World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Renault and PSA unions try to block fight against plant closures

பிரெஞ்சு ரெனோல்ட் மற்றும் PSA தொழிற்சங்கங்கள் ஆலை மூடல்களுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க முயல்கின்றன

By Antoine Lerougetel
31 January 2013

Back to screen version

CGT எனப்படும் தொழிலாளர் பொதுக்கூட்டமைப்பு மற்றும் பிற தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பிரான்சின் கார்த்தயாரிப்பாளர்கள் ரெனோல்ட் மற்றும் PSA Peugeot-Citroen உற்பத்தியாளர்களை செவ்வாய் அன்று சந்தித்து ஆலை மூடல்கள் மற்றும் பணி நீக்கங்களுக்கு எதிரான எதிர்ப்பை தடுப்பதற்கும், தொழிலாளர் செலவினங்களை குறைத்து விரைவுத்தன்மையை அதிகரிக்கும் புதிய “போட்டித்தன்மையைச்” செயல்படுத்துவதற்கும் தங்கள் சேவையை கொடுக்க முன்வந்தனர். ஐரோப்பா முழுவதும் பல்லாயிரக்கணக்கான கார் தொழிலாளர்களின் வேலைகள் வெட்டப்படும் நிலையில் உள்ளன; இதில் பிரான்சில் மட்டும் Peugeot-Citroen 11,500 வேலைகளையும் ரெனோல்ட் 8,000 வேலைகளையும் அறிவித்துள்ளன.

PSA Peugeot-Citroen உடைய பாரிசுக்கு வடக்கே இருக்கும் Aulnay-sous-Bois ஆலையில் 2,800 தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 400 பேர் ஜனவரி 16ல் இருந்து ஆலையை ஆக்கிரமித்து வருகின்றனர்: இது கிட்டத்தட்ட அனைத்து உற்பத்தியையும் நிறுத்தியுள்ளது. பொலிஸ் மற்றும் பாதுகாவலர்கள் ஏராளமான தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டிருந்ததை முறிப்பதை மேற்பார்வையிட்டனர்; ஆனால் ஆலைக்குள் வேலைநிறுத்தத்தில் இருந்த தொழிலாளர்கள் ஐரோப்பா முழுவதிலும் இருக்கும் ஆலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 200 நிர்வாக அதிகாரிகள் இருந்தும், உற்பத்தி மீண்டும் தொடக்கப்படுவதை தடுத்தனர்.

முதலாளிகள் மற்றும் ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்துடன் தங்கள் உடந்தை நிலையை மறைக்கும் முயற்சியில் உள்ளூர் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் துறை அமைச்சரகத்திற்கு வெளியே ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தன. அவர்கள் தொழிலாளர்களுக்கு முன்னேற்றப்பாதை ஏதும் கொடுக்கவில்லை; மாறாக, இலாபத்தில் இருக்கும் நிறுவனங்களில் பணிநீக்கம் சட்டவிரோதமாக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு முறையீடும் திவாலான முன்னோக்கை அவர்களிடம் முன்வைத்துள்ளன. இதில் 400 பேர்தான் கலந்து கொண்டனர்; அதுவும் பெரும்பாலும் தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற போலி இடது அமைப்பின் ஆதரவாளர்களும்தான்.

இதுதான் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான தந்திர உத்திகளில் சமீபத்தியது ஆகும்; மிகவும் குறிப்பாக CGT உடையது; இது PCF எனப்படும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாகப் பிணைந்து அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெகுஜன தொழில்துறை நடவடிக்கைகளை தடுக்கிறது. உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் ஏற்கனவே 10.5% என உள்ள நிலையில், 1,500 ஆலைகள் மூடப்படுதல், பணி நீக்கம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும்போது வேலையின்மை மேலும் உயரும். இந்நிறுவனங்களில் Pilpa, Bigard, Credit Agricole, Faurecia, FNAC, Ford, Fralib, Goodyear, PSA, Renault, Samsonite, Sodimedical, Sanofi, Sony, Valeo, ZF, Coca-Cola, Merck Serrono ஆகியவை உள்ளன.

PSA மற்றும் ரெனோல்ட் தொழிலாளர்களை ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஐக்கியப்படுத்தும் முயற்சி ஏற்கனவே நாசப்படுத்தப்பட்டுள்ளது Jean Pierre Mercier தலைமையில் இருக்கும் CGT அருகில் இருந்த ரெனோல்ட் Flins ஆலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்றது; அங்கு அவர்களுடைய Flins சக ஊழியர்களைச் சந்திக்க ஒருவாயில்கதவை முறிப்பது ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஒரு பொதுப் போராட்டத்திற்கு உண்மையான உணர்வு இருக்கையில், CGT ஐ பொறுத்த வரை இது ஒரு விளம்பர உத்திதான்.
ஜனவரி 29ம் தேதி இருந்த நடவடிக்கை தினம் PS அரசாங்கம் பற்றிய போலித்தோற்றங்களை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது, அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான அரசியல் போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு அல்ல. தொழிற்சங்கங்கள் ஹாலண்டின் “வேலைப் பாதுகாப்பிற்கான உடன்பாடு” என்பதில் கையெழுத்திட்டுள்ளன; இது 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வென்றெடுத்த பாதுகாப்புச் சட்டங்களை மீறி, நிறுவனங்களை ஊதியங்களை மாற்றவும் பணி நேரங்களை மாற்றவும், தொழிலாளர்களை பணியிடங்களுக்கு இடையேயும், அதற்குள்ளும் மாற்றவும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.

