தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Jaffna hospital volunteer workers strike for permanency யாழ்ப்பாண வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் நிரந்தர நியமனத்துக்காக போராடுகின்றனர்By Vimal Rasenthiran and Subash Somachandran21 December 2013Use this version to print| Send feedback இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக கடமையாற்றிய சிற்றூழியர்கள், நிரந்தர நியமனம் கோரி டிசம்பர் 12 தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈபீடிபீ) போராட்டத்தை கீழறுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள போதிலும், ஊழியர்கள் தங்களுடைய நியாயமான போராட்டத்தை உறுதியுடன் தொடரப் போவதாக உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுளோரின் ஒரு பகுதியினர் மொத்தமாக 243 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையினாலும் ஆஸ்பத்திரியில் பணிக்கு அமர்த்தப்பட்ட அவர்கள், கடந்த ஆறு வருடங்களாக சேவையாற்றுகின்றார்கள். அவர்கள் தங்களை நிரந்தரமாக்கி, ஏனைய நிரந்தர ஊழியர்களின் மட்டத்துக்கு சம்பளத்தை உயர்த்தும் வரை, புதியவர்களை இணைக்க வேண்டாம் என்றும் கோருகின்றனர். இந்த தொழிலாளர்கள் மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இளைஞர்கள், யுவதிகள், யுத்த விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களும் அவர்கள் மத்தியில் உள்ளனர். யுத்த காலத்தில், ஆஸ்பத்திரியில் இந்த வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதை சுகாதார அமைச்சு கைவிட்டிருந்தது. அதனால் ஆஸ்பத்திரி இந்த தொழிலாளர்களை கொண்டே தனது நிர்வாகத்தை இயக்கியது. கடந்த காலத்தில் அமைச்சு வெற்றிடங்களை நிரப்பும்போது இந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தது. தொழிலாளர்கள் கடந்த ஆறு வருடங்களாக அற்ப ஊதியத்துடனேயே சேவையாற்றி வந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களுக்கு 75 ரூபா மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இவர்களுக்கு 175 ரூபா ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே அவர்கள் அன்றாட செலவுக்கே போதாத அற்ப தொகையுடன் நீண்ட காலமாக பொறுமையாக காத்திருந்தனர். எனினும், அண்மையில் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கொடுக்க அதிகாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தபோது, கல்விப் பொதுத் தராதர (கபொத) சாதாரண தரம் சித்தி பெற்றவர்களுக்கே நியமனம் வழங்கப்படும் என இந்த தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளனர். ஈபீடிபீ தனது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து, வெளியில் உள்ளவர்களுக்கு நியமனங்களை வழங்கியதனால், இந்த தொண்டர் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆரம்பத்தில், இந்தப் பதவிக்கான கல்வித் தகமையாக, பாடசாலையில் 8ம் தரத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். தற்போது அதிகாரிகள் கபொத சாதரண தர சான்றிதழைக் கேட்கின்றனர். இந்த ஊழியர்களில் பலர் சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்கள். எனினும், அனைத்து ஊழியர்களும் கடந்த 6 வருடங்களாக நடைமுறை வேலையில் அனுபவம் வாய்ந்தவர்கள். மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை வழங்குவதாக அதிகாரிகள் பெருமைபட்டுக்கொள்ளும் அதே வேளை, இந்த தொழிலாளர்கள் மலிந்த கூலிக்கு உழைக்கின்றனர். இப்போது, அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பாரபட்சம் காட்டப்பட்டு