World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Berlin rally commemorates 75th anniversary of the Fourth International

பேர்லின் கூட்டம் நான்காம் அகிலத்தின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூருகின்றது

By our correspondents 
5 December 2013

Back to screen version

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) முக்கிய பிரதிநிதிகளும் பிரித்தானியாவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளும் பேர்லினில் நான்காம் அகிலம் நிறுவப்பட்டதின் 75 வது ஆண்டுநிறைவு நிகழ்வை குறிக்கும் நவம்பர் 30 கூட்டத்தில் பேசினர்.  20 ஆம் நூற்றாண்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றினை நினைவுவுகூருவதற்கு பேர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழக அரங்கில் கூடியிருந்தவர்களில் பிரான்ஸில் இருந்து வந்த பிரதிநிதிகள் குழுவும் அடங்கியிருந்தது.


பேர்லின் கூட்டம்

இக்கூட்டம் எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தியது. முதலாவது 1930களுக்குப் பின் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு நடுவே, நான்காம் அகிலத்தின் அரசியல் முன்னோக்குக்கள் தொழிலாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரிடையே பெருகிய ஆதரவைப் பெற்றுள்ளன. இரண்டாவது, நான்காம் அகிலம் 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியினால் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பின் அதன் வரலாற்று தொடர்ச்சி முற்றிலும் நான்காம் அகிலமும் (ICFI) மற்றும் அதன் பிரிவுகளாலும் மட்டுமே பிரதிநிதித்துவப்படுகிறது.

இன்று நான்காம் அகிலம் மற்றும் அதன் முக்கியத்துவத்தின் வரலாறு குறித்த விரிவான கண்ணோட்டத்தை பற்றி நான்கு விரிவான அறிக்கைகள் கொடுக்கப்பட்டன. இவற்றின் முக்கியத்துவம் மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் அனைத்துவகை  அரசியல் சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராக எப்படி தொடர்ந்து நான்காம் அகிலத்தின் தத்துவார்த்த, அரசியல் போராட்டத்தை பாதுகாத்தனர் என்பது பற்றியதாக இருந்தது.

தன்னுடைய உரையில் PSG இன் தலைவர் உல்ரிச் ரிப்பேர்ட் நான்காம் அகிலம் நிறுவப்படும் வரையில் மத்தியவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் குறித்து விவரித்தார். ட்ரொட்ஸ்கிய்ன் போராட்டத்தின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சர்வதேச சோசலிச கட்சி நிறுவப்பட வேண்டியதின் அவசியம் இருந்தது.


உல்ரிக் ரிப்பேர்ட்

பிரதான தொழிலாளர் கட்சிகளின் எதிர்ப்பின்றி ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த 1933 ஜேர்மனிய பேரழிவில் இருந்து ட்ரொட்ஸ்கி ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச அகிலம் எவ்வாறு ஹிட்லர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதை இயலுமானதாக செய்தது, மூன்றாம் அகிலம் சோசலிசப் புரட்சியின் நோக்கத்திற்கு இறந்துவிட்டது என்று அவர் எடுத்த முடிவுரை பற்றி ரிப்பேர்ட் விளக்கினார். புரட்சிகர காரியாளர்களை பாதுகாப்பதற்கும் மார்க்சிசத்திற்கான போராட்டத்திற்கும் ஒரு புதிய நான்காம் அகிலத்தை நிறுவதல் அவசியம் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.

ஜேர்மன் சோசலிச தொழிலாளர் கட்சி (SAP-Socialist Workers Party), ஸ்பெயினின் மார்க்சிச ஐக்கியத்திற்கான தொழிலாளர்கள் கட்சி (POUM), பிரித்தானியாவின் சுதந்திர தொழிலாளர் கட்சி (ILP) போன்ற மத்தியவாதக் கட்சிகள் ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் சில விடயங்களுக்கு சில சமயம் தமது ஆதரவை அல்லது உடன்பாட்டைக்கூட கொடுத்தபோதும், ஆனால் ஒரு புதிய புரட்சிகர அகிலத்திற்கான போராட்டம் என்பதை நிராகரித்தன.

