சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கையில் தனியார் பல்கலைக்கழத்தை சட்ட ரீதியாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Suranga Sriwardane
22 October 2013

Use this version to printSend feedback

கடந்த செப்டம்பர் 22 அன்று அரசாங்கம் சமர்ப்பித்த, தனியார் பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் சட்ட ரீதியாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அக்டோபர் 9ம் திகதி நடந்த பாராளுமன்ற விவாதத்தின் முடிவில் நிறைவேற்ற்றப்பட்டது. எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ), வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக வாக்களித்ததோடு போலி விமர்சனங்களை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபீ) தனது பக்க சார்பினை வெளிப்படுத்தியது.

கட்டம்கடமான அபிவிருத்தி திட்ட சட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் சுருட்டிக்கொள்ளப்பட்ட தனியார் பல்கைலைக்கழக சட்டத்தை வேறொரு வகையில் அமுல்படுத்துவாகும்.

லங்க்ஷியார் பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும், தற்போது மாலபேயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கும் மற்றும் அதன் பட்டச் சான்றிதழ்களுக்குமுள்ள தடையை விலக்கி, அவற்றின் செல்லுபடித்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இப்புதிய வர்த்தமானி அறிக்கையை அரசாங்கம் கொண்டுவந்தது. இதற்காக தற்போது,உயர்கல்வி நிறுவனங்களின் முன்தேவை வரம்புகள், தகுதி சான்றிதழ் மற்றும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான முக்கியமான குழு ஒன்றும்மேலும்நிர்வாகசபைகள்இரண்டும் இப்போது உயர்கல்வி அமைச்சினால் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விவாதத்தினை ஆரம்பித்து வைத்த, அரசாங்கம் சார்பாக முன்னிற்கும் அதன் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பிரித்தானிய லங்க்ஷியர் பல்கலைக்கழக கிளை ஒன்று, மீரிகமவில் நிறுவப்படும் புதிய முதலீட்டு அபிவிருத்தி வலயத்துக்குள் ஆரம்பிக்கப்பட தீர்மானித்துள்ளதாகவும், அதற்காக 120 ஏக்கர் காணிப்பகுதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான வேலைகள் பொதுநலவாய அமைப்பு அரச தலைவர்கள் மாநாட்டுக்கு சமாந்தர காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க பல்கலைக்கழகங்களுள் தற்சமயம் ஒவ்வொரு ஆண்டும் 25,000 வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே இடவசதியுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தினர், தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு கல்விகற்க அனுப்பினாலும், பெரும்பாலானோருக்கு அவ்வாறு செய்வது அசாத்தியமாகும். இந்த தனியார் பல்கலைகழகங்கள் ஆரம்பிக்கப்படுவதால் அம்மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிட்டலாம் என்று கூறிய அபேவர்த்தன, லங்க்ஷியர் பல்கலைகழக கிளை ஒன்றை நிறுவும் வேலைத்திட்டத்தினை நியாயப்படுத்தி, அரசாங்கத்தினதும் அதன் அடிவருடிகளினதும் வழமையான பொய்ப்பேரிகைகளை கட்டவிழ்த்துவிட்டார்.

