சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Seymour Hersh exposes US government lies on Syrian sarin attack

சிரிய சரீன் தாக்குதல் மீது அமெரிக்க அரசாங்கத்தின் பொய்களை செமோர் ஹெர்ஸ் அம்பலப்படுத்துகிறார்

Barry Grey
10 December 2013

Use this version to printSend feedback

கடந்த ஆகஸ்டில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பகுதிகளில் சிரிய அரசாங்கம் ஒரு சரீன் வாயு தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அரசாங்கமும் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் வாதிட்டபோது அவர்கள் தெரிந்தே பொய் கூறினார்கள் என்பதை எடுத்துக்காட்டி, புலிட்சர் (Pulitzer) விருது பெற்ற புலனாய்வு இதழாளர் செமோர் ஹெர்ஸ் ஒரு கட்டுரை பிரசுரித்துள்ளார்.

தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்திருந்த ஹெர்ஸின் விரிவான விளக்கம், ஞாயிறன்று இலண்டன் ரிவீயூ ஆஃப் புக்ஸில் பிரசுரிக்கப்பட்டது. “யாருடைய சரீன்? என்று தலைப்பிட்ட அந்த கட்டுரை, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியின் மீது ஓர் இராணுவ தாக்குதலுக்கு போலிக்காரணத்தை வழங்க நிர்வாகத்தால் ஒவ்வொரு நாளும் கடைந்தெடுக்கப்பட்ட மற்றும் ஊடகங்களால் விமர்சனமின்றி பல வாரங்களாக திரும்ப திரும்ப கூறப்பட்ட பிரச்சாரத்தை ஒரு திட்டமிட்ட மோசடியாக அம்பலப்படுத்துகிறது.

ஒரு விமானத் தாக்குதல் தொடங்குவதன் மீது அரச எந்திரத்திற்குள் கூர்மையான கருத்து வேறுபாடுகள் இருந்ததையும் அந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறது. “அது [அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற] அல்-நுஸ்ராவிற்கு நெருங்கிய வான்வழி ஆதரவு வழங்குவதைப் போல" அமைந்திருக்கும் என்று சிறப்பு நடவடிக்கைகளுக்கான ஓர் உயர்மட்ட ஆலோசகர் தெரிவித்ததையும் அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

இறுதியில், மத்திய கிழக்கில் மற்றொரு தூண்டுதலற்ற யுத்தத்திற்கு இருந்த பாரிய மக்கள் எதிர்ப்போடு சேர்ந்து, நேரடியான இராணுவ நடவடிக்கை தொடங்குவதன் மீது உள்ளார்ந்திருந்த கருத்து வேறுபாடுகள், நிர்வாகத்தை பின்நோக்கி இழுத்துக் கொள்ள மற்றும் சிரிய இரசாயன ஆயுதங்களை எடுத்தழிப்பதற்கான ஓர் ரஷ்ய திட்டத்தை ஏற்க இட்டு சென்றது. இதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் சிரியாவின் பிரதான கூட்டாளி ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன.

பொய்களின் அடிப்படையில் மற்றுமொரு யுத்தத்திற்குள் அமெரிக்க மக்களை இழுத்து செல்லும் நோக்கில் உளவுத்துறையின் திட்டமிட்ட சூழ்ச்சிகள் குறித்த ஹெர்ஸின் விளக்கம், சிரியாவில் ஒபாமா பின்வாங்கி இருப்பதென்பது, இராணுவவாதத்திலிருந்து திரும்பி இருக்கிறது என அர்த்தப்படுத்தவில்லை என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. மாறாக, அந்த எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்க நோக்கத்திற்கு தொடர்புபட்ட விதத்தில் தந்திரோபாயங்களில் ஒரு தற்காலிக மாற்றத்தை அது பிரதிபலித்தது, மற்றும் வாஷிங்டன் எவற்றை மிகவும் ஆபத்தான விரோதிகளாக கருதுகிறதோ அந்த ரஷ்யா மற்றும், அனைத்திற்கும் மேலாக, சீனாவை தனிமைப்படுத்த மற்றும் கட்டுப்படுத்தி வைக்க வாஷிங்டனின் உந்துதலுக்கு இன்னும் கூடுதலான ராஜதந்திர மற்றும் இராணுவ ஆதாரவளங்களில் ஒருமுனைப்படுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும்.

