சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Russian offer of aid sharpens international power struggle over Ukraine

ரஷ்யா உதவி அளிப்பதாகக் கூறுவது உக்ரேனில் சர்வதேச அதிகாரப் போராட்டத்தை கூர்மையாக்கிறது

By Johannes Stern 
18 December 2013

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றிய-சார்பு எதிர்ப்புக்கள் கீவில் நடக்கையில் மற்றும் பண வசதியில்லாத உக்ரேனில் செல்வாக்கு செலுத்துவதற்காக சர்வதேச அளவில் அதிகரித்துவரும் அதிகார போராட்டம் பெருகியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஒரு பெரிய நிதியத் தொகுப்பை உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு செவ்வாயன்று அளிக்க முன்வந்தார். மாஸ்கோவில் யானுகோவிச்சை வரவேற்ற அவர் ரஷ்யா 15 பில்லியன் டாலர்கள் கடன்களாக தரும் மற்றும் எரிவாயு விலைகளில் பெரிய குறைப்பு இருக்கும் என்றும் அறிவித்தார்.

“உக்ரேன் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் குறிக்கோளுடன், ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கம் உக்ரேன் அரசாங்கத்தின் பத்திரங்களை வெளியிடும் முடிவிற்குத் தன் தேசிய பொதுநல நிதியில் இருந்து அதன் சொந்த கையிருப்பில் இருந்து 15 பில்லியன் டாலர்களை கொடுக்கிறது” என்று புட்டின் அறிவித்தார்.

ரஷ்யாவின் Gazprom நிறுவனம், உக்ரேனின் Naftogaz எரிசக்தி நிறுவனத்திடமிருந்து 1000 கன மீட்டர்கள் இயற்கை வாயுவிற்கு 268.5 டாலர்களைத்தான் வசூலிக்கும்; தற்பொழுது இது 400 டாலர்கள் என உள்ளது.

புட்டினை பாராட்டி யானுகோவிச் கூறினார்: “நான் வெளிப்படையாக சொல்ல வேண்டும்: இத்தனை விரைவுடன், இச்செயல் ரஷ்ய ஜனாதிபதியின் அரசியல் விருப்பமின்றி நடைபெற்றிருக்காது.”

இந்த ஒப்பந்தம், தற்காலிகமாகவேனும் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) பின்னடைவாகும்; அவை, உக்ரேனில் தங்களுடைய செல்வாக்கை மாஸ்கோவின் இழப்பில் விரிவாக்க ஆக்கிரோஷமாக முயன்று கொண்டுள்ளன.

மேற்கத்திய சார்பு எதிர்த்தரப்பு மற்றும் அவர்களுடைய வாஷிங்டன், பிரஸ்ஸலஸ் மற்றும் பேர்லின் நட்பு நாடுகள் உடன்பாட்டை விரைவில் கண்டித்தன. உடன்பாடு அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில், ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள கீவின் சுதந்திர சதுக்கத்தில்கூடி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் சேரும் ஒரு கூட்டு உடன்பாட்டை எதிர்த்தபின், யானுகோவிச் மீண்டும் ரஷ்ய பக்கம் உள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்ப்புத் தலைவரும் உலக பெரும் குத்துச் சண்டை வீரருமான Vitaly Klitschko, “அவர் உக்ரேனின் தேசிய நலன்களைக் கைவிட்டுவிட்டார், சுதந்திரத்தையும் நல்ல வருங்காலத்தையும், ஒவ்வொரு உக்ரேனிய குடிமகனின் நல்வாழ்வையும் கைவிட்டுவிட்டார்” என எதிர்ப்பாளர்களிடம் கூறினார். “நாட்டிற்கு ஒரே வெளியேறும் வழி முன்கூட்டிய தேர்தல்கள்தான். நாம் இங்கு உட்கார்ந்து, ஒரு சுதந்திர நாட்டில் வாழும் உரிமைக்காக போராட வேண்டும்” என்றார்.

Oleg Tyagnibok, தீவிர வலதுசாரி எதிர் கட்சியான ஸ்வோபோடோவின் தலைவர், எதிர்ப்பாளர்களிடம் யானுகோவிச் ரஷ்யாவிற்கு உக்ரேனை விற்கிறார் என்றார். “அவர் உக்ரேனியர்களான எம்மை பண்ணையடிமை போல், மாஸ்கோவின்கீழ் நித்திய அடிமைகளாக சரணடைய வைக்க விரும்புகிறார். இன்று யானுகோவிச் உக்ரேனியர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார்.”

எதிர்த்தரப்புத் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புக்களை தொடர உறுதி கொண்டனர், தேவையானால் புத்தாண்டு மற்றும் மரபார்ந்த கிறிஸ்துமஸ் நேரத்திலும்; பிந்தையது ஜனவரி 7 அன்று கொண்டாடப்படுகிறது. அவர்கள் அமைச்சரவை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டிய தேர்தல்களை கோருகின்றனர்.

