World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Toronto International Film Festival 2012
A comment from Robert Connolly, director of Underground: The Julian Assange Story

ரோரொன்டோ சர்வதேச திரைப்பட விழா 2012

Underground: The Julian Assange Story: திரைப்பட இயக்குனரான ராபர்ட் கோன்னோலியிடமிருந்து ஒரு கருத்து.

By Joanne Laurier 
6 November 2012

Back to screen version

ரோரொண்டோ திரைப்பட விழா குறித்த இவ்வாண்டிற்கான நமது கட்டுரைகளில், ராபர்ட் கோன்னோலியின் Underground: The Julian Assange Story இனை நாம் கவனத்தில் கொண்டோம். அமெரிக்கா மற்றும் பிற அரசாங்கங்களின் உலகரீதியான உலக குற்றச்சாட்டினை வெளிப்படுத்தும் தனது பங்களிப்பிற்காக குறி வைக்கப்படிருக்கின்ற ஒருவரைப் பற்றிய ஒரு அனுதாபமான சித்தரிப்பே இத்திரைப்படம்.

Underground இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பிலிருந்து தகவல்களை எடுத்துக் கொண்ட, சூலெட் ட்ரேஃபஸ் மற்றும் அசாஞ்சினால் இணைந்து எழுதப்பட்டதுமாகிய, ராபர்ட் கோன்னோலியின் திரைப்படம் 1980-களின் பிற்பகுதியில், ஆஸ்திரேலியா மெல்போர்னில் உள்ள ஓர் இளம் கணணிக்கொந்தரான (hacker) அசாஞ்சின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. நாம் எழுதியது போன்று, அரசாங்கத்தின் தவறான செயல்பாடுகளை வெளிப்படுத்தத் தீர்மானித்திருக்கிற ஒரு நபராக முன்னேறிய ஒரு திறமையான வாலிபரை உருவமைத்த வருடங்களை ராபர்ட் கோன்னோலி மறுகட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது.

இத்திரைப்படம் அசாஞ்சாக அலெக்ஸ் வில்லியம்ஸின் (Alex Williams) சுவாரஸ்யமான நடிப்புடன், ராச்சல் கிரிஃபித் ( Rachel Griffiths மற்றும் ஆண்டனி லபாக்லியா (Anthony LaPaglia) ஆகியோரின் அற்புதமான நடிப்பைக் கொண்டிருக்கிறது.

1967இல் பிறந்த கோன்னோலி, The Bank (2001) மற்றும் 1975 அக்டோபரில் கிழக்கு திமோரில் இந்தோனேஷியன் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட 5 ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களின் கதையான Balibo (2009) ஆகிய படங்களுக்காக பிரபலமாக அறியப்படுபவர் ஆவார். அத்திரைப்படம் வெளியான நேரத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் ரிச்சார்ட் ஃபிலிப்சுடன் அவர் உரையாடியிருந்தார். 

அநேகமாக நமது காலத்திய சில பெரிய பிரச்சினைகளில் கோன்னோலி அக்கறையை எடுத்துக் கொள்கிறார். அவர் நமது சில மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

ஜோஆன் லோரியர்: தெளிவாக, நீங்கள் ஜூலியன் அசாஞ்சை கண்டு இரக்கப்படுபவராக இருப்பதுடன், இப்போது அவர் எதிர்கொள்கின்ற பெரும் சிக்கல்கள் குறித்து கவலை கொள்கிறீர்கள். அவரது சூழலை அணுகுவதற்கு நீங்கள் ஏன் குறிப்பிட்ட இந்த வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ராபர்ட் கோன்னோலி: நான் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் கதையை அமைப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்து வந்திருக்கிறேன். ஒரு ஆணை அல்லது பெண்ணை எது உருவமைக்கின்றது. எப்போது மற்றும் எப்படி இளைஞர்கள் அரசியல்மயப்படுத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அது இன்று அதிகம் முக்கியமானதாக இருக்கிறது. 

ஆஸ்திரேலியாவில், எந்த இடது மற்றும் வலது அரசியல் கருத்துக்களைக் காட்டிலும், கட்சி அரசியலால் இளைய சமுதாயத்தினர் ஏமாற்றப்படுவதுடன், அதிக அளவில் ஒரு பிரச்சினை சார்ந்த எதிர்ப்புகளை தெரிவிப்பதை நோக்கி இழுக்கப்படுகிறார்கள். இதை ஆராய்வதற்கு ஜூலியன் அசாஞ்சினை உருவமைத்த வருடங்கள் எனக்கு ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பை அளிப்பதாக நான் நினைக்கிறேன்.

ஜோஆன் லோரியர்: இத்திரைப்படம் அசாஞ்சின் வாழ்க்கையின் இந்த ஆரம்ப காலகட்டத்தைப் பற்றி முற்றிலும் விரிவாக காட்டுவதுபோல் தெரிகிறது. இந்த விவரங்கள் எங்கிருந்து கிடைத்தன? இது பெருமளவு Dreyfus-Assange புத்தகத்தைச் அடிப்படையாகக் கொண்டதா அல்லது பிற வகையிலான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதா?

ராபர்ட் கோன்னோலி: முதலாவதாக இது Underground புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது, பின்னர், அது தவிர பரந்த கலந்துரையாடல்கள் மற்றும் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. அந்த நேரத்தில் எனது அனுபவங்களிலிருந்து நான் நிறைய எடுத்துக் கொண்டேன்.

ஜோஆன் லோரியர்: பலம்வாய்ந்த சக்திகளின் தாக்குதலின் கீழ் இருக்கும் ஒருவரின் மனிதாபிமானத் தன்மையை இத்திரைப்படம் அதிகமாக சித்தரிப்பதுடன் இளம் வயதில் சமூக நீதி குறித்த அவனது வலுவான உணர்வினை தெளிவாக்குகிறது. நீங்கள் குறைந்த பட்சம் ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்தின் தூற்றும் பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவாவது இத்திரைப்படத்தை பார்க்கிறீர்களா?

ராபர்ட் கோன்னோலி: வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக இருக்கிற தனி நபர்களின் மனிதநேய மற்றும் தனிப்பட்ட பக்கத்தை நன்கு புரிந்து கொள்வது சிக்கலானது என்று நான் நினைக்கிறேன். பொதுவாக பேசுகையில் ஊடங்கள் ஒருவரின் செயல்பாடுகளைத் வடிவமைக்கும் பெரும் சிக்கலான தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அணுகுமுறைகளை உருக்குலைத்து, ஒருவரின் தற்பொழுது வெளிப்படும் பதிவுகளை மட்டுமே பற்றி பேசுகின்றன.

ஜோஆன் லோரியர்: நீங்கள் திரையிட்டிருக்கிற இடங்களில் இத்திரைப்படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்திருக்கிறது?

ராபர்ட் கோன்னோலி: இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் பெருமளவு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது, Network Ten இல், புள்ளி மதிப்பீடுகளில் 1.5 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட வெற்றியாக இருந்தது. மேலும் இளம் மக்களிடம் (18-39) ஆர்வத்துடன் சிறப்பான வரவேற்பை பெற்றது.

விவாதங்களின் மட்டம் மற்றும் ஊடக ஆர்வம் சிறப்பானதாக இருந்திருக்கிறது, மேலும் 21-ம் நூற்றாண்டில் தனிநபர்களின் சக்தி மற்றும் செயல்பாடுகளைப் பற்றி விரிவாக பேசுவதில் இத்திரைப்படம் பல வழியில் வரலாற்று விவரங்களை எல்லைகடந்து நிற்கின்றது.