World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French war in Central African Republic intensifies humanitarian crisis

மத்திய ஆபிரிக்க குடியரசில் பிரெஞ்சுப் போர் மனிதாபிமான நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது

By Kumaran Ira
16 December 2013

Back to screen version

வெள்ளியன்று பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி Jean Yves Le Drian, நாட்டில் வன்முறை பெருகி, பிரெஞ்சு தலையீடும் இருக்கும் நேரத்தில் மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு (Central African Republic -CAR) சென்று, நாட்டின் இடைக்கால தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அவர் பிரெஞ்சு சிப்பாய்களுடனும் பேசினார், CAR ஜனாதிபதி Michel Djotodia வுடனும் பேசினார்; பிந்தையவர் செலேகா போராளிகளின் ஆதரவை கொண்டுள்ளார்.

.நா. பாதுகாப்புக் குழுவில், மனிதாபிமான நெருக்கடிகளை தடுக்க, உயரும் குழுவாத வன்முறையை நிறுத்த என்ற கருத்தில் பிரெஞ்சு மற்றும் ஆபிரிக்க தலையீட்டை அனுமதிக்கும் பிரான்ஸ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்களித்தவுடன், டிசம்பர் 5ல் பிரான்சில் Operagtion Sangaris தொடங்கியது. கிட்டத்தட்ட 2,500 ஆபிரிக்க ஒன்றிய (AU) துருப்புக்கள், பிரெஞ்சு பினாமியாக செயல்படுபவர்கள் நிலைகொள்ளப்பட்டுள்ளனர்—இந்த எண்ணிக்கை 6,000க்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

CAR தலைநகர் Bangui இல் பிரெஞ்சு சிப்பாய்களுடன் பேசிய Le Drianமோதல் வளர்ச்சி தீவிரமாக மோசமாகிவிட்டது”, இது “மனிதாபிமான நெருக்கடியை” தோற்றுவித்துள்ளது, குற்றவாளிகள், பயங்கரவாதக் குழுக்களை ஈர்த்தால் என்று பிராந்தியத்தில் “பெரும் குழப்ப” இடரையும் தோற்றுவித்துள்ளது எனக் கூறினார்.

Le Drian உடைய அறிக்கை, CAR ல் பிரெஞ்சு தலையீடு அடிப்படையில் ஒரு அரசியல் மோசடி என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதாகவே இருந்தது. பெரும்பான்மை கிறிஸ்துவர்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறையை நிறுத்தும் நோக்கம் உடையதென்று தொடக்கப்பட்ட பிரெஞ்சுப் போர், வளம் நிறைந்த, மூலோபாய வழியில் முக்கியமாக இருக்கும் அதன் முன்னாள் காலனியில் கிறிஸ்துவப் போராளிகளுக்கும் பாரிஸ் ஆதரவு பெற்ற முஸ்லிம் Seleka சக்திகளுக்கும் இடையே வன்முறையை எரியூட்டியுள்ளது.

Le Drian உடைய வருகை பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் டிசம்பர் 10 வருகைக்குப்பின் வந்துள்ளது; டிசம்பர் 9 அன்று இரண்டு பிரெஞ்சு சிப்பாய்கள் Bangui இல் போராளிகளுடன் நடந்த பெரும் மோதல்களில் இறந்து போயினர்.

பிரெஞ்சு இராணுவச் செய்தித் தொடர்பாளர் கேர்னல் Gilles Jaron விளக்கினார்: “இரு வீரர்களும் Bangui விமான நிலையத்தின் கிழக்கே உள்ள ஒரு பகுதியை ஆய்வு செய்யும் குழுவைச் சேர்ந்தவர்கள், திங்கள் இரவு நள்ளிரவை ஒட்டி ஒரு ஆயுத குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்கையில் கொல்லப்பட்டனர்.” Jaron கருத்துப்படி, “துப்பாக்கிதாரிகள் பிரெஞ்சு ரோந்தின் மீது சுட்டனர், அதுவும் பதிலுக்குச் சுட்டது.” இரு வீரர்களும் பின்னர் மருத்துவ மனையில் இறந்தனர்.

CAR ல் பேசிய ஹாலண்ட், ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்காக ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களையச் செய்யும் தன் நிர்வாகத்தின் கொள்கை, இன்னும் குருதி கொட்டுதலை தவிர்க்க தேவையானது என்றார். “பிரான்ஸ் இது ஆபத்தானது என்பதை நன்கு அறியும், ஆனால் பெரும் கொலைகளை தவிர்க்க இது தேவை” என்றார்.

