தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
South Korea declares air defence zone தென் கொரியா வான் பாதுகாப்பு பிராந்தியத்தை அறிவிக்கிறது
By Peter Symonds Use this version to print| Send feedback அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பேடென் கடந்த வாரம் ஆசியாவிற்கு வருகை புரிந்ததை அடுத்து கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் வான்பாதுகாப்பு அடையாள பிராந்தியம் (ADIZ) குறித்து அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. வாரக் கடைசியில் தென் கொரியா தன்னுடைய சொந்த வான்பாதுகாப்பு அடையாள பிராந்தியத்தை சீனப் பகுதியுடன் இணைத்த முறையில் விரிவாக்கியது. இதேவேளை அமெரிக்காவின் மற்ற இரு நட்பு நாடுகளான ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் சீனாவுடன் தீவிர இராஜதந்திர கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டன. தென் கொரிய அறிவிப்பு நேற்று வெளிவந்துள்ளது. ஜனாதிபதி பார்க் ஜேயுன் ஹை, பிடெனிடம் முந்தைய நாள் அவருடைய வருகை முடிவின்போது இதுபற்றி கூறியிருக்க வேண்டும். கொரியா தனது வான்பாதுகாப்பு பிராந்தியத்தினுள் தென் கொரியாவில் லியோடோ என்றும் சீனாவில் சூயன் ராக் என்றும் அழைக்கப்படுவதை இணைத்துள்ளது. இப்பொழுது பிரச்சனைக்குரிய கடல்மட்ட பாறைத்தொடர் பகுதியை சீனா தன்னுடைய பகுதிக்குரியதாக நவம்பர் 23 அறிவித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது. இந்த பாறைத்தொடரை தென்கொரியா கட்டுப்படுத்துவதுடன் அதில் ஒரு கடல் ஆய்வு நிலையத்தை கட்டியுள்ளது. தென் கொரியாவின் ADIZ முதலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு கொரியப் போரின் நடுவில் நிறுவப்பட்டது. அது இப்பொழுது முதல் தடவையாக தெற்கே 300 கி.மீ.க்கும் அதிகமாக விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இராணுவ விமானங்களை பாதிக்கும். அவை பகுதியில் நுழைவதற்கு முன்பு முன்கூட்டிய அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். அவை இவ்வாறு செய்யத் தவறினால் வான் மோதல் ஆபத்தை அதிகரிக்கும். அமெரிக்க வெளிவிவகாரத்துறை, சீனாவின் புதிய ADIZ பற்றி அதிகம் குறைகூறி, தென் கொரியாவின் முடிவிற்கு தன் ஆதரவை குறிப்பிட்டுள்ளது. தென் கொரிய ADIZ க்கு பச்சை விளக்கு காட்டியதின் மூலம், பேடென் கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஏற்கவே உள்ள அழுத்த நிலையை அதிகரித்துள்ளார். சீனாவின் ADIZ ஐ எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் விதத்தில் B52 விமானங்களை அப்பகுதியில் சீன அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் பறக்கச் செய்தது. அத்துடன் பெய்ஜிங் தனது ADIZ இனுள் இணைத்துள்ள பிரச்சனைக்குரிய தீவுகள் கூட்டமான ஜப்பானில் சென்காக்கு அல்லது சீனாவில் டியோயு எனப்படுவது பற்றி எந்த மோதல் வந்தாலும் தான் ஜப்பானை ஆதரிக்கும் என்றும் அறிவித்தது. கடந்த வெள்ளியன்று தென் கொரியாவில் பேடென் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" பற்றிய உறுதிப்பாட்டின் “முழுமையை” வலியுறுத்தினார். இது சீனாவை இராஜதந்திர முறையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தி