ஹெர்ஸ் எழுதுகிறார், “ஆகஸ்ட் 22இல் டமாஸ்கஸிற்கு அருகில் நடந்த இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பஷீர் அல்-அசாத் மீது பராக் ஒபாமா பொறுப்பைச் சாட்ட முயன்றபோது, அவர் இந்த இலையுதிர் கால விவகாரத்தின் முழு கதையையும் கூறவில்லை.” சில உதாரணங்களில், அவர் முக்கிய உளவு தகவல்களைக் கூறவில்லை என்பதோடு ஏனைய சில விஷயங்களில் அவர் ஊகங்களை உண்மைகளாக காட்டினார். மிக முக்கியமாக, அமெரிக்க உளவுத்துறை சமூகம் அறிந்த சிலவற்றை அவர் ஒப்புக்கொள்ள தவறினார்: அதாவதுயார் பொறுப்பாளி என்பதை மதிப்பீடு செய்யாமல்அந்த ராக்கெட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக ஐ.நா. ஆய்வு தீர்மானித்த அந்த நரம்புசார் விஷவாயு, சரீனை அந்நாட்டின் உள்நாட்டு யுத்தத்தில் சிரிய இராணுவ தரப்பு மட்டுமே வைத்திருக்கவில்லை.”

சரீன் விஷவாயுவை உருவாக்கும் முறையில் அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற ஒரு ஜிஹாத் குழுவான அல்-நுஸ்ரா முன்னணி (al-Nusra Front) நிபுணத்துவம் பெற்றிருந்தது என்றும், அதை குறிப்பிட்ட அளவிற்கு அதனால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் ஆதாரத்தோடு மேற்கோள் காட்டி, அந்த தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், உச்சகட்டமாக ஒரு உத்தியோகபூர்வ நடவடிக்கை ஆணையைக் கொண்டஒரு தரைவழி தாக்குதலை முன்னெடுக்கும் திட்ட ஆவணங்களைக் கொண்டஒருசில உயர்மட்ட இரகசிய அறிக்கைகளை அமெரிக்க உளவு முகமைகள் முன்வைத்தன.”

அந்த தாக்குதல் நடந்த போது, அல்-நுஸ்ரா சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருந்திருக்க வேண்டும், ஆனால் நிர்வாகம் அசாத்திற்கு எதிரான ஒரு தாக்குதலை நியாயப்படுத்த குறிப்பிட்ட உளவுத் தகவல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டது.”

செப்டம்பர் 10இல் தொலைக்காட்சியில் தேசியளவில் வழங்கப்பட்ட ஒபாமாவின் உரையை ஹெர்ஸ் மேற்கோள் காட்டுகிறார், அதில் ஒபாமா, “கிழக்கு கூத்தா மீதான சரீன் விஷவாயு தாக்குதலுக்கு "ஆசாத் ஆட்சி தான் பொறுப்பு என்பது எங்களுக்குத் தெரியும்" என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார், செய்திகளின்படி அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்னரே அதற்கான சிரிய அரசின் தயாரிப்புகளை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருந்ததாக, அந்த உரையில், ஒபாமா குறிப்பிட்டார்.

ஹெர்ஸ் அவரது உளவுத்துறை மற்றும் இராணுவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி (வெளிப்படையான காரணங்களுக்காக அவர்களின் பெயர்கள் கூறப்படவில்லை), அமெரிக்க அரசாங்கம் அந்த சரீன் விஷவாயு தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை அளிக்கவில்லை. மாறாக, அது ஒரு காட்சியை ஜோடிக்க சிரியாவின் முந்தைய ஒரு நரம்புசார் விஷவாயு வெள்ளோட்டம் குறித்து கிடைத்த உளவு தகவல்களை பயன்படுத்தியதோடு, அதுவே ஆகஸ்ட் 21 தாக்குதலில் உடனுக்குடன் கிடைத்த உளவு தகவல்கள் என்பதாக காட்டுகிறது என்று ஹெர்ஸ் ஆவணப்படுத்துகிறார்.