அவை அடைப்படையில் “அரசியல் நிலைமை முழுமையாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் வரலாற்று நெருக்கடியினால் குணாதிசயப்படுத்தப்படுகின்றது என்னும் கருத்தை ஏற்கவில்லை” என்று ரிப்பேர்ட் விளக்கினார். இதுதான் நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை “1938 நிலைமைகளில் சரி என்பதோடு மட்டும் இல்லாமல் தற்கால வரலாற்றின் அடிப்படைப் பிரச்சினையையும் தெளிவாகக் கூறுகிறது” என்றார் ரிப்பேர்ட்.

சோசலிசப் புரட்சி, சாதாரணமாக புறநிலைப் பொருளாதார நிலைமைகளின் தவிர்க்க முடியாத விளைவல்ல என்று ரிப்பேர்ட் வலியுறுத்தினார். “இதற்கு தொழிலாள வர்க்கம் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் சுயாதீன சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நனவுடன் தலையிட வேண்டும், அது ஒரு தெளிவான விரிவான மூலோபாய வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்க வேண்டும். இங்குதான் புரட்சிகரக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.”

ஜேர்மன் முன்னாள் சான்சிலர் வில்லி பிராண்ட்டின் உதாரணத்தை பயன்படுத்தி ரிப்பேர்ட் வர்க்கப் பிரச்சினைகள் மத்தியவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்தன என்பதை சித்தரித்தார். SAP உறுப்பினர் என்ற வகையிலும் அதன் நாடுகடந்த வெளிநாட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் என்னும் முறையில் நோர்வேயில் இருந்த பிராண்ட் திட்டமிட்டு நான்காம் அகிலம் நிறுவப்படுவதற்கு எதிராக இயங்கினார். அகிலத்தின் இளைஞர் பிரிவில்  (International Youth Bureau ) ட்ரொட்ஸ்கிசவாதிகளை அவர் ஒதுக்கி வைத்து அவர்கள் “மோசமான குறுங்குழுவாதிகள்” என்றும் குற்றம் சாட்டினார். பிராண்ட்டிற்கும் ஏனைய மத்தியவாதிகளுக்கும் உந்துதல் கொடுத்தது, அவர்கள் சோசலிசப் புரட்சியை நிராகரித்ததுதான். ட்ரொட்ஸ்கிசத்திகு எதிரான பிராண்டின் விரோதப் போக்கு அவருடைய பிற்கால பங்கான சான்ஸ்லர் என்ற வகையில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் முக்கிய பிரதிநிதி என்னும் நிலைமைக்கு தயாரித்தது என்று ரிப்பேர்ட் வலியுறுத்தினார்.

இரண்டாவது அறிக்கையில் PSG தேசியக்குழுவின் உறுப்பினரும் உலக சோசலிச வலைத் தளத்தின் எழுத்தாளருமான ஜோகானஸ் ஸ்டெர்ன் 1953 ஆம் ஆண்டின் “பகிரங்கக் கடிதத்தின்” 60 ஆவது ஆண்டு நிறைவு குறித்தும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) நிறுவப்பட்டது குறித்தும் உரையாற்றினார். இரண்டாம் உலகப் போருக்குப்பின் “பகிரங்கக் கடிதத்தின்” பங்கின் முக்கியத்துவத்தையும் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் வரலாற்றுத் தொடர்பை அது பாதுகாத்தது குறித்தும் ஸ்டெர்ன் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் நான்காம் அகிலத்திற்குள் வளர்ச்சியுற்ற சந்தர்ப்பவாதப் போக்குத்தான் பப்லோவாதம். இது ட்ரொட்ஸ்கிசத்தின் அரசியல், வரலாற்று முன்னோக்கை தாக்கி, நான்காம் அகிலம் கலைக்கப்பட வேண்டும் என உழைத்தது.

