World Socialist Web Site www.wsws.org |
Two years of the Egyptian Revolutionஎகிப்திய புரட்சியின் இரண்டு ஆண்டுகள்
Johannes Stern இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாரியளவிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் எகிப்தில் தெருக்களுக்கு வந்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு 11 நாட்களுக்கு முன்புதான் ஜனாதிபதி ஜீன் அலி அபிடைன் பென் அலியை பதவியில் இருந்து அகற்றியிருந்த அவர்களுடைய துனிசிய வர்க்க சகோதரர்களால் ஊக்கம் பெற்றிருந்த எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு வீரம்மிக்க போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்கள் அமெரிக்க ஆதரவுடன் நீண்டகாலம் ஆட்சி நடத்திய சர்வாதிகாரிகளில் ஒருவரை 18 நாட்களில் வீழ்த்தினர். முபாரக்கை வீழ்த்தியதில் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கரமான பங்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத்யூனியனை கலைத்தபின் இதை “வரலாற்றின் முடிவு” என்ற முதலாளித்துவ சார்பாளர்களின் வெற்றிச் செருக்கிற்கு பதிலளிக்கமுடியாத ஒரு நிராகரிப்பு ஆகும். இது ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பங்கை நிராகரிக்கும் நடப்பிலுள்ள அனைத்து பின் நவீனத்துவ கோட்பாடுகளுக்கும் ஒரு நொருங்கவைத்த அடியாகும். நைல்நதி முகத்துவார ஜவுளி ஆலைகளில் இருந்து சூயஸ் கால்வாய் வரை பரவிய பரந்துபட்ட வேலைநிறுத்தங்கள், இராணுவம் தொழிற்சாலைகளையும் பொதுத்துறை சேவைகளையும் நடத்தியமையும் நாட்டை இயங்கவிடாது செய்து முபராக்கை இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தின. தொழிலாள வர்க்கம் முபாரக்கை கவிழ்ப்பதில் தீர்க்கரமான சக்தியை கொண்டிருந்து, கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருக்கும், “இதுகாலவரையான அனைத்து சமூகத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்பதை உறுதிப்படுத்தின. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தொழிலாள வர்க்கம் எதிர்நோக்கும் மகத்தான சவால்கள், வெடிப்புத்தன்மை மிகுந்த வர்க்கப் போராட்டங்கள், போர்கள் மற்றும் புரட்சிகள் ஆகியவற்றால் இன்னும் தெளிவாகிவிட்டன. இதற்கு சர்வதேச அளவில் முபாரக் அகற்றப்பட்டதற்கு பெரும் பரிவுணர்வும் ஆர்வமும் இருந்தன. ஆர்ப்பாட்டங்கள் இஸ்ரேலில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா வரை படர்ந்தன. ஆனால் இதுவே ஸ்ராலினின் பெரும் மார்க்சிச எதிர்ப்பாளரான லியோன் ட்ரொட்ஸ்கி இடைமருவு வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டதுபோல் தற்போதைய சகாப்தத்தில் தீர்க்கரமான காரணியான தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடி தானாகவே தீர்ந்துவிடாது. பரந்துபட்ட புரட்சிகரக் கட்சி தொழிலாள வர்க்கத்திடம் இல்லாத நிலையில், முகம்மத் முர்சியை ஜனாதிபதியாக கொண்டு வலதுசாரி முஸ்லிம் சகோதரத்துவத்தினை (MB) அதிகாரத்தில் கொண்டுவருவதற்கு எகிப்திய முதலாளித்துவத்திற்கு ஒரு கட்டற்ற நிலையை கொடுத்தது. இதனால் அது எகிப்திய தொழிலாளர்கள் மீது பெரும் சுரண்டலையும் மற்றும் கெய்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டுள்ள ஒத்துழைப்பையும் தக்கவைத்துக்கொண்டது. இந்த நிகழ்வுப்போக்கிற்கு மத்தியதர வர்க்கங்களின் வசதிமிக்க தட்டுக்களின் நலன்களை பிரதிபலிக்கும் அமைப்புக்களான எகிப்தில் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), பிரித்தானியாவில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) அல்லது அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) போன்றவை அரசியல்ரீதியாக உதவியளித்தன. தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியினால் பீதி அடைந்த இச்சக்திகள் அனைத்தும் ஒரு வலதுநோக்கிய ஒரு கூர்மையான திருப்பம் என்னும் முறையில் இதை எதிர்கொண்டன. எகிப்திற்குள்ளேயே புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனம் மற்றும் சோசலிச கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட எவ்வித போராட்டத்தை நடத்துவதற்கும் விரோதப்போக்கைக் காட்டியது. மாறாக, ஆரம்பத்தில் ஒரு இராணுவ ஆட்சிக்குழுவிற்கு ஆதரவு கொடுத்தபின், அவை வலதுசாரி முஸ்லிம் சகோதரத்துவத்தை முபாரக்கின் சர்வாதிகாரத்திற்குப் பதிலாக பதவியில் இருத்தின. ஜனாதிபதித் தேர்தல்களில் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் முர்சியை “புரட்சிகர வேட்பாளர்” என ஆதரவு கொடுத்தது. புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களின் தலைவர் சமா நகீப் முர்சியின் தேர்தலை “எகிப்திய வெகுஜனங்களுக்கு ஓர் உண்மையான வெற்றி” என்று பாராட்டினார். இத்தகைய சோசலிச எதிர்ப்புக் கொள்கை அரசியலின் பிற்போக்குத்தனமான விளைவுகள் விரைவில் வெளிப்படையாயின. முபாரக்கைப் போல் இவரும் அவருடைய கொள்கைகளை எதிர்க்கும் இளைஞர்களையும் தொழிலாளர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதைப் படுத்துகையில், முர்சி