World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German universities threatened with spending cuts

ஜேர்மனியப் பல்கலைக்கழகங்கள் செலவின வெட்டுக்களின் அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றன

By Phillip Frische 
5 December 2013

Back to screen version

ஜேர்மனியில் உயர் கல்வி நிறுவனங்கள் கடுமையான வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை எதிர்நோக்குகின்றன. பல்கலைக்கழகங்களில், குறிப்பாக முன்னாள் கிழக்கு ஜேர்மனியில், மில்லியன் கணக்கான யூரோக்கள் சேமிக்கப்பட உள்ளன. இப்பகுதியில் ஜேனா, ஹாலே (Saale) மற்றும் லைப்சிக் ஆகியவை செலவு வெட்டும் திட்டங்களால் பாதிக்கப்படும் முக்கிய கல்வி நிலையங்களாக உள்ளன.

ஆனால், சார்புரூக்கன், வூர்ஸ்பேர்க், பிரீமென் பல்கலைக்கழகங்களிலும் முக்கிய செலவு வெட்டும் திட்டங்கள் உள்ளன.

பல்கலைக்கழகங்களில் நிலைமைகள் ஏற்கனவே பேரழிவு தருபவை போல் உள்ளன. மாணவர்கள் நெரிசல் மிகுந்த விரிவுரை மண்டபங்களில் திணறுகின்றனர்; பெரும்பாலான ஆசிரியர்கள் குறைந்த ஊதியம் பெறுகின்றனர், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வேலை அளிக்கப்படுகின்றன. அப்படி இருந்தும், இன்னும் வெட்டுக்கள் பல்கலைக்கழகங்களில் செய்யப்பட உள்ளன.

ஜேர்மனிய மாநில அரசாங்களின் சிக்கனக் கொள்கைகளுக்கு உடனடி பின்னணி ஜேர்மனிய அரசியலமைப்பில் 2009ம் ஆண்டு இணைக்கப்பட்ட “கடன் தடை”, மற்றும் அதற்குப் பின் அனைத்து மாநில அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டதுதான். ஜேர்மனிய மாநிலங்களில் இருந்து (Bundesländer) அனைத்துக் கடன்களும் 2020க்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது. 2016 ஐ ஒட்டி, கூட்டாட்சி அரசாங்கம் அதன் கட்டுமானப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.35%குக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு நிலையான சபை, கூட்டாட்சி வரவு-செலவு திட்டத்தை மேற்பார்வையிடும், மறுகட்டுமான நடவடிக்கைகளை செயல்படுத்தும், மாநிலங்களையும் தேவையானால் மேற்பார்வையிடும்.

கடன் தடை என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தி கல்வித்துறையில் ஏற்கனவே பாரிய வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன. வெட்டுக்களை செயல்படுத்தும் திட்டங்கள் தொடர்பான மூலோபாய ஆவணங்கள் பல்கலைக்கழக தலைமையிடங்கள் மற்றும் உரிய மாநில அரசாங்கங்களின் கருத்தாய்வுகளில் விவாதிக்கப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான வேலைகள் தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன, இதில் முழு பாடத்துறைப் பிரிவுகளும் அடங்கும்.

தூரிங்கனில் 300 வேலைகள் வெட்டப்பட உள்ளன என்று Thüringer Allgemeine Zeitung தெரிவிக்கிறது; இதில் 50 பேராசிரியர்களும் அடங்குவர், இதை ஒட்டி வரவு-செலவு திட்டத்தில் 10% குறையும். குறிப்பாக கடுமையான வெட்டுக்கள் ஜேனாவில் உள்ள Friedrich-Schiller பல்கலைக்கழகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து பாடத்திட்டங்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டுவிட்டன அல்லது அகற்றப்பட்டுவிட்டன. Thüringer Allgemeine ஆல் பார்க்கப்பட்ட உள்ளக ஆய்வு ஒன்றின்படி, இன்னும் 2 பாடத்திட்டங்கள் “பரிசீலனையில் உள்ளன”.

பல்கலைக்கழக செனட்டால் அக்டோபர் 15 ஏற்கப்பட்ட “கட்டுமானம் மற்றும் வளர்ச்சித் திட்டம்” ஒன்று, 125 முழுநேர வேலைகளை வெட்டும் திட்டத்தை முன்மொழிகிறது. இது, கட்டுமான பற்றாக்குறையான 7.3 மில்லியன் யூரோ பற்றாக்குறையைச் சரிசெய்யும். கணிசமான பல்கலைக்கழக வேலைகள் பகுதி நேர வேலைகள் என்பதால், 125 பேருக்கும் மேலானவர்கள் இதனால் பாதிக்கப்படுவர். நிர்வாக ஊழியர்கள், விஞ்ஞானத்துறை ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோருடைய எண்ணிக்கையும் வெட்டப்படும். மொத்தம் 30 பேராசிரியர்கள் அகற்றப்படுவர், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, பொது கல்வித்திட்டம், அரசியல் கோட்பாடு போன்ற பாடங்கள் அகற்றப்படும்.