“இதன் தலைவர்கள், மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டெல் நான்காம் அகிலத்தின் பிரிவுகளை ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகளுள் கரைத்துவிடுமாறும் அல்லது முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தேசிய இயக்கங்களுடன் கரைத்துக் கொள்ளுமாறு வழிநடத்தினார்.” என்றார் ஸ்டெர்ன். “ஜேம்ஸ்.பி. கனன் மற்றும் அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சி வெளியிட்ட பகிரங்கக் கடிதம் “மார்க்சி கோட்பாடான தொழிலாள வர்க்கமே சமூகத்தில் ஒரேயொரு புரட்சிகர வர்க்கம் என்பதை” பாதுகாத்தது. “இத்தலைமை நெருக்கடி தீர்க்கப்பட ஒரு புரட்சிகரக் கட்சி ஒவ்வொரு நாட்டிலும் கட்டமைக்கப்பட வேண்டும்.”

ஆனால் மறுபுறமோ போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாடும் மற்றும் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களின் வலிமையும் பப்லோவாதத்திற்கு அடிப்படையாக இருந்த சக்திவாய்ந்த புறநிலைக் காரணிகளாக இருந்தன. இவை நான்காம் அகிலத்தின் உறுப்பினர்கள் மீது பெரும் அழுத்தத்தை கொடுத்திருந்தன. பப்லோவாதிகள் இந்த அழுத்தத்திற்கு இயைந்துபோய் இறுதியில் அதிகாரத்துவ தொழிலாளர் அதிகாரத்துவங்களுக்கு அடிபணிந்தனர்.

அதே நேரத்தில் மார்க்சிசத்திற்கு எதிரான தாக்குதலுக்கான பரந்த சிந்தனைப் போக்கின் வெளிப்பாடே பப்லோவாதம் என்று ஸ்டெர்ன் சுட்டிக்காட்டினார். இரண்டாம் உலகப் போருக்குப்பின், 1920கள், 1930களில் தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளைப் பற்றி குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகளிடம் பரவிய கருத்துக்கள் பெருகி இவை மார்க்சிம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறன் குறித்து ஒரு கேள்விக்குறியை எழுப்பியது.

பிராங்க்பேர்ட் கல்விக்கூடம் போன்ற மெய்யியல் இயக்கங்கள் இத்தோல்விகளை பலமின்மையின் விளைவல்ல மற்றும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளின்  எதிர்ப்புரட்சிக் கொள்கையின் விளைவு என்று விளக்காமல், தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தன்மையின் விளைவு என்று விவரித்தன.

பப்லோவாதத்துடன் பிராங்பேர்ட் கல்விக்கூடம் மற்றும் பிற மார்க்சிச எதிர்ப்பு புத்திஜீவித போக்குகளை பிணைத்தது, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான புரட்சிகர சக்தி என்பது நிராகரிக்கப்பட்டதே என்று ஸ்டெர்ன் வலியுறுத்தினார். தனது உரையின் முடிவில் ஸ்டெர்ன் போருக்குப் பிந்தைய காலத்தில் நான்காம் அகிலத்தின் மீதான பாரிய அழுத்தம், பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை நடாத்திய சிறிது காலத்தின் பின்னர் கனனும் SWP உம் பப்லோவாதிகள் சரணடைந்த இதே வர்க்க சக்திகளின் முன்பு தாமும் சரணடைந்தன் மூலம் தெளிவாக வெளிப்பட்டது என்று விளக்கினார். கியூப புரட்சியின்போது SWP பகிரங்கமாக பப்லோவாத நிலைப்பாடுகளை தழுவி, 1963ல் அது பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் தன்னை முற்றிலும் ஒரு கொள்கையற்ற முறையில் இணைந்துகொண்டது.

ஆனால், “பகிரங்கக் கடிதம்” அதன் வரலாற்று முக்கியத்துவம் எதையும் இழக்கவில்லை என்றார் ஸ்டெர்ன். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் இருக்கும் மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கு, முதலில் ஜெர்ரி ஹீலியுடைய பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) பின்னர் அமெரிக்காவில் வேர்க்கஸ் லீக்கினது தலைமை (WL) மற்றும் டேவிட் நோர்த்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றிகளை பாதுகாக்கவும், முன்னெடுக்கவும் “பகிரங்கக் கடிதம்” முக்கிய அடித்தளமாக இருந்தது. இது இப்பொழுதும் நமது இயக்கத்தின் முக்கிய ஆவணமாகும்.”

