தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Biden in Munich: The ugly face of imperialism முனிச்சில் பிடென்: ஏகாதிபத்தியத்தின் அழுக்கு முகம்
Bill Van
Auken use this version to print | Send feedback ஜனாதிபதி பாரக் ஒபாமா “ஒரு தசாப்த காலப் போர் இப்பொழுது முடிவடைகிறது” என்று இரண்டு வாரங்களுக்குச் சற்று முன் வஷிங்டனில் ஆற்றிய அவருடைய இரண்டாவது பதவி ஏற்பு உரையில் அமெரிக்கர்களிடம் கூறினார். சனிக்கிழமையன்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகையில், துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் இதற்கான சான்றுகளை நேராக்கியுள்ளார்: அதாவது அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த ஒரு தசாப்த நீடித்த போர் இன்னும் முடியவில்லை என்பது மட்டுமில்லாமல், உலகெங்கிலும் புதிய பகுதிகள் பலவற்றில் அது வெடிக்க உள்ளதுடன், கணக்கிலடங்கா மில்லியன் மக்களுடைய உயிர்களையும் அச்சுறுத்த உள்ளது. 1962 இல் முதலில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாடானது—அரசாங்கத் தலைவர்கள், வெளியுறவு மந்திரிகள், இராணுவ நபர்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்—மரபார்ந்த முறையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அட்லான்டிக் கடந்த அமெரிக்காவும் அதனுடைய மேற்கத்தைய ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே கருத்துக்களை வெளிப்படுத்தும் அரங்காக இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் நடவடிக்கைகள் கவனிக்கத்தக்க வகையில் மாறுபட்ட சூழ்நிலையான சற்றும் வெட்கமற்ற ஏகாதிபத்திபத்தியத்தினதும், நவ-காலனித்துவ நிலையிலும் நடந்துள்ளன. வாஷிங்டனும் “பழைய ஐரோப்பாவின்” சக்திகளும் இராணுவச் சக்தியைப் பயன்படுத்தும் வாய்ப்பை, பொருளாதாரச் சரிவை ஈடு செய்ய வலுக்கட்டாயமாக புவிசார் மூலோபாயப் பகுதிகளை பிடித்துக் கொள்ளுதலும், அங்குள்ள வளங்களையும் சந்தைகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் நச்சுத் தன்மையிலும் ஆழ்ந்துள்ளன. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை—அவர் பிரெஞ்சு போர் விமானங்கள் மற்றும் வெளிநாட்டு பிரெஞ்சுப் படையும் (Foreign Legionnaires) முன்னாள் பிரெஞ்சுக் காலனி மாலியை ஒரு தாக்குதலில் வெற்றி கொண்ட வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். பிரான்சின் துருப்புக்கள் உடனே வெளியேறாது என்பதையும் தெளிவுபடுத்தினார். முனிச்சில் பிடெனுடைய உரை பாதுகாப்பு மாநாட்டின் ஆக்கிரோஷக் குரலை நிர்ணயித்தது. போர் அலை திரும்பிச் செல்லுகிறது என்னும் வனப்புரையை அகற்றிவிட்டால், அமெரிக்கத் துணை ஜனாதிபதி அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகின் ஒவ்வொரு மூலையிலும் போருக்குத் தயாரிக்கிறது என்பதைத்தான் அடையாளம் காட்டினார். அவருடைய தள்ளாடிய உரையின் துவக்கத்தில் பிடென் ஒரு கணிசமான அறிவிப்பைக் கொடுத்தார்; ஒபாமா நிர்வாகம் மற்றும் காங்கிரசின் பெரும் சிக்கன நடவடிக்கைகள் இராணுவவாதத்தின் வெடிப்புத் தன்மை நிறைந்த வளர்ச்சி வெளிநாடுகளில் வரவிருப்பதை தொடர்புபடுத்தியதுதான் அது. “பெருமந்த நிலைக்குப் பின் ஆழ்ந்த பொருளாதாரச் சரிவில் அமெரிக்க நிர்வாகம் எடுக்கும் கடின ஆனால் முக்கிய படிகளை” பற்றிக் குறிப்பிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி உள்நாட்டில் அலையென செய்யும் வெட்டுக்களானது வாஷிங்டன் “உலகின் மற்றய