World Socialist Web Site www.wsws.org |
WSWS:Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்காSouth African ANC faces deepening crisis after Mandela’s death மண்டேலாவின் இறப்பிற்குப்பின் தென்னாபிரிக்க ANC ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொள்கிறது
By Bill Van
Auken தென் ஆபிரிக்காவின் ஆளும் ANC ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ், நெல்சல் மண்டேலாவிற்கான தேசிய துக்க அனுசரிப்புக்கு 10 நாட்கள் காலத்திற்கான அதன் தயாரிப்புக்களை தொடங்கிவிட்டது; இதற்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அதிகாரிகளும் செய்தி ஊடகப் பிரதிநிதிகளும் நாட்டிற்கு வருகை தருவர். ஞாயிறன்று அரசாங்க மந்திரி கோலின்ஸ் சபான், 28 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வர், அவர்களில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் டபுள்யூ புஷ், பில் கிளின்டன், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் இதில் அடங்குவர் என்று அறிவித்தார். பிரேசிலில் இருந்து ஜனாதிபதி டில்மா ரௌசெப், முன்னாள் ஜனாதிபதிகள் ஜோஸ் சார்நே, பெர்நான்டோ அபோன்சோ கோலர் டி மெல்லா, பெர்னான்டோ ஹென்ரிக் கார்டோசி மற்றும் லூலா டா சில்வா ஆகியோருடன் வருவார். ஞாயிறு அன்றைய நிகழ்வுகளில் “இறைவணக்கம், சிந்தனை நாளும்” அடங்கும், இதை தொடர்ந்து ஜோஹன்ஸ்பேர்க்கின் FNB அரங்கில் செவ்வாயன்று உத்தியோகபூர்வ நினைவுதினம் கடைப்படிக்கப்படும். அதன் பின் டிசம்பர் 11 முதல் 13 வரை பிரிட்டோரியாவில் உள்ள அரசாங்க கட்டிடத்தில் மண்டேலாவின் சடலம் பார்வைக்கு வைக்கப்படும். அடுத்த ஞாயிறு மண்டேலா அவருடைய சிறுவயது கிராமமான கிழக்கு கேப்பில் இருக்கும் குனுவில் புதைக்கப்படுவார். அதற்கு அடுத்த நாள், டிசம்பர் 16 தென்னாப்பிரிக்காவின் “நல்லிணக்க நாள்” ஆகும்; இது 1994ல் இனவெறி ஆட்சி அகற்றப்பட்டபின் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி ஜாகோப் ஜுமாவின் (Jacob Zuma) ANC அரசாங்கம், மண்டேலாவின் இறப்பிலிருந்து மிக அதிக அரசியல் ஆதாயத்தை எடுக்கும் நோக்கத்துடன் கணிசமான தயாரிப்புக்களை செய்துள்ளது. உண்மையில் தென்னாபிரிக்காவில் பலர், ஆளும் கட்சி நீண்டகால நோய்வாய்ப்பட்ட 95 வயது மண்டேலாவின் இறப்பை முடிந்தவரை அடுத்த ஆண்டு தேசியத் தேர்தல்களுக்கு ஆதரவுகொடுக்கும் நோக்கத்துடன் ஒத்திப்போட முயன்றது என தெரிவிக்கின்றனர். ஜுமாவும் ANC தலைமையும் மண்டேலாவின் புகழைச் சுரண்ட முயல்கின்றன; இது ரோபன் தீவில் அவருடைய 27 ஆண்டுக்கால சிறைவாசத்தில் அது ஏற்பட்டது: தங்களை “ஒற்றுமை”, “நல்லிணக்கம்” என்னும் அவருடைய அழைப்புக்களை தொடர்பவை எனக் காட்டிக் கொள்ள முற்படுகின்றன. ஆனால் நாட்டின் சமூக, வர்க்கப் பிளவுகள் முறியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன; இவை உலகில் மிக அதிக வருமான சமத்துவமின்மையின் ஒரு முக்கிய கட்டத்தில் வந்துள்ளன. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைமைச் செயலர் Gwede Mantashe அறிவித்தார்: “தென்னாபிரிக்கர்கள் ஐக்கியப்பட்டு, சண்டையிடாமல் இருக்க வேண்டிய நேரம் இது.” இவருடைய கருத்தை எதிரொலித்து, முன்னாள் சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலைவரும், ANC உடைய துணைத் தலைவரும், அரை மில்லியன் டாலர்கள் பெறுமதியான மகத்தான சொந்த சொத்துக்களை கொண்டுள்ள சிரில் ராமபோசாவும் பேசினார்; அவர் அறிவித்ததாவது; “அவரை அமைதியில் இருத்தும் இந்த நேரத்தில், தென்னாபிரிக்கர்களாகிய நாம் அனைவருடனும் நல்லிணக்கத்துடன் இருப்போம், நம் நாட்டை மண்டேலாவின் கனவுகளை வெளிப்படுத்தும் தென் ஆபிரிக்காவாகக் கட்டமைப்போம்.” முன்னாள் ANC தலைவருக்கு இரங்கலுக்காக தன்னியல்பாக வந்த பலரும் முற்றிலும் மாறுபட்ட கருத்தைத்தான் கூறியுள்ளனர்; நம்பிக்கையின் அடித்தளத்தில், மண்டேலா அவருக்குப்பின் வந்தவர்களிடம் குறைந்தது ஒரு சுமாரான கட்டுப்பாட்டை காட்டினார் என்றும் தற்போது அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கள் தாக்குதலை அதிகரிப்பர், அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தை கொள்ளையடிப்பர், தேசிய சொத்தைக் கொள்ளையடிப்பர் என்றனர். “இப்பொழுது மக்கள் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உள்ளனர்; ஏனெனில் மண்டேலா ஒரு தந்தை போல் இருந்தார்” என்றும் “இவர்கள்—ஜுமாவும் மற்றவர்களும்—அவரைப் போல் இல்லை” என 30 வயதான Tichaona Mutero டெலிக்ராப்பிடம் கூறினார். “நாம் மண்டேலா இறக்கும்வரை காத்திருந்தோம்—இப்பொழுது மக்கள் ஜுமாவை நம்பாததால் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது.” இதேபோல் சௌவேடோவில் உள்ள 60 வயதான Ntsiki Mthembu வும் கூறினார். “அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்பொழுது அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. உறவினருக்கு உதவுதல் நிறைய உள்ளது; குற்றங்கள் அதிகரித்துள்ளன. நாம் கவலைப்படுகிறோம். இளைஞர்களுக்கு வேலை இல்லை. நாட்டில் அமைதியின்மை அதிகமாக உள்ளது. மண்டேலா இருந்திருந்தால், இப்படி இருக்காது.” 28 வயதான Kenosi Dlamini கூறினார்: “நம் அரசியல் தலைவர்கள் தம்மைத் தவறாக நடத்திச் செல்லுகின்றனர் என்று உணர்கிறேன். நாம் கேட்பதெல்லாம் அவர்கள் ஆடம்பர விடுதிகளில் இருப்பது குறித்துத்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் மண்டேலாவின் கனவைத் தொடரவில்லை. அவர்கள் தங்கள் Mercedes, BMW வில் எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.” இவ்வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் சரியும் செல்வாக்கை நிமிர்த்த, மண்டேலாவின் கனவுகளை சுரண்ட விரும்புகையில், பலருக்கும் இறப்பு என்பது, ANC யின் போலி புரட்சிகர வனப்புரைக்கும் மற்றும் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய சொந்தசெழிப்புடைய கறுப்பு