WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
With death toll rising,
Egypt’s opposition calls for talks with Mursi
இறப்பு எண்ணிக்கை
அதிகரிக்கையில் எகிப்தின் எதிர்க்கட்சிகள் முர்சியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
விடுகின்றன
By Bill Van Auken
31 January 2013
Back to screen version
எகிப்தில் நாடுதழுவிய எதிர்ப்புக்களின் விளைவாக ஏற்பட்ட
இறப்புக்களின்
எண்ணிக்கை கிட்டத்தட்ட 60-க்கு
உயர்ந்துவிட்ட நிலையில்,
இராணுவத் தலைவர், ஒருவேளை நாடு
சரியலாம் என்று விடுத்த தீவிர எச்சரிக்கையான நிலையில்,
முக்கிய முதலாளித்துவ எதிர்தரப்புக்
கூட்டணியின் தலைவர் ஜனாதிபதி முகமட்
முர்சியுடன்
பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஐ.நா. அதிகாரியும்,
தேசிய விமோசன முன்னணியின் (NSF)
தலைவருமான
முகம்மது எல்பரடேய் (இந்த
முன்னணி சர்வாதிகார ஹொஸ்னி முபாரக் ஆட்சியின்
முன்னாள் உறுப்பினர்களையும் எகிப்தின்
நிதிய, வணிகப் பிரிவுகளின்
பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது)
நாட்டை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள வெகுஜன
எதிர்ப்புக்களின் இரண்டாவது வாரத்தை
நோக்கிச் செல்லுகையில் இந்த அழைப்பை
விடுத்துள்ளார்.
“வன்முறையை நிறுத்தி,
தீவிர கலந்துரையாடலை ஆரம்பிக்க
ஐனாதிபதி, பாதுகாப்பு,
உள்துறை மந்திரிகள்,
ஆளும் கட்சி,
சலாபிக்கள் (Salafis)
மற்றும் தேசிய
விமோசன முன்னணி
போன்றவர்களுக்கிடையே உடனடியான கூட்டம் தேவை
என எல்பரடேய்
அறிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் எகிப்திய முதலாளித்துவத்தின்
மதச்சார்பற்ற,
தாராளவாதப் பிரிவுகளை
பிரதிநிதித்துவப்படுத்தும் NSF-ன்
தலைவரை முர்சியே
ஒரு அரசியல் கலந்துரையாடலுக்கு
அழைத்ததை அது “வண்ணப்பூச்சு”
என்று கூறி
உதறித்தள்ளினார். “இன்று
நாம் கலந்துரையாடலுக்கு செல்லமாட்டோம்...
கலந்துரையாடலுக்கான அடிப்படை தேவைகளின்
செய்தியை எகிப்திய மக்களுக்கும்
குடியரசின் ஜனாதிபதிக்கும் நாம்
அனுப்பிவைப்போம்
என்று அவர்
அறிவித்தார்.
அவரும் மற்ற NSF
தலைவர்களும் தொடர்ச்சியான கோரிக்கைகளை
வெளியிட்டனர்
அவற்றுள்,
முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்தின்
அனேக ஆதரவாளர்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பிற்கான
திருத்தமும், ஒரு “தேசிய
விமோசன
அரசாங்கம்,
அமைக்கப்பட வேண்டும் என்பதும் கூறப்பட்டது.
அதனது பங்கிற்கு ஒபாமா நிர்வாகம் முர்சிக்கு வலுவான ஆதரவைக்
கொடுத்துள்ளது,
அரச அலுவலகத்தின் பேச்சாளர்,
வாஷிங்டன் “ஜனாதிபதியும்
அவருடைய அரசாங்கமும் வன்முறையைத்
தவிர்க்க ஒரு தேசிய உரையாடலுக்கு மீண்டும் அழைப்பு
விடுத்துள்ளதைக் காண மகிழ்ச்சி
அடைகிறது”, எனவும்
“எகிப்தின்
அனைத்து
அரசியல் சக்திகளும் இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுகிறது”
என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடு ஐயத்திற்கு இடமின்றி
எல்பரடேய், NSF-ன்
நிலைப்பாட்டின் மாற்றத்திற்கு செல்வாக்கு செலுத்துவது
என்றிருந்தாலும்,
எகிப்தில் நடந்துகொண்டிருப்பது,
அது அங்கே மிகப்பெரிய
முக்கியத்துவமுடையதாக உள்ளது.
எகிப்து முழுவதும் எழுச்சிகள் தொடர்கின்றன,
சூயஸ்கால்வாய் நகரங்கள் முழுவதும்,
–செய்யது துறைமுகம்,
சூயஸ்,
இஸ்மாலியா –
உழைக்கும் மக்கள் அங்கே முர்சி
ஆட்சியால் சுமத்தப்பட்டுள்ள அவசரகால நிலை,
இரவு 9
முதல் காலை 6
மணி வரையிலான ஊரடங்கு உத்தரவை
வெளிப்படையாகவே
மீறுகின்றனர். எகிப்திய முதலாளித்துவம்
சகலதும் புரட்சியின் அச்சுறுத்தலைக்
கண்டு நடுங்குகிறது.
