சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Record unemployment adds to Spain’s social crisis

ஸ்பெயினின் சமூக நெருக்கடியை வேலையின்மை கூட்டுகிறது

By Michael Gardner and Paul Mitchell
4 February 2013

use this version to print | Send feedback

சமீபத்திய தொழிலாளர் படை அளவையின்படி, பொருளாதாரச் சரிவு தொடங்குவதற்குச் சற்று முன்னே 2007ல் இருந்த 1.7 மில்லியனுடன் ஒப்பிடுகையில் மிக அதிக அளவில் 6 மில்லியன் ஸ்பெயினின் தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். வேலையின்மை விகிதம் இப்பொழுது 26% என்று, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே கிரேக்கத்திற்கு அடுத்தாற்போல் இரண்டாம் இடத்தில் மிக அதிகமாக உள்ளது. தெற்கு ஸ்பெயினில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது; கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் ஆன்டலூசியா மற்றும் எக்ஸ்ட்ரீமதுரா மாநிலங்கள், ஆல்பசெடே, சியுடாட் ரியல், ரொலேடோ நகரங்கள், கானரித் தீவுகள் மற்றும் ஒயூடா என்னும் வட ஆபிரிக்க சிறுபகுதி ஆகியவற்றில் வேலையின்றி உள்ளனர்.

விசேடமாக ஸ்பெயினின் இளைஞர்கள் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். 25 வயதிற்குள் கிட்டத்தட்ட 60% வேலையின்றி உள்ளனர். குடியேறிய தொழிலாளர்களில் வேலையின்மை விகிதம் 36.5% என உள்ளது.

பொதுத்துறையில் ஒரு இரத்தக் களரி ஓடுகிறது; இங்கு கிட்டத்தட்ட 200,000 வேலைகள் 2012ல் தகர்க்கப்பட்டன; இது 2011ல் அழிக்கப்பட்ட 32,400 வேலைகளைப் போல் ஏழு மடங்கு அதிகமாகும். பெரும்பாலான வேலை இழப்புக்கள் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் பொறுப்புடைய தன்னாட்சிப் பகுதிகளிலும் நகராட்சிகளிலும் ஏற்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 6 மில்லியன் வேலையற்றோரில் 2 மில்லியன் மக்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்மையில் உள்ளனர், அதையொட்டி வேலையின்மை நலன்களுக்கு உரிமை அற்றவர்களாகிவிட்டனர். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 30% உடன் ஒப்பிடுகையில், 9% இனருக்குத்தான் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று AGETT எனப்படும் வேலைவாய்ப்பு நிறுவன அமைப்பு தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களைக் கொண்டிருக்கும் 10% வீடுகளில் அவற்றின் அனைத்து உறுப்பினர்களும் வேலையில் இல்லைஇது 2011ல் இருந்த நிலைமையைவிட 16% அதிகம் ஆகும்.

அதே நேரத்தில் வேலையில் இருப்பவர்களில் 63% தங்கள் வருமானத்தில் 2011ல் இருந்து 1% முதல் 10% வரை வெட்டுக்களை பெற்றுள்ளனர் என்று நுகர்வோர்கள், பயன்படுத்துவோர் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பத்து தொழிலாளர்களில் ஒருவர் தங்கள் ஊதியங்கள் 20%க்கும் மேலாகக் குறைக்கப்பட்டதை கண்டுள்ளனர். இதேபோன்ற பேரழிவுதான் ஓய்வூதியம் பெறுவோரையும் தாக்கியுள்ளது; மூன்றில் ஒருவர் கிட்டத்தட்ட 10% எனத் தங்கள் குறைந்த வருவாயிலும் இழந்துவிட்டனர், கிட்டத்தட்ட  பத்தில் ஒருவர் 20% வரை இழந்துவிட்டார்.