வைமார் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 60 வேலைகள் வெட்டப்படும். Bauhaus பல்கலைக்கழகம் ஏற்கனவே விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்துறை தொடர்பான அதன் திட்டத்தை தூரிங்கன் கல்வி அமைச்சரகத்திற்கு அனுப்பியுள்ளது. இது 12 பேராசிரியர்களின் பதவிகளை வெட்டும் திட்டத்தைக் கொண்டுள்ளது; இது 7 பதவிகளுக்கு 1 ஆகும். சமூக ஜனநாயக கட்சி கலாச்சாரத்துறை மந்திரி கிறிஸ்தோப் மற்ட்சி, 2020 வரை வளர்ச்சித்திட்டத்தை ஒட்டி பல்கலைக்கழகங்கள் “செல்வாக்கற்றவை தொடர்பாக முடிவுகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

இதேபோன்ற நிலைதான் மற்ற மாநிலங்களிலும் உள்ளதுசாக்சோனி-அன்ஹால்ட் மாநில அரசாங்கம், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி, தூரிங்கனைப் போல், 2025 ஐ ஒட்டி 50 மில்லியன் வெட்டுக்களை கொண்டுவர நோக்கம் கொண்டுள்ளது. Mitteldeutsche Zeitung கருத்துப்படி, பல்கலைக்கழக இயக்குனர்கள் மாநில அரசாங்கத்திற்கு அவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 2015 முதல் 2019 வரை ஆரம்பத்தில் 5 மில்லியன் யூரோக்களை வெட்ட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

முறையான செலவு மிச்சம் பிடிக்கும் திட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ள. பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆசிரியர் மேலாண்மை குழு கடுமையான சிக்கன நடவடிக்கையை 2025 வரை ஏற்றுள்ளது. செயற்பாட்டு மற்றும் பணியாளர்கள் செலவுகள் குறைக்கப்பட உள்ளன மற்றும் முழுப் பகுதிகள் மூடப்பட உள்ளன—இதில் பிறப்புத் துறை மருத்துவ மையம், மருத்துவ சட்டம், சுற்றுச்சூழல் நச்சு, சுகாதாரம், நுண்ணுயிர்த்துறை, மருந்துத்தயாரிப்புத்துறை ஆகியவை அடங்கும்.

2020 ஐ ஒட்டி சாக்சோனியில் 1,000 வேலைகளுக்கு மேல் அகற்றப்படும். லைப்சிக் பல்கலைக்கழகம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 24 பணிநீக்கங்களை செய்யும். பல்கலைக்கழகம், திட்டமிடப்படும் வெட்டுக்கள் குறித்த மூலோபாய ஆய்வுத்தாளை ஏற்றுள்ளது; அதில் 2013, 2014ல் செய்யப்பட வேண்டிய 48 வேலை வெட்டுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற வெட்டுக்களில், சாக்சோனியிலேயே ஒன்றுதான் உள்ள மருந்துகள் தயாரிப்புப் பிரிவும் மூடப்பட உள்ளது. நிறுவனங்களை அகற்றுவது 21 வேலைகள் மற்றும் ஐந்து பேராசிரிய பதவிகளை இழக்கச் செய்துவிடும்.

2020 ஐ ஒட்டி CDU/SPD மாநில அரசில் உள்ள சார்லாந்தில் சார்புரூக்கன் பல்கலைக்கழகம் மொத்தம் 140 மில்லியன் வெட்டுக்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 150 மில்லியன் யூரோ என இருக்கையில், இது ஏராளமான வேலைகளை அழித்தல், கணிசமான பகுதிகளை மூடல் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும்.

மிக வியத்தகு கல்வித் தாக்குதல்கள் 2009 ல் இருந்து இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ள பிராண்டன்பேர்க் மாநில அரசாங்கத்தில்தான் உள்ளது. டிசம்பர் 2012ல் இது ஏற்றுக்கொண்ட, 2013, 2014 வரவு-செலவு திட்டத்தில் இடது கட்சி / சமூக ஜனநாயக கட்சி கல்விக்கான செலவுகளைக் குறைத்துவிட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 12 மில்லியன் யூரோக்கள், பொது நிதிப் பள்ளிகளில் இருந்து 13 மில்லியன் யூரோக்கள் மற்றும் இலவச பள்ளிகளிடம் இருந்து 4.3 மில்லியன் யூரோக்கள் வெட்டப்படும்.

