் வலதுக்கு நகர்ந்திருக்கின்றனர். அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு பதிலளிக்கும் அவசியமின்றி கிரீஸுக்குள் விடயங்களைக் கையாளும் சுதந்திரத்தை தனக்கு ஸ்தாபித்துக் கொள்வதற்கான மிஷேலின் விருப்பமே அவர் ஹீலியுடன் கொண்ட கூட்டணிக்கும் உலகக் கட்சிக்குள் தனது நிலைப்பாடுகளுக்காக விசுவாசத்துடன் போராடுவதற்கு அவர் மறுத்ததற்கும் கீழமைந்திருந்த அரசியல் உந்துசக்தியாகும். 1985 நவம்பர் முதலாக மிஷேல் கிரேக்க WRP இன் “தேசிய”சுதந்திரத்தை அந்த அமைப்பை மக்கள் முன்னணி பாணியில் ஸ்ராலினிஸ்டுகள், மத்தியவாதிகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிர அமைப்புகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதை நோக்கி செலுத்துவதற்குச் சுரண்டி வந்திருக்கிறார். துறைமுக நகரான பிரேஸ் நகரில், சோசலிசவகையல்லாத ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இத்தகையதொரு முன்னணியை உருவாக்குவதற்கென செய்த நான்கு மாத பிரச்சாரம், WRP மும்முரமாக பேசிக் கொண்டிருந்த முன்னாள்-PASOK தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் மத்தியவாதிகளுடன் ஸ்ராலினிஸ்டுகள் ஒரு இரகசிய உடன்பாட்டை எட்டியதை அடுத்து குலைந்து போனது. கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் தலைவிதி சம்பந்தப்படாதிருக்கும் பட்சத்தில் இந்தக் கூத்து ஏறக்குறைய நகைப்பிற்குரியதாக இருந்திருக்கும். இந்தத் தொகுதி ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான WRP இன் காட்டிக்கொடுப்பிற்கு எதிராக அனைத்துலகக் குழுவினால் நடத்தப்பட்ட போராட்டத்தின் அத்தனை முதன்மை ஆவணங்களின் தொகுப்பு ஆகும். நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கு உண்மையான விருப்பம் கொண்டிருக்கும் அனைவரின் முன்பாகவும் தொழிலாளர் புரட்சிகரக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்ததற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றை இது முன்வைக்கிறது. ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் சிடுசிடுப்பு மற்றும் குற்றவியல் துரோகத்தையும் தாண்டி, இந்த மோசக்காரர்கள் சேர்ந்து அழிக்க முடியாத ஒரு ட்ரொட்ஸ்கிசக் கரு ICFIக்குள் இருந்தது என்ற வரலாற்று உண்மைக்கு இந்த ஆவணம் சாட்சியமாக விளங்குகிறது. 1982-84 இல் வேர்க்கர்ஸ் லீக்கால் செய்யப்பட்ட விமர்சனங்கள் ஆகாயத்தில் இருந்து விழுந்தவையல்ல, அதேபோல் 1985 இலையுதிர் காலத்தில் ICFI இன் ஒரு பெரும்பான்மை ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று வெற்றிகளைப் பாதுகாப்பதன் பின்னால் அணிதிரண்டதும் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. இத்தகையதொரு ட்ரொட்ஸ்கிசக் கரு இருந்தது என்பதை 1953 இல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டமையும் மற்றும் அமெரிக்க SWP கோட்பாடற்ற முறையில் பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஇணைவு கண்டதற்கு எதிராக 1961-63க்கு இடையில் சோசலிச தொழிலாளர் கழகம் (WRP இன் முன்னோடி) தலைமையில் நடந்த போராட்டமும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தை உருவாக்கியது என்ற உண்மையின் மூலமாக மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். இறுதியாய் ஒரு ஆசிரியர் தலையங்கக் குறிப்பு: பண்டாவின் “27 காரணங்கள்” மற்றும் அது தொடர்பான ஹண்டரின் கட்டுரை தவிர்த்து, WRP இன் முக்கிய ஆவணங்களை நாங்கள் இங்கே சேர்த்திருக்கிறோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ICFI பிரிவுகளின் ஊடகத்தில் வெளியாகியிருக்கக் கூடிய மறுமொழியின் (”நாம் காக்கும் மரபியம்) 26 அத்தியாயங்களையும் இணைத்தால் இந்தத் தொகுதியின் அளவு இருமடங்காகி விடும் என்பதன் அடிப்படையில் இந்த ஆசிரியர் குழுவால் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தவிரவும், அந்த மறுமொழியானது அதன் அளவு என்பது அது பதிலளிக்க வேண்டியிருக்கும் பொய்களின் எண்ணிக்கைக்கு பொருத்தமான விகிதத்தில் இருக்கின்றபோதிலும் இன்னும் முழுமையடையவில்லை. பண்டா மற்றும் ஹண்டரின் கட்டுரைகளின் முழு உரைகளையும் மறுபிரசுரம் செய்வதில் ஆசிரியர் குழுவிற்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் ட்ரொட்ஸ்கிச-விரோத ஓடுகாலிகளின் பொய்களை அச்சிடுவதற்கு நாம் கடமைப்பட்டவர்களாக இருக்கும் சமயத்தில், அதற்கான மறுப்புகளையும் படிப்பதற்கான சந்தர்ப்பம் நமது வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம். ’பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம்’ மீது தாக்குவதற்கு பண்டா அர்ப்பணித்திருந்த வசைமழை பகுதிக்கு 1986 மார்ச்சில் அனைத்துலகக் குழு வழங்கிய பதிலை இந்தத் தொகுதி மறுபிரசுரம் செய்திருக்கிறது. இந்த விடயத்தில் பண்டா கூற விழைந்த அத்தனையும் முழுமையாகவும் துல்லியமாகவும் நோர்த்தின் கட்டுரையில் மேற்கோளிடப்பட்டுள்ளது [காணவும் பக். 172-189], அதனால் பண்டாவின் பார்வைகள் தவறாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கோ குற்றம்சாட்டுவதற்கோ இடமில்லை. |
|
|