புறந்தள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குடாநாட்டிலேயே பிரதான வைத்தியசாலையாகும். தொண்டர் தொழிலாளர்களை அற்ப ஊதியத்தின் கீழ் வைத்திருக்கவும் அவர்களுக்கு வேலை இல்லாமல் ஆக்கவும், அதிகாரிகள் அவர்களை இழிவாக நடத்துவது ஏன் என்பதை ஆஸ்பத்திரியின் நிலைமைகளே காட்டுகின்றன. “ஆஸ்பத்திரிக்கு 1,300 தாதி உத்தியோகஸ்தர்கள் தேவைப்பட்ட போதிலும், 600 தாதிகளே உள்ளனர். தாதியர் பற்றாக்குறை காரணமாக, புதிதாக அமைக்கப்பட்ட 3 சத்திர சிகிச்சை நிலையங்கள் இயங்காமல் இருக்கின்றன. இரண்டு இருதய சிகிச்சை நிபுணர்கள் இருக்கின்ற போதிலும், தாதியர் பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு உரிய நோயாளர் விடுதிகள் அமைக்கப்படவில்லை,” என தாதிய உத்தியோகஸ்தர் ஒருவர் WSWSக்கு கூறினார். “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் போதுமான வசதிகள் இல்லாததால், போதனா வைத்தியசாலை நோயாளிகளால் நிரம்பியுள்ளது. நோயாளிகள் நடைக்கூடத்திலும் படுத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனினும், எங்களிடம் போதுமான மருந்து இல்லை. 10ம் வாட்டில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளி, இப்போதும் தினமும் 2,000 ரூபாவுக்கு மருந்துகளை வெளியில் வாங்கத் தள்ளப்பட்டுள்ளார்,” என அவர் மேலும் கூறினார். யுத்த காலத்தில் இந்த தொண்டர்களின் சேவை அளப்பரியது. இந்த தொண்டர்கள் பல மாடிகளுக்கு படிகள் மூலம் நோயாளிகளை காவிச் செல்கின்றனர். தமது வேலைகளை சரியாக மேற்கொள்வதற்கு இந்த தொண்டர் ஊழியர்களின் சேவை அவசியம் என ஒரு தாதி தெரிவித்தார். “அவர்கள் தங்களை அர்ப்பணித்து எங்களுக்கு உதவுகின்றனர். இன்று நோயாளியை வைத்தியர் ஒருவரே தள்ளு வண்டியில் வைத்து தள்ளிச் செல்வதை நான் கண்டேன். அரசாங்கம் குழப்பமின்றி அவர்களது கோரிக்கையை வழங்க வேண்டும்,” என்றார். வைத்தியர்கள், தாதிமார் மற்றும் ஏனைய நிரந்தர தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கின்றனர். தொண்டர்களை ஆதரித்து அவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய்தனர். அரசாங்கமும் அதன் பங்காளியான ஈபீடிபீயும் வேலை நிறுத்தத்தினை கீழறுப்பதற்கு முயற்சிக்கின்றன. குண்டர் நடவடிக்கைகளுக்கும் துணைப்படை செயற்பாடுகளுக்கும் பேர்போன ஈபீடிபீ, சில தொண்டர் ஊழியர்களை தமது அலுவலகத்துக்கு அழைத்து அச்சுறுத்தியுள்ளது. “கபொத சாதாரண தரம் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதை கவனத்தில் எடுக்காவிட்டால், உங்களை அகற்ற இராணுவம் அல்லது பொலிஸ் வரவழைக்கப்படுவதோடு புதியவர்களுக்கு வேலை கொடுப்போம்,” என ஈபீடிபீயின் ஒரு உள்ளூர் தலைவர் அச்சுறுத்தினார். தொழிலாளர்களின் போராட்டத்தினை வன்முறை மூலம் அடக்குவதற்காக ஈபீடிபீ தயாரிக்கின்றது என்பதே இதன் அறிகுறியாகும். ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, சிறிலங்கா சுதந்திர தொழிற்சங்கம், சுகாதார அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்து கொடுப்பதாக தொழிலாளர்களுக்கு கூறி, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தது. முக்கியமாக, பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை வந்து பார்க்கவில்லை. வேலை நிறுத்தம் சம்பந்தமாக கூட்டமைப்பு முழு மௌனம் காப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல. கூட்டமைப்பு பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்டிருப்பதுடன், வடக்கு மாகாண சபையையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களுக்கு