சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British local councils cut home care visits for elderly and disabled

பிரிட்டிஷ் உள்ளூராட்சி சபைகள் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான இல்லப்பாதுகாப்பு விஜயங்களை குறைத்துவிட்டன.

By Joan Smith 
3 December 2013

Use this version to printSend feedback

LCD எனப்படும் லியோனார்ட் செஷயர் இயாலாதோர் (Leonard Cheshire Disability) அறக்கட்டளை, ஐக்கிய இராச்சியத்தில் முதியோருக்கும், இயலாதவர்களுக்குமான சுகாதார பராமரிப்பு இல்ல விஜயங்களில் நான்கில் மூன்று பங்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள்தான் நடக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த குறுகிய விஜயங்கள் 15% அதிகமாகியுள்ளன.

துணி தோய்த்தல், உடை உடுத்திவிடுதல் அடங்கிய இத்தகைய குறுகிய நேரப் பராமரிப்பு வருகைகள், மன ஆரோக்கியம், உடல் பிரச்சினைகள் உடையவர்களை குழப்பத்தான் உதவும்; அவர்களுடைய சுதந்திர வாழ்க்கை நடத்தும் திறனையும் பாதிக்கும். பூர்த்தி செய்யப்படாத மக்களுடைய உடற்கூறு, மன உணர்வு, மனத் தேவைகள் தவிர்க்க முடியாமல் தேவையற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

LCD உடைய தலைமை நிர்வாகி கிளேர் பெல்ஹாம், அது நடத்திய ஓர் ஆய்வு,நம் அனுபவத்தை எதிரொலிக்கிறது; இங்கு பலநேரமும் தனிப்பட்ட பாதுகாப்புத் தொழிலாளி சிறந்தவர்கள், ஆனால் இப்பொழுது நேர அழுத்தத்தில் இருப்பதால் பாதுகாப்புப் பெறும் மக்களுக்கு மொத்த அனுபவமும் சாதகமாக இல்லை என பின்னூட்டம் தெரிவிக்கிறது. அனைவருக்கும் இப்படி நடக்கிறது என்று தெரியும், அனைவரும் இது ஏற்கத்தக்கதல்ல என்று ஒப்புக் கொள்கின்றனர், ஆனால் பாதுகாப்பை ஆணையிடும் குழுக்களும் அரசாங்கமும் முழு உணர்வுடன் வேறு வழி தேடுகின்றன.

வீட்டு விஜயங்களில் உள்ள நெருக்கடி, சமூகங்கள் மற்றும் உள்ளூர் அராசங்க வரவு-செலவுத் திட்ட பெரும் வெட்டுக்களின் விளைவு ஆகும்; அதாவது சமூக பராமரிப்பு வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள 2.6 பில்லியன் பவுண்டுகள் வெட்டின் நேரடி விளைவாகும்.

2010 ல் ஆட்சிக்கு வந்த பின்னர், கன்சர்வேடிவ்/தாராளவாத ஜனநாயக கூட்டணி 33% “திறமையான சேமிப்புக்கள்” உள்ளூர் கவுன்சில்கள் மீது சுமத்தப்பட வேண்டும், அவை 2015 ஐ ஒட்டி செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியது. இந்த ஆண்டு முன்னதாக அவை மற்றும் ஒரு 15% வரவு-செலவுத் திட்ட வெட்டை 2015-16 க்கு அறிவித்துள்ளன. இதன் விளைவாக உள்ளூர் தொழிலாளிகளின் ஊதியங்கள் பணிநிலைமைகள் வெட்டப்படும், சேவைகள் குறைக்கப்படும், மூடப்படும் அல்லது தனியார்மயம் ஆக்கப்படும்; இதில் இல்லப் பராமரிப்பு, பகல் நேர மையங்கள், எஞ்சியிருக்கும் கவுன்சில் நடத்தும் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவை அடங்கும். பல கவுன்சில்கள் திவாலின் விளிம்பில் உள்ளன.

2012ல் 50 கவுன்சில்களுக்கும் மேலானவை, தாங்கள் பராமரிப்பிற்கு கொடுக்கும் பணத்தில் “நடுத்தர-கால” சரிவு வந்துள்ளது என்று புலப்படுத்தினர். 148 மில்லியன் பவுண்டுக்கள் வெட்டப்பட்டதால் 152 ஆங்கில உள்ளூராட்சி சபைகளில் 102ல் இந்நிலை ஏற்பட்டு, முதியவர்களுடைய இல்ல பராமரிப்பு செலவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகள் இல்ல பராமரிப்பு ஆதரவு நிதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2010-2011ல் 244,080ல் இருந்து 224,745 என குறைக்கப்பட்டு விட்டது.

