சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Behind the US negotiations with Iran

ஈரானுடனான அமெரிக்க பேரங்களுக்குப் பின்னால்

Keith Jones
4 December 2013

Use this version to printSend feedback

1991க்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தியுள்ள யுத்தங்களைவிட ஒப்பீட்டளவில் சிறிய, ஆனால் ஒரு பிரதான மத்தியகிழக்கு யுத்தத்திற்குள் வாஷிங்டனை தவிர்க்க முடியாதபடிக்கு இட்டு சென்ற ஒரு போக்கிலிருந்து அது கடந்த இரண்டு மாதங்களாக தன்னை பின்னுக்கு இழுத்துக் கொண்டுள்ளது. செப்டம்பரில், ஈரானின் ஒரு முக்கிய பங்காளியான சிரியாவின் மீது ஓர் இராணுவ தாக்குதல் அச்சுறுத்தலை ஒபாமா நிர்வாகம் திடீரென கைவிட்டது. பின்னர் அது, எதனுடன் பல மாதங்களாக இரகசிய பேரங்களை நடத்தி வந்ததோ, அதே ஈரானுடன் பேச்சுவார்த்தைகளுக்குள் இறங்கியது.

நவம்பர் 24இல், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகளும் தெஹ்ரானுடன் அதன் அணுசக்தி திட்டங்கள் மீது ஆறு மாதகால இடைக்கால உடன்படிக்கையை அறிவித்தன. தடைகள் சிறிது தளர்த்தப்பட்டதற்கு ஈடாக, ஈரான் ஓர் "இறுதி உடன்படிக்கைக்காக" பேரம் பேசி வருகின்ற போதினும், அதன் அணுசக்தி திட்டங்களை முடக்கியும் மற்றும் குறைத்தும் வைக்கும். 1979 புரட்சியில் ஷா ரெஜா பஹ்லாவியின் அமெரிக்க ஆதரவிலான காட்டுமிராண்டித்தன சர்வாதிகாரம் தூக்கி வீசப்பட்டதற்குப் பின்னர் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் உடன்படிக்கை கடந்த வாரத்தின் உடன்படிக்கையாகும்.

ஈரானின் அணுசக்தி விவகாரமானது ஈரானை அச்சுறுத்த, தனிமைப்படுத்த மற்றும் வாஷிங்டனுடன் ஒரு நவகாலனித்துவ உறவுகளுக்குள் வருவதற்கு நிர்பந்திக்க ஒரு போலிகாரணமாக உபயோகப்பட்டது என்பதை உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தி உள்ளது. இந்த பகுப்பாய்வு ஈரானிய அணுசக்தி உடன்படிக்கைக்குப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானை ஒரு வக்கிரமான மதகுருமார்களின் சர்வாதிகாரம் என்றரீதியில் தாக்கி வந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பத்திரிகைகள், தற்போது, மேற்கத்திய நிறுவனங்களுக்கு ஈரானிய எண்ணெய் விட்டுகொடுப்புகளை வழங்க செய்யவும், ஈரான் மற்றும் அதன் பங்காளிகளை அமெரிக்க வெளியுறவு கொள்கைகளுக்குப் பின்னால் செல்ல வைக்கவும், ஓர் அமெரிக்க-ஈரான் "பெரும் பேரத்தின்" முன்கணிப்புகளால் நிரம்பி உள்ளன.

"அதனால் உலகின் மிக குழப்பமான பிராந்தியத்தை மேற்கிற்கு ஏற்றாற்போல் உருமாற்ற முடியும்" என்பதோடு, "அமெரிக்காவுடன் இராஜாங்கரீதியிலான விவகாரங்களைக் கைவிட்டால்ஒரு தாக்குதலுக்கு தயாராக வேண்டும்" என்பதே ஒரே மாற்றீடாக இருக்குமென்று வாதிட்டு, பிரிட்டனின் எக்னோமிஸ்ட் இதழ் அதன் பிரதான தலையங்கத்தில் அந்த இடைக்கால உடன்படிக்கையை ஆதரிக்கிறது.

அது பின்வருமாறு தொடர்கிறது: “உடனடி பரிசோதனையும், வாய்ப்பும் சிரியாவாக இருக்கும் ... விட்டுக்கொடுப்புகளை வழங்க [சிரிய ஜனாதிபதி பஷீர் அல்-அசாத்தை] எவரேனும் நிர்பந்திக்க முடியுமென்றால், அது [ஈரானிய ஜனாதிபதி ஹோசன்] ருஹானியாக தான் இருக்கு முடியும்."