CGT உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை அதை எதிர்க்கவும் எதுவும் செய்யவில்லை. பிரதம மந்திரி Jean Francois Ayrault ஐச் சந்தித்தபின், CGT இன் பொதுச் செயலாளர் பேர்னார்ட் தீபோ கூறினார்: “நாங்கள் மிக உருப்படியான முறையில் தொழில்துறை அமைச்சரகத்துடன் பேச்சுக்களை நடத்தி, ஆவணம் பற்றிய ஆய்வை விரிவாக மேற்கொண்டோம். .... முக்கிய தொழிலாளர்களின் அமைப்பின் கருத்தை பிரதம மந்திரி உதாசீனம் செய்ய முடியாது, அது கையெழுத்திட மறுத்தாலும் கூட.”

செவ்வாய்க்கிழமையன்று தொழிலாளர் துறை அமைச்சரகத்தின் முன்பு CGT ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஆலைத் தளமுடைய தொழிற்சங்கக் குழுக்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம், இடது முன்னணிக் கூட்டான PCF, Jean-Luc Menlechon உடைய இடது கட்சி ஆகியவை முன்வைத்த பாராளுமன்ற நடவடிக்கைக்கு ஆதரவாக நடைபெற்றது; அது 250 தொழிலாளர்களுக்கும் மேலானவர்களை நியமித்துள்ள இலாபகரமான நிறுவனங்கள் ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள் செய்வதை தடைக்கு உட்படுத்துகிறது. ஸ்ராலினிச வக்கீல் பியோடார் ரிலோவ் வரைந்த இச்சட்டத்தில், PS ஆதிக்கத்தில் இருக்கும் தேசிய சட்ட மன்றம் சட்டத்தை ஏற்க வலியுறுத்தப்படலாம் என்பதாகும்; இது அரசாங்கத்தின் முக்கிய போட்டித்தன்மை நடவடிக்கைகளை சட்டவிரோதம் ஆக்கும்.

ஒரு சட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி ரிலோவ் நீதிமன்ற உத்தரவு ஒன்றை வாங்கியுள்ளார்; செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட இது ஔல்நே ஆலை உட்பட PSA உடைய மறுகட்டமைப்புத் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இதன் நோக்கம் தொழிலாளர்களின் எந்த சுயாதீன முன்முயற்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, முதலாளித்துவ நீதிமன்றங்கள், அரசாங்கம் பற்றி பிரமைகளை வளர்ப்பதாகும். PSA நிர்வாகம் இந்த நடவடிக்கை, அதைத் தன் தொழிற்சங்கங்களுடனான ஆலை மூடல்கள் மற்றும் பிற செலவுக்குறைப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேச்சுக்கள் தொடர்வதை தடுக்காது என்று கூறியுள்ளது.

அமியான் Goodyear ஆலையில் ரிலோவ் முக்கிய CGT ஆலோசகராக இருந்தார்; அங்கு 1,500 தொழிலாளர்கள் நான்கு ஆண்டுகள் அத்தகைய சட்டப் பூசல்களை நடத்திய பின், ஜனவரி 31ம் திகதி ஆலை மூடல் அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளனர். (see “Court decision gives French employers green light for mass layoffs”).
உலகத்தின் மிகப் பெரிய கார்த் தயாரிப்பு நிறுவனங்கள் நூறாயிரக்கணக்கான வேலைகளை அழிக்கும் உந்துதல், பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்க மாதிரியிலான “தொழிலாளர் வளைந்து கொடுக்கும் தன்மையை” சுமத்துவது என்பது, ஊதியங்களைக் குறைப்பது என்பது, பாராளுமன்ற உத்திகளால் நிறுத்தப்பட முடியாதவை. ஐரோப்பா முழுவதும் வலது அல்லது முதலாளித்துவ “இடது” அரசாங்கங்கள் சமூக எதிர்ப்புரட்சி ஒன்றை நடத்துவதில் ஒன்றுபட்டுள்ளன.

பிரெஞ்சுக் கார்த்தயாரிப்புத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், அமெரிக்க கார்த் தயாரிப்பு தொழிலுடன் இயைந்த வகையில் ஐரோப்பிய, உலக மோட்டார் நிறுவனங்கள் மறுகட்டமைப்பு நடத்துவதின் ஒரு பாகமாகும். ஐரோப்பா மற்றும் சர்வதே அளவில் போட்டியிட வசதியாக ஒபாமா நிர்வாகம் மற்றும் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தால் மேற்பார்வையிடப்பட்டு இந்நிறுவனங்கள் பல ஆலைகளை மூடின, 20,000 வேலைகளை அகற்றின, புதிய தொழிலாளர்ளின் ஊதியங்களைப் பாதியாகச் செய்தன.

இந்த உலகளாவிய தாக்குதலை ஒவ்வொரு ஆலையாலும் தனித்தனியாகவோ அல்லது முதலாளித்துவ அரசாங்கங்கள்மீது அழுத்தம் கொடுப்பதின் மூலமோ போராடப்பட முடியாது; ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்களை பாதுகாக்கும் ஒரு மூலோபாய அடிபடையில்தான் போராட முடியும். இதற்கு ஓர் உண்மையான சோசலிச வேலைத்திட்டம் தேவைப்படுகிறது; அது கார்த்தயாரிப்புத் துறையை பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் செல்வம் நிறைந்த முதலீட்டாளர்களிடம் இருந்து அகற்றி அதைத் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் அவசியமாகும்.