எகிப்தின் ஆளும் வட்டாரங்களுக்குள் ஏற்பட்ட அரசியல் இயக்குமுறை
மாற்றத்தில்
பாதுகாப்பு மந்திரியும்,
இராணு தளபதியுமான ஜெனரல் அப்துல் படா
அல் சிசி
தலையீடு செய்தார். எகிப்தில் தற்பொழுது
நடக்கும் பூசல்கள் “அரச
சரிவிற்கு வழிவகுக்கலாம்”
என்றும், “அரசியல்
சக்திகள் செயல்படவில்லை
என்றால் பெருந்துயர விளைவுகள் ஏற்படும்”
என்றும் ஓர் பேச்சில் அவர்
இராணுவப் பிரிவிடம்
எச்சரித்தார். இவ்வறிக்கை,
மிகபரந்தமட்டத்தில் ஒரு
இராணுவ சதிக்கான
அச்சுறுத்தலாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
கடந்த வெள்ளியன்று,
எகிப்தில் தொடங்கிய மக்கள் எதிர்ப்பு,
அமெரிக்க ஆதரவு
ஹொஸ்னி முபாரக் சர்வாதிகாரியை
வீழ்த்திய எகிப்து புரட்சியின் இரண்டாவது
ஆண்டு நிறைவு நாளை
குறித்தது.
இந்த எழுச்சிகள்,
சனிக்கிழமை செய்யது துறைமுகத்தில் ஒரு
நீதிமன்றத்
தீர்ப்பினால், –ஓராண்டிற்கு
முன், கால்பந்து விளையாட்டுக்
கலக கொலையில்
தொடர்புபட்ட 21
பேருக்கு நீதிமன்றம் கொடுத்த மரண
தண்டனை – கூடுதல்
எரியூட்டப்பட்டன, அந்நேரத்தில்
ஆட்சிசெய்த ஆயுதப்படை தலைமைக்
குழுவின் (SCAF)
எதிர்ப்பாளர்கள்,
இது பாதுகாப்புப் படையினரால்
வேண்டுமென்றே
செய்யப்பட்ட ஒரு ஆத்திரமூட்டல் என
குற்றம் சாட்டினர்.
தண்டிக்கப்பட்டவர்களின் குடும்ப
உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நகரத்தின்
சிறையைத் தாக்கி முற்றுகையிட முயன்றனர்,
அதில் குறைந்தப்பட்சம 32
பேர்
இறந்து போயினர்.
ஞாயிறன்று இரவு,
மூன்று கால்வாய் நகரங்களான சூயஸ்,
செய்யத் துறைமுகம்,
இஸ்மாலியாவில் முர்சி அறிவித்த அவசரகால
நிலை மகத்தான மக்கள் எதிர்ப்பையும்
மீறலையும் கண்டது. கூட்டங்கள் நகர
மையங்களில் கூடின, கால்பந்து
விளையாட்டுக்கள் நடைபெற்றன,
சரவெடிகளும் போடப்பட்டன. பொலிசும்,
இராணுவமும்
அவற்றில்
தலையிடாமல் அவதானித்தபடி நகரங்களில் நிலைகொண்டிருந்தனர்.
புதன் அன்று,
முர்சி இந்த வெகுஜன மீறலுக்கு ஓரளவு
தலைவணங்கியது போல், மூன்று
பகுதிகளிலும் இருக்கும் கவர்னர்கள் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும்
அவசரகால நடவடிக்கைகள் தேவையா
என்பதை முடிவெடுக்க வேண்டும் என்றார். சூயஸ்
மற்றும் இஸ்மாலியாவின் கவர்னர்கள்
ஒன்பது மணி நேர ஊரடங்கு உத்தரவை மூன்று
மணி நேரமாக அதிகால் 2
முதல் 5
மணிவரை மட்டும் என
குறைத்துவிட்டனர்.
புதன் பிற்பகல்,
செய்யது துறைமுகத்தில் ஊரடங்கு
உத்தரவைப் பரிசீலிக்க
கவர்னர் அழைத்த கூட்டம்,
அந் நகரின் தீவிரமான Ultras
Green Eagles-ன்
கால்பந்து ரசிகர்களால்
குழப்பப்பட்டு, தலமை அலுவலகம்
முர்சி எதிர்ப்புக்
கோஷங்களை வெளிப்படுத்தி
முற்றுகையிடப்பபட்டது. அவர்கள்,
கவர்னரை மக்கள்
மீது உயிரைக்கொல்லும் தோட்டாக்களை
பாவிப்பதற்கு உத்தரவிட்டதற்காகவும்
கண்டித்தனர்.
அதே நேரத்தில் வன்முறை அடக்குமுறை தொடர்ந்தது. புதன் அன்று
கெய்ரோவில்
இரண்டு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்,
இருவரும் சீருடை அணியாத இராணுவ
குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
ஆயுதப்படைகள்,
குடிமக்களைக் கைது செய்யும் அதிகாரத்தை
அளிக்கும் சட்டத்தை
முர்சி புதன் அன்று கையெழுத்திட்டார்.