வர்த்தகர்களுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் இடையே இருக்கும் உண்மைகளுக்கு இடையேயான பெருத்த முரண்பாடுகளைத்தான் அடிக்கோடிட்டு காட்டுகிறது. நிறவெறி ஆட்சியின் முடிவிற்குப்பின், கடந்த இரு தசாப்தங்களில் ஜுமாவின் செல்வாக்கு மதிப்பு வரலாற்றளவில் குறைவாக உள்ளது. இது தென்னாபிரிக்க தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார உண்மைகளால் உந்துதல் பெறுகிறது. நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு வெறும் 1.9% தான் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது உத்தியோகபூர்வ வேலையின்மையான 25%த்தைக் (பரவலாக இது 40% இருக்கும் என நம்பப்படுகிறது) குறைக்க தேவையான பொருளாதாரவாதிகள் மதிப்பிடும் விகிதத்தில் மூன்றில் ஒரு பகுதிதான். சமீபத்தில்தான் 2008 அளவான 14 மில்லியனுக்கு வேலையில் இருப்போர் எண்ணிக்கை திரும்பியது; ஆனால் இது மக்கள் தொகை 2.6 மில்லியன் கூடுதலான பின். தென்னாபிரிக்காவில் மூலதனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான உறவு வெளிப்படையாக AngloGold Ashanti என்னும் ஆபிரிக்காவின் உயர்மட்ட தங்க உற்பத்தி அமைப்பின் செயல்களில் வெளிப்படையாகிறது; அது 15,000 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்து தாக்குதல் நடத்தியபின்; மூன்றாம் காலாண்டில் 576 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியது, இதற்கு, ANC உடன் இணைந்த தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பே சாத்தியத்தை கொடுத்திருந்தது. விலைகள் உயர்கின்றன அதேவேளை ஊதியங்களும் சமூக நலன்களும் உயரவில்லை. 2013 தேசிய வரவு-செலவுத் திட்டத்திற்கு, குழந்தைகள் ஆதரவு வழங்கும்படி, என்னும் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் பட்டினியை விரட்ட நம்பியிருக்கும் நலனில், 4% உயர்த்தப்பட்டது, அதேவேளை நுகர்வோர் விலைக்குறியீடு 6% அதிகமாயிற்று. உண்மையான அர்த்தத்தில் இதன் பொருள், நாட்டின் வறியவர்களுக்கு உணவு கிடைத்தலில் வெட்டு என்பதாகும். தென்னாபிரிக்க பொலிஸ் சேவை (SAPS), மற்றும் தென்னாபிரிக்க தேசியப் பாதுகாப்புப் படைகள் பிரிவை (SANDF) தவிர வெட்டுக்கள் அப்படியே சுமத்தப்படுகின்றன. இவை பணவீக்கத்தைவிட அதிக ஊதிய உயர்வுகளைப் பெறுகின்றன; இது நாட்டின் கலகப் பிரிவுப் படைகளை மீண்டும் நிறுவ நிதி திரட்டுவதில் ஒரு பகுதி ஆகும். இதற்கிடையில் R309 பில்லியன் மதிப்பு (கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர்கள்) கொண்ட பெரும் செல்வம் படைத்த தென்னாபிரிக்கர்களில் ஒன்பது பேர், ஓராண்டிற்கு முன் இருந்த தமது நிலையோடு ஒப்பிடுகையில் தங்கள் மொத்த செல்வத்தில் 5 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பை கொண்டுள்ளனர். ஆகஸ்ட் 1212ல், ஜோஹன்னஸ்பேர்க்கின் வடமேற்கே உள்ள லோன்மின் மாரிக்கானா சுரங்கத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்கள் மீது அரசாங்கம் நடத்திய படுகொலையில் இந்த