சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

“Almost Orwellian”: US Judge indicts NSA spying

ஏறத்தாழ ஓர்வெல்லியன்": அமெரிக்க நீதிபதி NSA உளவுவேலையைக் குற்றஞ்சாட்டுகிறார்

Bill Van Auken
18 December 2013

Use this version to printSend feedback

அமெரிக்காவிற்கோ, அமெரிக்காவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிற்குள்ளேயோ செய்யப்பட்ட தோற்றப்பாட்டளவில் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் அதிரடியாக பதிவு செய்து சேமித்து வைத்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் (NSA) பாரிய உளவு நடவடிக்கையை, திங்களன்று அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் வாஷிங்டனில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு "ஏறத்தாழ ஓர்வெல்லியன்" பாணியில் இருந்ததாக கண்டது.

NSAஆல் நடத்தப்பட்ட அந்த சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு புறம்பான உள்நாட்டு உளவுவேலைகளுக்கு கடிவாளமிட, நீதிபதி ரிச்சார்ட் லியோனின் தீர்மானம் ஒன்றுமே செய்யவில்லை என்றபோதினும், இந்த அசாதாரணமான விளக்கமே அமெரிக்க அரசாங்கம் ஒரு பொலிஸ் அரசுக்கு பொருந்திய அணுகுமுறைகளுக்காக குற்றவாளியாக உள்ளதென்பதற்கு ஓர் உத்தியோகபூர்வ ஒப்புதலாக இருக்கிறது.

NSAஇன் உள்நாட்டு உளவு வலைபின்னல் இருந்ததை அம்பலப்படுத்திய NSAஇன் ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டென், அந்த தீர்ப்பை காரணங்காட்டி, அமெரிக்காவிற்கும் உலக மக்களுக்கும் இத்தகைய உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டுமென்ற தமது முடிவு சரியானதே என்பதை அது நிரூபித்துள்ளதாக அறிவித்தார்.

ஸ்னோவ்டென் ஓர் அறிக்கையில், NSAஇன் பாரிய உளவுவேலை திட்டங்கள், ஓர் அரசியலமைப்பு சவால்களையும் எதிர்கொள்ளாது என்ற எனது நம்பிக்கையின் மீது நான் செயல்பட்டேன், மேலும் பொது நீதிமன்றங்களில் இத்தகைய பிரச்சினைகள் தீர்மானிக்கப்படும் விதத்தைக் காண அமெரிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, என்று தெரிவித்தார். ஒரு இரகசிய நீதிமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட இரகசிய திட்டம், இன்று, வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும் போது, அமெரிக்கர்களின் உரிமைகள் மீறப்படுவதாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷால் நியமிக்கப்பட்ட நீதிபதி லியோன், அவரது தீர்ப்பில், NSAஇன் "மெட்டாடேட்டா" கண்காணிப்பு திட்டத்தைக் குறித்து குறிப்பிடுகையில்: இந்த திட்டமிட்ட மற்றும் உயர்-தொழில்நுட்பம் கொண்டு திரட்டும் மற்றும் விசாரணைக்காகவும் பகுப்பாய்விற்காகவும் என்ற நோக்கத்தில் நீதித்துறை ஒப்புதல் இல்லாமலேயே தோற்றப்பாட்டளவில் ஒவ்வொரு குடிமக்களின் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதுமான இதை விட பெரிய "கண்மூடித்தனமான" மற்றும் "ஏதேச்சதிகார" தாக்குதலை என்னால் கற்பனையும் செய்து பார்க்க முடியவில்லை, என்றார்.

கொள்ளை சம்பந்தமான விவகாரங்களில், சந்தேகத்திற்குரியவர்களின் தொலைபேசி அழைப்புகளை இரண்டு நாட்களுக்கு பொலிஸ் பெறலாம் என்பதோடு சம்பந்தப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 1979 தீர்ப்பானது, மூன்று தசாப்தங்களுக்கு அதிகமான காலக்கட்டத்திற்குப் பின்னர், அமெரிக்க மக்களை ஒட்டுமொத்தமாக உளவுபார்க்க சட்டரீதியிலான ஒரு முன்னுதாரணமாக ஏதோவொரு விதத்தில் பயன்படுகிறது என்ற அரசின் வாதத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

இன்னும் குறிப்பிடத்தக்க விதத்தில், கட்டுப்பாடற்ற உள்நாட்டு உளவுவேலைகளை நியாயப்படுத்துவதற்கு மட்டுமின்றி, மாறாக உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான ஏனைய ஒவ்வொரு தாக்குதலையும் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் ஒபாமா நிர்வாகத்தாலும், மற்றும் அதற்கு முன்னர் புஷ் நிர்வாகத்தாலும், தூண்டப்பட்ட முக்கிய போலிக்காரணத்தையும் நீதிபதி நிராகரித்தார்.