அவரது ஆதாரங்களில் ஒருவர் இந்த உளவுத் தகவல் பொய்மைபடுத்தல்களை 1964 Golf of Tonkin சம்பவத்தோடு ஒப்பிடுவதை ஹெர்ஸ் மேற்கோள் காட்டுகிறார், அந்த சம்பவத்தில் ஜோன்சன் நிர்வாகம் வடக்கு வியட்நாம் மீது குண்டு தாக்குதல்கள் தொடங்கியதை நியாயப்படுத்த தேசிய பாதுகாப்பு முகமை இடைமறித்து பெற்ற செய்திகளை நேர்மாறாக எடுத்துக் காட்டி இருந்தார்.

மேற்கத்திய ஆதரவுடனான மற்றும் ஜிஹாத் செல்வாக்கு பெற்ற "போராளிகள்" சரீன் விஷவாயுவை கைவசம் பெறவும், பயன்படுத்தவும் தகுதி பெற்றிருந்தனர் என்று அறிவித்த முந்தைய வசந்தகால மற்றும் கோடைகாலத்தின் பல உளவு அறிக்கைகளை புறக்கணிக்கவும், மூடிமறைக்கவும் எடுக்கப்பட்ட தீர்மானம், உளவுத் தகவல்களை "தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது" மற்றும் பொய்மைப்படுத்துவது ஆகியவற்றை விட ஒருவேளை இன்னும் கூடுதலாக அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருந்தது. அந்த அறிக்கைகளில் CIAஇன் பகுப்பாய்வுகளும் உள்ளடங்கும், அதன் அடிப்படையில் தான் வெள்ளை மாளிகைக்கு சுருக்கமாக செய்திகள் தெரிவிக்கப்பட்டன மற்றும் இராணுவ இணை தளபதிகளால் நடவடிக்கை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, அந்த ஆணைகள் இவ்வாறு குறிப்பிட்டன: "சரீன் விஷவாயுவைக் கொண்டு அமெரிக்க படையின் மீது தாக்குதல் நடத்தும் திறன் பெற்ற "போராளி" படைகளை, இரசாயன ஆயுத தளங்களைக் கைப்பற்ற அனுப்பப்பட்ட அமெரிக்க தரைப்படை துருப்புகள் எதிர்கொள்ள நேரிடும், ஏனென்றால் அவர்கள் அந்த விஷவாயுவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றிருந்தனர்,” என்று குறிப்பிட்டன.

பாரபட்சமற்ற மற்றும் ஓரளவிற்கு செய்திகள் அறிந்த எந்தவொரு பார்வையாளருக்கும் ஏற்கனவே வெளிப்படையாக தெரிந்த ஒரு விஷயத்திற்குஅதாவது சிரிய அரசாங்கத்தின் விஷவாயு தாக்குதல் மீதான யுத்த பிரச்சாரமானது இராணுவ தாக்குதல் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போலிக்காரணத்தை வழங்க நோக்கமாக கொண்ட பொய்களின் ஓர் ஆக்கமூலப்பொருளாகும் என்பதற்குஹெர்ஸின் வெளியீடுகள் உள்ளார்ந்த ஆதாரத்தை வழங்குகின்றன.

அந்த காலப்பகுதியில் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்துவதற்கு சிரிய ஆட்சிக்கு எந்தவொரு காரணமும் இருக்கவில்லை. அது சுன்னி "போராளிகள்" படையை இராணுவரீதியில் விரட்டிக் கொண்டிருந்தது. பெரும்பாலான மக்களால் வெறுக்கப்பட்ட மற்றும் தூற்றப்பட்ட அந்த படைகள் கிறிஸ்துவர்களையும், ஷியைட்களையும் தாறுமாறாக படுகொலை செய்வதில் மற்றும் கொள்ளையடிப்பதில் இறங்கி இருந்தது. அந்த தாக்குதல் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்களின் டமாஸ்கஸ் தலைமையகத்தில் இருந்து வெகுசில மைல்களுக்கு அருகிலே தான் நிகழ்ந்தது, அந்த ஆய்வாளர்கள் அசாத்தால் அந்நாட்டிற்குள் அழைக்கப்பட்டிருந்தனர், மேலும் முந்தைய விஷவாயு தாக்குதல்களை அவர்கள் ஆய்வு செய்ய தொடங்கி இருந்தனர். அந்த முந்தைய தாக்குதல்கள் மேற்கத்திய ஆதரவிலான படைகளாலேயே நடத்தப்பட்டு இருந்ததற்கு "வலுவான, தீர்க்கமான" ஆதாரத்தை, சிரியா மீதான சுயாதீன ஐ.நா. விசாரணை கமிஷனின் ஒரு அங்கத்தவர் கார்லோ டெல் போன்டெ மே மாதம் சமர்ப்பித்திருந்தார்.