கீவில் உள்ள ஐரோப்பிய-சார்பு எதிர்ப்பாளர்களும் அவர்களுடைய அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களும், ரஷ்யா பெலாருஸ் மற்றும் கஜகஸ்தானுடன் நிறுவியுள்ள சுங்கவரிக் கூட்டில் சேரும் உடன்பாட்டில் யானுகோவிச் கையெழுத்திடக்கூடாது என்று கோரியுள்ளனர். ரஷ்யா இந்த சுங்கவரிக் கூட்டை அடித்தளமாக கொண்டு, யூரேசிய ஒன்றியம் என அழைக்கப்படுவதை தோற்றுவிக்கவும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பெரும் பகுதியை அதில் கொண்டுவரும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த இரு திட்டங்களும், அண்டை நாடுகளில் அதன் செல்வாக்கைத்தக்க வைக்கவும் மற்றும் ரஷ்யாவை சுற்றி ஏகாதிபத்திய சக்திகளின் நடைமுறைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வழிவகைகள் என்று மாஸ்கோ கருதுகிறது.

புட்டின் வெளிப்படையாக, எதிர்ப்பாளர்களுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் உறுதியளிக்கும் வகையில், நிதியத் தொகுப்பு ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையேயான சுங்கவரி ஒன்றியத்தின் இறுதி உடன்பாட்டை குறித்துநிற்கவில்லை  என மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“உக்ரேன் நம் மூலோபாயப் பங்காளி, சொல்லின் முழு அர்த்த்த்திலும் நட்பு நாடு” என்றார் புட்டின். ஆனால், “இந்த [உதவி] எந்த நிபந்தனைகளுடனும் பிணைந்தது அல்ல என்ற உண்மையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்... நீங்கள் அமைதியாக இருக்க நான் விரும்புகிறேன்—உக்ரேன் சுங்கவரி ஒன்றியத்தில் சேருவது குறித்த பிரச்சினை இன்று விவாதிக்கப்படவே இல்லை.”

உடன்பாடு குறித்த அறிவிப்பானது, ரஷ்யாவிற்கும் மேற்கத்திய வல்லரசுகளுக்கும் இடையே தீவிர பூகோள-அரசியல், இராணுவ அழுத்தங்களுக்கு நடுவே வந்துள்ளது. ஜேர்மனிய நாளேடான Bild இன் செய்திகளின் படி, இந்த வார இறுதியில் ரஷ்யா பல அணுத்திறன் ஆற்றல் உடைய இஸ்கந்தெர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் எல்லைக்கு அருகே உள்ள காலிநின்கிராடில் நிறுவியுள்ளது என்னும் தகவலை திங்களன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரகம் உறுதி செய்துள்ளது.  இவை எதிரே போலந்து எல்லையில் அமைந்துள்ள அமெரிக்க ஏவுகணை நிலைகளை  முகங்கொடுக்கின்றன.

ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே அழுத்தங்கள் பெருகியிருப்பதில் இது மிகச் சமீபத்திய நிகழ்வாக இருக்கிறது. செப்டம்பர் மாதம், வாஷிங்டன் ரஷ்யாவின் நெருக்கமான நட்பு நாடான சிரியா மீது நேரடித் தாக்குதலை பரிசீலிக்கையில், சிரிய கடலோரப் பகுதியில் ரஷ்ய அமெரிக்க போர்க் கப்பல்கள் ஒன்றையொன்று எதிர்கொண்டன.

இந்நிகழ்வுகள், ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் புதிய சோவியத்திற்கு பிந்தைய முதலாளித்துவ தன்னலக்குழுவின் பல தசாப்தங்கள் நீடித்துவரும் எதிர்ப்புரட்சி பங்கு தோற்றுவித்த அரசியல் வெற்றிடத்தின் வெடிப்புத்தன்மை மிக்க நிலைமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூகசீற்றம் பெருகியுள்ளபோதிலும், மேலோங்கி நிற்பது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தல்லனக்குழுப் பிரிவுகளின் தந்திரங்கள், ஏகாதிபத்தியத்துடன் அவற்றின் உத்திகள் ஆகியவைதான்—இது போர் அச்சுறுத்தல் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் அச்சுறுத்தல் ஆகியவற்றைத்தான் காட்டுகிறது.

டைம் இதழில் ஒரு சமீபத்திய கட்டுரை, ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டின் ஒரு பகுதியாக வரக்கூடிய உக்ரேனின் சிக்கன நடவடிக்கைகளை, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்ட பாதிப்புடன் ஒப்பிட்டுள்ளது.