முரண்பாடுகள் மிகத் தீவிரமாக வெளிப்பட்டதுபோல் வேறெங்கும் வெளிப்படவில்லை. இந்த வெகுஜனப்படுகொலை, நிறவெறி ஆட்சிக் காலத்தில் Sharpeville மற்றும் Soweto வில் நடத்தப்பட்ட படுகொலைகளை நினைவிற்குக் கொண்டுவருகிறது, தொழிலாள வர்க்கம் அதன் வேலைகள், ஊதியங்கள் மற்றும் பணிநிலைமைகள் ஆகியவற்றின்மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கையில், இதுதான் அரசாங்கத்தின் விடையிறுப்பு இருந்தது. மண்டேலா இறந்த நாளன்று, படுகொலை குறித்து அதிகாரபூர்வ விசாரணை நடத்தும் ஃபார்லம் (Farlam) விசாரணைக் கமிஷன், தான் அடுத்த ஆண்டு ஜனவரி 6 வரை விடுமுறை எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மிகச் சமீபத்திய நடவடிக்கையில், ஆகஸ்ட் 16, 2012ல் பொலிசை கட்டுப்படுத்திய பிரிகேடியர் அட்ரியான் காலிட்ஸின், பாதிக்கப்பட்டவர்கள் தலையில் சுடப்பட்டனர் என்ற சாட்சியத்தின்பேரில், கொலையுண்ட சுரங்கத் தொழிலாளர்களின் சார்பான வக்கீல் ஒருவரால் வினாவிற்கு உட்படுத்தப்பட்டார். பலரும் முதுகில் சுடப்பட்டிருந்தனர், இவை பொலிசின் கூற்றான தாங்கள் தடிகளும் ஈட்டிகளும் கொண்ட தொழிலாளர்களின் தாக்குதலுக்கு எதிராகத் தங்களை காத்துக் கொண்டனர் என்பதற்கு முரணானதாகும். முந்தைய சாட்சியம், படுகொலைக்கான குறிப்பான ஏற்பாடுகளை வெளிப்படுத்தியது: அதில் தென்னாபிரிக்க பொலிஸ் முன்கூட்டியே சம்பவம் நடந்த இடத்தில் சடலங்களை ஏற்றிச்செல்லக்கூடிய நான்கு வாகனங்களை நிறுத்தி வைத்ததும் அடங்கும்; ஒவ்வொரு வாகனமும் 32 சடலங்களை எடுத்துச் செல்லக்கூடியது. பொலிசார், R5 தாக்குதல் ரைபிள்களுக்காக 4,000 ரவைகள் எடுத்துச்செல்ல, படுகொலைக்கு முன் உத்தரவை கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. துப்பறியும் செய்தியாளர்கள் பிரிவு, லோன்மின் நிர்வாகிகளுக்கும் பொலிசுக்கும் இடையே நடந்த பேச்சுக்களின் எழுத்து தொகுப்பை மேற்கோளிட்டுள்ளது; விசாரணையின்போது, அவர்கள் வன்முறையின் மூலம் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறிப்பது தொடர்பாக ஒரு பொது உடன்பாட்டை அடைந்தது வெளிப்பட்டது. இந்த எழுத்து தொகுப்பு, மாநில பொலிஸ் தலைவர் Zukiswa Mbombo, ஒரு வெற்றிகரமான போராட்டம், சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளை வலுப்படுத்தும் என்றும், வேலிநிறுத்தம் “தீவிர அரசியல் போக்கை உடையது, அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், இதை அழிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்” என்றும் கூறியது உள்ளது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு நிறுவனம் இறுதி எச்சரிக்கையாக பணிக்குத் திரும்ப வேண்டும், இல்லாவிடின் வேலைநீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவிக்க வேண்டும் என்ற உடன்பாடு வந்தது; இதில் முடிவு ஏற்படாவிட்டால் பொலிஸ் வன்முறை மூலம், வேலைநிறுத்தம் முறியடிக்கப்படும். ஆயுதங்களை சரணடைய தொழிலாளிகள் மறுத்தால், “பின் குருதிதான்” என்று