எவ்வாறிருந்த போதினும், அதன் மூலமாக நேரடி மேற்கத்திய தலையீட்டை நியாயப்படுத்தவும் மற்றும் தோல்வியை தவிர்க்கவும் அவர்களால் முடியுமென்பதால், அதுபோன்றவொரு அட்டூழியத்தை நடத்த அல் கொய்தா தொடர்பு "போராளிகளுக்கும்", மற்றும் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் சவூதி ஆதரவாளர்களுக்கும் அங்கே நிறைய காரணங்கள் இருந்தன.

அசாத் ஆட்சி தான் இரசாயன விஷவாயு தாக்குதல் நடத்தியதென்பதை நிரூபிப்பதற்கு ஒபாமா நிர்வாகத்தால் ஒரேயொரு உறுதியான ஆதாரத்தை கூட இதுவரையில் காட்ட முடியவில்லை.

ஹெர்ஸின் கட்டுரை அமெரிக்க ஊடகங்களின் ஒரு நாசகரமான நிலைமையை அம்பலப்படுத்துகிறது, அவை அரசின் யுத்த பிரச்சாரத்தைப் பாய்ச்ச மீண்டுமொருமுறை அந்த வாய்ப்பை பயன்படுத்துவதில் தாவிக் குதித்தன. கடந்த ஆகஸ்டின் சரீன் விஷவாயு தாக்குதல் நடந்து சிலமணி நேரங்களுக்கு உள்ளேயே, சிரிய அரசே குற்றம் செய்தது மற்றும் ஒரு இராணுவ விடையிறுப்பு அவசியப்படுகிறது என்பதை உண்மை என்றரீதியில் வலியுறுத்தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்ஸூம் தலையங்கங்களைப் பிரசுரித்தன. கையூட்டுப் பெற்ற தொலைக்காட்சி "இதழாளர்கள்" அரசாங்கத்தின் போக்கை ஊக்கப்படுத்தினர், மற்றும் பொதுமக்களின் கருத்தை ஒரு புதிய யுத்தத்திற்கு பின்னால் திசைதிருப்ப முயன்றனர்.

சரீன் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட வாஷிங்டன் செய்தியாளர்களின் ஒரு குழுவை அழைத்த வெள்ளை மாளிகை, அவர்களிடம் ஓர் "அரசு மதிப்பீட்டை" வழங்கியதென்று ஹெர்ஸ் குறிப்பிடுகிறார். "அசாத் அரசிற்கு எதிராக நிர்வாகத்தின் விஷயத்திற்கு முட்டுகொடுக்க ஓர் அரசியல் வாதமென்று" ஹெர்ஸ் அதை வர்ணிக்கிறார். "McClatchy செய்தி இதழ்களுக்கான தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளரும், பெரும்பாலும் விமர்சனரீதியில் செய்தி வழங்கும் ஒருவரான ஜோனாதன் லாண்டே கூட குறைந்தபட்சமாக" அந்த குழுவில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக குற்றத்தன்மையானது நியூ யோர்க் டைம்ஸின் பாத்திரமாக இருந்தது. ஈராக் யுத்தத்திற்கான ஓட்டத்தில், அந்த "சாதனை செய்தியிதழ்" நிர்வாகத்தின் அனைத்து வாதங்களையும், எவ்வித சுயாதீன ஆய்வும் இல்லாமல், அனைத்தையும் மீண்டும் மீண்டும் உண்மையென அறிவித்து, அரசாங்கத்தின் பொய்களை ஊக்குவிக்க மற்றும் நியாயப்படுத்த அதன் முயற்சிகளைத் திரும்ப திரும்ப செய்தது.