உண்மையில் NSAஇன் திரளான மெட்டாடேட்டா சேகரிப்பின் பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட ஒரேயொரு விஷயம் ஒரு உடனடி பயங்கரவாத தாக்குதலைத் நிறுத்தியது" என்பதை அரசாங்கம் மேற்கோள்காட்ட தவறியதை லியோன் துல்லியமாக கவனித்திருந்தார். NSA தரவுக்களஞ்சியத்தை தேடியதிலிருந்து" கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு பயங்கரவாத தாக்குதல் இதுவரையில் தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முற்றிலும் ஆதாரமில்லாமல் இருந்ததன்" மீது அவர் அவரது முடிவை அமைத்திருந்தார்.

NSAஇன் நடைமுறைகள் நிச்சயமாக அமெரிக்க அரசியலமைப்பின் நான்காவது திருத்தத்தில் உள்ள முக்கிய ஜனநாயக உரிமைகளை ஏறத்தாழ மீறி இருந்ததை அவர் தீர்ப்பு கவனித்திருந்தது. காரணமற்ற தேடல்கள் மற்றும் கைப்பற்றுதல்களுக்கு எதிராக தனிநபர்கள், வீடுகள், ஆவணங்கள், மற்றும் விளைவுகளில் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென, அந்த நான்காவது திருத்தம் உறுதி அளிக்கிறது.

அந்த வழக்கைக் கொண்டு வந்த இரண்டு தனிப்பட்ட வழக்காளிகளை மட்டுமே அந்த தீர்ப்பு கவனத்தில் எடுத்திருந்தது என்றபோதினும், சட்ட நிவாரணம் இல்லாவிட்டால் மக்கள் சீர்செய்ய முடியாத பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பது மட்டுமல்ல, மாறாக NSAஇன் உளவுவேலை நடவடிக்கைகள் "முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு" இருந்துள்ளமையால், பெருந்திரளான மக்கள் தொந்தரவுக்கு உள்ளாவார்கள் என்பதை நீதிபதி கண்டார்.

எவ்வாறிருந்த போதினும் இத்தகைய அனைத்து தீர்மானங்களுக்கு இடையே, நீதிபதி லியோன், இந்த வழக்கில் கணிசமான தேசிய பாதுகாப்பு நலன்கள் பணயத்தில் இருப்பதன் வெளிச்சத்தில், அரசின் மேல்முறையீடு முடிவு செய்யப்படும் வரையில் NSA உளவுவேலை நடவடிக்கைக்கு எதிராக ஒரு தடை உத்தரவை வழங்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க உடன்பட்டார். அரசின் மேல்முறையீடு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம்.

இவ்வாறு, இறுதியில், அந்த தீர்ப்பு வெறுமனே, தேசிய பாதுகாப்பு" நலன்களுக்கு சேவை செய்ய ஜனநாயக உரிமைகள் விட்டொழிக்கப்பட வேண்டுமென்ற அமெரிக்க அரசியலமைப்பின் ஒவ்வொரு அடுக்கில் இருந்தும் ஒலிக்கும் தம்பட்டத்தின் ஒரு கோழைத்தனமான எதிரொலியை வழங்கியது.

NSA உளவுவேலையில் உள்ளார்ந்திருந்த அரசியலமைப்பு உரிமைகள் மீதான முன்னொருபோதும் இல்லாத வரலாற்றுரீதியிலான தாக்குதலுக்கு, முகமையின் பொலிஸ் அரசு அணுகுமுறைகளை பாதுகாப்பதில், மற்றும் அவற்றை வெளிப்படுத்தியதற்காக ஸ்னோவ்டென் மீது அவதூறு பரப்புவதற்கு என ஒன்று மாற்றி ஒன்றை புறக்கணிப்பதே ஒளிவுமறைவற்ற தன்மை" மற்றும் "மாற்றத்திற்கான" வாக்குறுதிகளோடு அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பாக இருந்துள்ளது.

இத்தகைய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு, ஜனாதிபதி உட்பட, அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற எந்தவொரு கருத்தும் அரசியலமைப்பில் எங்குமே இல்லை. உள்நாட்டு உளவுவேலைகள் தொடர்வதை உறுதி செய்யவற்காக NSA நடவடிக்கைகளை மீண்டும் நிலைநிறுத்தும் அளவிற்கு அங்கே எந்தவொரு விடையிறுப்பும் இருந்திருக்கவில்லை. இது ஒபாமாவின் ஜனாதிபதிக்கான ஆலோசனை கமிட்டியில் மிக தெளிவாக வெளிப்பட்டுள்ளது, அது "கட்டுப்பாடு" மற்றும் "சீர்திருத்தம்" போன்ற வெற்று பேச்சுக்களோடு மக்களின் கோபத்தை திசை திருப்புகின்ற அதேவேளையில், முகமையின் உளவு திட்டங்கள் அனைத்தையும் உறுதிசெய்யும் மற்றும் நிறுவனப்படுத்தும் நோக்கில் பரிந்துரைகளைத் தயார் செய்து வருகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் வெளியிடப்பட்ட இதேபோன்ற வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், American Civil Liberties Union மற்றும் Electronic Frontier Foundation போன்றவற்றால் கொண்டு வரப்பட்டவை உட்பட, ஏனைய நீதிமன்ற வழக்குகளும் விசாரிக்கப்பட உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உட்பட நீதிமன்றங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக இத்தகைய ஒவ்வொரு வழக்கும் ஒருவேளை "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்," தேசிய பாதுகாப்பு" மற்றும் அரசு இரகசியம் என ஒரேமாதிரியாக பணிவோடு முடிக்கப்படலாம்.

