World Socialist Web Site www.wsws.org |
US suspends military aid to its Syrian proxies அமெரிக்கா அதன் சிரிய பினாமிகளுக்கு இராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்துகிறது
By Keith Jones அமெரிக்காவும் பிரித்தானியாவும் சுதந்திர சிரிய இராணுவத்தின் (Free Syrian Army -FSA) தலைமை இராணுவ குழுவிற்கு அளித்து வந்த இராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன—அந்த பினாமிப் படை மூலம்தான் அவை ஏகாதிபத்திய ஆதரவுடைய எழுச்சியை பஷீல் அல் அசாத்தின் சிரிய அரசாங்கத்தை அகற்றுவதற்கு ஆயுதம் கொடுத்து வந்தன. இந்த இடைநிறுத்தம், சுதந்திர சிரிய இராணுவம் (FSA) துருக்கிய எல்லையில் இருந்த சௌதி ஆதரவுடைய இஸ்லாமிய எழுச்சியாளர்கள் பகுதியில் இருந்த கட்டுப்பாட்டை இழந்தபின் வந்துள்ளது; எழுச்சியாளர்களுடன் இதுவரை FSA நெருக்கமாகப் பிணைந்திருந்தது. டிசம்பர் 6ம் திகதி இஸ்லாமிய முன்னணியின் போராளிகள் —ஒரு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சலாபிஸ்ட், இன்னும் பிற சுன்னி அடிப்படைவாதப் போராளிகள்— Atmeh எல்லை சிறுநகரில் இருந்த FSA அமைப்புக்களைத் தகர்த்தனர்; அத்துடன் அவர்களின் வடக்கு சிரிய இராணுவத் தலைமையகம், இன்னும் பல இராணுவக் கருவிகளின் கிடங்குகளும் உள்ளடங்கும். கருவிகளில், டாங்குகளும் அமெரிக்கா, பிரித்தானியா அளித்த ஆயுதங்கள், டிரக்குகள் மற்றும் தொலைத்தொடர்புக் கருவிகளும் இருந்தன. இஸ்லாமிய முன்னணி, Bab al-Hawa நகரத்தினூடாக துருக்கிக்கு எல்லை கடக்கும் இடத்தில் உள்ள FSA இன் சோதனை சாவடியின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றிக் கொண்டது. செய்தி ஊடகத் தகவல்கள் நம்பப்படலாம் என்றால், FSA போராளிகள் சரண்டைந்தபோது, அல்லது இஸ்லாமிய முன்னணியின் உயர் படைகளை எதிர்கொள்ள முடியாமல் ஓடியபோது மிகவும் குறைந்த இறப்பு எண்ணிக்கைகள்தான் ஏற்பட்டுள்ளது. FSA இன் மிக்குயர் தளபதி ஜெனரல் சலிம் ஈட்ரிஸே துருக்கிய எல்லையை தாண்டி அங்கிருந்து கட்டாருக்கு ஓடிவிட்டார். அல்குவேடாவுடன் பிணைந்திருந்த ISIS (ஈராக், லேவன்ட் இஸ்லாமிய அரசு) தாக்கக்கூடும் என்ற வதந்தியை அடுத்து இஸ்லாமிய முன்னணிப் போராளிகளை தங்கள் இராணுவ நிறுவனங்களில் FSA வரவேற்றது,. மாறாக முன்னணி அமைப்புகள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத் தோல்விகளின் தொடர்ச்சி மற்றும் வடகிழக்கு சிரியாவில் இருந்த பல போராளிகள் அல்குவேடா பிணைப்புடைய போராளிகளுடன் சேர்ந்தபின், Atmeh இல் ஏற்பட்ட FSA இன் அவமானகரமான சங்கடம், வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிசில் அதை ஆதரித்தவர்களுக்கு அது தொடர்ந்து நீடிக்கும் என்னும் நம்பிக்கையை அசைத்துவிட்டது என்பது தெளிவு. FSA குறைந்த போர்க்கள பங்கை கொண்டிருந்தாலும், அதுவும் அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த அரசியல் குழுக்களும், சிரிய தேசியக் குழுவில் இணைந்திருந்தது, இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இழிந்த முயற்சிகளான டமாஸ்காஸின் ஆட்சி மாற்ற உந்துதலுக்கு ஒரு “நிதானமான” பொதுத் தோற்றத்தை கொடுப்பதற்கு முக்கியமானதாக இருந்தது. வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தங்களின் வழியான இஸ்லாமிய போராளிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் வழங்குவதன் மூலம் FSA ஐ வலுப்படுத்த முற்பட்டன. FSA இன் சங்கடம், ஒபாமா நிர்வாகம், அமெரிக்க அரசியல் உயரடுக்கு மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு ஆகியவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிரியக் கொள்கை குறித்து கடுமையாக பிளவுற்று இருக்கும் ஒரு நேரத்தில் வந்துள்ளது. மக்கள் ஆதரவு இல்லாத நிலையில், அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியாவால் தூண்டிவிடப்பட்ட எழுச்சி சரியத் தொடங்கியதோடு மேலும் அதிக அளவில் சுன்னி இஸ்லாமியவாதிகளை