தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா Signs of China-North Korea tensions after Jang Song-thaek’s execution ஜாங் சாங்-தேக் மரணதண்டனைக்கு பின்னர் சீனா-வட கொரியா அழுத்தங்களின் அறிகுறிகள் By
Peter Symonds Use this version to print| Send feedback கடந்த வாரம் வடகொரியாவின் இரண்டாம் தலைவர் ஜாங் சாங்-தேக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபின், பியோங்யாங் ஆட்சி சீனாவில் இருந்து அதன் வணிகர்களைத் திருப்பி அழைத்துள்ளது என்று தென் கொரிய யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது. “ஏராளமான வட கொரிய வணிகர்கள் ஷென்யாங், டான்டோங் ஆகிய இடங்களில் இருந்து இந்த வாரம் அவசரமாக வீடு திரும்பியுள்ளனர்” என்று ஒரு ஆதாரம் கூறுகிறது. சீனாவுடனான பொருளாதார உறவுகளுக்கு ஜாங் பொறுப்புக் கொண்டிருந்தார்; அதுதான் இதுவரை வட கொரியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளி; இதில் இரு நாடுகளின் எல்லையில் இருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் அடங்கும். ஜாங் மீதான குற்றச்சட்டுகளில் ஒன்று அவர் “நாட்டின் விலையுயர்ந்த அரிய வளங்களை மலிவு விலையில் விற்றார்” என்பதாகும் – உட்குறிப்பாக சீனாவை இது உட்படுத்தும் விமர்சனம். பியோங்யாங், சீனாவில் இருந்து வணிகர்களைத் திரும்ப அழைத்துள்ளது, இளம் தலைவர் கிம் ஜோன் உன் அதிகாரத்தின்மீது தன் பிடியை இறுக்கும்போது ஆட்சிக்குள் பரந்த அதிகாரிகள் பணிநீக்கத்திற்கு முன்னோடியாக இருக்கலாம். இது இன்னும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மோசமடைய இட்டு செல்லும். மற்றொரு ஆதாரம் வட கொரியா அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும் படிப்படியாகத் திரும்ப அழைத்துள்ளது என்னும் திட்டத்தை யோன்ஹாப்பிடம் கூறியது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீரழிந்து போயுள்ளது. வட கொரியா கடந்த டிசம்பர் மாதம் ராக்கெட் ஏவுவதைத் தொடர வேண்டாம் என்ற பெய்ஜிங்கின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்தது; பெப்ருவரி மாதம் மூன்றாம் அணுவாயுதச் சோதனை, புதிய ஐ.நா. பொருளாதாரத் தடைகளுக்கு வழியாகப் போயிற்று. அதைச் சீனாவும் ஆதரித்தது. கொரிய தீபகற்பத்தில் அழுத்தங்கள் மார்ச், ஏப்ரலில் வியத்தகு முறையில் பெருகின; அப்பொழுது பியோங்யாங் பொருளாதாரத் தடைகள் மற்றும் கூட்டு அமெரிக்க-தென் கொரிய இராணுவப்பயிற்சிகளுக்கு விடையிறுக்கும் வகையில் முரட்டுத்தன ஆனால் வெற்று அச்சுறுத்தல்களைக் கொடுத்தது. சீனாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தில் ஒபாமா நிர்வாகம் வடகிழக்கு ஆசியாவில் அழுத்தங்களை, அதன் “ஆசியாவில் முன்னிலை” என்பதின் ஒரு பகுதியாக கூட்டியுள்ளது. வட கொரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், பென்டகன் ஆத்திரமூட்டும் வகையில் B52, B2 குண்டு போடும் விமானங்களை தென் கொரியாவிற்கு பறக்க விட்டு, அதன் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை முறைகளையும் ஆசியாவில் விரிவாக்கியது: இவை முக்கியமாக சீனாவிற்கு எதிரானவை ஆகும். சீனாவை பொறுத்தவரை வட கொரியா ஒரு தர்மசங்கடம். தன்னுடைய எல்லையில் பெய்ஜிங் அரசியல் உறுதியற்ற நிலையை விரும்பில்லை; அதுவும் பியோங்யாங் ஆட்சி சரிவதை. அதே நேரத்தில் வட கொரியாவின் ஆக்கிரோஷ நிலைப்பாடு அமெரிக்காவிற்கு வட கிழக்கு ஆசியாவில் அதன் இராணுவக்கட்டமைப்பை தொடர