World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Goodyear France announces closure of its Amiens-Nord site குட் இயர் பிரான்ஸ் அதன் அமியான்-நோர்ட் ஆலை மூடலை அறிவிக்கிறது
By Pierre
Mabut and Antoine Lerougetel அமெரிக்க சர்வதேச நிறுவனமான குட் இயர் டயர், ஜனவரி 31ம் திகதி அமியான்-நோர்ட் ஆலை மூடலை, அதன் பிரான்சில் எஞ்சியிருக்கும் 3,200 வேலைகளில் 1,173 வேலை இழப்புக்களுடன், அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) கூட்டிலுள்ள CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தொழிற்சங்கம் 2007 முதல் நிறுவனத்தின் ஆலை மூடல்களை நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடிந்தது. இந்த மூலோபாயம், குட் இயர் தொழிலாளர்களை அவர்களுடைய பிற 17 ஐரோப்பாவிலுள்ள குட் இயர் ஆலைகள், பிரான்சில் இருக்கும் பிற கார்த்தயாரிப்பு ஆலைகள் மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் ஆலைத் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்தும் தொழில்துறை நடவடிக்கை பற்றிய முன்னோக்கை ஒதுக்கிவிடது. ஓகையோவில் அம்ரோனில் தளம் கொண்டுள்ள குட் இயர் 2011ல் 22.8 பில்லியன் டாலர் விற்பனையைக் கொண்டு, 22 நாடுகளில் 53 ஆலைகளில் 71,000 தொழிலாளர்களை கொண்டிருந்தது. குட் இயர் குழு கடந்த அக்டோபர் மாதம் உலகெங்கிலும் இலாபங்களில் 23% சரிந்துவிட்டது என்று அறிவித்தது. நிறுவனம் அதன் இலக்கான அமெரிக்க 1 பில்லியன் டாலர்கள் சேமிப்பு என்பதை எட்டிவிட்டதாக உறுதிபடுத்தியதுடன் செலவுகளைக் குறைக்க புதிய நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றும் கூறியது. அமியானில் நடந்த போராட்டம், 2007ல் இருந்து பல பிற போராட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டது போலவே ஒழுங்கு முறையாக தொழிற்சங்கங்களால், குறிப்பாக CGT இனால், தேசிய அளவிலும், உள்ளூர் மற்றும் ஆலை அளவிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இதில், அவர்களுக்கு உதவியவை PCF மற்றும் போலி இடது முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் Lutte Ouvrière (LO, தொழிலாளர்கள் போராட்டம்) ஆகிய கட்சிகள் ஆகும். மிக்கேல் வாமென் மற்றும் ஸ்ராலினிச வக்கீல் பியோடோர் ரிலோவ் தலைமையில் ஆலையின் CGT பிரிவின் குறுகிய முயற்சிகளான ஆலையை மூடுவதை பின்தள்ளுவது என்பதற்கு அப்பால் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி நிர்வாகத்தின் போது (2007-2012) ஆலையின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் தோல்வியுற்றன. அந்த ஆண்டுகள் CGT உடைய தேசிய செயலர் திபோவுக்கும் சார்க்கோசிக்கும் இடையே ஆழ்ந்த ஒத்துழைப்பு காலமாக காணப்பட்டது; பிந்தையவர் திபோ நவம்பர் 2007ல் இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை விற்றுவிடுதலில் நெருக்கடிக்கு முகங்கொடுத்தபோது, “தனி வீரர் திபோ காப்பாற்றப்பட வேண்டும்” என்றார். தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து உழைப்பதற்கூடாகவே சிக்கன நடவடிக்கைகளையும் தொழிலாளர்களின் உரிமைகள் அழிக்கப்படுவதையும் செயல்ப்படுத்த முடியும் என்பதையும் அது பிரெஞ்சு முதலாளித்துவத்தின் இலாபத் தன்மை மற்றும் போட்டித் திறனுக்கு தேவை என்பதையும் சார்க்கோசி அறிந்திருந்தார். இது CGT, CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு) ஆகிய தொழிற்சங்கங்கள் 2008ல் “பொது நிலைப்பாடு” என்பதில் கையெழுத்திட்டதன் விளைவாக தேசிய உழைப்பு உடன்பாடுகள் குறைமதிப்பிற்கு