அக்டோபர் முதல் டிசம்பர் 2012 வரை, 20 முதல் 35 வயதிலுள்ள கிட்டத்தட்ட 125,000 இளைஞர்கள் குடிபெயர்ந்துவிட்டனர்; இதைத்தவிர 87,800 வெளிநாட்டினரும் குடிபெயர்ந்துவிட்டனர்; பிந்தைய பிரிவில் முக்கியமாக இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து அதிகமானவர்கள் நகர்ந்து விட்டனர்.

ஒரு வீட்டை வாங்குவதற்கு அடைமான நிதி பெற்ற தொழிலாளர்கள் மிக மோசமான நிலையில் தங்களைக் காண்கின்றனர். 2008 ல் ஸ்பெயினின் வீடுகள் குமிழி வெடித்ததில் இருந்து வீடுகளின் விலை கால்பகுதிக்கும் மேலாகச் சரிந்துவிட்டது. 350,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பெரிய எண்ணிக்கை இருந்தபோதிலும் இதில் முன்னிருப்பு விகிதம் ஒப்புமையில் பிற ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவாக இருந்தன; ஏனெனில் பல வீட்டுச் சொந்தக்காரர்கள் வீடுகளை வங்கிகள் எடுத்துக் கொள்வதை தடுப்பதற்குத் தங்கள் உறவினர்கள் அடைமானத் தொகையைக் கொடுப்பதை நம்பியுள்ளனர்.

குடும்பங்களின் ஆதரவு இல்லை என்றால், நிலைமை மிக மோசமாகியிருக்கும்என்று Essade வணிகப் பள்ளியின் பேராசிரியர் Juan Ignacio Sanz பைனான்சியில் டைம்ஸிடம் கூறியுள்ளார். “பல விவகாரங்களிலும் இல்லத் தலைவர்களின் பெற்றோர்கள்தான் இப்பொழுது தங்கள் குழந்தைகளின் அடைமானப் பணத்தை தங்கள் அரசாங்க ஓய்வூதியங்களில் இருந்து கொடுக்கின்றனர். இது எத்தனை காலம் நீடிக்கும் என எனக்குத் தெரியவில்லைஎன்றார் அவர்.

ஸ்பெயினின் அடைமானச் சட்டங்கள் கடுமையானவை. 109 வருட பழைய சட்டத்தின்படி, உங்கள் சொத்தின் திறப்பை வங்கிக்குத் திருப்பிக் கொடுப்பது உங்களைக் கடனில் இருந்து விடுவிக்காது. ஒரு வங்கி ஒரு வீட்டை அதன் மதிப்பிடப்பட்டுள்ள 60% மதிப்பிற்கு எடுத்துக் கொண்டு, பின்னர் மீதிப் பணத்திற்காக உரிமையாளரை தொடர முடியும்; இவற்றில் வட்டி, சட்டபூர்வக் கட்டணம் ஆகியவையும் அடங்கும்கட்ட முடியாதவர்கள் வீடுகளை இழப்பதுடன் வாழ்நாள் முழுவதும் கடனில் இருப்பர்என்று பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்பெயினில் சமூகச் சரிவு மற்றும் பாரிய சமத்துவமின்மையின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதை உலக  சோசலிச வலைத் தள வாசகர் ஒருவரிடம் இருந்து பெற்ற கடிதத்தில் அவர் எழுதுகிறார்: நான் கடலோர சிறுநகரான மோரைஹாவில் வேலை பார்க்கிறேன்; இது மத்தியதரைக் கடலோரத்தில் அமைந்துள்ள மிக அழகிய நகரம் ஆகும். இதில் முக்கியமாக அயல்நாட்டினர், டச்சுக்காரர்களும் ஜேர்மனியர்களும் தங்கள் புகழ்பெற்ற வில்லாக்களைக் கட்டியுள்ளனர்; இவை கடலோரம் மற்றும் உட்பகுதியில் நிறைந்துள்ளன.