டைம் எழுதுகிறது: “உக்ரேன் கடுமையான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்—அரசாங்க உதவி நிதிகளைக்குறைத்தல், சமூக நலச் செலவுகளைக் குறைத்தல், அதே நேரத்தில் நாணயத்தின் மதிப்பையும் குறைத்தல் என—இதன் விளைவு உக்ரேனில் தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமானதாக இருக்க முடியும். இதேபோன்ற சீர்திருத்தங்கள் 1990களில் கம்யூனிசத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறுகையில் போலந்து, ரஷ்யா இன்னும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் பயன்படுத்தப்பட்டன. அதிர்ச்சி வைத்தியம் என அறியப்பட்ட இச்சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பெரும் பண வீக்கத்தை ஏற்படுத்தின, மக்களின் சேமிப்புக்களை அழித்தன, மற்றும் திறனற்ற நிறுவனங்கள் மூடப்பட்டதோடு வேலையின்மையை உயர்த்தின.”

நேற்று வாஷிங்டன், புட்டின்-யானுகோவிச் உடன்பாட்டை கண்டித்து, கீவ் மீது தன் அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டிற்கு ஆதரவாக கொண்டுவந்தது. வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னே அறிவித்தார்: “கீவிற்கும் மாஸ்கோவிற்கும் இடையே ஏற்படும் எந்த உடன்பாடும் உக்ரேனில் பொது எதிர்ப்பிற்கு கூடியுள்ள மக்களின் கவலைகளை தீர்க்காது.... உக்ரேன் அரசாங்கம் தன் மக்கனின் குரலை கேட்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.”

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் புட்டின்-யானுகோவிச் உடன்பாட்டை உக்ரேன் மீது ஒரு “ஏலப் போட்டிக்கு வழிவகுக்கும்” என்று தாக்கினார்.

அவர் ரஷ்யாவுடன் குறைந்த மோதல் நிலைப்பாடு ஜேர்மனியின் நலன்களுக்கு நன்கு உதவும் என்றார். ARD தொலைக்காட்சியில் மேர்க்கெல் “இந்த இது அல்லது அது ரஷ்யாவிற்கா ஐரோப்பாவிற்கா என்பது மிக அதிகமாக ஆதிக்கத்தில் உள்ளது.... அண்டைப் பகுதிகள் நீண்டகால வழியாக அதைக் காணக்கூடாது என்பது என் கருத்து. அதை நாம் முறிக்க வேண்டும். உக்ரேன் தனியாக சாதிக்க முடியாது. ஐரோப்பாவில், ஜேர்மனியில் உள்ள நாம் ரஷ்யாவுடன் பேச வேண்டும்.”

திங்களன்று பல ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்க ஆணையர் Stefan Füle, ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு உடன்பாடு குறித்த பேசுக்களை, உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியக் கொள்கை குறித்து தெளிவான உறுதிப்பாட்டைக் கொடுக்கும் வரை நிறுத்தி வைக்கும் என்று கூறியதற்கு விமர்சித்துள்ளனர்.

சமீபத்திய நாட்களில் ஊழல் மிகுந்த யானுகோவிச் ஆட்சியை ஆதரிக்கும் சக்தி வாய்ந்த வணிகத் தன்னலக்குழுக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை வளர்க்க பரிசீலிக்கின்றன என்னும் அறிகுறிகள் பெருகிய வண்ணம் உள்ளன. இன்னும் முக்கியமாக Rinat Akhmetov என்னும் பல பில்லியன் உடையவர் கடந்த வெள்ளியன்று எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனிய, ஐரோப்பிய ஏகாதிபத்திய கணிப்பீடுகளை சிறப்பித்த, Sueddeutsche Zeitung இன் வியாழன் அன்றய ஆசிரியர் தலையங்கம், ஐரோப்பிய ஒன்றியம் “அரசாங்கம், எதிர்த்தரப்பு இரண்டுடனும் தொடர்ந்து பேச வேண்டும்” என்று கூறியுள்ளது. “உக்ரேன் விரைவில் ரஷ்யாவுடன் சுங்க ஒன்றியம் பற்றி கையெழுத்திடாது” என்றும் அது கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் “இக்காலகட்டத்தை பயன்படுத்தி எதிர்த்தரப்பு மற்றும் ஆட்சியாளர்களுக்கு இடையே உரையாடல் தேவை என வலியுறுத்த வேண்டும் என்று அது எழுதியுள்ளது; மேலும் “உக்ரேனின் தொழிற்துறை பெருநிறுவன அதிபர்களுக்கு ஐரோப்பிய சந்தைகளில் இருக்கும் வாய்ப்புக்களைக் காட்ட வேண்டும்.”

இத்தகைய கருத்துக்கள், ஏகாதிபத்திய சக்திகளை உந்தும் நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கூட்டமைப்பு உடன்பாட்டின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு ஜனநாயகத்தை கொண்டுவர முயலவில்லை, ஆனால் உக்ரேனின் தன்னலக்குழுக்களுடன் நெருக்கமான பிணைப்புக்களை நிறுவி, தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதின் மூலம் அவர்களின் செல்வத்தை காக்க ஐரோப்பிய ஒன்றியம் மிக நம்பிக்கையானது என நம்ப வைக்க முற்படுகிறது.