உட்பட்டன. பிந்தையது தொழிற்சங்கப் பிரதிநிதித்துவத்தின் சட்டம் ஒன்று CGT, CFDT அதிகாரிகளின் அந்தஸ்த்தை மேம்படுத்துவதற்குத் தளம் ஆயிற்று; ஆனால் பணி நேர கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதற்கும் தேசிய மற்றும் தொழில்துறை அளவிலான சட்டபூர்வ தடுப்புக்களில் இருந்து முதலாளிகளை விடுவிப்பதற்கும் வாய்ப்பை திறந்துவிட்டது. (See: “France: Unions collaborate with employers, government to deregulate working hours”) ஜனவரி 11ல் வந்துள்ள புதிய PS சோசலிஸ்ட் அரசாங்கத்தின் வேலைப் பாதுகாப்பு ஒப்பந்தம் என அழைக்கப்படுவது சார்க்கோசியின், தொழில் நெறிமுறை மீது நடத்திய தாக்குதல்களை வலுப்படுத்தி ஒருங்கிணைக்கிறது. CGT இதில் கையெழுத்திடவில்லை என்றாலும், தொழிற்சங்கம் நடவடிக்கையை தோற்கடிக்க எத்தகைய தொழில்துறை நடவடிக்கையையும் எடுக்கவில்லை; உடன்பாடு சட்டமாக வருவதற்கு முன்பு தான் “மாற்றங்கள்” குறித்துப் பேச்சுக்கள் நடத்துவதாகக் கூறியுள்ளது. 2009ம் ஆண்டு Clairoix என்று அமியானில் இருந்து 80 கி.மீ. தொலைவிலுள்ள கான்டினென்டல் ரயர் ஆலையில் CGT பணி நீக்கங்கள்குறித்துப் பேச்சுக்கள் நடத்தியது: அதன்பின் ஆலை திறந்து இயங்குவதற்கு போராடுவதை கைவிடுவதற்கு ஈடாக, தொழிற்சங்கங்களின் உறுதிமொழி “பிரான்சிலோ அல்லது வெளிநாட்டிலோ கான்டினென்டல் ஆலைகள் எதையும் அழிப்பதோ, தடுப்பதோ இல்லை”; இதற்கு ஈடாக Clairoix தொழிலாளர்கள் போனஸ் தொகை, சட்டபூர்வ பணிநீக்க இழப்பீடு மற்றும் ஊக்கத் தொகைகள் என்று 50,000 யூரோக்கள் வரை பெறுவர் (அமெரிக்க $68,000) என்றது. இந்த “மிக கௌரவமான உடன்பாடு கான்டினென்டல் தொழிலாளர்களால் வெற்றி கொள்ளப்பட்டதற்கு” வாமென் பாராட்டுக்களை தெரிவித்தார். நோக்கம் ஊதிய வெட்டுக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது, அது நடக்காத பட்சத்தில் “50,000 யூரோக்கள் என்பது குறைந்தப்பட்சம்... குட் இயரிடத்தில் பணம் உள்ளது. அக்குழு பணப் பையைத் திறக்க வேண்டும். இல்லாவிடின் பிரச்சினை விளையும்.” என்றார். NPA ஆதரவைப் பெற்ற CGT குட் இயரின் பணிநீக்கத் திட்டத்திற்கு எதிரான தொழில்துறை நடவடிக்கையை எதிர்த்தது; அது அமியான் தொழிலாளர்களை Clairoix தொழிலாளர்களுடன் இணைத்திருக்கக்கூடும், கான்டினென்டல் மற்றும் குட் இயர் தொழிலாளர்களை, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஆலைகளுக்குள் வந்த அலையலையான பணிநீக்கங்களுக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்தியிருக்கும். 2009ல் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பிரெஞ்சு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன, 120,000 தொழில்துறை வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன, கார்த்தயாரிப்புத் தொழில் மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. CGT, தொழிலாளர்களின் உரிமைகள் நீதிமன்றங்களுக்குச் செல்வதின் மூலம் பாதுகாக்கப்பட முடியும் என்னும் மாயையை வளர்க்க முயற்சிக்கின்றது. இதற்கிடையில் குட் இயர் தன் இலக்கான அமியான் ஆலை மூடலை அடைந்து, தொழிலாளர் தொகுப்பை 2007ல் இருந்த 1,680ல் என்பதில் இருந்து இன்று 1,173 எனக்குறைத்து, இயந்திரங்களையும் முறையாக அகற்றிக் கொண்டுள்ளது. நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் ஆலையில் எந்த முதலீட்டையும் செய்யவில்லை. பிந்தையது இப்பொழுது அதன் திறனில் 15%ம்தான் செயல்படுகிறது; குட் இயர் இந்த ஆலையில் தான் 2011ல் 61 மில்லியன் யூரோக்களை இழந்து