சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka government installs new chief justice

இலங்கை அரசாங்கம் புதிய பிரதம நீதியரசரை நியமித்தது

By W.A. Sunil
18 January 2013

use this version to print | Send feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தான் ஞாயிறன்று ஷிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை தனது நெருக்கமான விசுவாசியும் முன்னாள் சட்ட மா அதிபருமான மொகான் பீரிஸ் என்பவரை பிரதம நீதியரசராக நியமித்தார்.

உயர் நீதிமன்றமும் மேல் முறையீட்டு நீதிமன்றும், பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வழங்கிய தீர்ப்புகளை அலட்சியம் செய்து, பீரிஸை இராஜபக்ஷ நியமனம் செய்திருப்பது நாட்டின் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தும். ஏற்கனவே, வழக்கறிஞர்கள் மற்றும் நாட்டின் எதிர்க் கட்சிகளும் பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளன.

பண்டாரநாயக்க தனக்கு எதிராக வன்முறை நடக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி, செவ்வாய்க்கிழமை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். அவர் ஊடகங்களிடம் பேசுவதை பொலிஸ் தடுத்த போதிலும், "இன்னமும் தான் நாட்டின் முறையாக நியமனம் செய்யப்பட்ட சட்டபூர்வமான பிரதம நீதியரசர்" என வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். சோடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு தன்னை குற்றவாளியாக கண்ட பாராளுமன்ற தெரிவுக் குழு எடுத்த முடிவுகள், "அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட, உருப்படியற்ற மற்றும் வெற்றானவை மற்றும் சட்டப்பூர்வமான பலம் அல்லது செல்லுபடித் தன்மையும் இல்லாதவை," என்று அவர் அறிவித்தார்.

பண்டாரநாயக்க தான் அடுத்து என்ன செய்யவுள்ளார் என்று விளக்க வில்லை. இருப்பினும், மாற்றுக் கொள்கை மையம், பீரிஸ் நியமிக்கப்பட்டதை சவால் செய்தும் மற்றும் பிரதம நீதியரசராக எந்தவொரு அதிகாரப்பூர்வ கடமைகளையும் அவர் செய்யாமல் தடுக்கும் ஒரு தீர்ப்பையும் எதிர்பார்த்து ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

தெளிவாக ஒரு அரசியல் தேர்வாக இருந்த பீரிஸின் நியமனம், பிரதம நீதியரசர் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு தடையாக இருக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதை இலக்காகக் கொண்டிருந்தது. பண்டாரநாயக்கவின் கீழ் இருந்த உயர் நீதிமன்றமானது மாகாண சபைகளிடம் இருந்து பொருளாதார அதிகாரங்களை தேசிய அரசாங்கம் கைப்பற்றுவதை செயல்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட மசோதா அரசிலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.

சட்ட மா அதிபராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பீரிஸ் அமைச்சரவைக்கு ஒரு சட்ட ஆலோசகராக இருந்தார். அவர் அரசாங்கத்துக்கு சொந்தமான பல நிறுவனங்களில் உயர் பதவிகளைக் கொண்டிருப்பதோடு அவர் செலான் வங்கியின் தலைவருமாவார். பீரிஸ், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது, இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேச விமர்சனங்களில் இருந்து இராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தார்.

அரசாங்க ஆதரவாளர்கள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்க நாட்டின் சட்ட அமைப்புக்குள் பீரிஸ் குறுக்கிடுவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் வெளியான சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு அறிக்கையானது அவரால் திரும்பப் பெறப்பட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளின் பட்டியலொன்றை வழங்கியுள்ளது.

பீரிஸை நியமித்ததன் மூலம், அரசாங்கம் பாராளுமன்ற விதிமுறைகளை மீறியுள்ளது. சபாநாயகர், பிரதமர் மற்றும் இன்னொரு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர், அதே போல் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி ஒருவரும் உள்ளடங்கிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற குழுவே, நீதித்துறை நியமனங்களை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இரு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குழுவை புறக்கணித்த போது, அது சாதாரணமாக பீரிஸை நியமிக்க முன் சென்றது.

செவ்வாய்க்கிழமை, பண்டாரநாயக்க கட்டிடத்துக்குள் நுழைவதை தடுக்கவும் எதிரப்புக்களை அச்சுறுத்தவும் அரசாங்கம் கொழும்பு நீதிமன்ற வளாகத்தின் அருகிலும் அதைச் சூழவும் நூற்றுக்கணக்கான பொலிசையும் படையினரையும் நிறுத்தியிருந்தது. சுமார் 200 அரசாங்க-சார்பு குண்டர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூடி பீரிசுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் எதிர்ப்பை தூண்டிவிட்டுள்ளன. பீரிஸ் நியமிக்கப்பட்டதை கண்டனம் செய்தும் பண்டாரநாயக்க மீண்டும் பதவியில் இருத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ள சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு, "நாட்டில் சட்ட ஆட்சி மற்றும் பொறுப்புடைமையின் எதிர்காலம் பற்றி தீவிரமாக கவலை தெரிவித்துள்ளது."

டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், "நம் நாட்டின் தலைவிதி மற்றும் எதிர்காலம் பணையம் வைக்கப்பட்டுள்ளதுடன், அதிர்ச்சி தரும் மற்றும் வெட்கக்கேடான காட்சிகள், இலங்கை வரலாற்றில் மிகவும் துயரமான அத்தியாயங்களில் ஒரு பகுதியாக உள்ளன," எனத் தெரிவித்துள்ளது.

இந்த ஆசிரியர் தலையங்கம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் எதேச்சதிகார ஆட்சி வழிமுறைகள் சம்பந்தமாக, இலங்கை ஆளும் தட்டுக்களிலுள்ள பிரிவுகளின் ஆழ்ந்த கவலைகளை பிரதிபலிக்கின்றது. பெரும் வர்த்தகத் தட்டினர் இராஜபக்ஷவின் அப்பட்டமான குடும்ப ஆட்சியினால் ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் சீனா பக்கம் தகவமைவு கொண்டுள்ளதன் விளைவுகளையிட்டும் பீதியடைகின்றனர். அமெரிக்க மற்றும் அதன் பங்காளிகள் முன்னர் அரசாங்கத்தை பெய்ஜிங்கிடம் இருந்து தூர விலகச் செய்வதற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாகவே இராணுவத்தின் யுத்த குற்றங்களை பயன்படுத்திக்கொண்டன.

அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை அரசாங்கம் பகிரங்கமாக மீறுகின்றமை, பாராளுமன்ற ஆட்சியை அபகீர்த்திக்குள்ளாக்கி, தொழிலாள வர்க்கத்துடனான ஆபத்தான மோதல்களுக்கு களம் அமைத்துவிடும் என்ற அச்சமும் இவர்களிடம் நிலவுகின்றது. இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் கூட்டமைப்பு (FCCI) கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, "ஜனநாயகத்தின் அடித்தளம் பணையம் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை ஒரு பெரிய அரசியலமைப்பு மற்றும் சட்ட நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது," என எச்சரித்தது. அது "சிக்கலைத் தீர்க்குமாறு" இராஜபக்ஷவுக்கு வலியுறுத்தியது.

அரசியல் ஸ்தாபனமானது ஒரு வலதுசாரி முதலாளித்துவ கட்சியும் எதிர்க் கட்சியுமான ஐக்கிய தேசிய கட்சியுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட, முன்னாள் இடதுகளான நவசமசமாஜ கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியையும் (USP) நம்பியிருக்கின்றது. புதன்கிழமை டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதிய, நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, நீதித்துறையினரின் எதிர்ப்பு, எதிர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால், "மஹிந்தவின் திட்டம் குறுகிப் போயிருக்கலாம்," என அறிவித்தார்.

இருப்பினும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்ட விதிகளை பாதுகாக்க ஒரு உண்மையான போராட்டத்தை நடத்தும் எண்ணம் யூ.என்.பீ.க்கு இல்லை. அதன் ஆட்சிக் காலத்தில், அரசியல் விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை ஈவிரக்கமற்று நசுக்குவதில் யூ.என்.பீ. இழிபுகழ் பெற்றது. பீரிஸ் நியமிக்கப்பட்டதை யூ.என்.பீ. நிராகரிக்கின்ற அதே வேளை, மேலும் போராட்டங்களை நடத்துவது சம்பந்தமாக தீர்மானிக்கும் விடயத்தை, நாம் நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் சட்ட நிபுணர்கள் சங்கத்திடம் விட்டுவிடுகின்றோம், என்று யூ.என்.பீ. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்.

சட்டம் மற்றும் நீதித்துறையில் இருந்து வரும் எந்தவொரு எதிர்ப்பையும் அரசாங்கம் மௌனிக்க வைக்க முயல்கிறது. பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையை சவால் செய்து நீதிமன்ற வழக்குகளுக்கு தோன்றிய உயர் மட்ட வழக்கறிஞர்கள் அரசாங்க சார்பு குண்டர்களின் அச்சுறுத்தல்களின் இலக்காக உள்ளனர்.

திங்களன்று சட்ட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர்களை சந்தித்த இராஜபக்ஷ, தான் நீதித்துறையை "ஒரு அரசியல் பிரிவாக" மாற்றுவதற்கும் மற்றும் நீதித்துறையை அவமதிப்பதற்கும் யாரையும் அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தார். உண்மையில் இந்த எச்சரிக்கை, அரசியலமைப்பை மீறி மற்றும் நீதிமன்றத்தை அலட்சியம் செய்த ஒருவரிடம் இருந்தே வருகின்றது.

பண்டாரநாயக்கவுக்கு எதிரான இராஜபக்ஷவின் சிகிச்சை மற்றும் நீதித்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்கள், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். பெரும் வணிகர்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் சார்பில் செயல்படுத்தி வரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் எதிர்ப்பை கையாள்வதில் அரசாங்கம் மிகவும் கொடூரமானதாக இருக்கும்.

தொழிலாள வர்க்கம் யூ.என்.பி. பின்னால் அணிதிரள்வதன் மூலம் அதன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடியாது. தொழிலாளர்கள் இலங்கை முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் உடைத்துக்கொண்டு சுயாதீனமாக அணிதிரள்வதோடு, அந்த வழியில், சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்காக கிராமப்புற மக்களின் ஆதரவை வெற்றிபெற வேண்டும். தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக இலங்கையில் இந்த முன்னோக்குக்காகப் போராடுவது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.