Mbombo கூறினார். இந்த அறிக்கை ANC தலைவர் சிரில் ராமபோசாவின் தலையீட்டையும் மேற்கோளிடுகிறது, அப்பொழுது லோன்மின்னில் அவர் நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக இருந்தார்; அரசாங்கத்தின் கனிம வளங்கள் மந்திரி Susan Shabangu வை படுகொலைக்கு முதல் நாள் அழைத்திருந்தார். சக லோன்மின் நிர்வாகிகளுக்குத் தான் “அவரைக் கூப்பிட்டுள்ளதாகவும் அவர் மௌனம் மற்றும் செயல்படாமல் லோன்மின்னில் நடப்பது பற்றி இருப்பது அவருக்கும் அவர் அரசாங்கத்திற்கும் மோசமானது என்று மின்னஞ்சல் அனுப்பியதாகவும்” கூறினார். பின்னர் ராமபோசா இத்தகவல் போதுமான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றார். Shabangu “பொலிஸ் மந்திரி Nathi Mthethwa வை திட்டவட்டமாக செயல்படும்படி செய்தார்”. தெளிவாக அவருடைய கைகளில் சுரங்கத் தொழிலாள்களின் குருதியைக் கொண்டுள்ள ராமபோசா பெரும்பாலும் ஜுமாவிற்குப் பின் ஜனாதிபதி பதவிக்கு வரக்கூடியவர் என மேற்கோளிடப்படுகிறார். மண்டேலாவின் மரணம், ஜுமா மற்றும் ANCயில் இருக்கும் அவருடைய உதவியாளர்கள் மீதான ஊழல் விசாரணை சேதங்களை தற்காலிகமாக மூடிக்கொள்கிறது. இவற்றுள் உத்தியோகபூர்வமாக “பாதுகாப்பு மேம்பாடுகள்” என அழைக்கப்படும், ஜுமாவின் Nklanda வில் உள்ள கிராம வீட்டிற்கு செலவு செய்யப்பட்ட மிக அதிகமான 27 மில்லியன் டாலர்களும் அடங்கும். இந்த மேம்பாடுகள், ஒரு பெரிய நீச்சல் குளம், உறவினர்களுக்கான வீடுகள், ஒரு திறந்தவெளி அரங்கு மற்றும் ஒரு வருகையாளர்கள் மையம் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளது என கூறப்படுகிறது. அரசாங்கம், நிறவெறி சகாப்த தேசிய பாதுகாப்பு சட்டங்களை பயன்படுத்தி, பொதுப்பாதுகாப்பு வக்கீல் துலி மடோன்சேலா, Nklanda ஊழல் பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் வெளியிடுவதை தடுத்தது. ANC அதிகாரிகள், அவருடைய அலுவலகமே அதன் கண்டுபிடிப்புக்கள் கசிவிற்குக் காரணம் என்று கூறினர். பொதுப் பாதுகாப்பாளரால் ஏற்கப்பட்டிருக்கும் பிற ஊழல் விசாரணைகளும் அரசாங்கத்தின் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளன. இதில் நாடு தழுவிய பள்ளிப்புத்தகங்கள் பற்றாக்குறை, முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி தன் திருமணமான காதலிக்கு கொடுத்த பிரிய ஒப்பந்தங்கள், காடுகள் மற்றும் மீன்துறை மந்திரி முறையற்றுக் கொடுத்த ஒப்பந்தம் ஆகியவை உள்ளன. இந்த அம்பலங்கள், ANC அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளின் பனிப்பாறை உச்சி மட்டுந்தான். இவை கறுப்பர் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் போன்ற திட்டங்களுக்கூடாக கட்சி அதிகாரிகள், அவர்களுடைய வணிக அடிவருடிகள், தாங்கள் பல மில்லியன் உடைவர்களாகச் செய்துகொள்ள மாற்றப்பட்டன; அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தில் பெரும்பாலனவர்களின் வாழ்க்கச் சரிவு நிறவெறி ஆட்சி காலத்தை விட மோசமாயிற்று. |
|