இன்று பெரும்பாலும் உள்ளூராட்சி சபைகள் தனியார் பராமரிப்பு வழங்குனரிடம் இருந்து சேவைகளை வாங்குகின்றனர்; அவர்கள் பொதுச்சேவையாக நடத்தப்படும் சேவைகளை கடந்த மூன்று தசாப்தங்களில் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டனர். முற்றிலும் தனிப்பட்ட நோயாளிகளின் தேவைகளைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பெருகிய முறையில் 15 நிமிட பராமரிப்பு விஜய தொகுப்புக்களை அதிகம் வாங்குகின்றனர்.

செலவைக் குறைத்து பெருகிய முறையில் தொழிலாளர்களைச் சுரண்டுவதின் மூலம் இலாபம் சம்பாதித்தல் என்பதுதான் ஒரே இலக்கு என உள்ள இந்தத் தனியார் பராமரிப்பு நிறுவனங்கள் ஒப்புமையில் குறைந்தப்பட்ச பராமரிப்பையே அளிக்க முடிகிறது. தொழிலாளர்கள் நாள் ஒன்றிற்கு இயன்றளவு பராமரிப்பு விஜயங்களை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது நோயாளிகள் மற்றும் அவர்களுடைய ஊழியர்கள் உடைய பாதுகாப்பு இரண்டையுமே ஆபத்திற்கு உட்படுத்துகிறது

கிட்டத்தட்ட 220,000 பராமரிப்பு தொழிலாளர்கள் தேசிய மட்டத்திலான குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக பெறுகிறனர் என்று கூறப்படுகிறது. இல்லப் பராமரிப்பு தொழிலாளர் தொகுப்பில் மூன்றில் இருவர் பூஜ்ய மணி ஒப்பந்தங்களிலும் (zero-hour contracts) மற்றும் நிதிய அல்லது வேலை உத்தரவாதமும் அற்ற நிலையில் உள்ளனர்.

யூனிசன் (Unison) தொழிற்சங்கம் கொடுத்துள்ள அறிக்கை ஒன்று நம்பமுடியாத அளவிற்கு மோசமான பணிநிலமைகள் இப்பிரிவில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. பராமரிப்பு தொழிலாளர்களில் 79 வீதம் பேருக்கு பணி அட்டவணைகள் கொடுக்கப்படுகின்றன; அவற்றில் நிறையை பேரைப் பார்க்க வேண்டும் என உள்ளது. அடுத்த நபரைப்பார்க்க அவர்கள் முன்னதாகச் செல்ல வேண்டி உள்ளதால் வேலையை விரைவாக முடிக்க வேண்டியுள்ளது. பதில் அளித்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் கடந்த ஆண்டை விடத் தங்கள் பணி நிலைமைகள் மோசமாகிவிட்டது என்று கூறியுள்ளனர். அறிக்கை விளக்குகிறது: “குறைந்தபட்சத்திற்கும் (6.08 பவுண்டுகள்) மற்றும் 8 பவுண்டுகள் மணிக்கு என்பதற்கு இடையே 56 வீதத்தினர்தான் பெறுகின்றனர். 57.8 வீதத்தினருக்கு இரண்டு பேர்களை பார்ப்பதற்கு இடையேயான பயண நேரத்திற்கு அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதில்லை.

41.1 வீதத்தினர் தங்கள் வாடிக்கையாளரின் மருத்துவ தேவைகளை கையாள்வதற்கு போதுமான பயிற்சி கொடுக்கப்படுவதில்லை. 43 வீதத்தினர்தான் மற்ற சக ஊழியர்களை அன்றாடம் காண்கின்றனர். 36.7 வீதத்தினர் அவர்கள் பல நேரமும் வெவ்வேறு நபர்களைக் காண ஒதுக்கப்படுகின்றனர், இது பராமரிப்பு தொடர்ச்சியை பாதிக்கிறது என்றும் நபர்களின் பராமரிப்பு தொழிலாளர்களுடான உறவுத் திறனை பாதிக்கிறது என்றும் கூறுகின்றனர்.

