சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US vice president backs Japan over China’s air defence zone

அமெரிக்க துணை ஜனாதிபதி சீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் குறித்து ஜப்பானை ஆதரிக்கிறார்

By Peter Symonds 
4 December 2013

Use this version to printSend feedback

நேற்று அவருடைய டோக்கியோ வருகையின்போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பேடென் நவம்பர் 23 அன்று சீனா அறிவித்த கிழக்கு சீனக்கடலில் அதன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) மீது அழுத்தங்களை தக்க வைக்கும் வகையில் பேசினார். ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்சோ அபேயை சந்தித்தபின், பேடென் அமெரிக்கா பெய்ஜிங்கின் நடவடிக்கையால் “ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும்” இது “விபத்துக்கள், தவறான கணக்கீடு போன்ற ஆபத்துக்களை அதிகரிக்கும்” என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஒபாமா நிர்வாகம், சீன ADIZ விவகாரத்தை தன் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறையாக பற்றியுள்ளது; இது அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்னும் நிலைப்பாட்டின் பகுதியாகும்; அது சீனாவை சுற்றி வளைப்பதையும், பெய்ஜிங்கின் செல்வாக்கை பிராந்தியம் முழுவதும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா, அதன் அமெரிக்க-ஜப்பான் உடன்பாட்டில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று பேடென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்; இது கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் சீனாவுடன் எந்த மோதலிலும் அமெரிக்கா ஜப்பானுக்கு ஆதரவாக இருக்கும் என்னும் கருத்துக்களை எதிரொலிக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் இரண்டும் அவை சீனா அதன் ADIZ க்கு நிர்ணயித்துள்ள விதிகளை புறக்கணிக்கும் என அறிவித்துள்ளன; இதில் ஜப்பானில் சென்காகு, சீனாவில் டயோயு என்படும் பூசலுக்குட்பட்ட தீவுகள் மீதான வான் பகுதியும் அடங்கும். கடந்த வாரம் அமெரிக்க வான் படை, இரண்டு B52 குண்டு வீசும் விமானங்களை வான் பாதுகாப்பு பகுதியில் சீன அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் பறக்க விட்டது. வெள்ளியன்று சீனா தனது போர் விமானங்களை, அமெரிக்க, ஜப்பானிய போர் விமானங்கள் நுழைந்ததற்கு முகங்கொடுக்கும் வகையில் அப்பகுதியில் ஊடுருவ விட்டது.

சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், வான் நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணிக்கும் தைவானின் பாதுகாப்பு அமைச்சரகம், திங்களன்று செய்தி ஊடகத்திடம், அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா சீனப் பகுதியில் 13 முறை நுழைந்ததுள்ளது என்றும் ஜப்பான் 85 முறை என்றும் கூறியுள்ளது. தைவானுடைய கண்காணிப்பின்படி, சீனப் போர் விமானங்கள் அமெரிக்க, ஜப்பானிய விமானங்களுக்கு எதிராக நவம்பர் 26, 27, 29 அன்று பறந்தன, “மிக நெருக்கமாக” ஊடுருவிய விமானங்களுக்கிடையே ஒரே ஒரு வான் மைல் தூரம் மட்டுமே இருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் வகையில், பென்டகன் அமெரிக்க கடற்படையின் முன்னேறிய P8 Poseidon விமானத்தை ஜப்பானில் உள்ள ஓகினாவாவில் நிலைகொள்ளச் செய்துள்ளது; இதன் முதல் பகுதி ஞாயிறன்று வந்தது. இந்த விமானம் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சிறிய கப்பல்களை வெளிக்கடலில் தேடி இலக்கு கொள்ளும் வடிவமைப்பு கொண்டது. பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கேர்னல் ஸ்டீவ் வாரன் P8 இன்னும்பிற அமெரிக்க இராணுவ விமானங்கள் ADIZ ல் “வழக்கமான” வான் செயற்பாடுகளைத் தொடரும் என்றார். இப்பகுதியில் பேடென் வருகையின்போது அமெரிக்க வான் செயற்பாடுகளைக் குறைக்கும் அல்லது நிறுத்தும் திட்டங்கள் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஜப்பானைப் போல் இல்லாமல், அமெரிக்கா அதன் பயணிகள் விமானங்கள் ADIZ  ல் பறக்கும்போது அதன் விமான திட்டங்களை சீன அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறு ஆலோசனை கூறியுள்ளது; இது செய்தி ஊடக ஊகமான பிரச்சினையில் டோக்கியோவிற்கும் வாஷிங்டனுக்கும் வேறுபாடு உண்டு என்பதற்கு எரியூட்டுகிறது. சீன வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் அமெரிக்க “ஆக்கபூர்வ அணுகுமுறையை” காட்டியுள்ளது என்றும் ஜப்பானின் “தவறான நடவடிக்கைகளை” கண்டித்தும் பேசினார்.

எனினும், கார்டியனால் மேற்கோளிடப்பட்ட ஒரு மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி, செய்தி ஊடகத்திடம் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையே “வேறுபாடு” இல்லை என்றார். பிடனே தான் சீனத் தலைவர்களுடன் இன்று “நேரடியாக” “பெரிய குறிப்பாக” ADIZ  பிரச்சினையை எழுப்ப இருப்பதாக அறிவித்தார். ஒரு மூத்த அதிகாரி, பேடென் சீனாவிற்கு “நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு” அழைப்பு விடுப்பார் என்றும் பிற “உறுதி குலைக்கும்” நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுவார் எனக் குறிப்பிட்டார்; இதில் புதிய வான் பாதுகாப்பு அடையாளப் பகுதி அறிவிப்பும் அடங்கும். ஐயத்திற்கு இடமின்றி பேடென், சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள வான் பகுதியில் இராணுவ விமானங்களின் வாடிக்கையான செயல்களில் தடையை அமெரிக்கா ஏற்காது என்பதையும் தெளிவுபடுத்துவார்.