பிரித்தானியாவின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் தனது உரையில் நான்காம் அகிலத்திற்குள் மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கும் பலவகை குட்டி முதலாளித்துவ மார்க்சிச எதிர்ப்பினருக்கும் இடையேயான முப்பதாண்டு “உள் யுத்தத்தின்” வளர்ச்சி குறித்துப் பேசினார். இது நான்காம் அகிலத்தின் மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் இறுதியில் கட்டுப்பாட்டை 1985-86ல் பெறும் வரை தொடர்ந்தது.

நீண்டகாலம் சோசலிச தொழிலாளர் கழகம் [SLL]  உலகின் முக்கிய அரசியல் போக்காக இருந்தது என்று குறிப்பிட்டுத் தன் உரையை ஆரம்பித்தார். ஏனெனில் அது ட்ரொட்ஸ்கிசத்தினதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல்  சுயாதீனத்தினதும் போராட்டத்தின் தொடர்ச்சியாக இருந்தது. இக்காரணத்திற்காகவே அது திருத்தவாதிகளால் வெறுக்கப்பட்டது. “அது (SLL) சோசலி புரட்சி முன்னோக்கை கைவிடத் தயாராகவும் இருக்கவில்லை மற்றும் உலகம் முழுவதும் குட்டி முதலாளித்துவத்தினர் வலதிற்கு மாறியதையும் பின்பற்றவில்லை.”

ஹீலியும் சோசலிச தொழிலாளர் கழகமும் (SLL), SWP இன் மற்றும் பப்லோவாதிகளின் கூற்றான, பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவின் கட்டளையின் கீழ் குட்டி முதலாளித்துவத்தின் கெரில்லாப் போராளிகள் கியூபாவில் “தொழிலாள வர்க்கப் புரட்சியை” “உணர்வற்ற மார்க்சிஸ்ட்டுக்களாக” நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை நிராகரித்தனர். மார்ஸ்டன், “SLL  பப்லோவாதிகளுடன் கொள்கையற்ற மறுஐக்கியம் கூடாது என்று எதிர்த்து, மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசத்தினை பாதுகாப்பதற்கான தாக்குதலையும் நடத்தியது.” என்றார்.

இப்போராட்டத்தின் மிக முக்கிய விளைவு, நான்காம் அகிலத்தின் புதிய பிரிவுகள் பல நாடுகளில் நிறுவப்பட்டதுதான். 1966ல் அமெரிக்காவில் வேர்க்கஸ் லீக்கும் (Workers League), 1968ல் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (Revolutionary Communist League), 1971ல் ஜேர்மனியில் சோசலிச தொழிலாளர் கழகமும் (Bund Sozialistischer Arbeiter), 1972ல் ஆஸ்திரேலியாவில் சோசலிச தொழிலாளர் கழகமும் (Socialist Labor League) நிறுவப்பட்டது.

இதன்பின் மார்ஸ்டன் SLL  ன் முரண்பாடான வளர்ச்சி குறித்துப் பேசினார். இது 1973ல் தொழிலாளர் புரட்சிகரக் கட்சி (Workers Revolutionary Party) என்று பெயரை மாற்றிக் கொண்டு, அதிகரித்தளவில் பப்லோவாத நிலைப்பாடுகளை ஏற்றது.

“படிப்படியாக ஹீலி, பப்லோவாதத்திற்கு எதிரான தத்துவார்த்த, அரசியல், போராட்டத்திற்கு பதிலாகவும் மற்றும் ICFI ன் புதிய பிரிவுகளை அமைப்பதற்கு பதிலாகவும், பிரித்தானியப் பிரிவின் அமைப்பு ரீதியான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார்.” என்றார் மார்ஸ்டன்.

இந்த வளர்ச்சி, ஓரளவிற்கு ரஷ்யப் புரட்சியை தவறாகப் படித்ததில் தளம் கொண்டுள்ளது என்றார் மார்ஸ்டன். “ஹீலியின் அடித்தள முன்கருத்து, தான் போல்ஷிவிக் அதிகாரத்தை கைப்பற்றியதை எப்படியும் பின்பற்றலாம், அதுதான் மூன்றாம் அகிலத்தின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தது என்பதாகும். ஆனால் ரஷ்யப் புரட்சி அடிப்படையில் சர்வதேச விளைவே ன்றி தேசிய காரணிகளின் விளைவு அல்ல. அது இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனின் நடத்திய போராட்டத்தினூடாக தயாரிக்கப்பட்டு, ட்ரொட்ஸ்கி அபிவிருத்திசெய்த சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தின் அடிப்படையில் நடந்தது.”