இப்பிராந்தியத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கொள்ளை முறை நலன்களை மறைக்கும் வகையில், ஹாலண்ட் இழிந்த முறையில் கூறினார்: “பிரான்ஸ் எந்த தன்னலத்தை ஒட்டியும் இங்கு, மத்திய ஆபிரிக்க குடியரசில் இல்லை. மனித கண்ணியத்தை காக்க பிரான்ஸ் வந்துள்ளது.”

ஹாலண்டின் கருத்து ஓர்வெல்லிய பிரச்சாரமான அவருடைய சோசலிஸ்ட் கட்சி கருத்திற்கு மொத்த உருவமாக உள்ளது. ஏன் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு என்றும் கூறலாம்—சிரியாவில் குற்றம் சார்ந்த, பயங்கரவாத சக்திகள் அல் குவேடாவுடன் பிணைப்புடையவற்றை ஆதரித்தபின், வறிய முன்னாள் காலனியில் தலையீடு, அங்கு பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கு சூழ்ச்சிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

இந்த வரலாற்றில் Jean-Bédel Bokassa வின் சர்வாதிகாரத்திற்கு பிரெஞ்சு ஆதரவு கொடுத்ததும் அடங்கும்; அவரை 1979ல் இராணுவ ஆட்சி சதியில் ஆபரேஷன் Barracuda எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அகற்றியது; 2002ம் ஆண்டு Operation Boali of Bozizé ஐ நிறுவி, Djotodia சக்திகள் மீது 2006 குண்டுத் தாக்குதல்கள் மூலம் பாதுகாத்தது. இறுதியில் Seleka சக்திகளுக்குப் பின் பிரான்சின் சமீபத்திய ஆதரவு உள்ளது.

ஹாலண்ட் தன் போர்களை “மனித உரிமைகள்” என்னும் நைந்துபோன கவசத்தால் மூடி மறைக்கையில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மற்ற அரசியல் பிரதிநிதிகள் பாரிஸ் முன்னேற்றுவிக்கும் மூலோபாய நலன்களைப் பற்றி மூடிமறைக்கவில்லை. பிரெஞ்சுத் தேசிய சட்ட மன்றத்தில் வலதுசாரி UMP க்குத் தலைமை தாங்கும் Christian Jacob புதன் அன்று ஒரு வானொலி பேட்டி காண்பவரிடம், “CAR  இராணுவ நடவடிக்கை இன்றியமையாததாக உள்ளது, அது ஆபிரிக்காவின் இதயத்தானத்தில் இருக்கும் மூலோபாய ரீதியிலான தன்மையினால்.” என்றார்.

CAR ஐ மனிதாபிமான நெருக்கடி, மற்றும் குறுங்குழுவாத வன்முறை பேரழிவிற்கு கொண்டு செல்லுபவை, முக்கியமாக பாரிஸ் அதன் முன்னாள் காலனியில் அதன் ஏகாதிபத்திய நலன்களை குருதி கொட்டியேனும் தொடர்வது என்பதின் விளைவாகும்; இது செலேகா, CAR ஜனாதிபதி François Bozizé ஐ மார்ச்சில் அகற்றுவதற்கு ஆதரவு கொடுத்தது. பாரிஸ், ஆபிரிக்க கண்டத்தின் மையத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாட்டை கைப்பற்றி, Bangui ல் சீனாவின் செல்வாக்கை அழிக்கும் நோக்கத்தை நோக்கத்தை கொண்டுள்ளது. சீனா பல முக்கிய உடன்பாடுகளை Bozizé பதவியில் இருக்கும்போது கொண்டுள்ளது, அவற்றில் எண்ணெய் ஒப்பந்தங்களும், இராணுவ ஒத்துழைப்பும் அடங்கும்.

CAR ல் பிரான்சின் நேரடித் தலையீடு வன்முறையை தீவிரமாக்கியுள்ளது. கடந்த வாரம் 600க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 16,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து Bangui இல் மட்டும் வெளியேறிவிட்டனர் என்று ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன.

CAR ன் பிரதம மந்திரி Nicolas Tiangaye மத சமூகங்கள், எப்பொழுதும் இணக்கத்துடன் வாழ்ந்தவை இப்பொழுது ஒன்றையொன்று படுகொலை செய்கின்றன. நிலைமை விரைவில் நிறுத்தப்பட வேண்டும்.” என்று ஒப்புக் கொண்டார்.

குடிமக்கள் மீது பொறுப்பற்ற தாக்குதல்கள் பலமுறையும் நடக்கின்றன, சிறுவர்கள் போராளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், பாலியல், பால் தொடர்புடைய வன்முறை, கொள்ளை அடித்தல், சொத்துக்களை அழித்தல் பெருகிவிட்டன.” என்று ஐ.நா. அகதிகள் பிரிவு செய்தித்தொடர்பாளர் Adrian Edwards கூறினார்.