அனைத்து பதில் கூறியவர்களும், வாடிக்கையாளர் தங்கள் நலன் பற்றிக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு தெளிவான வழிவகைகள் இல்லை என்று கூறியுள்ளனர். 52.3 வீதத்தினர் இக்கவலைகள் சில நேரங்களில் மட்டுமே கவனிக்கப்படுகின்றன என்றார்கள்".

தொழிலாளர்களால், முதியவர்களால், பாதிக்கப்படுவோரால் எதிர்கொள்ளப்படும் இந்தக் கொடூர நிலைமைகள், தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகியிருக்க முடியாது, இதில் யூனிசன் தொழிற்சங்கமும் அடங்கும்; இது நிறையை பொதுச் சேவைகள் கடந்த ஆண்டுகளில் தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்ப்பு ஏதும் காட்டாமல் மேற்பார்வையிட்டுள்ளது.

LCD அறக்கட்டளை, ஒவ்வொரு விஜயமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது இருக்க வேண்டும் என்கிறது; ஆனால் இது தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது. உள்ளூர் கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஒருவர், இதன் அர்த்தம்,அதிக செலவு, இன்னும் வளங்கள் தேவை” என்பதாகும் என்றார்.

உள்ளூர் அரசாங்க கூட்டமைப்பின் சமூக நல வாரியத்தின் தலைவரான கேத்தி ஹால், கூறினார்: “தற்போதைய மட்டங்களில் சேவைகளை பராமரிக்க கவுன்சில்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு கூடுதல் 400 மில்லியன் பவுண்டுகள் தேவை. அதற்கு பதிலாக அவர்கள் மத்திய அரசாங்க நிதியில் 42% வெட்டைத்தான் காண்கின்றனர்.”

LCD அறக்கட்டளை அறிக்கையின் கண்டுபிடிப்புக்களுக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிப்பதோடு, தான் “முழுமையாக ஒத்துக் கொள்வதாக தெரிவிக்கிறது”, இது நோயாளிகளுக்கும் சுகாதார பராமரிப்பு தொழிலாளர்களுக்கும் “நியாயமாக இல்லை” என்கிறது. ஆனால் அறக்கட்டளை பிரச்சாரத்திற்கு மந்திரிகள் ஆதரவு கொடுக்க முடியாது என்றும் கூறுகிறது. மாறாக அது தற்பொழுது பாராளுமன்றத்தில் உள்ள பராமரிப்பு சட்டத்திற்கு LCD ஐ ஆதரவு கொடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இச்சட்டவரைவு சமீபத்திய நிகழ்வுகளின் முறைகேடுகளை பயன்படுத்தி, பராமரிப்பு மற்றும் பாதிக்கப்படக்கூடிய வயதுவந்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் “சீர்திருத்த” த்தை புறக்கணித்துவிட்டது.

சட்டவரைவிற்கு இதுவரை நடந்துள்ள விவாதங்கள், திருத்தங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டால் அனைத்துக் குறிப்புக்களும் “பொருத்தமற்ற” 15 நிமிட பராமரிப்பு விஜயங்களை நிறுத்த முடியாது என்றும், உண்மையில் பராமரிப்பு தர ஆணையத்தின் (CQC) அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்னும் திட்டத்தால் நிலைமை இன்னும் “மோசமாகலாம்” என்றும் LCD தெரிவிக்கிறது. இந்த ஆண்டு முன்னதாக வந்த அறிக்கை ஒன்று, CQC, 250 இல்ல பராமரிப்பு வழங்குவோரின் மீது நடத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வு, இங்கிலாந்தில் 26,000க்கும் மேலானவர்கள் உள்ள நிலையில், கால் பகுதிக்கும் மேலானவர்கள் அடிப்படை தேசிய பராமரிப்பு தரங்களை நிறைவு செய்வதில்லை என்று காட்டுகிறது.

LCD யின் பிரச்சாரங்கள் மற்றும் செயற்பாடுகளின் நிர்வாக இயக்குர் ஜேன் ஹாரிஸ் கூறினார்: “அரசாங்கம் CQC வின் பராமரிப்பு அதிகாரங்களை அழுத்தம் கொடுத்துக் குறைத்துள்ளது குறித்து நாம் ஆழ்ந்து ஏமாற்றம் அடைந்துள்ளோம்... CQC இனிமேல், எப்படி உள்ளூர் பராமரிப்பு கமிஷன் அதிகாரிகள், பொறுப்பு கொண்டுள்ளனர் என்ற முறையான பரிசீலனைகளை நடத்த முடியாது.”