சார்ந்திருக்க தள்ளப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் போராளிகள் இருந்தனர்; அவர்களுடைய கடும் குறுங்குழுவாத அரசியல் மற்றும் கொடூரங்கள் எழுச்சியை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தத்தான் உதவியது. அசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதில் தோல்வி கண்டபோதிலும், எழுச்சி சிரியாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி, நூறாயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும் கொன்றுவிட்டது, 7 மில்லியன் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர். ஷியா-சுன்னி அழுத்தங்கள் மத்திய கிழக்கு முழுவதும் அதிகரிக்கப்பட்டன, அல்குவேடா மற்றும் அதன் நட்பு அமைப்புக்கள் வடக்கு, கிழக்கு சிரியாவில் ஒரு கணிசமான பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவியது. அமெரிக்கா, கடந்த காலத்தில் அல்குவேடாவுடன் நட்பு கொள்வதில் விருப்பம்தான் கொண்டிருந்தது. உண்மையில் அது அசாத்தை அகற்றும் முயற்சியில் அதன் பங்கை வரவேற்றது, லிபியாவில் நேட்டோ போர் நடத்துகையில் அதை பினாமியாகப் பயன்படுத்தியது. ஆனால், அல் குவேடாவுக்கு கூடுதல் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது பற்றியும், இதையொட்டி அதன் செவாக்கு சிரியாவில் இருந்து ஈராக் வரை பரவி அங்கு நிலவும் நலிந்த வகுப்புவாத-அரசியல் அமைப்புக்களை, அமெரிக்கா 2007-8 இராணுவ எழுச்சிக்குப்பின் அங்கு நிறுவியுள்ளதை தகர்த்துவிடும் என்னும் அச்சங்கள் வாஷிங்டனில் பெருகியுள்ளன. சமீபத்திய வாரங்களில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியா மற்றும் ஈராக்கில் அல்குவேடாவிற்கு எதிரான நடவடிக்கை பற்றி சிந்திக்கின்றன எனத் தெரிவிக்கும் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன; அதே நேரத்தில் இந்நாடுகள், சிரியாவில் இருக்கும் பிற இஸ்லாமியப் போராளிகள் அமைப்பை நாடுகின்றன; இதன் நோக்கம் அசாத் ஆட்சியின் மீது இராணுவ அழுத்தத்தை தொடர்வதுதான். ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க உயரடுக்கிற்கு இடையே உள்ள மேலதிக பிளவுகள் பற்றிய தகவல்கள், இந்த வாரம் சேமர் ஹெர்ஷ் எழுதிய கட்டுரையில் வந்துள்ளன; இவை கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் சிரியா மீது தவிர்க்க முடியாத இராணுவத் தாக்குதல் முன்னேற்ற நிலையில் இருந்தது என்னும் போலிக்காரணத்தை பொய்களின் தொகுப்பு என அம்பலப்படுத்தியுள்ளது. தேசியப் பாதுகாப்பு அமைப்பில் இருந்து வந்துள்ள கசிவுகளின் அடிப்படையில், அமெரிக்காவிடம் அசாத் ஆட்சி சரின் வாயுத் தாக்குதலை ஆகஸ்ட் 21 நடத்தியது என்பதற்கு நிரூபணம் இல்லை என்றும், அதை முற்றிலும் அது தெரிந்திருந்தும், ஒரு அல் குவேடாவுடன் பிணைந்த குழு அல்நுஸ்ரா முன்னணி சரின் நச்சுவாயுவை நிறையக் கொண்டிருந்தது என அறிந்திருந்தும், அதை மறைத்தது என ஹெர்ஷ் வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில், ஒபாமா நிர்வாகம் சிரியா மீது போரைத் தொடுப்பதில் இருந்து பின்வாங்கி, ஈரானுடன் பகிரங்கப் பேச்சுக்களை தொடங்கியது; ஈரான்தான் சிரியாவின் முக்கிய பிராந்திய நட்பு நாடும் அதுவே, அமெரிக்க ஆதரவுடைய இஸ்லாமிய தலைமையில் சிரியாவில் போர் நடப்பதற்கான முக்கிய இலக்கும் ஆகும். ஈரானிய ஆட்சி அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை ஒட்டி முடங்கியிருக்கையில், தெஹ்ரானை தன் மூலோபாய நலன்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள வைக்கலாம் என்று வாஷிங்டன் கணக்கிட்டுள்ளது: இதையொட்டி அரசியல் மற்றும் இராணுவ வளங்களை அதன் இன்னும் சக்தி வாய்ந்த போட்டி நாடுகளான ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுகிறது. ஈரானின் முதலாளித்துவ ஆட்சி, தன் பங்கிற்கு அமெரிக்காவிற்கு இணங்குவதாகத் தன் நிலையை அடையாளம் காட்டி, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய சர்வதேச