மற்றொரு கவனிக்கத்தக்க வேறுபாடு, நான் மலைப்பகுதிகள் மூலம் காரோட்டிச் செல்லும்போது பார்த்தது, ஐரோப்பிய ஒன்றியச் சாலைக் கட்டமைப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டது ஆகும். மோட்டார் சாலைகள், தெருக்கள் முற்றுப்பெறா நிலையில் கைவிடப்பட்டுள்ளன. சில முக்கிய வளரும் பகுதிகளான முர்சியா, வாலென்சியாவை ஐரோப்பாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் திட்டங்களும் இதில் உள்ளன.

நான் சொத்து வளர்ப்பவர் / முகவரிடம் பேசினேன்: அவர்கள் ஸ்பெயினின் இப்பகுதியில்மறைந்திருக்கும் இரத்தினங்கள்என்றார். இங்கு பலர் பணத்துடன் உள்ளனர், சமீபத்தில் ஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி இங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார். தற்பொழுது வீடுகள் சந்தை எப்படி உள்ளது என்று அவரை நான் கேட்டபோது, அவர் தன்னுடைய முந்தைய கருத்துக்களை முரண்படுத்துவது போல் தோன்றியது; என்னிடம் அவர் ஒரு சொத்து விலைக்கு வந்துள்ளது என்றும் அது நான்கு ஆண்டுகளில் அதன் மதிப்பில் பாதியை இழந்துவிட்டது என்றும் கூறினார். பலரும் தங்கள் திறப்புகளை வங்கிகளிடம் ஒப்படைத்துவிட்டனர்.

அவர் நிலைமையை சாதகமாக பார்க்கிறார்: உங்களுக்கு நல்ல பேரத்தில் சொத்து வேண்டும் என்றால் வங்கியின் சொத்தை ஏலங்களில் இருந்து நேரடியாக வாங்குங்கள் என்றார். இந்த அதிக விலையில் உள்ள வீடுகள் விலை ஏற்றத்தின் விளைவுகளைப் பற்றி அவர் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை; இது பலரை வீடுகளை இழக்கச் செய்து வறிய நிலையில் தள்ளியுள்ளது.

நான் சில நாட்கள் கடலோரச் சாலையில் அலிகான்ட்டில் இருந்து வாலென்சியா வரை காரோட்டிச் சென்றேன். அவற்றில் இரு நாட்கள் நான் சுற்றுலாப் பெருநகரான பெனிடோர்மில் கழித்தேன். ஸ்பெயினின் பொருளாதார அழிவின் பாதிப்பை இங்கு வெளிப்படையாகக் காண முடிகிறது. வணிகர்கள் ஒருவரோடு ஒருவர் மிக மிருகத்தனமாகப் போட்டியிடுவதில், நஷ்டம் ஏற்படாமல் இருந்தால் பெரும் அதிருஷ்டம் என்று உள்ளது. நகரத்தின் பொதுத் தோற்றத்தில் இருந்து பலரும் தப்பிப் பிழைக்கவே பெரும் கஷ்டத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது

பல வீடிழந்தவர்கள் தெருக்களில் பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன். ஒரு பெண்மணி உணர்ச்சி மிகுந்த நிலையில், கட்டுப்படுத்த முடியாது அழுதுகொண்டிருந்தார். மற்றொரு நபர் பொதுமக்களிடம் ஒரு வேலைக்கு மன்றாடிக் கொண்டிருந்தார். ஆங்கிலத்தில் எழுதிய அட்டை ஒன்றை அவர் வைத்திருந்தார்: அதில்எனக்கு உதவுங்கள். நான் பெரும் ஆற்றொணா நிலையில் உள்ளேன். பிழைப்பதற்கு வேலை தேவைஎன்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு வயதான மனிதர் நடைபாதையில் அவருடைய கைகளில் தலையை வைத்து, ஸ்பெயின் மொழியில் புலம்பிக் கொண்டு படுத்திருந்தார். அவர் அங்கு இல்லாததுபோல் மக்கள் அவரைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.