இதன்பின் மார்ஸ்டன், ICFI  க்குள் மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் நடத்திய உறுதியான போராட்டம் பற்றிப் பேசினார். இது WRP யின் சந்தரப்பவாத திருப்பத்திற்கு எதிராக டேவிட் நோர்த் மற்றும் வேர்க்கஸ் லீக்கினால் வழிநடத்தப்பட்டது.

1982ல் விரிவான விமர்சனத்தில் நோர்த், WRPஇன் தத்துவார்த்த கருத்தாய்வுகள் “மார்க்சிசத்தின் ஒரு இழிவுபடுத்தப்பட்ட தன்மையை பிரதிபலித்தன என்று காட்டினார். இது “அனைத்துலகக் குழுவிற்குள் குறிப்பாக WRP இல் சந்தேகத்திற்கு இடமில்லாத சந்தர்ப்பவாத திருப்பத்தை கொண்டுவந்தது.” உள் ஆவணங்களிலும் கடிதங்களிலும் வேர்க்கஸ் லீக்கும் நோர்த்தும் தங்கள் கவலை, அதாவது WRP பெருகிய முறையில் பப்லோவாத நிலைப்பாடுகளை ஏற்கிறது, விமர்சனமற்றவகையில் மத்திய கிழக்கு தேசிய இயக்கங்கள்பால் சார்பு கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தின என்று மார்ஸ்டன் குறிப்பிட்டார்.

பெப்ருவரி 1986ல் WRP உடன் பிளவுற்றபின், ட்ரொட்ஸ்கிசவாதிகள் அனைத்துலகக் குழுவினுள் மேலாதிக்கம் பெற்றனர். பிளவின் உறுதியான முக்கியத்துவம் விரைவில் தெளிவாயிற்று. WRP க்கு எதிரான போராட்டம், ட்ரொட்ஸ்கித்தின் தொடர்ச்சியை பாதுகாத்தல் என்றுதான் ஆயிற்று. இதில் பிரச்சினை புரட்சி, எதிர்புரட்சி பற்றிய வினாக்கள் என்றார் மார்ஸ்டன்.

WRP உடைய தலைவர்கள் ஜெர்ரி ஹீலி, கிளிஃவ் சுலோட்டர், மைக் பண்டா போன்றோர் வெளிப்படையாக ஸ்ராலினிச, ஏகாதிபத்திய முகாம்களுக்கு சென்ற நிலையில், ட்ரொட்ஸ்கிச பெரும்பான்மை கொண்டனைத்துலகக் குழுவினால் சோவியத் ஒன்றியம் முடிவுற்ற காலத்தைத் தொடர்ந்த முதலாளித்துவ வெற்றிக்காலத்தில் மார்க்சிசத்தை பாதுகாக்க முடிந்தது.

நான்காம் அகிலம் பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கு, சோவியத் ஒன்றியத்தின் சரிவு மற்றும் தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக ஸ்ராலினிச அமைப்புகள் எதிர்ப்புரட்சியின் நேரடிக் கருவிகள் ஆனது பற்றிப் பகுப்பாய்ந்து, தொலைநோக்குடைய அரசியல் முடிவுகளையும் எடுத்தது. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கிய படிக்கல், 1990களின் நடுப்பகுதியில் பல நாடுகளில் சோசலிச சமத்துவக் கட்சிகளை நிறுவி பின்னர் உலக சோசலிச வலைத் தளத்தை 1998இல் நிறுவியதுதான்.

“இன்று உலக சோசலிச வலைத் தளம் புரட்சிகர மார்க்சிசத்தின் உத்தியோகபூர்வ, அங்கீகாரம் பெற்ற குரலாகும். மாதம் 2 மில்லியனுக்கும் மேலாக வாசகர்கள் இருக்கையில், இது ஜேர்மனியில் இடது கட்சியை பின்பற்றுபவர்களைவிட, கிரேக்கத்தில் சிரிசா உறுப்பினர்களையும்விட, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியினரையும்விட, பப்லோவாத International Viewpoint இனைவிட, ஐக்கிய இராச்சியத்தின் இரு மிகப் பெரிய போலி இடது போக்குகளான சோசலிச தொழிலாளர் கட்சி, சோசலிச கட்சியைவிட அதிக வாசகர்களைக் கொண்டுள்ளது” என்றார் மார்ஸ்டன்.