குறுகிய குழுவாத மோதல்களும் பல சிறுநகரங்கள் Bouca, Bossangoa, Bozoum ஆகியவற்றில் நடந்துள்ளதாக தெரிகிறது; Bohong கிராமத்தில், 27 முஸ்லிம்கள் டிசம்பர் 12 அன்று பலாகா எதிர்ப்புக் குழு என அழைக்கப்படும் கிறிஸ்துவ தற்காப்பு போராளிகளால் கொல்லப்பட்டனர்.

தொடர்புகள், Djotodia விற்கும் “பலாகா எதிர்ப்பு” போராளிகளுக்கும் இடையே சில வகை பேச்சுவார்த்தை நடத்த முயற்சி தொடங்கி விட்டதாக கூறுகின்றன. RFI வானொலி இடம் Djotodia, போட்டி கிறிஸ்துவ சக்திகளை நோக்கி “தான் கைகளை நீட்ட தயார்” என்றார்.

பிரான்சின் தலையீடு பிரித்தானியா, அமெரிக்காவால் ஆதரிக்கப்படுகின்றன. பிரித்தானியாவின் ராயல் விமானப்படை இரண்டு பெரிய C-17 போக்குவரத்து விமானங்களை பிரெஞ்சுப் படைகளை நிலைகொள்ளச் செய்ய CAR  க்கு கவச வாகனங்களை அனுப்ப அளித்தது.

CAR ல் பிரெஞ்சு நடவடிக்கைகளுக்கு உதவ, வாஷிங்டன் இரண்டு விமானங்களையும் ஒரு கட்டுப்பாட்டுக் குழுவையும் அருகில் உள்ள உகண்டாவில் நிறுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல், இராணுவ போக்குவரத்து விமானம் புருண்டியில் இருந்து CAR க்கு துருப்புக்களை அழைத்துச் செல்ல ஒப்புதல் கொடுத்துள்ளார்.

டிசம்பர் 9ம் திகதி, அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம், பிரெஞ்சு மற்றும் ஆபிரிக்க ஒன்றியத் துருப்புக்களுக்கு ஏற்றம்கொடுக்க பென்டகன் ஆதரவு வேண்டுகோள்களை பெற்றுள்ளது என்று கூறினார். பெயர் கூறக்கூடாது என்னும் நிபந்தனையில் அவர், அமெரிக்க இராணுவ உதவி, மாலியில் பிரான்ஸ் போர் நடத்தியபோது வழங்கப்பட்டதை ஒத்திருக்கும் என்றார். அதில் விமான உதவி, உளவுத்துறைத் தகவல் பகிர்வு ஆகியவை இருந்தன.

நேற்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Laurent Fabius பிரான்ஸ் இன்னும் அதிக உதவியை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் இருந்து CAR ல் போரை நடத்த கேட்கும் என்று கூறினார். “அது உண்மையான பெரிய பிரச்சினை”, Fabius ஐரோப்பா 1 வானொலியிடம் கூறினார். “நாளை, நான் வெளியுறவு மந்திரிகள் குழுவிற்கு சென்று உதவி வலுவாக இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும், தரை ஆதரவு உட்பட, என கேட்பேன்

அது ஒரு வாரம் முன்பு CAR தன்னுடைய இராணுவ தலையீட்டை தொடங்கப்பட்ட போது, ஹாலண்ட் நிர்வாகம் அதை பற்றி மட்டுமே ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்று கூறினார். எனினும், ஆய்வாளர்கள், இது நீண்ட நீடிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

ஒரு வாரம் முன்வ CAR   ல் அது இராணுவத் தலையீட்டைத் துவக்கியபோது, ஹாலண்டின் நிர்வாகம்இது 6மாத காலம்தான் நீடிக்கும் என்றார். ஆனால் பகுப்பாய்வாளர்கள் இது இன்னும் அதிகக் காலம் நீடிக்கும் என்கின்றனர்.

ஆபிரிக்க சிறப்பு வல்லுனர், பாரிஸ் தளம் கொண்ட National Centre for Scientific Research ரோலண்ட் மார்ஷல் கூறினார்: “அது ஒரு போலித்தோற்றம் – மாலியின் போர் அறிவித்தவுடன் முடிந்துவிடும் என்ற போலியைப் போல்.... பிரான்சுவா ஹாலண்ட் ஆண்டு முடிவில் 1,000 பேர்தான் அங்கு இருப்பர் என்று உறுதியளித்திருந்தும், இன்னும் மாலியில் நாம் 2,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை கொண்டுள்ளோம்.”