அதை இராணுவத்தால் சுற்றிவளைக்கும் நோக்கம் கொண்டது. அவருடைய கருத்துக்கள், ஒபாமா சமீபத்திய முக்கிய ஆசிய உச்சிமாநாடுகளுக்கு வராததாலும், பிராந்தியத்தில் தன் முக்கிய நட்பு நாடுகளுக்கு உறுதி கொடுக்கும் வகையில் ஆசியாவில் “முன்னிலை” பற்றிய சந்தேகங்களை அகற்றும் வடிவமைப்பு கொண்டவை. அழுத்தங்களின் தீவிரம் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி பெய்ஜிங்கில் கூடியபோது வெளிப்படையாயிற்று. இராஜதந்திர நயனங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, சீன, சர்வதேச செய்தியாளர்கள் முன்னால் வாங் பகிரங்கமாக ஆஸ்திரேலியாவை சாடி, கான்பெர்ரா சீனாவின் ADIZ குறித்துக் கூறியதும் செய்ததும் “பரஸ்பர நம்பிக்கைக்கு தீமையை கொடுப்பதும், இருதரப்பு உறவுகளின் உறுதியான வளர்ச்சியையும் பாதித்துள்ளது” என்று கூறினார், சீனாவில் ADIZ அறிவிப்பை உடனடியாகத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் சீனத்தூதரை கான்பெர்ராவிற்கு குற்றம்சாடுவதற்கு அழைத்தது. இந்நடவடிக்கை “தற்போதைய பிராந்திய அழுத்தங்களின் பார்வையில் உதவியற்றது, பிராந்திய உறுதிப்பாட்டிற்கு நலனளிக்காது” என்றார். அப்பொழுது பிஷப், ஆஸ்திரேலியா “கிழக்கு சீனக்கடலில் உள்ள தற்போதைய நிலைமையை மாற்றும் எத்தகைய கட்டாயப்படுத்தல்கள் அல்லது ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை எதிர்க்கின்றது” என்றார். கடந்த வெள்ளியன்று வாங்கின் கருத்துக்களால் தெளிவாக வியப்படைந்த பிஷப், சீனாவின் வான் பாதுகாப்புப் பகுதியை அவர் அரசாங்கம் கண்டித்ததில் இருந்து மாறவில்லை என்றார். செய்தியாளர்கள் அறையை விட்டு நீங்குகையில் அவர் “கிழக்கு சீனக்கடல் குறித்து உங்களுடன் பிரச்சினையில் உள்ளேன். நாங்கள் எங்கள் கருத்துக்களில் உள்ளோம், இவை சமாதானம் மற்றும் உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன” என்றார். அவர் மீண்டும் “ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளும், கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளும் கூடாது” என்றார். இத்தகைய பகிரங்க மோதல்கள் ஆழ்ந்த விரோதப்போக்கைத்தான் பிரதிபலிக்கின்றன. வாங்கின் முடிவான அசாதாரண நடவடிக்கையான பகிரங்கமாக பிஷப்பைக் கண்டிப்பது என்பது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ADIZ குறித்த இணைந்த பிரச்சாரத்தின் பின்னணியில் கவனிக்கப்பட வேண்டும். தன் பங்கிற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்கனவே அமெரிக்கா ஆசியாவில் இராணுவக் கட்டமைப்பிற்குத் தன் ஆதரவை அடையாளம் காட்டிவிட்டது. இன்னும் அதிக ஆஸ்திரேலிய தளங்களை அமெரிக்கப் படைகளுக்கு திறந்துள்ளது. கான்பெர்ராவின் முடிவான, ஆஸ்திரேலிய கடலோரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தள்ளி இருக்கும் ADIZ பிரச்சனையில் நுழைவது என்பது, அதன் மிகப் பெரிய வணிகப்பங்காளி சீனாவுடன் பிளவினால் எவ்வாறான விளைவுகள் வந்தாலும் “முன்னுரிமை” கொள்கைக்கு வழங்கும் திட்டவட்டமான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது. பிஷப், பெய்ஜிங்கில் இருக்கையில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையேயான அழுத்தங்களும் அதிகரித்தன. ஜப்பானின் பாராளுமன்றத்தின் கீழ்மன்றம் கடந்த வெள்ளியன்று ஒரு தீர்மானத்தை இயற்றி சீனாவின் “பொறுப்பற்ற ஆபத்தான நடவடிக்கைகளுக்கு” எதிர்ப்புத் தெரிவித்து, சீனா “பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” ADIZ ஐ அகற்ற வேண்டும் என்று கூறியது. சீனப் பாராளுமன்றம் மறுநாள் இதற்கு விடையிறுக்கையில் டோக்கியோ பெய்ஜிங்கை குறைகூற “உரிமை அற்றது” என அறிவித்தது. கிழக்கு சீனக் கடலில் அழுத்த நிலைக்கு ஜப்பானை குற்றம் சாட்டி, சென்காகு/டயோயு தீவுகள் மீது சீனாவின் உரிமைகளையும் வலியுறுத்தியது. ADIZ பற்றிய பெய்ஜிங்கின் அறிவிப்பு, செப்டம்பர் 2012க்குப் பின்னர் வியத்தகு அளவில் பதிலடிப்பிரச்சாரத்தில் சமீபத்திய ஆத்திரமூட்டல் ஆகும். அப்பொழுது டோக்கியோ சில பிரச்சனைக்குரிய தீவுகளை “தேசியமயமாக்கியது”; அவை முதலில் ஜப்பானை சேர்ந்த தனியாரால் சொந்தம் கொண்டாடப்பட்டவை. சீனாவின் வணிக கப்பல்கள் ஜப்பானின் தீவுகளைச் சுற்றிய ADIZ பகுதியில் நுழைந்தபோது ஜப்பான் பலமுறை போர்விமானங்களை கப்பல்களுக்கு மேல் பறக்க விட்டுள்ளது. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ ஏபே ஆளில்லாத சீன டிரோன்கள் ஜப்பான் தன்னுடைய வான் பகுதி எனக் கருதுபவற்றில் நுழைந்தால் சுட்டுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது. அமெரிக்க “முன்னுரிமை” சீனாவிற்கு எதிரான ஆக்கிரோஷ நிலைப்பாட்டிற்கு நேரடியாக ஜப்பானுக்கு கூடுதலான ஊக்கம் கொடுத்துள்ளது. ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் மிகவும் கீழ்மட்டத்தில் உள்ளன. இரு நாடுகளின் அரசாங்கங்களும் தேசியவாதத்தையும், இராணுவவாதத்தையும் தூண்டி உள்நாட்டின் சமூக அழுத்தங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. ஒரு வலதுசாரி தேசியவாதியான ஏபே கடந்த டிசம்பரில் பதவிக்கு வந்தபின் ஒரே ஒரு முறைதான் சீன ஜனாதிபதி ஜி ஜிபிங்கை சந்தித்துள்ளார். அதுவும் ஒரு சர்வதேசக் கூட்டத்தில் ஒரு சில நிமிடங்களே. சீன மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரிகள் 14 மாதங்களாக சந்திக்கவில்லை. நேற்று ஏபே ஜியுடன் உறவுகளை “சீராக்க” உச்சிமாட்டிற்கு அழைப்புவிடுத்தார். ஆனால் அத்தகைய பேச்சுக்களுக்கு அடிப்படை பற்றி குறிப்பிடவில்லை. வடகிழக்கு ஆசியா மற்றும் பரந்த பிராந்தியத்தின் நச்சுத்தன்மை உறவுகளும் தவறான முடிவு அல்லது விபத்தினால் போர் வெடிக்கும் ஆபத்துக்கள் குறித்து தீவிர எச்சரிக்கையை முன்வைக்கின்றன. இந்த மோசமாகும் அழுத்தங்கள் 2008ல் வெடித்த உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியால் எரியூட்டப்படுகின்றன. மிக உறுதியைக் குலைக்கும் காரணி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதிப்பாடான ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் எப்படியும் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்துவது என்பதாகும். இதில் தேவைப்பட்டால் போர் என்பதும் அடங்கும். கடந்த தசாப்தத்தில் ஒன்றன்பின் ஒன்றாக போரில் ஈடுபட்டபின், அமெரிக்கா சீனாவுடன் மோதலுக்கு அரங்கு அமைக்கிறது. இது இப்பிராந்தியத்தையும் உலகையும் சூழும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. |
|
|