WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Renault, PSA Peugeot-Citroen
தொழிலாளர்கள்
ஆலை
மூடல்களுக்கு
எதிராக
கூட்டு
எதிர்ப்புக்கள்
By Antoine Lerougetel
and Pierre Mabut
29 January 2013
கடந்த
புதன்
அன்று
பாரிஸிற்கு
அருகே
ஒல்நே
(Aulnay)
இல் உள்ள
PSA
கார்
தொழிற்சாலையில்
ஜனவரி
16 முதல்
மூடப்பட
இருக்கும்
தொழிற்சாலையை
ஆக்கிரமித்து
வேலைநிறுத்தம்
செய்த
தொழிலாளர்கள்,
நான்கு
பஸ்கள்
நிறைய
அண்டை
Flins
இல்
இருக்கும்
ரெனோல்ட்
தொழிற்சாலை
தொழிலாளர்களுடன்
சேர்வதற்குச்
சென்றனர்;
அவர்களும்
வேலை
இழப்புக்கள்
மற்றும்
விரைவில்
பணிநீக்கம்
ஆகியவற்றை
முகங்கொடுக்கின்றனர்.
ஒல்நே
ஆலை
2014ல்
மூடப்பட
உள்ளது;
இதையொட்டி
2,500 வேலையிழப்புக்கள்
ஏற்படும்.
Flins ஆலையும்
மூடப்பட
உள்ளது.
மொத்தத்தில்,
ரெனோல்ட்
பிரான்ஸில்
2016க்குள்
அதன்
மொத்த
தொழிலாளர்
தொகுப்பான
44,000
பேரில்
14% த்தை,
அதாவது
7,500 வேலைகளை
அகற்றுவதாக
அறிவித்துள்ளது.
இது
கடந்த
இரண்டு
ஆண்டுகளில்
4,000 வேலைகள்
இழக்கப்பட்டபின்
வந்துள்ளது.
PSA,
அமெரிக்கத் தளமுடைய ஜெனரல் மோட்டார்ஸ் உடன் உலகளாவிய உடன்பாட்டைக் கொண்டுள்ளது; அது
ஜேர்மனியில் போஹும் நகரில்
உள்ள ஓப்பல் ஆலையை மூட இருப்பதாக அறிவித்துள்ளது –
இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் ஜேர்மனியில் மூடப்பட இருக்கும் முதலாவது
கார்த்தயாரிப்பு தொழிற்சாலையாகும். மேலும் ஜேர்மனிய தொழிலாளர் தொகுப்பின் 20,000
உறுப்பினர்களுக்கும் ஊதிய முடக்கத்தையும் அறிவித்துள்ளது.
ரெனோல்ட்டின் 12 பிரெஞ்சு ஆலைகளில் இரண்டு மூடப்பட இருப்பதாக வந்துள்ள
அச்சுறுத்தல், ஜனவரி 23 அன்று
Flins
ஆலையிலுள்ள 600 தொழிலாளர்ளின் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு வகை செய்துள்ளது; இதில்
பிற ரெனோல்ட் ஆலைகளின் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர். “போட்டித்தன்மை கொண்ட
உடன்பாட்டை” தொழிலாளர்கள் ஏற்காவிட்டால் நிர்வாகம் ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது;
இவை ஊதிய வெட்டுக்களை தவிர என்பதுடன், ஆலைகளில் தொழிலாளர்களை சுரண்டுவதை பெரிதும்
தீவிரமாக்கும். தற்பொழுது உடன்பாடு குறித்து தொழிற்சங்கங்களுடன் நடக்கும்
பேச்சுக்கள் ஜனவரி 29 அன்று முடிவடையவுள்ளன.
(See: “Renault
announces 7,500 job cuts in France”)
PSA
தொழிலாளர்கள் Flins
உள்ள வாயிற்கதவுகளை உடைத்து, ரெனோல்ட் தொழிலாளர்களுடன் “ஐக்கியம்”,
“ஒரே போராட்டம்”
என்ற கோஷங்களுடன் சேர்ந்து கொண்டனர்.
எதிர்ப்பாளர்கள்,
அவர்களுடைய CGT
(பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு – தொழிற்சங்கக் கூட்டமைப்பு மிகவும் நெருக்கமாக
ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ளது) தலைவர்களால் உரையாற்றப்பட்டனர்.
அவர்கள் Flins
மற்றும் Poissy, Aulnay
ஆகியவற்றில்
இருக்கும்
ஆலைகளில்
இருந்து
வந்திருந்தனர்.
தங்கள் வேலை நிறுத்தங்களை ஒல்நேயில்
PSA
தொழிலாளர்கள் தொடக்கியபின், அவர்கள் நிர்வாகத்தால் ஆலைமூடலுக்கு உட்பட்டனர்.
பாரிஸுக்கு அருகே உள்ள Poissy
ஆலை
தொழிலாளர்களை
தங்களுடன்
சேருமாறு
அழைத்தவுடன் அவர்களை
15 பஸ்களில்
வந்த
கலகப்
பிரிவுப்
பொலிசார்
எதிர்கொண்டனர்.