விட்டதாகக் கூறுகிறது. நிறுவனம், கிழக்கு ஐரோப்பிய ஆலைகளுக்கு உற்பத்தியை மாற்றியதுதான் இதற்கு காரணம் என CGT கூறுகிறது. வாமெனும் ரிலோவும் இடது முன்னணி (கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் Jean-Luc Melenchon உடைய இடதுகட்சிக் கூட்டணி) உடைய மோசடித்தனப் பிரச்சாரத்தின் நடுவே உள்ளனர்; இதற்கு NPA உடைய ஆதரவும் உண்டு. இது PS அரசாங்கத்தை இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வதைத் தடுக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வலியுறுத்துகிறது. உண்மையில் பிரான்சுவா ஹாலண்டின் வலதுசாரி அரசாங்கம் வேலை வெட்டுக்கள் மூலம் பெருநிறுவன இலாபங்களை அதிகரிக்கத்தான் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அமியானில் இருக்கும் CGT க்கும் குட் இயருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்கள் இருதரப்புக்களும் கொள்கையளவில் ஒரு “தாமாகவே மனமுவந்து செய்யும்” பணிநீக்கம் குறித்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டது, அமெரிக்க டைட்டான் குழுவிற்கு விவசாய டயர் உற்பத்தியை விற்பது, 536 வேலைகளை பாதுகாத்தது. CGT கடைசி நிமிடத்தில் தன் ஆதரவை நிறுவனத்தின் “தாமாகவே மனமுவந்து செய்யும் திட்டம்” என்பது மறைமுகமான கட்டாயப் பணிநீக்கம் எனக்கூறி, டைடான் முன்வைத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுக்கால உற்பத்திக்கு உத்தரவாதம் கேட்டது. சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் இப்பொழுது CGT க்கும் நிறுவனத்திற்கும் இடையே அமியான் நோர்ட் ஆலையின் விவசாய டயர் வணிகம் (500 வேலைகள்) அமெரிக்க டைடானுக்கு விற்கப்படும், அதே நேரத்தில் கார்த்தயாரிப்புப் பிரிவு (700 வேலைகள்) மூடப்படலாம் என்னும் அடிப்படையில் பேச்சுக்களை மீண்டும் தொடக்க முற்பட்டுள்ளது. இது நடந்தால் அது அமியான்-நோர்ட் கவுன்சில் வீட்டுப் பகுதிக்கு இன்னும் பேரழிவாகும். ஏற்கனவே இங்கு 16 முதல் 25 வயதில் இருப்பவர்களிடையே வேலையின்மை 57% என்று உள்ளது. PS அரசாங்கம் பிளோரஞ்ச் எஃகுத் தொழிற்சாலையிலும், ரெனோல்ட் மற்றும் PSA கார் ஆலைகளிலும் சுமத்தியுள்ள போட்டித் திறன் உடன்பாடுகள் முழுப் பிராந்தியங்களிலும் பேரழிவை கொண்டுவரும். தொழில்துறை மீட்பு மந்திரி Arnaud Montebourg —PSA ஒல்நே ஆலை மூடப்படுவது “யாராலும் தடுக்க முடியாத தன்மை” என்று அறிவித்து— குட் இயரின் நிபந்தனைகளை சுமத்த முற்படுகிறார். இவர் CGT ஐ, “தனது ஒயினில் சிறிது நீர் கலக்கும்படியும், குட் இயரை நீரில் சிறிது ஒயின் கலக்கும்படியும், டைடான் இரண்டையும் குடிக்குமாறும்” கேட்கிறார். Montebourg “எங்கள் பக்கம் வந்து, டைடானிடம் இருந்து உற்பத்தி குறித்து உறுதி கேட்பார்” என்று ரிலோவ் கூறுகிறார். அவர் மேலும், “இடது [PS அரசாங்கம்] தான் எதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோ அதைச் செய்ய வேண்டும், பிரெஞ்சு முதலாளிகள் சங்கமான மெடப் பக்கம் செல்லக்கூடாது” என்றும் உறுதியாகக் கூறினார் ஹாலண்டின் PS அரசாங்கம் முதலாளிகளின் ஆணைகளை செயல்படுத்துகிறது என்பதை ரிலோவ் நன்கு அறிவார். ரிலோவும் CGT யும் அமியான் ஆலை முற்றிலும் மூடப்படுவதை தவிர்க்கும் திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். “நிலைமையில் இருக்கும் தடையை அகற்ற, டைட்டான் எழுத்து மூலம் உற்பத்தி தக்க வைக்கப்படும் என்று கூறினால் போதும்.” என்பதே அது. இத்தகைய உறுதிப்பாடு, ஒருவேளை வந்தாலும் அது எழுதப்பட்டுள்ள காகிதத்தின் மதிப்பைக் கூடக் கொண்டிருக்காது. |
|