ஈரானிய தரப்பைச் சேர்ந்த லெபனானிய ஷியைட் அரசியல் இயக்கமும், போராளிகள் குழுவுமான ஹெஸ்பொல்லாவுடன் வாஷிங்டன் இரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

வெளிப்படுவது என்னவென்றால் ஊடகங்களின் பிரிவுகளால் வாதிடப்பட்டதைப் போன்று ஒரு "இராஜதந்திரரீதியிலான திருப்பம்" அல்ல, மாறாக உலகளாவிய மேலாதிக்கத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலை இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுத்துவதற்கான திருப்பமாகும். அது அமெரிக்காவின் பெரிய போட்டியாளர்களுடனானரஷ்யா மற்றும் அனைத்திற்கும் மேலாக சீனாவுடன்ஒரு மோதலில் ஈரானையும், மத்தியகிழக்கையும் அமெரிக்காவின் புறக்காவல் அரணாக திருப்ப கோருகிறது, அது மூன்றாம் உலக யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட நேரடியாக அச்சுறுத்துகிறது.

மற்றொரு மத்தியகிழக்கு யுத்தமானது ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்கு"—அதாவது சீனாவைச் சுற்றி வளைக்க மற்றும் யூரேசியா முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைவுக்குகுழிபறிக்குமென அமெரிக்க வெளியுறவு கொள்கை மேற்தட்டின் பிரிவுகள் கவலை கொண்டன.

அந்த முன்னெடுப்பிற்கு அமெரிக்கா ஏற்றிருக்கும் பொறுப்புணர்வின் மீது கிழக்கு ஆசியாவில் உள்ள வாஷிங்டனின் பல துணை ஆட்சிகள் ஏற்கனவே சந்தேகங்களை வெளியிட்டுள்ளன. "அவரது 'ஆசியாவை நோக்கிய முன்னெடுபிற்கு' அவர் அளித்த வாக்குறுதிகளை நிஜமாக்க", "அங்கே கூடுதல் இராணுவம், இராஜதந்திர நடவடிக்கைகள், மற்றும் பொருளாதார கவனிப்புக்கு அவர் அர்பணிக்க வேண்டி உள்ளதென்பதில் ஜனாதிபதி காங்கிரஸையும், அப்பிராந்தியத்தில் உள்ள கூட்டாளிகளையும், சமாதானப்படுத்த வேண்டி உள்ளதாக" திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

அத்தகைய ஆதாரவளங்களை விடுவிக்க, 2011இல் துனிசியா மற்றும் எகிப்தில் நீண்டகால அமெரிக்க துணைவர்களைக் கவிழ்த்துப் போட்ட தொழிலாளர் வர்க்க மேலெழுச்சிகளுக்குப் பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு கொள்கையில் ஒரு மாற்றம் அவசியப்படுகிறது. வாஷிங்டனின் பிரதான பகடைகாய்களாக சேவை செய்த அல்கொய்தா போன்ற சுன்னி இஸ்லாமியவாத உட்கூறுகளோடு சேர்ந்து, லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான யுத்தங்களைத் தூண்டியதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் விடையிறுப்பு காட்டியது.

அன்னிய நாடுகள் மீதான ஏகாதிபத்திய யுத்தங்களையும் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் நியாயப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஓர் அரசியல் மோசடியான "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்றழைக்கப்படும் நடவடிக்கைகளில் அதன் எதிரியாக கருதப்படும் ஒன்றுடன், நட்பு பாராட்டுவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எந்தவொரு தயக்கமும் இல்லையென்றாலும், இந்த கொள்கையின் விளைவுகளோடு அது திருப்தி அடைந்து விடவில்லை. நேட்டோ மௌம்மர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்து, அவரை படுகொலை செய்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், லிபியாவின் அதிகாரம் பெரும்பாலும் சண்டையிட்டு வரும் அமெரிக்க-எதிர்ப்பு இஸ்லாமியவாத போராளிகளின் கரங்களில் தங்கி உள்ளது. சிரியாவில், அமெரிக்கா, சவூதி அரேபியா மற்றும் கட்டாரால் ஆதரிக்கப்பட்ட புனித சுன்னி போராளிகளின் மதவாத  அட்டூழியங்களுக்கு எதிராக எழுந்த மக்களின் எதிர்ப்பால் அந்த கிளர்ச்சி தோல்வியை சந்திக்கிறது.