போலிக் காரணத்தைத் தோற்றுவித்துள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவும் வட கொரியாவின் அணு ஆயுதங்களை தங்கள் சொந்த ஆயுதங்களை கட்டமைக்க நியாயப்படுத்தும் என்னும் கவலையையும் பெய்ஜிங் கொண்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில், சீனா ஏற்கனவே வட கொரியாமீது அணுவாயுதங்களை அகற்றவும் மீண்டும் தேக்கமாக உள்ள 6 நாடுகள் பேச்சுக்களில் அதன் அணுத்திட்டங்கள் குறித்து சேரவும் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது – 6 நாடுகள், இரு கொரியாக்கள், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா–. சீனா, ஐ.நா. பொருளாதாரத் தடைகளில் சிலவற்றை சுமத்தவும் தொடங்கிவிட்டது; இது வட கொரியாவில் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறைந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட கிம் ஜோங்-உன்னின் தகப்பனாரும் முன்பு பதவியில் இருந்தவருமான கிம் ஜோங் இல்லுடன் ஜாங் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தார். அவர் கிம் ஜோங் இல்லுடன் மூன்று முறை சீனாவிற்கு 2010, 2011ல் பயணித்துள்ளார்; அவை சீன மாதிரியில் சந்தைச்சார்பு மறுகட்டமைப்பைச் செயல்படுத்துவதில் குவிப்புக் காட்டின. ஜாங் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இன்னொரு முறை சீனாவிற்கு பொருளாதாரக் கொள்கை குறித்து அதன் தலைவர்களை சந்திக்கச் சென்றிருந்தார். பியோங்யாங்கில் அதன் உயர்மட்ட தலைவரின் திடீரென்ற, வியத்தகு இழப்பு சீனாவில் ஆளும் வட்டங்களில் கவலையை தூண்டிவிட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக சீன வெளியுறவு அமைச்சரகம் ஜாங்கின் தண்டனையை வட கொரியாவின் “உள்நாட்டு விவகாரம்” என்று அறிவித்துள்ளது. ஆனால் Ta Kung Pao, பெயஜிங்கின் ஹாங்காங்கில் உள்ள குரல், தண்டனையை சீனாவிற்கு “விழித்துக் கொள்ள வேண்டும் என்னும் அழைப்பு” என விவரித்துக் கூறியுள்ளது: “இந்நிகழ்வு வட கொரியாவில் உள்விவகாரங்களில் சீனச்செல்வாக்கு பூஜ்யத்தை ஒட்டி உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.” அது “வட கொரியாவில் உறுதியற்ற தன்மைக்கான சாத்தியம்" “தென் கொரியாவை விட மிக அதிக, இன்னும் ஆபத்தானதாகும்” என விவரித்துள்ளது. பெய்ஜிங் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜு பெங், நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “ஜாங் வட கொரியாவில் ஒரு தோற்றப் பொலிவு நபராக இருந்தார், குறிப்பாக பொருளாதாரச் சீர்திருத்தம், புதுமை ஆகியவற்றில். வட கொரியாவில் இவரை நம்பலாம் என்றுதான் சீனா கருதியிருந்தது. இது ஒரு மிக கெடுதலான அடையாளம் ஆகும்.” சீனா குறித்த மற்ற பகுப்பாய்வாளர்கள் இன்னும் எச்சரிக்கையுடன் உள்ளனர். China Daily இடம் பேசிய காவோ ஹாரோங், Xinhua Centre for World Affairs Studies ல் வடகொரியா பற்றிய வல்லுனர், எச்சரித்துள்ளார்: “ஜாங் தண்டனைக்குப் பின், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK) சீனாவுடனான ஒத்துழைப்புத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யக்கூடும்.” சிங்குவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் பேராசிரியர் சென் க்வி, DPRK யும் சீனாவும் பொருளாதாரத் திட்டங்களில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து, உறவுகளை மறுகட்டமைக்க சிறிது காலம் பிடிக்கும்” என்றார். உத்தியோகபூர்வ People’s Daily, ஜாங் அகற்றப்பட்டது சீனாவுடன் முறிவை