நிறுவனங்களுக்கும் ஈரானின் எண்ணெய், எரிவாயு ஆதாரங்களில் சலுகை நிறைந்த அணுகுமுறையை அறிவித்துள்ளது; இது மத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானத்தில் இருந்து லெபனான் வரை உறுதிப்படுத்த அமெரிக்காவுக்கு உதவும். இப்பொழுது வாஷிங்டன் தெஹ்ரானை, அடுத்த மாதம் அமெரிக்க-ரஷ்ய ஆதரவில் நடக்கவிருக்கும் சிரியப் போருக்கு “அரசியல் தீர்வு” மாநாட்டில் சேரக் கோருகிறது; இது அசாத் ஆட்சி அதிகாரத்தை சரணடையவும், “இடைக்கால அரசாங்கம்” அமைக்கவும் அதற்கு அதிகாரத்தை கொடுக்கவும் அழுத்தம் கொடுக்கும்; அந்த அரசாங்கத்தில் ஏகாதிபத்திய ஆதரவுடைய “எழுச்சியாளர்கள்” குறைந்தப்பட்சம் பாதி இடங்களை பெற்றிருப்பர். அதே நேரம் அது டமாஸ்கஸ் மீது இராணுவ அழுத்தத்தையும் தொடர முயல்கிறது. Atmeh ல் கடந்த வார நிகழ்வுகளுக்கு முன், ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள் வெளிப்படையாக அல்குவேடாவுடன் பிணைந்துள்ள அல்நுஸ்ரா முன்னணியில் இயங்கிய கூறுபாடுகளை கொண்ட இஸ்லாமிய முன்னணியை, சர்வதேச மாநாட்டிற்குப் பிரதிநிதிகளை அனுப்புமாறு கோருகிறது. FSA பினாமிகள் மீதான முன்னணியின் தாக்குதலுக்கு ஒபாமா நிர்வாகம் விடையிறுக்கும் வகையில், தான் முன்னணியுடன் வழிவகைகளைத் திறந்து வைக்க விரும்புவதாக சமிக்ஞை காட்டியுள்ளது. வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் சகி வாஷிங்ன் Atmeh நிகழ்வுகள் குறித்து “கவலை கொண்டுள்ளது வெளிப்படை” என்றார். ஆனால், “நாங்கள் இக்கட்டத்தில் இதன் பொருள் குறித்து, இதன் நீண்டகால பாதிப்பு குறித்து பரந்த அறிக்கையை வெளியிடத் தயாராக இல்லை.” என்றார். தன்னுடைய பங்கிற்கு FSA, இஸ்லாமிய முன்னணியுடனான அதன் நெருக்கமான ஒத்துழைப்பை புதுப்பிக்கும் ஆர்வத்தில் உள்ளது. FSA இன் உயர் இராணுவக்குழுவின் செய்தித் தொடர்பாளர் Louay al-Mkdad, FSA இஸ்லாமிய முன்னணிக்கிடையேயான மோதலை “சகோதரர்களுக்குள் தவறாகப் புரிந்து கொள்ளுதல்” என்று தள்ளுபடி செய்தார். al-Mokdad தொடர்ந்தார்: “நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். சிரிய ஆட்சிக்கு எதிராக ஒன்றுபடும் நேரம் இது.” இஸ்லாமிய முன்னணி எந்த அளவிற்கு FSA உடன் ஒத்துழைப்பை தொடர தயாராக உள்ளது என்பது ஒரு திறந்த கேள்வி; அது முன்னணியின் கோரிக்கையான, மிக்குயர் இராணுவக் குழுவில் கணிசமான பங்கு கொடுக்கப்படும் என்றாலும். நவம்பர் 22 அமைக்கப்பட்டபோது, முன்னணி, சிரிய தேசியக் குழுவை நிராகரித்து தன் இலக்கு சுன்னி ஆதிக்கம் நிறைந்த சிரியா, ஷரியா சட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தியது. மேலும், அதன் உருவாக்கம் சவுதி அரேபியா மூலம் திட்டமிடப்படவில்லை என்றாலும் தெளிவான ஆதரவு இருந்தது. சௌதி முடியரசு, தெஹ்ரானில் வாஷிங்டனின் நடவடிக்கைகளை வெளிப்படையாக எதிர்த்துள்ளது; ஏனெனில் அது ஈரானிடம் தன் மூலோபாய செல்வாக்கை இழுந்துவிடும் என்பதால் அது ஒபாமா நிர்வாகம் டமாஸ்கஸில் ஆட்சிமாற்ற பிரச்சாரத்தில் இருந்து பின்வாங்கியதற்கு குற்றம் சாட்டியுள்ளது. வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவில் கொடூரக் குற்றத்தை இழைத்துள்ளன; மிகவும் பிற்போக்குத்தன சக்திகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவுவதன் மூலம் உலகின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கம் தடையின்றி இருக்கும் என நிர்வாகம் கருதியது. இதில் அவர்கள் போலி இடதுகளுடைய உதவி, ஆதரவைக் கொண்டுள்ளனர்; பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கட்சி, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, அமெரிக்காவின் சர்வதேச சோசலிச அமைப்பு ஆகியவை இப்பிரிவில் உள்ளன; இவை ஏகாதிபத்திய பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்து, அமெரிக்க-சௌதி ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சுன்னி இஸ்லாமியவாத எழுச்சியை “புரட்சி” என பொய் பரப்பின. |
|