சரீன் விஷவாயுவை ஏந்தி சென்றதாக கருதப்பட்ட, பயன்படுத்தப்பட்ட இரண்டு ராக்கெட்களின் விமான பாதையை ஒரு பகுப்பாய்விற்கு உட்படுத்தியதன் அடிப்படையில், அந்த ஏவுகணைகள் இலக்கிலிருந்து ஒன்பது கிலோமீட்டரை விட சற்று அதிக தூரத்தில் இருந்த ஒரு சிரிய இராணுவ தளத்திலிருந்து ஏவப்பட்டிருந்ததாக நிரூபிக்க முயன்ற ஒரு டைம்ஸின் கட்டுரையை ஹெர்ஸ் மேற்கோள் காட்டுகிறார். அமெரிக்க கடற்படையின் தலைமை நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ள, தொழில்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான மாசெசூட்ஸ் பயிலகத்தின் ஒரு தொழில்நுட்ப பேராசிரியர் தியோடர் போஸ்டலை ஹெர்ஸ் மேற்கோளிடுகிறார், டைம்ஸ் கட்டுரை "முற்றிலும் ஏமாற்றுத்தனமானது" ஏனென்றால் அந்த ஏவுகணை இரண்டு கிலோமீட்டருக்கு கூடுதலான தூரத்திற்குச் செல்ல சாத்தியமற்றது என்று அந்த பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஆழ்ந்த ஜனநாயகமற்ற குணாம்சத்திற்கு வெளிப்பாட்டை அளிக்கும் விதமாக, பத்திரிகையாளர்களுடன் வெள்ளை மாளிகை கூட்டம் நடத்திய அதே நாளில் டைம்ஸின் ரோஜர் கோஹென் ஒரு கட்டுரையில் எழுதினார்: “நீடித்த மூலோபாய முக்கியத்துவமெனும் ஒரு பண்டத்தைதேசிய நம்பகத்தன்மையைதோன்றி மறையும் ஒன்றுக்குஅதாவது பொதுமக்கள் கருத்திற்கு சரணடைய செய்வதற்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் யுத்த சோர்வை விதிவிலக்காக விட்டுவிட முடியாது.”

யுத்தத்திற்காக கூடி அலறிய அலறலைச் சுற்றி சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற போலி-இடது அமைப்புகளும் இருந்தன, அவை அரசாங்கத்தின் வாதங்களை செல்லுபடியாகும் விஷயமாக எடுத்துக் கொண்டன மற்றும் அவற்றின் யுத்த-ஆதரவு தொழிற்சாலையில் அதே விவகாரத்தை அரைத்துக் கொண்டிருந்தன.

ஹெர்ஸின் கட்டுரை முற்றிலுமாக உலக சோசலிச வலைத் தளத்தால் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை மெய்பித்துக் காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 22இல் WSWS எழுதியதைப் போல: “டமாஸ்கஸிற்கு வெளியே பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்ற ஓர் இரசாயன ஆயுத தாக்குதல் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் சிரிய ஆட்சியால் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், மேற்கத்திய தலையீட்டைத் தூண்டும் நோக்கில் ஒரு நாடகபாணியிலான தூண்டுதலின் அனைத்து அடையாளங்களைக் கொண்டுள்ளன.”

நான்கு நாட்கள் கழித்து, நாங்கள் எழுதினோம்: “இல்லாத பேரழிவு ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் ஈராக் யுத்தத்திற்கு சென்று பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், சிரியாவிற்கு எதிரான ஒரு புதிய ஆக்கிரமிப்பு யுத்தத்தை நியாயப்படுத்த பாரீஸ், இலண்டன் மற்றும் வாஷிங்டனால் ஜோடிக்கப்பட்டு வருகின்ற ஆத்திரமூட்டல், குறைந்த விசித்திரத்தைக் கொண்டதல்ல.”

"சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சி டமாஸ்கஸிற்கு அருகில் உள்ள கூத்தாவில் கடந்த புதனன்று பேரழிவு இரசாயன ஆயுத தாக்குதல்களை நடத்தியதென்ற குற்றச்சாட்டுக்களில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை.”

யுத்த உந்துதலை பகுப்பாய்விற்கு உட்படுத்தியும், வார்த்தைஜாலங்கள் மற்றும் பொய்களுக்குப் பின்னால் இருந்த ஏகாதிபத்திய நோக்கங்களை அம்பலப்படுத்தியும் அடுத்தடுத்து தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு மேலாக WSWS டஜன் கணக்கான கட்டுரைகளையும், அறிக்கைகளையும் பிரசுரித்தது. WSWSஉம் அது எதற்காக பேசுகிறதோ அந்த உலக சோசலிச இயக்கமும் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தனித்தன்மை வாய்ந்த மொழியை பேசுகின்றன என்பதையே இந்த ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.