கிராமப்புற வறிய மாணவர்களது கல்விக்கான வாய்ப்புக்களை விஸ்தரிப்பது அரசாங்கத்தின் பிரயத்தனம் அல்ல, மாறாக, உலக பொருளாதார நெருக்கடி நிலமைகளுக்குள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியினதும் ஆணைகளின்படி இலவசக் கல்வியை அகற்றிவிடுவதே ஆகும். உலக ரீதியாக அபிவிருத்தியுறும் நெருக்கடிக்குள், சர்வதேச நிதி மூலதனத்துக்கான முதலீட்டுக் களம், சேவை மற்றும் வளம் என்பவற்றை இலாபமீட்டுவதற்காக முதலீட்டாளர்களுக்கு திறந்து விடவேண்டிய நிலைக்கு எல்லா நாடுகளும் நெருக்கப்பட்டுள்ளன. சகல நாடுகளிலும் அரசாங்கங்கள் கல்விக்காக ஒதுக்கும் நிதியை வெட்டிச்சரித்து அவற்றை முதலீட்டுக்கென ஒதுக்குவது இந்த நிபந்தனையின் கீழேயே ஆகும். இதன்மூலம் அரசாங்க செலவீனத்தை வெட்டி, இலங்கை முதலாளிகளுக்கும் இலாபத்தை சுரண்டும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உயர்கல்வி அமைச்சுக்கு வெளியே, இந்த பேச்சுவார்த்தைகளுக்காக முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் தலைமைத்துவம் வழங்குவதன் மூலம் தெளிவாவது என்னவெனில், கல்வியை இலாபமீட்டும் தொழிற்துறையாக மாற்றிவிடுவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் தயாரிப்பே ஆகும். மேலும் அத்தகைய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஐந்தை உருவாக்குவதற்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கா செயற்பட்டு வருவதாகவும் அபேவர்த்தனா குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பல்கலைக்கழகங்களை வரிச்சலுகைகளுடன் முதலீட்டு வலயங்களுக்குள் நிறுவ எதிர்பார்க்கப்படுகின்றது. லங்க்ஷியர் பல்கலைக்கழகத்துக்கு, 15 வருடகால வரிச்சலுகை வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் முன்னர் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை காலமும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களால் செயற்படுத்தப்பட்டு, தற்போது இராஜபக்ஷ அரசாங்கத்தால் மேலும் துரிதமாகவும் கொடியமுறையிலும் முன்னெடுக்கப்படும் அரச கல்வியை வெட்டும் வேலைத்திட்டங்களின் கீழ், இந்த நாட்டில் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றும் பல்கலைக்கழக நுழைவு வாய்ப்புகள் அற்றுள்ள 85 சதவீதத்துக்கும் அதிகளவிலான மாணவர்களுக்கும், தனியார் பல்கலைகழகங்கள் நிறுவப்படுவதன் மூலம் பல்கலைக்கழக நுழைவுக்கான வாய்ப்பு கிட்டும் என்பது ஒர் அப்பட்டமான பொய்யாகும்.

தற்சமயம் கூட, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உத்தேச பல்கலைக்கழகங்களில் முகாமைத்துவப் பட்டச்சான்றிதழ் 4-5 இலட்சங்களுக்குள் விற்பனையாகும் என்றும், தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டா போட்டியால் இத்தொகை மேலும் குறையக் கூடும், என்றும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இப்பேர்ப்பட்ட பணச்செலவுகளுக்கு மத்தியில், உயர்தரம் சித்தியெய்திய பெரும்பாலான கிராமப்புற வறிய மாணவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்பு கிட்டும் என்று கூறுவது கேலிக்குரிய ஒன்றேயாகும்.

பல்கலைக்கழக நுழைவு வசதிகள் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டில் மட்டும் 16,150 மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறும் யூனெஸ்கோ தகவலை பெரிதுபடுத்திக் காட்டும் அபேவர்த்தன, உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பற்ற இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், இச் சதவீதம் வெறும் 8.2 மட்டுமே என தெரிவிக்கின்றார். அந்த எண்ணிக்கையிலும் பெரும்பாலோனோர், தமது காணிகளை விற்று கடன்பட்டு அவ்வாய்ப்பினைப் பெற்ற மத்தியதர வர்க்க பெற்றோரின் பிள்ளைகளே ஆவார்.

உயர்வடையும் தேவைக்கேற்ப, தற்போதுள்ள அரசாங்க பல்கலைக்கழக அமைப்பில்  புதிதாக பல்கலைக் கழகங்களை சேர்ப்பதற்கு, அல்லது, அந்த பல்கலைக் கழகங்களின் உட்கட்டுமான வசதியை அபிவிருத்தி செய்வதற்கு, இதுவரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்களைப் போன்றே இராஜபக்ஷ அரசாங்கமும் எந்தவொரு அடிப்படை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தனியார் பல்கலைகழகங்கள் அமைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கும் அதே வேளை, அரசாங்க கல்விச் சேவைக்கான மொத்தத் தேசிய உற்பத்தியின் ஒதுக்கீட்டை இம்முறை நூற்றுக்கு 1.51 வரை வெட்டிக் குறைத்துக்கொண்டே, இலங்கையைஅறிவு மையமாக மாற்றுவதாக அரசாங்கம் வாய்ச்சவாடல் விடுக்கின்றது.