பிரதிபலிக்கிறது என்னும் கருத்தை எள்ளி நகையாடி, அது வட கொரியாவிற்கு அதன் ஒரே அரசியல், பொருளாதார ஆதரவை இழக்கச் செய்யும் என்றது. சீனாவுடனான வட கொரிய வணிகம் கடந்த ஆண்டு அதன் மொத்த வணிகத்தில் கிட்டத்தட்ட 90% இருந்தது; முக்கிய இறக்குமதிகளான எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவை இருந்தன. “கிம் ஜோங் உன்னிற்கு சீனாவுடன் முறிவு என்பது ஒரு தற்கொலை தேர்வாக இருக்கும்" என்று கட்டுரை அறிவிக்கிறது. அரசு நடத்தும் Global Times வடகொரியா மற்றும் சீனா இரண்டும் இரு பொருளாதார உடன்பாடுகளை டிசம்பர் 8 அன்று கையெழுத்திட்டன—அன்றுதான் ஜாங் பதவியில் இருந்து வெளியேறினார்; ஒன்று உயர்வேக ரயில்வேக்கும், இணையான மோட்டார் பாதைக்கும், மற்றொன்று வட கொரிய மாநிலமான வடக்கு ஹாம்க்யோங்கில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவவும். செய்தித்தாள் இது தொடர்ந்த பொருளாதார ஒத்துழைப்பின் அடையாளம் என்றாலும், இரு உடன்பாடுகளும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜாங்கின் மரணதண்டனை தாக்கங்களை பெய்ஜிங் குறைமதிப்பிற்கு உட்படுத்தினாலும், அவர் இறப்பு கிம் ஜோங்-நாம், கிம் ஜோங் உன்னின் மூத்த சகோதரர் உடன் பிணைந்துள்ளது என சீன, தென்கொரிய செய்தி ஊடகம் மற்றும் இணைய தளங்களில் ஊகம் உள்ளது. கிம் ஜோங் நாம், கிம் ஜோங் இல்லிற்கு அடுத்து பதவிக்கு வரக்கூடியவர் எனக்கூறப்பட்டது, ஆனால் டிஸ்னிலான்ட் பார்க்க ஒரு தவறான பாஸ்போர்ட் மூலம் ஜப்பானுக்குள் அவர் நுழைய முயன்ற விந்தையான நிகழ்வு, அவரை பாதித்து விட்டது. அவர் இப்பொழுது சீனாவில் வாழ்கிறார். யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, ஜாங் கிம் ஜோங் நாமைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்; இது கிம் ஜோங் உன்னை அகற்றும் சதித்திட்டம் பற்றிய சந்தேகங்களை எழுப்பியது. ஒரு ஆதாரம் தென் கொரியாவின Chosun Ilbo விடம் சீனா ஜோங் நாமை கிம்ஜோங் உன் ஆட்சி சரிந்தால் அதை எடுத்துக் கொள்ளத் தயார் செய்தது என்ற ஊகத்தை கூறியது. “வதந்திப்படி சீனா கிம் ஜோங் நாமைக் காக்கிறது” என்று ஆதாரம் சேர்த்துக் கொண்டது. இத்தகவல்கள் முற்றிலும் ஊகமானவை, ஆனால் பெய்ஜிங்கில் பியோங்யாங்கில் அரசியல் எழுச்சி ஏற்பட்டால் விளைவுகள் குறித்த கவலை சீனாவிற்கு இருக்கையில் வாய்ப்புகள் இல்லை எனக் கூறுவதற்கில்லை. ஏப்ரல் மாதம் பெரும் அழுத்தங்களிடையே ஜேர்மனியச் செய்தி நிறுவனம் Deutsche Presse-Agentur ஒரு ஆதாரத்தை மேற்கோளிட்டு சீனத் தளபதிகள் குழு ஒன்று, ஒருவேளை கொரிய தீபகற்பத்தில் “பெரும் மோதல்கள் ஏற்பட்டால்” அவசர திட்டங்களை தயாரித்தது எனக் கூறியது. இவற்றுள் “வடகொரியாவிற்குள் மோதல் ஏற்பட்டால், சீனப்படைகள் நுழையும் என்றும், அங்குள்ள அணுவாயுத வசதிகளைக் காக்கும், அணுப்பேரழிவைத் தடுக்கும் என்னும் வாய்ப்பும் இருந்தது.” ஏப்ரல் போலவே, சீன இராணுவம் கடந்த வாரம் எல்லைப் பகுதியில் பயிற்சிகளை நடத்தியது. டிசம்பர் 10ம் திகதி Global Times தலையங்கம் பெய்ஜிங்கின் கவலைகளை சுட்டிக்காட்டியது. அது இரு நாடுகளின் நலன்களிலும் “நட்புறவு” உள்ளதை வலியுறுத்தி, பின் “சீனா, கிம் ஜோங் உன் சீனாவிற்கு விரைவில் வருகை புரிய உதவ வேண்டும்” என்ற ஆலோசனையை கொடுத்துள்ளது. கிம் ஜோங் உன் இரண்டு ஆண்டுகள் முன் பதவிக்கு வந்ததில் இருந்து சீனாவிற்கு செல்லவில்லை; இது தெளிவாக சீன ஆளும் வட்டங்களில் அமைதியற்றை நிலையை ஏற்படுத்தியுள்ளது. |
|
|