மேலும் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் இந்தியாவின் உதவியைப் பெற முயற்சிக்கும் ஒரு ஏகாதிபத்திய-சார்பு கட்சியாகும். யாழ்ப்பாண வைத்தியசாலையின் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள், ஏனைய பிரதேசங்களில் உள்ள சுகாதார சேவைத் தொழிலாளர் முகம் கொடுக்கும் துன்பங்களை விட மோசமானதாகும். நாடு முழுவதிலும், ஆயிரக் கணக்கான சிற்றூழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் இன்னமும் நிரந்தர நியமனமின்றி உள்ளனர். சிலர் நிரந்தர சேவைக்கு உள்வாங்கப்பட்டாலும் மற்றவர்கள் இன்னமும் ஒப்பந்த அடிப்படையிலேயே வேலை செய்கின்றார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி சிக்கன நடவடிக்கைகளை திணிக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சமூக சேவைகளுக்கான செலவை வெட்டுவது உட்பட சுகாதார சேவைக்கான செலவை வெட்டித்தள்ளியுள்ளது. உலகம் பூராவும் இடம்பெறுவது போல், இலவச மருத்துவ சேவைகளை மிக வேகமாக வெட்டித் தள்ளும் இலங்கை அரசாங்கம், அதை இலாபம் குவிக்கும் தொழிற்துறையாக்குவதன் பேரில் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை முன்னிலைப்படுத்துகிறது. மாடிப்படிகளில் பொருட்களை எடுத்துச் செல்லும் போது விழுந்து காயமடைந்த நிலையில் இதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண் தொழிலாளியை எமது நிருபர்கள் சந்தித்தனர். “எனது நான்கு பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் மணம் முடித்துவிட்டார். நான் மூன்று பிள்ளைகளையும் எனது தாயாரையும் பாராமரிக்கின்றேன். யுத்தத்தின் இறுதி நாட்களில் எனது கணவர் காணாமல் போய்விட்டார், இன்னமும் அவரைப் பற்றி எந்தவிதமான தகவல்களும் இல்லை. நான் வேலைக்கு வரும் முன்னர், இடியப்பம் தயாரித்து விற்றுவிட்டுத்தான் வருவேன். “நான் போக்குவரத்துக்கு 200 ரூபா செலவு செய்து கிளிநொச்சியில் இருந்து வருகின்றேன். எனக்கு நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே வருகின்றேன். வேலை நேரத்திலேயே நான் விபத்துக்குள்ளான போதிலும், எனக்கு எந்தவிதமான நட்டஈடும் கிடைக்கவில்லை,” என அவர் கூறினார். கிளிநொச்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்துவரும் ஒரு ஊழியர், தான் 230 ரூபா போக்குவரத்துக்கு செலவிடுவதாக கூறினார். இதானல் அவரும் அவரது நண்பிகளும் மாதாந்தம் 1,500 ரூபா வாடகை செலுத்தி ஒரு அறையில் தங்கியிருக்கின்றனர். தொழிலாளர்கள் சீருடைக்காக 800 ரூபாவும் சப்பாத்துக்காக 600 ரூபாவும் செலவிட வேண்டும். செலவை இந்த சிறிய சம்பளத்தில் ஈடு செய்ய முடியாததனால் தான் தகப்பனாரிடம் பணம் பெற்றுக்கொள்வதாக இன்னொரு தொழிலாளி கூறினார். “நிரந்தர நியமனம் தருவதாக கூறி எங்களை ஈபீடிபீயின் தேர்தல் வேலை செய்யச் சொன்னார்கள். ஆனால் இப்போது அவர்கள் வேறு விதமாக பேசுகின்றனர். தமிழ் கூட்டமைப்பு எங்களை வந்து பார்க்கவில்லை. அவர்கள் எங்களைக் கவனிப்பதில்லை. அதிகாரிகள் எங்களிம் கல்வித் தகமைகள் பற்றிப் பேசுகின்றார்கள். நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக, எல்லா பிரிவுகளிலும் உள்ள எல்லா வேலைகளிலும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் என்ன தகுதியைக் கேட்கின்றார்கள்? எங்களுக்கு நிரந்தர நியமனம் தரவேண்டும். அரசாங்கம் எங்களுடன் பேச விரும்புவதாக கூறப்படுகின்றது. அவர்கள் எங்களின் போராட்டத்தினை திசை திருப்பி கவிழ்க்க முயற்சிக்கின்றனர், அப்படித்தானே?” சுகாதாரத் துறையில் உள்ள தொழிலாளர்கள், இந்த தொழிலாளர்களின் போராட்டங்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும். |
|
|