நான்காம் அகிலத்தின் செயலரும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மனிய ஆசிரியர் குழுவின் தலைவருமான பீட்டர் சுவார்ட்ஸ் மார்ஸ்டனைத் தொடர்ந்து பேசினார். நான்காம் அகிலத்தின் வரலாற்று மரபியத்தின் தற்கால முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் அரசியல் நிலைமை குறித்து சுவார்ட்ஸ் தனது பேச்சை ஆரம்பித்தார். இவை பெருகிய சமூக சமத்துவமின்மை, இராணுவ வாதம், ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படல் ஆகிய தன்மையைக் கொண்டுள்ளன. “நான்காம் அகிலம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளுக்கு பின்னரும் முதலாளித்துவம் மீண்டும் ஒரு உலக மரண நெருக்கடியில் உள்ளது என்பது தெளிவு. கடந்த காலத்தில் வர்க்க விரோதங்களை சீராக்க முயன்ற ஆளும் வர்க்கத்தின் அனைத்து வழிமுறைகளும், தடைகளும் சரிந்துவிட்டன.” என்றார் அவர்.

ICFI இனை ஒரு புரட்சிகர தலைமையாக அமைக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேசரீதியாக தொழிலாளர்கள், இளைஞர்கள் முகங்கொடுக்கும் அவசரப் பணி இது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எகிப்திய புரட்சியை உதாரணம் காட்டி சுவார்ட்ஸ் எப்படி புரட்சிகரத் தலைமை முக்கியம் வாய்ந்ததாகிறது என்றார். “எகிப்தில் ஒரு சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் விரைவாக வளர்ச்சியுற்றன. ஆனால் பிரச்சினை அரசியல் தலைமையின் வளர்ச்சி ஆகிற்று. எகிப்தின் வெகுஜன எழுச்சிகள் தனிப்பட்ட ஆட்சியாளர்களை அகற்றி அரசியல் உயரடுக்கை உறுதியிழக்கச் செய்தன. ஆனால் அவை இராணுவத்தை அதிகாரமற்றதாக செய்ய இயலவில்லை, முதலாளித்துவ சுரண்டல், அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது போய்விட்டதுடன் முதலாளித்துவ அரசாங்கத்தை அகற்றவும் முடியவில்லை.”

ICFI இன் ஸ்தாபிதம், “போலி இடது அமைப்புக்களுக்கு எதிரான சமரசத்திற்கு இடமில்லாத ஒரே போராட்டத்தினாலேயே சாத்தியமாக்க முடிந்தது. அவை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கின்றன. இடது கட்சி, Marx21, ஜேர்மனியில் SAV, பிரித்தானியாவில் சோசலிச தொழிலாளர் கட்சி, இடது ஒற்றுமை, பிரான்சில் NPA , கிரேக்கத்தில் சிரிசா, எகிப்தில் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் ஆகியவை முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஆதரிக்கும் நேரடித் தூண்கள் ஆகிவிட்டன” என்று சுவார்ட்ஸ் விளக்கினார்.

தனது உரையின் முடிவில், சுவார்ட்ஸ் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமை நெருக்கடி போலி இடதுகளின் ஒரு மறுகூட்டமைவால் தீர்க்கப்பட முடியாது என்று வலியுறுத்தினார். அவர், அத்தகைய தந்திரங்கள் புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதை தடுக்க செயல்படுத்தப்பட்டன என்றார்.

“ஒரு புதிய புரட்சிகரத் தலைமை கட்டமைக்கப்படுவது அதன் 75 வருட வரலாற்றில் நான்காம் அகிலத்தாலும் அனைத்துலக் குழுவாலும் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினதும் தத்துவார்த்த அடித்தளத்திலும்தான் முடியும்.” என்றார்.