பகுதிகளில் அதன் மூலோபாய கடமையைச் சந்திக்கத் தேவை” என்று அறிவித்தார். வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க இராணுவவாதத்தின் மாபெரும் செலவுகள் நேரடியாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் வைக்கப்படும். வட ஆபிரிக்கா தான் அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் புதிய குவிப்பு என்பதை பிடென் சுட்டிக்காட்டினார். அங்கு ஏகாதிபத்தியம் தான் தோற்றுவித்துள்ள “நிலைமைகளை தீவிரவாதிகள் சுரண்ட முற்படுகின்றனர்”: அதாவது அரசாங்கச் சரிவு, வெகுஜன வறுமை, வேலையின்மை, அமெரிக்க-நேட்டோப் போரினால் லிபியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின் விட்டுச் சென்ற ஆயுதங்களை பயன்படுத்துதல்” ஆகியவை தோற்றுவிக்கப்பட்டுள்ளன. “மேற்கத்தைய நலன்களுக்கு” இந்த அபிவிருத்திகளால் உண்டாக்கப்படும் ஆபத்தை அகற்றுவதற்கு “ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படும்” – இதில் நம்மிடத்திலுள்ள கருவிகளின் முழு அளவிலும், எமது இராணுவங்கள் உட்படப் பயன்படுத்தப்படும்.” மாலியில் “பிரான்ஸைப் பாராட்டி அதற்குத் துணை நிற்கிறது” வாஷிங்டன் என்று பிடென் சேர்த்துக் கொண்டார். “AQIM க்கு (Al Qaeda of the Islamic Maghreb) எதிரான போராட்டமானது ( AQIM உடன் அமெரிக்காவும் நேட்டோவும் நேரடியாக லிபியாவில் கடாபியைக் கவிழ்க்க ஒன்றுசேர்ந்து கொண்டது) அமெரிக்க எல்லைகளில் இருந்து அது மிகத் தொலைவில் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் அமெரிக்காவின் நலன்களுக்காகத்தான்”. இன்னும் வெளிப்படையான மொழிபெயர்ப்பு இந்த வனப்புரைப் போற்றுதலாக இருப்பது, பிரான்ஸ் முதலில் சென்றிருக்கலாம், ஆனால் வாஷிங்டன் மற்றும் பென்டகனின் போராட்டம், அமெரிக்காவும் நேட்டோவும் நேரடியாக லிபியாவில் கடாபியைக் கவிழ்க்க ஒன்றுசேர்ந்து கொண்டது, அமெரிக்க எல்லைகளில் இருந்து மிகத் தொலைவில் இருக்கலாம், ஆனால் பென்டகனின் AFRICOM ம் ஆபிரிக்காவில் அதன் பெரும் எரிசக்தி மற்றும் தாதுப்பொருட்களுக்கான செல்வாக்கிற்கான புதிய போட்டியில் பின்தங்கிவிடமாட்டா என்பதாக இருக்கிறது. ரஷ்யா, சீனா இரண்டிற்கும் பிடென் அதிக மறைப்பற்ற அச்சுறுத்தலையும் கொடுத்தார். வாஷிங்டன் முன்னாள் சோவியத் குடியரசுகளில் எந்த “செல்வாக்கு மண்டலங்களையும் மதிக்காது” என்று எச்சரித்தார், பெய்ஜிங் “அமெரிக்காவுடன் இராணுவப் போட்டி எனக் கருதக்கூடிய எதிலும் ஈடுபடாமல் இருப்பது நலம்” என்றும் அறிவித்தார். செய்தி ஊடகமானது மாநாடு பற்றிய அதிக தகவல் கொடுத்தது பிடென் கூறிய “அமெரிக்கா ஈரானியத் தலைமையுடன் இருதரப்புப் பேச்சுக்களுக்குத் தயார்” என்பதைப் பற்றியது என இருந்தாலும், துணை ஜனாதிபதி வேண்டுமென்றே இது ஒரு புதிய, இன்னும் நியாயமான அணுகுமுறை வாஷிங்டனிலிருந்து வருவதை அடையாளம் காட்டுகிறது என்னும் கருத்தை நிராகரித்தார். ஜேர்மனிய நாளேடு Suddeutsche Zeitung இடம் இராஜதந்திர ஜன்னல்கள் “காலவரையறையற்றுத் திறந்திருக்காது”, இதற்கு மாற்றீடு போர் தான் என்றார். ஈரானின் அணுத்திட்டத்தை “அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்று அவர் காட்டி, அமெரிக்கா “அணுவாயுதத்தை ஈரான் பெறுவதைத் தடுக்கும்” என்றார். ஒரு தசாப்தம் முன் ஈராக்கில் போரைத் துவக்குவதற்குப் பயன்படுத்திய போலிக்காரணத்தை எதிரொலிக்கும் வகையில் பிடென், தெஹ்ரானிடம்தான் எதிர்முறையை ‘நிரூபிக்க வேண்டிய கடமை’ உள்ளது என்றார்: அதாவது அது அணுவாயுதங்களைத் தயாரிக்கவில்லை என்பதை நிரூபிக்க. நவம்பர் 1991ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முதல் பேர்சிய வளைகுடாப் போர் குறித்து விளக்கப்படுத்தும் வகையில், ஏகாதிபத்தியப் போர் மற்றும் காலனித்துவவாதத்திற்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் மாநாட்டைக் கூட்டியது. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அறிக்கையில் ICFI ஆனது இப்போர் “ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் புதிய வெடிப்பின் தொடக்கமாகும்” என்றும், “தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஆகியவைகள் 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் எதிர்கொண்ட வரலாற்று அரசியல் பணிகள் அனைத்தும் மீண்டும் அவற்றின் வெளிப்படையான வடிவில் வந்துவிட்டன” என்று குறிப்பிட்டது. இந்த அறிக்கையானது சோவியத் ஒன்றியம் சரிந்தபின் அறிவித்த “புதிய உலக ஒழுங்கில்” “போர், காலனித்துவ வகை அடிமை முறை மற்றும் வெகுஜன வறுமை” இருக்கும் என்று மூத்த ஜோர்ஜ் புஷ் கூறியதை விளக்கி, இது தொழிலாள வர்க்கமானது ஒரு சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகரமாக அணிதிரட்டப்படுவதின் மூலம்தான் எதிர்கொள்ளப்பட முடியும்” என்றும் கூறியது. முதல் ஈராக்கியப் போர் “ஏகாதிபத்தியவாதிகள் உலகை மீண்டும் பிரிவினை செய்யப்போவதை தொடக்குகிறது” என்பதை அடையாளம் காட்டுகிறது என்றும் அது எச்சரித்தது. “நேற்றைய காலனிகள் இன்று மீண்டும் அடிமைப்படுத்தப்படவுள்ளன. ஏகாதிபத்தியத்தின் சந்தர்ப்பவாத மன்னிப்பாளர்கள் கூறும் வெற்றிகளும், பகுதிகளைக் கைப்பற்றி இணைத்துக் கொள்ளலும் முன்னைய காலத்திற்குப் போய்விட்டது என்று கூறுவது, மீண்டும் அன்றாட ஒழுங்காகிறது” என்றும் தொடர்ந்தது. இந்த முன்னோக்கு, மனித குலம் “சோசலிசத்தின் தோல்வியுடன் வரலாற்றின் முடிவை அடைந்துவிட்டது”, தடையற்ற சந்தையும் முதலாளித்துவமும் மனித வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை நிரூபிக்கின்றன என்ற முதலாளித்துவச் சிந்தனைக் கூற்றுக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. மேலும் இது சீரழிந்த குட்டி முதலாளித்துவப் போலி இடதுகளின் முரண்பாடான கருத்துக்களுக்கு எதிரிடையாகவும் முன்வைக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் தளம் கொண்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் மரணத்தைக் குறித்து துக்கம் கடைப்பிடித்து, “நூற்றாண்டின் நள்ளிரவு” பற்றிப் பேசினர். இரண்டு தசாப்தங்களுக்குப் பின், ICFI முன்வைத்த கருத்து பெரும் நிகழ்வுகளால் முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 1914 மற்றும் 1939க்கு முன் நடந்ததைப் போலவே, சிறு தற்காப்பற்ற நாடுகள் சூறையாடப்படுவது, உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடியுடன் பிணைந்துள்ளது; பெரும் சக்திகளிடைய பெருகும் அழுத்தங்களும் மோதல்களும் உலகப் போரைச் சுட்டிக் காட்டுகின்றன. உலகத் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், அதனுடைய காலாவதியாகிவிட்ட தேசிய அரசுகளாக இருக்கும் உலகப் பிரிவினைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக நடத்தும் ஐக்கியப்பட்ட போராட்டம் ஒன்றுதான் ஒரு புதிய உலகப் பேரழிவைத் தடுக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் இத்தகைய முன்னோக்கிற்காக போராடும் ஒரே இயக்கம் ஆகும். |
|
|