சர்வதேச நாணய நிதியத்துடன் முபாரக் கூட செயல்படுத்த நினைக்க முடியாத அளவிற்கு தொழிலாள வர்க்கத்தின்மீது புதிய தாக்குதல்களுக்கு தயாரிப்புக்களை நடத்தினார். தொழிலாள வர்ககம் இப்பொழுது வறிய எகிப்திய மக்கள் நம்பியுள்ள ரொட்டி, எரிபொருள் இன்னும் முக்கிய பொருட்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் மானிய உதவித்தொகைகள் பெரிதும் குறைக்கப்படவுள்ள திட்டங்களுக்கு எதிரான புதிய போராட்டங்களுக்கு முகங்கொடுக்கிறது. சர்வதேசரீதியாக, வசதிமிக்க மத்தியதர வர்க்க தட்டுக்களின் வலதுபுறப் போக்கும் இதேபோல் குறிப்பிடத்தக்க முறையில்தான் இருந்தது. தனது கோரிக்கைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நிற்காத எந்த ஆட்சியையும் அப்பிராந்தியத்தில் அழித்து ஆபிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கில் நவீன காலனித்துவ தளைகளை மக்கள் மீது சுமத்துவதை ஆரம்பித்துள்ள ஏகாதிபத்தியத்தின் உதவியாளர்களாக NPA, ISO, SWP போன்ற அனைத்தும் செயற்படுகின்றன. புரட்சிகரப் போராட்டங்களை ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் என்று கூறிக்கொண்டு அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சு விமானங்களினதும் மற்றும் ஏகாதிபத்திய உளவுத்துறை அமைப்புக்களுடைய உதவியுடனும் லிபியாவிலும் சிரியாவிலும் அல்குவைதா வகைப்பட்ட இஸ்லாமியப் படைப்பிரிவுகள் நடாத்திய குறுங்குழுவாத பினாமி போர்களுக்கு இந்த போலி இடதுகுழுக்கள் இழிந்த முறையில் ஆதரவு கொடுத்தன. இப்போர்களின் வர்க்கத் தன்மை நூற்றுக்கணக்கான பில்லியன்கள் லிபிய எண்ணெய் பணத்தை முடக்குவது என்ற முக்கிய மேற்கத்தைய வங்கிகளின் முடிவினால் அடையாளம் காட்டப்பட்டது. இராணுவ பலத்தினால், நிதிய மூலதனத்தின் நலன்களுக்காக சமூகத்தை கொள்ளையடித்தல் என்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் முர்சி எகிப்தில் தொடரும் அதே தொழிலாள வர்க்க எதிர்ப்பு செயற்பட்டியலைத்தான் அடிப்படையில் ஏகாதியபத்தியவாதிகள் செயல்படுத்துகின்றனர். இந்த ஏகாதிபத்திய தலையீடுகள் மேற்கத்தைய சக்திகள் இப்பிராந்தியம் முழுவதையும் கொள்ளயடிக்கும் அவர்களின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தின் ஒரு அளவுதீரியான விரிவாக்கத்தையே பிரதிபலித்தன. பிரான்ஸ் தற்பொழுது அதன் முன்னாள் காலனியான மாலிக்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் உந்துதலை விரிவாக்கி உள்ளது. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றும் முயற்சியும் ஈரானுக்கு எதிரான பரந்த ஏகாதிபத்தியப் போர் திட்டங்களின் ஒரு பகுதிதான். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வெடித்துள்ள எதிர்ப்புரட்சி ஏகாதிபத்திய வன்முறை அரபு முதலாளித்துவம் மற்றும் போலி இடது போக்குகளால் ஆதரிக்கப்படுவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொழிலாள வர்க்கத்திற்கு மார்க்சிச வேலைத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பதைத்தான் உறுதிப்படுத்துகிறது. எகிப்திய தொழிலாளர்களின் ஆரம்ப போராட்டங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் போலி இடது போக்குகளுக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாத்தது முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்னோக்கினால் ஆயுதபாணியாவதன் மூலம்தான் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்கமுடியும் முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின் உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்திற்கான அதன் வேலைத்திட்டத்தை முன்வைத்தது. “புரட்சியைத் தொடர்வதும் தனது நலன்களுக்காகப் போராடுவதும் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களையும் இராணுவத்துடனும், உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சிகளுடனும், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் முன்னெப்போதையும் விட நேரடியானதொரு மோதலுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. “இந்தப் போராட்டத்தை முன்கொண்டுசெல்ல தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான அடித்தளமிடுவதற்கு இராணுவ-போலிஸ் அரசுக்கு எதிராக தொழிலாளர்’ ஜனநாயகத்தின் சுயாதீனமான அமைப்புகளைக் கட்டுவது என்பது அவசியமாகிறது. இதற்கு எகிப்தின் தொழிலாளர்களை ஒட்டுமொத்த பிராந்தியத்தின் தொழிலாள வர்க்கத்துடன், அத்துடன் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் அவசியமாய் உள்ளது. பெருநிறுவன மற்றும் நிதித்துறை உயரடுக்கினால் செய்யப்படும் பொதுவான தாக்குதலுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒரு உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதி தான் எகிப்தின் புரட்சிகர எழுச்சி ஆகும்”. எகிப்தியப் புரட்சி அதன் மூன்றாம் ஆண்டில் நுழைகையில் எகிப்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட பரந்துபட்ட போராட்டங்களை சர்வதேசிய சோசலிச முன்னோக்கு வழிநடத்த வேண்டும். |
|