பொலிசார் தெருக்களில் ரோந்து செல்லுவது பெனிடார்ம் முழுவதும் உள்ளது. ஓர் உள்ளூர் டாக்சி ஓட்டி என்னிடம் அவர்களுடைய முக்கிய முன்னுரிமை இயன்றளவு அதே இடத்திலேயே அபராதங்களை வசூலிப்பது ஆகும். நானே பல பொலிஸ் வேகத் தடை உள்ள இடங்களில் இதை அனுபவித்துள்ளேன் உங்களிடத்தில் பணம் இல்லை என்றால் அவர்கள் அருகிலுள்ள ATM இடத்திற்கு அதற்காக அழைத்துச் செல்லுகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்பெயினில் உழைத்து வரும் ஒரு பிரித்தானிய பெண்மணியிடம் நான் பேசினேன். இவர் தற்போதைய நிலை இதுகாறும் இல்லாத அளவிற்கு மோசம் என்றார். பலரும் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு யூரோக்களுக்காக உழைக்கின்றனர்.

ஓர் உள்ளூர் நபர் அவருடைய குடும்பத்தைப் பற்றி உண்மையான கவலையை தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி பிராங்கோ அதிகாரத்தில் இருந்தபோது ஏற்பட்ட மோசமான விளைவுகளையும் விட அதிகமாகக் காணும் என்றும் சேர்த்துக் கொண்டார்.

சமீபத்திய வேலையின்மை புள்ளிவிபரங்களுக்கு விடையிறுக்கையில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ள ஐக்கிய இடதின் தலைவர் கேயோ லாரா, மக்கள் கட்சி அரசாங்கத்தை அதன் பொருளாதாரக் கொள்கைகளைமுற்றிலும் தோற்றுவிட்டதின் விளைவாகமாற்றுமாறு வலியுறுத்தினார்; அரசாங்கம் விடையிறுப்பதற்கு வேலை இல்லாமல் எத்தனை பேர் இருக்க வேண்டும்?என்றும் கேள்வி எழுப்பினார்.

அந்த  வினா தொழிற்சங்கங்களிடம் கேட்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் CC.OO  மற்றும் PSOE உடன் இணைந்துள்ள UGTS ம் தொழிலாளர் சீர்திருத்தங்களில் கையெழுத்திட்டன; இவை தேசிய அளவில் கூட்டுப் பேர உடன்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதை எளிதாக்கிவிட்டன; மேலும் ஊதியங்கள், வேலைகள், பொதுப்பணிகள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுக்கும் பாதை அமைத்துள்ளது. இவை மீண்டும்சமூக உரையாடலைமுதலாளிகள் அமைப்பான CEO உடன் தொடங்க இருப்பதாக இப்பொழுது அறிவித்துள்ளன. UGT தலைவர் கான்டிடோ மென்டெஸ் இப்பேச்சுக்களின் சாரத்தை தெளிவாக்கும் வகையில், “தொழில் துறைகள் கூடுதலான அதிகப்படி மதிப்புடன் தோற்றுவிக்கப்பட்டு, பராமரிக்கப்படுவதை ஆதரிக்கும் கொள்கைகளை நாம் இயற்ற வேண்டும்என்று கூறுகையில் தெரிவித்துள்ளார்.

இதன்பொருள், கூடுதலான உடன்பாடுகள், ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதாரமான ஸ்பெயினின் தொழிலாளர்கள் செலவுகளில் 2009ல் இருந்து பெரும் சரிவை காண வைத்துள்ளது. இந்த உண்மையை அறிந்துள்ள கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் போர்ட், Peugeot, ரெனோல்ட் போன்றவை ஸ்பெயினில் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த மாதம் தொழிற்சங்கங்கள் நிசானில் ஊதியங்களை புதிதாக வேலையில் சேர்ந்து கொள்பவர்களுக்கு 20% குறைவாகக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.