சிவில் நீதிமன்றங்களிடம் கைது
செய்யப்பட்டவர்களை இராணுவம்
ஒப்படைக்கும் எனக் கருதப்பட்டாலும்,
முபாரக்
ஆட்சியில் இருந்த வெறுக்கதக்க பழக்கமான
இராணுவ விசாரணைக்காக அவர்களை
ஒப்படைத்தல் முறைக்கு திரும்பிப்போவதை
எதுவுமே
தடுத்து நிறுத்த முடியாது.
மூன்று கால்வாய் நகரங்களில் முர்சி சுமத்தியுள்ள அவசரகால ஆணைகள்
பொலிஸ்
மக்களுக்கு எந்தக்குற்றச்சாட்டும்
கூறாமலே 30 நாட்களுக்கு அவர்களை
காவலில்
வைக்கும் அதிகாரத்தைக்
கொடுத்துள்ளன.
இதற்கிடையில் Egypt Independent,
பிரதம மந்திரி ஹெஷம் க்வண்டில் புதன்
அன்று எகிப்தின் துணை இராணுவப்
பொலிஸ் மத்திய பாதுகாப்புப் படையின்
அதிகாரிகளை சந்தித்தார் என்று
அறிவித்தது. இவர், அவர்களுக்கு
“ஊர்வலத்தை
முறியடிக்கும் சட்டத்துக்கு
உரிமை கொடுக்கப்படும், முதலில்
கண்ணீர்ப்புகை
குண்டு பின்னர் உயிரைக்கொல்லும்
தோட்டாக்களை பயன்படுத்தல், இவை
கலகலக்காரர்களை படிப்படியாக
கலைத்துவிட உதவுமென”
அவர்களுக்கு உத்தரவாதம்
அளித்தார்.,
இருப்பினும் “எந்தளவிற்கு
கலகம் ஆபத்தானது என்பதையே அது
பொறுத்திருக்கும்”
என்றார்.
தொடரும் எழுச்சிகளுக்கு மத்தியில் முர்சி சான்ஸ்லர் மேர்க்கெல்
மற்றும்
ஜேர்மனிய முதலீட்டாளர்களை சந்திக்க
பேர்லினுக்கு பறந்து சென்றார்,
அவருடைய
ஆட்சிக்கு ஆதரவு பெறும் முயற்சியாகும்
இது. ஐரோப்பிய ஒன்றியம்,
எகிப்தின்
முதலாது வணிகப் பங்காளியும்,
வெளிநாட்டு முதலீட்டின் மிகப் பெரிய
மூலமும் (source)
ஆகும்.
முர்சியின் அரசாங்கம் அடுத்த வாரம் நெருக்கடி நிறைந்த எகிப்திய
பொருளாதாரத்தை நிவர்த்திக்க
$3.8 பில்லியன் நிதிக்காக
சர்வதேச நாணய
நிதியத்துடன் பேச்சுக்களை தயார்
செய்யவுள்ளது. வளர்ச்சி 2%க்கும்
குறைவாகிவிட்டது,
நாடு இப்பொழுது அயல்நாட்டு
இருப்புக்களாக $15
பில்லியனைத்தான் வைத்திருக்கிறது,
அது மூன்று மாதங்களுக்கான
இறக்குமதிகளுக்கு மட்டுமே
போதுமானது,
புதன்கிழமை Fitch
தரமளிக்கும் நிறுவனம், (Fitch
rating agency) எகிப்தின்
கடன் தரத்தை B+
இருந்து B
என்று குறைத்தது,
நாட்டில் குறைந்து வரும்
வெளிநாட்டு நாணய இருப்புக்கள்
மற்றும் எழுச்சி பெறும் அரசியல் கொந்தளிப்பை
இதற்கான காரணங்களாக
காட்டப்பட்டுள்ளன.
“சமூகத்திற்குள்
தீவிரப் பிளவுகள் ஏற்பட்டுள்ளன,
ஆங்காங்கே வன்முறை
வெடிப்புகளுக்கு இவை இடமளிக்கின்றன”
என்று தரமளிக்கும் நிறுவனம்
கூறியுள்ளது.
IMF
பேச்சுக்களில் மேலும் கடுமையான சிக்கன
நடவடிக்கைகள், உதவித் தொகைகளில்
வெட்டுக்களை ஏற்படுத்துவது
என்பவை அடங்கியுள்ளன, இந் நிலை
அடிப்படை உணவுப்
பொருட்களுக்கான விலைகளை உயர்த்தும்,
தொடர்ச்சியாக வேலையின்மையை
அதிகரிக்கும்,
இவை மக்களின் எழுச்சிகளுக்கு உந்துதல்
கொடுக்கும் சக்தியாக
உள்ளன,
இவைதான் முபாரக்கின் வீழ்ச்சிக்குக்
கிட்டத்தட்ட ஓராண்டிற்குப்
பின்னும் நாட்டை
அதிர்விற்கு உட்படுத்துகின்றன. |