ஆட்சியேறிய சகல அரசாங்கங்களினாலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிதி வெட்டுக்களினாலேயே அரச பல்கலைக்கழக அமைப்பு சீரழிந்துள்ளது. எதிர்க்கட்சிகளில் இருந்து விவாததில் கலந்துகொண்ட யூஎன்பீ, ஆட்சியில் இருந்த போது இத்தகைய வெட்டுக்களை அமுல்படுத்திய ஒரு கட்சியே ஆகும்.

1981ல்கல்வி வெள்ளை அறிக்கைஒன்றை கொண்டு வந்த யூஎன்பீ, கல்வியை தனியார் மயப்படுத்துதலை ஆரம்பித்து வைத்தது. விவாவதத்தில் பங்கு கொண்ட யூஎன்பீ பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவாசம்,தனியார் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதை நாம் எதிர்க்கவில்லை, இந்தப் பல்கலைக் கழகங்கள் புகுத்தப்படும் செயல்முறைகளையே நாம் எதிர்க்கின்றோம்,” என்று அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கினார். மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு மத்தியில் கல்விவெட்டுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு நிலவுவதால்தன்னைக் காப்பாற்றிக்கொள்ளதனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு முன் அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதி வழங்கப்பட வேண்டும் என்று காரியவாசம் முதலைக்கண்ணீர் வடித்தார். விவாத இறுதியில் யூஎன்பீ பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தமானி அறிக்கைக்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.

ஜேவிபீ பாராளுமன்ற உறப்பினரான அநுரகுமார திசாநாயக்காவும், தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. பாடசாலை கல்வியின் நெருக்கடியைப் பற்றி குறிப்பிட்ட அவர்,இவ்வாறான அறிக்கைகளுக்கு முன் சர்வதேச கொள்கைகளுக்கு ஏற்ப கல்விக்கென தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்வதன் ஊடாக கல்விக் கொள்கையொன்றை ஏற்படுத்துதல் அவசியமாகும், எனத் தெரிவித்தார்.

சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஜேவிபீ, தனது முதலாளித்துவ தேசியவாத வேலைத் திட்டங்களில் வெளிநாட்டு முதலீட்டை வரவழைப்பதை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. எனினும் பொய்யான எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக அது வாக்களித்துள்ளது.

கல்வி தனியார் மயப்படுத்தலுடன் அரசாங்கம், மாணவர்கள், விரிவுரையாளர்கள் மீது கட்டவிழ்த்துள்ள அடக்குமுறை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக இவர்கள் கடைபிடிக்கும் மௌனமானது, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு யூஎன்பீ, ஜேவிபீ ஆகிய கட்சிகள் வழங்கும் ஒத்துழைப்பையே வெளிக்காட்டுகின்றது.

மாணவர்களின் கல்வியை தடை செய்து, மாணவர்களின் வகுப்புகளைத் தடை செய்து, பல்கலைக்கழக நிர்வாகத்தை முற்றாக மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தி வரும் அரசாங்கம், வளர்ந்து வரும் மாணவர்களது போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் முகமாக பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தை பயன்படுத்துவது தொடர்பாக இவ்விவாதத்தில் வேண்டுமென்றே கலந்துரையாடப்படவில்லை.

முன்னணி சோசலிச கட்சியினது மாணவர் அமைப்பான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இம் மாணவர் எதிர்ப்பினை பலவீனமாக்குவதற்காக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மூலம் அரசாங்கத்தை அடிபணியச் செய்யலாம் என்ற நப்பாசையை பரப்பி வருகின்றது.