செவ்வாயன்று Folha de Sao Paulo நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட "பிரேசில் மக்களுக்கு பகிரங்க கடிதம்" என்பதில் இத்தகைய போலிக்காரணங்களை ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தினார். பாரிய கண்காணிப்பு வலைப்பின்னலின் இத்தகைய திட்டங்கள் ஒட்டுமொத்த மக்களையும் அனைத்தையும் பார்க்கும் ஒரு கண்களின் கீழ் கொண்டு வருவதோடு, அதன் நகல்களையும் எப்போதுக்குமாக சேமித்து வைக்கிறது இவை ஒருபோதும் பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டவை அல்ல: அவை பொருளாதார உளவுவேலைகள், சமூக கட்டுப்பாடு, மற்றும் இராஜதந்திர ரீதியிலான சூழ்ச்சிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவை. அவை அதிகாரம் சம்பந்தப்பட்டவையாகும், என்று எழுதினார்.

ஸ்னோவ்டென் இவ்வாறு முடித்திருந்தார்: நாம் அனைவரும் அநீதிக்கு எதிராக, அந்தரங்க விஷயங்களின் மற்றும் அடிப்படை மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக ஒன்று திரண்டால், மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புமுறைகளில் இருந்தும் கூட நம்மால் நம்மை பாதுகாக்க முடியும்.

அடிப்படையில் இந்த சரியான கண்ணோட்டத்திலிருந்து எழும் முக்கிய கேள்விகள் இதுதான்: 1) அமெரிக்க அரசாங்கம் ஏன் அமெரிக்க மக்களுக்கு எதிராக, உண்மையில் ஒட்டுமொத்த உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு எதிராக, தொடர்ந்து பொய் உரைக்கிறது மற்றும் சூழ்ச்சிகள் செய்கிறது? 2) அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு துல்லியமான பாதுகாப்பை எவ்வாறு நிலைநிறுத்துவது?

வாஷிங்டனில் அரசாங்கம் ஒரு நிரந்தர சூழ்ச்சியோடு வேலை செய்கிறது, ஏனென்றால் அது மக்கள்தொகையில் பரந்த பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் சமூக நலன்களுக்கு நேரெதிராக உள்ள சமூக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அரசாங்கம்ஒபாமா நிர்வாகம், காங்கிரஸ், நீதிமன்றங்கள், மற்றும் பரந்த இராணுவ-உளவுத்துறையின் கூட்டுக்கலவைஒட்டுமொத்தமாக மக்களின் வாழ்க்கை தரங்களை கீழே இழுத்து வந்திருக்கின்ற அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட சமூக செல்வ வளத்தைக் கொள்ளையடித்து, குற்றந்தோய்ந்த மற்றும் ஒட்டுண்ணித்தனமான கருவிகளால் தன்னைத்தானே பிரமாண்டமாக கொழிக்க செய்திருக்கும் ஒரு நிதியியல் செல்வந்த தட்டின் ஒரு அரசியல் கருவியாக செயல்படுகிறது.

இந்த ஆளும் சமூக அடுக்கிற்குள் மற்றும் அதன் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர்களின் மத்தியில், அங்கே ஜனநாயகத்திற்கான பகுதியே இல்லை, அது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூக சமத்துவமின்மையின் முன்னால் ஏற்கத்தகாத ஒன்றாக உள்ளது. அது பெருந்திரளான உழைக்கும் மக்களை ஓர் எதிரியாக மற்றும் ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது, அவர்களை அரசியலமைப்பிற்கு புறம்பான கண்காணிப்பினால் மட்டுமல்ல, மாறாக டிரோன் ஏவுகணை தாக்குதல்கள் மூலமாக ஒபாமாவின் கீழ் நடத்தப்பட்ட கூடுதல் அதிகாரத்தைக் கொண்டு படுகொலை செய்தல் உட்பட ஒடுக்குமுறையின் கருவிகளைக் கொண்டு கையாள்கிறது.

எவ்வாறிருந்த போதினும், தொழிலாள வர்க்கத்திற்குள் அங்கே மிகவும் சக்தி வாய்ந்த ஜனநாயக பாரம்பரியங்கள் உள்ளன பாரிய சமூக போராட்டங்கள் மூலமாக அடிப்படை உரிமைகளுக்கான வரலாற்று மரபு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களோ, அல்லது பெரு வியாபார கட்சிகளின் எந்தவொரு பிரிவுமோ பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டின் ஓர் அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கானவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானமற்றும் அந்த விஷயத்தில் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கானகருவிகளை வழங்க முடியாது. இத்தகைய உரிமைகளுக்கான போராட்டம், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் வழிகாட்டுதலில் ஒரு பொலிஸ் அரசை நோக்கி உந்திச் செல்லும் ஆதாரமாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.