திங்களன்று ஒல்நே ஆலையை மீண்டும் திறக்கும் திட்டத்தை நிர்வாகம்
கொண்டுள்ளது; அப்பொழுது 100 தனியார் பாதுகாப்புக் காவலர்கள் ஆலைக்குள் நிறுத்தி
வைக்கப்படுவர். தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளூர் மற்றும் தேசிய மட்டத்தில்
தொழிலாளர்கள்
தங்கள் வேலைகளை
பாதுகாப்பதற்கு
ஏனைய
கார்த்தயாரிப்பு தொழிலாளர்களை அணிதிரட்டுவதை எதிர்த்துள்ளனர் மற்றும் பொலிஸ்
அடக்குமுறையையும் எதிர்த்துள்ளனர்.
மாறாக, ஒரு உள்ளூர்
CGT அறிக்கை ஒன்று அரசாங்கப்
பிரதிநிதி (préfet)
“உண்மையான
முத்தரப்புப் பேச்சுக்களை நடத்தத் தேவையான முன்முயற்சிகளில் ஈடுபட”
அழைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அரசாங்கம் “Peugeot
PSA நிர்வாகம்
இன்னும்
வெளிப்படையான
மனப்பான்மையை
உரையாடலுக்கு
கொள்ளுமாறு
அழுத்தம்
கொடுக்க
வேண்டும்”
என்றும்
அது
வலியுறுத்தியுள்ளது.
தொழிசங்கங்கள் ஒல்நே ஆலை மூடப்படுதலை ஏற்றுக் கொண்டுவிட்டன
என்றாலும், CGT,
“ஆலைமூடல் அறிவிப்பிற்குப்பின் நடத்த வேண்டிய பேச்சுக்களின் வடிவமைப்பிற்குள் உள்ள
முடிவான கருத்துக்களை பகிரங்கப்படுத்தியதற்காக”
நிர்வாகத்தை குறைகூறியதை அடுத்துத் தொழிலாளர்கள் வெளியேறினர்.
நிர்வாகத்தின் மனப்பான்மை,
மூன்று தொழிற்சங்கங்கள் சோசலிஸ்ட் கட்சியின் “வேலைப் பாதுகாப்பு உடன்பாட்டை”
ஜனவரி 11ல் கையெழுத்திட்டபின் கடுமையாகிவிட்டது;
பிரெஞ்சுத் தொழில்துறையின்
போட்டித்தன்மையை முன்னேற்றுதல் என்ற பெயரில்,
முதலாளிகள்
ஊதியங்களைக் குறைக்கவும் வேலைத்தள உரிமைகளை கிழித்துப்போடவும் அதிகாரத்தைக்
கொடுத்துள்ளது.
ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம்,
தொழிலாளர்கள்
தங்கள் வேலைகளை இழக்கும்
அச்சுறுத்தலின்கீழ்,
அத்தகைய உடன்பாட்டை ஏற்குமாறு கோரியுள்ளது. ஆனால் தொழில்துறை மந்திரி மிஷேல் சபான்,
“மிரட்டுதல் கூடாது”
எனக்கூறியுள்ளார்; தொழிற்சங்கங்களுடனான விவாதங்கள்
“விசுவாசமாக இருக்க வேண்டும்”
என்றும் கூறியுள்ளார்.
உண்மையில் அரசாங்கமே ரெனோல்ட்டின் முக்கிய பங்குதாரர்: அதன் பங்குகளில் 15%ஐக்
கொண்டுள்ளது; 1994ல் ஜனாதிபதி மித்திரோன் அரசாங்கத்தின்
கீழ் இது தனியார்மயமாக்கப்பட்டபோது அரசாங்கம் 53% ஐக் கொண்டு இருந்தது.
PSA
முதலாளி பிலிப் வரான் தன்னுடைய பிரெஞ்சு ஆலைகளில் 11,200 வேலைகளை அகற்றியபின், தான்
தொழிலாளர் செலவுகளைக் குறைத்து பணிநேரங்களை அதிகரித்து, தொழிலாளர்களின் “வளைந்து
கொடுக்கும் தன்மையை”
நிறுவனத்தின் அனைத்து ஆலைகளிலும் கொண்டுவர உந்துதல் கொடுக்க
இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரெனோல்ட்/பிஎஸ்ஏ இணைந்த அணிவகுப்பு தொழிலாளர் தங்கள் போராட்டங்களை
கார்த்தொழில் முழுவதும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை நிரூபிக்கிறது,
ஆனால் CGT
தலைவர்கள் முன்னோக்கிய
பாதை எதையும் காட்டவில்லை. இதற்கு
சோசலிஸ்ட்
கட்சி அரசாங்கம்
தோற்கடிக்கப்படுவதுதான்
அவசியமாகிறது,
ஆனால் கடந்த மே மாதம்தான் அதைப் பதவிக்குக் கொண்டுவர வாக்குப்போட்ட தொழிற்சங்கங்கள்
இதை எதிர்க்கின்றன.