ஆசியாவில் அமெரிக்க "முன்னெடுப்பு" என்பது, நேரடியாக சீனா மீது இன்னும் ஆக்கிரோஷ நிலைப்பாட்டிற்கும் பிராந்தியத்தில் கூடுதலான இராணுவப் பங்கிற்கும் ஜப்பானுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. அபே கடந்த டிசம்பர் மாதம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து பூசலுக்குட்பட்ட சென்காகு/டயோயு தீவுகள் பற்றிய அழுத்தங்கள் தீவிரமாகியுள்ளன. அபே அரசாங்கம் ஜப்பானிய இராணுவத்தை, குறிப்பாக அதன் சீனாவிற்கு அருகே உள்ள தெற்குத் தீவுகளில் செயல்களை நடத்தும் திறனை விரிவாக்க முயல்கிறது.

ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் அபே  தானும் பிடெனும் “நாம், இருக்கும் நிலையை படை வலிமையினால் மாற்றும் சீன முயற்சியை பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்” என்றார். இக்கருத்து குறிப்பாக சென்காகு குறித்து சீனா எடுக்கும் எந்த நகர்வையும் ஜப்பானிய நிர்வாகம் சவாலுக்கு உட்படுத்தும். ஒபாமா நிர்வாகம் பலமுறையும் அதன் ஜப்பானுடன் இருக்கும் இராணுவ உடன்பாடு, பூசலுக்குட்பட்ட தீவுகளுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது.

இன்று பெய்ஜிங்கில் இருக்கும் பேடென் சமரசக்காரர் போல் காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார். டோக்கியோவில் பேசிய அவர், மோதல் அபாயத்தை குறைக்க ஜப்பானும் சீனாவும் ஒரு நெருக்கடி மேலாண்மை அமைப்பை தோற்றுவிக்க வேண்டும், மோதல் இடரைக் குறைக்க திறந்த தொடர்புகள் வழிவகையைக் கொள்ள வேண்டும் என்றார். உண்மையில், அமெரிக்கா ADIZ  மீதான அழுத்தங்களை பயன்படுத்தி சீனாவை பின்னிலையில் தள்ளி சலுகைகளைப் பெற முற்படுகிறது; அதே நேரத்தில் பிராந்தியத்தில் தன் நட்பு அமைப்புக்களையும் ஒருங்கிணைக்க முயல்கிறது.

இந்த வாரம் தென்கொரியாவிற்கும் பயணிக்கும் பேடென், ஜப்பானுக்கும் தென் கொரியாவிற்கும் அவற்றின் கடல் எல்லை குறித்த தகராறையும், ஜப்பானிய ஏகாதிபத்தியம் 1930, 1940 களில் செய்த போர்க்குற்றங்களை அபே குறைத்து மதிப்பிட்டதையும் கடக்க முற்படுவார்.

டோக்கியோவில் பேடென் “நம் நட்பு நாடுகள் ஜப்பான், தென் கொரியாவிற்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு வேண்டும்” என்று ஒரு குறிப்பான அழைப்பை விடுத்தார். அமெரிக்கா உளவுத்தகவல் பகிர்வு உடன்பாட்டை இரு நாடுகளுக்கும் இடையே தேவை என வலியுறுத்தி வருகறிறது; இது அவை பென்டகனின் இராணுவ முறையிலான ஆசியக் கட்டமைப்பிற்கு, சீனாவுடனான போர்த்தயாரிப்புக்கு வசதியளிக்கும்.

கிழக்கு சீனக் கடல் தொடர்ந்த அழுத்தங்கள் ஆளும் வட்டங்களில் போர் ஏற்படுவது குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது. பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் நேற்று, முதலாம் உலகப் போருக்கு முன்னிருந்த நிலைமையுடன் சமாந்தரமான தன்மைகளை கூறியுள்ளார், எப்படி “வெளித்தோற்றத்தில் சிறிய நிகழ்வுகள் விரைவில் பேரழிவுகரமான அளவிற்கு அதிகரிக்கும்” என்றும் கூறினார்.

வொல்ப் தொடர்ந்தார்: “இன்று சீனா, ஓர் உறுதியான தேசியவாதி ஜி ஜின்பிங்கின் தலைமையில், ஜப்பான் ஷின்ஜோ அபே இன் தலைமையில், அதேபோல் சற்றும்குறையாத உறுதியான தேசியவாதி, மற்றும் அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் உடன்பாட்டிற்கு உறுதி கொடுக்கையில், மீண்டும் அழிவுதரும் மோதல் இடர் என்பது வந்துள்ளது. அத்தகைய நிகழ்வு தவிர்க்க முடியாது என்பதில் இருந்து தூரத்தில் உள்ளது. நேரக்கூட இயலாது எனலாம். ஆனால் நடக்காது என்று கூறுவதற்கில்லை, ஒரு மாதம் முன்பு இருந்த விட அதிக வாய்ப்பு உள்ளது.

சர்வதேச செய்தி ஊடகத்தில் உள்ள பிறரைப்போல் வொல்ப் சீனாவிடம் முக்கிய பொறுப்பை முன்வைக்கையில், ஆசியாவில் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்க உறுதி என்பதைவிட, இக்கருத்து உலக முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து எழும் உயர்ந்துவிட்ட போட்டிகளின் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இது, உலக மோதலை முன்கூட்டிக் கொண்டுவரவும் முடியும்.