வெட்டுக்கள் மற்றும் கட்டுமான மாற்றங்களை ஒட்டி, Cottbus பல்கலைக்கழகம் மற்றும் Lausitz சிறப்பு உயர்கல்விக்கூடம் ஒன்றாக கொண்டுவரப்பட்டன. மாணவர்களும், விஞ்ஞானிகளும் நகர மையத்திற்கு கறுப்பு உடை அணிந்து அணிவகுத்து, ஒரு ஈமச்சடங்கு ஊர்வலம் போல் நடத்தினர்; இடது கட்சி/SPD மாநில அரசாங்கம் இணைப்பை “புதிய நிறுவன வகையை கொண்ட முன்னேற்றத் திட்டம்” என விவரித்துள்ளது.

கல்வித்துறையில் வெட்டுக்களை சுமத்துவதில் இடது கட்சி முக்கிய பங்கை கொண்டுள்ளது. மற்ற கட்சிகளைவிட, இது செலவு வெட்டுக்களை முன்னெடுக்கிறது, மறுகட்டுமானத்தை முன்னேற்றம் என்கிறது; இதையொட்டி இந்த நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பை சிதைக்கிறது. உண்மையில் இந்த சமூக சொற்றொடர்களின் பின்னணியில், தாக்குதல்கள், பிற உத்தியோகபூர்வக் கட்சிகளின் கொள்கையில் இருந்து ஒரு வித்தியாசமும் இல்லை.

இடது கட்சியின் Helmut Markov, இடது கட்சி/SPD யின் பிராண்டன்பேர்க் மாநில அரசாங்கத்தின் நிதி மந்திரி, 2014 வரவு-செலவு திட்டத்தில் புதிய கடன் எதையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை; கடன் தடைச் செயல்பாட்டில் இது முதல் நடவடிக்கையாகும் என்றார். சாக்சோனியில், எதிர்க்கட்சியில் இருக்கும் இடது கட்சியின் பாராளுமன்றப்பிரிவு, கடன் தடையை மாநில அரசியலமைப்பில் இயற்றுவதற்கு ஆதரவு கொடுத்துப் பேசியது.

CDU/CSU வில் இருந்து இடது கட்சி வரை அனைத்துக் கட்சிகளும் மக்கள் மீது நெருக்கடியின் சுமை முழுவதையும் சுமத்துவதில் முழு உடன்பாட்டுடன் உள்ளன.

கல்விக்கான செலவு வெட்டுக்கள் என்பது, ஐரோப்பா முழுவதும் நடக்கும் சிக்கனக் கொள்கைகளின் ஒரு பகுதியாகும். 2008 பொருளாதார நெருக்கடி வெடிப்பில் இருந்து, அரசாங்கங்கள் வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் பிணை எடுப்புக்களுக்கு நிதி கொடுக்க குறிப்பாக பல்கலைக்கழகங்களில் செலவுகளைக் குறைத்துவிட்டன. பிரித்தானியாவில் விஞ்ஞான பகுதிக்கான மொத்த வரவு-செலவு திட்டம் 2010ல் 11 பில்லியன் யூரோக்கள் என்று இருந்தது 2013ல் 9 மில்லியன் யூரோக்களாகிவிட்டது. செக் அரசாங்கம், உயர் கல்வி நிறுவனங்களில் 2008 முதல் 2012 வரை 14% செலவைக் குறைத்து விட்டது. ஹங்கேரியில் கல்வித்துறைக்கான 20% வெட்டு வந்துள்ளது; கிரேக்கத்தில் அது இன்னும் அதிகமாக 25% என உள்ளது.

இப்போது இக்கொள்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது. கட்டுமானச் சீர்திருத்தங்கள், போட்டித்தன்மையை முன்னேற்றவும், ஐரோப்பிய மட்டத்தில் கடுமையான நிலைத்திருக்கக் கூடிய வரவு-செலவு திட்டம் என்பதும்தான் CDU/CSU, SPD ஆகியற்றின் உடன்பாடாகும். இது ஜேர்மனியின் கல்வித்துறை கொள்கைக்கு முற்றிலும் பொருந்துகிறது. மாணவர்களுக்கு நிதிய ஆதரவில் (மாணவர் கடன்கள்) நீண்டகால அதிகரிப்பு தேவை என்றாலும், அது உடன்பாட்டின் பொருளுரையில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது; “சிறப்புத் தன்மைக்கு முன்முயற்சி” என்ற வடிவில் கல்விச்சீர்திருத்தம் வணிகத்தின் நலன்களுக்காகவே தொடரும்.

இவ்வகையில், மாணவர்களுக்கு பேரழிவு தரும் கற்கும் நிலைமைகளும், விஞ்ஞான ஊழியர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு மோசமான ஊதியமும் என்ற நிலையில் ஒருங்கிணைப்பு இருக்கும். கூட்டாட்சி உடன்பாடு இருக்கும் மாநிலங்களில் “விஞ்ஞானத்துறை தன்மையில் இருந்து விளையும் தற்காலிகப் பணி உறவுகள், அவை குறிப்பிட்ட கால ஆய்வுத் திட்டங்கள் மற்றும் குறிப்பான பாடத்திட்ட காரணங்களை கொண்டிருக்கும்.”