CGT
இன்
ஒல்நே தொழிற்சங்கப்
பிரதிநிதி பிலிப் ஜூலியான் உடைய வீடியோ
உரை,
தொழிற்சங்கங்கள் பிரான்சிலோ
அல்லது
ஐரோப்பாவிலோ
வேலைநிறுத்தம்
மற்ற
ஆலைகளுக்கு
விரிவாக்கப்படுவதை
எதிர்க்கின்றன
என்பதைக்
காட்டுகிறது. அவர்
அனைத்து PSA
கார் ஆலைகளிலும் பணிப்பகிர்வு விருப்பத்தை வெளியிட்டு, “வேலைநிறுத்தம்”
விளம்பரப்படுத்தப்பட வேண்டிய தேவையையும் கூறியுள்ளார். அரசாங்கம் “பணிநீக்கங்களை”
தடை செய்யும் சட்டத்தைக்
கொண்டுவரவேண்டும் என்றும் ஜூலியான் அழைப்பு விடுத்துள்ளார்.
தொழிலாளர் விரோத சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள
இக்கோரிக்கை,
அதுவும் ஹாலண்டின் தேர்தலுக்குப்பின்,
தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுகளின் வாடிக்கையான பல்லவியாகும். சோசலிஸ்ட்
கட்சிக்கு இவை முழு ஆதரவையும் கொடுத்திருந்தன. பின்னர் சோசலிஸ்ட் கட்சி
ஒரு
மிருகத்தனமான
சிக்கன
வேலைத்திட்டத்தை
அறிமுகப்படுத்தி,
ஜனவரி
11 உடன்பாட்டுடன்
பணியிட
உரிமைகள்
என்று இருந்தவற்றை
எல்லாம்
அகற்றிவிட்டது.
தொழிற்சங்கங்கள் இப்பொழுது
PSA,
ரெனோல்ட் தொழிலாளர்களின் ஒரு
நாள்
கூட்டு நடவடிக்கை ஜனவரி 29ல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளன.
இதில் நிறுவனத்தின் அனைத்து பிரெஞ்சு ஆலைகளிலும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம்
என்பது கூட இல்லை. அதே நேரத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் தேசிய அளவிலும், பொறியியல்
துறையிலும் வேலைநிறுத்தம் பற்றி அசாதாரண மௌனத்தில் உள்ளனர்.
ஒல்நேயில் தொழிற்சங்க கூட்டு குழு வெளியிட்டுள்ள
துண்டுப்பிரசுரம்—இதற்கு CGT,
CFDT (பிரெஞ்சு
ஜனநாயக
தொழிலாளர்
கூட்டமைப்பு),
SUD (ஒற்றுமை,
ஒருமைப்பாடு
மற்றும்
ஜனநாயகம்)
இவற்றின் ஒப்புதல் உள்ளது—
சர்வசாதாரணமாக
“இந்த வேலைநிறுத்தம்
உங்களுடையதாகலாம்”,
“நாங்கள் ஒருவர் மட்டுமே
அச்சுறுத்தப்படவில்லை என்பதை
நாங்கள் முழு நனவுடன்
அறிவோம்” என்றும் கூறுகிறது.
நிதிய ஆதரவிற்கு அது அழைப்பு விடுகிறது, ஆனால் வேலைநிறுத்தம் விரிவாக்கப்பட
அழைப்புவிடவில்லை. தொழிலாளர்களிடையே
நம்பகத்தன்மையைத்
தக்க
வைத்துக்
கொள்ள
வேண்டும்
என்பதற்காக
CGT, FO இரண்டுமே
ஜனவரி
11 உடன்பாட்டில்
(வேலைப்பாதுகாப்பு
உடன்பாடு)
கையெழுத்திடவில்லை.
ஆனால் சோசலிஸ்ட் கட்சியின்
திட்டமான,
பிரெஞ்சு முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் கூடுதல் போட்டித்தன்மை
கொள்ள வேண்டும் என்பதை முழுமையாக ஆதரிக்கின்றன. போலி இடது புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சி,
வியாழன் அன்று ஆலைப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு அதன் நம்பிக்கைகளை,
கையெழுத்திடாத தொழிற்சங்கங்களான CGT, FO
மீது
இருத்துகிறது;
ஜனவரி
11 உடன்பாடு
சட்டமாவதைத்
தடுக்க
அவை
“நடவடிக்கைகளுக்கு
அழைப்புவிட வேண்டும்”
என்று கூறுகிறது.
கடந்த வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின்
கீழ்
CGT, FO
இன்னும்
பிற
தொழிற்சங்கங்கள்
வேலைகள்,
ஓய்வூதியங்களைத்
தாக்குவதில்
அரசாங்கத்தின்
சொற்படி
நடந்தன.
அவை
தொழிலாள
வர்க்கத்தின்
மீது
புதிய
சுற்றுத்
தாக்குதல்களை
எதிர்க்க
ஏதும்
செய்யாது
என்பதற்கு
இது
கூடுதல்
நிரூபணம்
ஆகும்.
NPA உடைய
பங்கு
இந்த
அமைப்புக்களை
மூடி
மறைப்பதும்,
அவற்றிற்கு
எதிராக
தொழிலாள
வர்க்கத்தின்
எழுச்சியை
திசை
திருப்புவதும்
ஆகும். |