சிரிய ஆட்சி மற்றும் அதன் ஷியைட் பங்காளிகளுக்கு, முதன்மையாக ஈரானுக்கு எதிராக சுன்னி அடிப்படைவாத படைகளுக்குக் குழி பறிக்க விரும்பி, அப்பிராந்தியத்தில் எரியூட்டப்பட்ட மதவாத யுத்த நெருப்பில் இன்னும் அதிகமாக எண்ணெய் வார்க்க விரும்புகிறதா என்பதை அமெரிக்கா தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது. ஒபாமா நிர்வாகத்திற்குள் இருப்பவர்களுடன் நடந்த விவாதங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், வாஷிங்டன் போஸ்டின் டேவிட் இக்னாடியஸ் விவரிக்கிறார், “இதுவரை தெளிவாக பகிர்ந்து கொள்ளப்படாத போதும், சுன்னி-ஷியைட் பேதங்களில் அமெரிக்கா ஒரு சமரசத்தை விரும்புகிறது என்பதே அதன் சேதியாக உள்ளது.”

இந்த நேர்மாறான கொள்கை மாற்றத்தை அது நடைமுறைப்படுத்த விரும்புகின்ற போதினும், 1979 புரட்சிக்குப் பின்னர் உடனடியாக அனைத்து சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியலையும் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலமாக அதன் ஆட்சியை திடப்படுத்தி வைத்திருக்கும் ஈரானின் மதகுருமார் ஆட்சியுடன் அது விவகாரங்களைக் கையாள முடியும் என்று வாஷிங்டன் கணக்கிடுகிறது.

வாஷிங்டன் நீண்டகாலமாகவே, அந்த ஈரானிய மதகுருமார்களின் ஆட்சியோடு தீவிர பதட்டமான உறவுகளைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் அமெரிக்க ஆக்கிரமிப்பை தெஹ்ரான் ஆதரித்ததோடு, 2003 ஈராக் ஆக்கிரமிப்பையும் மௌனமாக ஆதரித்தது. மே 2003இல், அது வாஷிங்டனுக்கு ஒரு "பெரும் பேரத்தை" முன்வைத்தது: அதாவது, ஈரானிய ஆட்சியைத் தூக்கியெறியும் அதன் முயற்சிகளை அமெரிக்கா கைவிடுமேயானால், ஈரான் இஸ்ரேலை அங்கீகரித்து, ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு உதவும், மேலும் ஹெஸ்புல்லா மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கு ஆதரவளிப்பதையும் நிறுத்திக் கொள்ளும் என்றது.

அந்த சமயத்தில் புஷ் நிர்வாகம் அந்த உடன்படிக்கையை நிராகரித்தது என்ற போதினும், அமெரிக்க தடையாணைகளால் ஈரானிய பொருளாதாரம் முடமாகி இருப்பதும் மற்றும் ஈரானுக்குள் அதிகரித்து வரும் வர்க்க பதட்டங்களோடு சேர்ந்து, தெஹ்ரானுடன் ஒரு பிற்போக்குதனமான ஏற்பாட்டை செய்ய முயற்சிப்பதற்கு இதுவே சரியான நேரமென்று வாஷிங்டன் வெளிப்படையாக பரிசீலிக்கிறது. அமெரிக்க கொள்கைகளால் வளர்க்கப்பட்ட ஆழ்ந்த சுன்னி-ஷியைட் மதவாத பதட்டங்கள் மற்றும் இஸ்ரேல், சுன்னி சவூதி முடியாட்சி போன்ற அதன் ஈரானிய-விரோத பங்காளிகளிடம் இருந்து வரும் எதிர்ப்புகளை முகங்கொடுத்து வருவதோடு, அது படிப்படியாக முன்னேறுகிறது.

எவ்வாறிருந்த போதினும் உலகளாவிய மோதல்களுக்கான அமெரிக்க ஏகாதிபத்திய தயாரிப்புகளுக்கு பிரதான தடை எதிர்விரோத அரசுகளிடம் காணவில்லை, மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் உள்ளது. ஈரானில் மதகுருமார்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கூட்டாக ஆணையிடப்பட்ட கட்டுப்பாடற்ற-சந்தை கொள்கைகளுக்கு அங்கே தொழிலாளர்கள் இலக்கில் வைக்கப்பட்டுள்ளனர், அதேவேளையில்சிரியா மீதான ஓர் அமெரிக்க தாக்குதலுக்கான திட்டங்களுக்கு மக்களிடமிருந்து காட்டப்பட்ட வெறுப்பைப் போலமேலதிக அன்னிய நாட்டு யுத்தங்களுக்கு, இதில் யூரேசியா முழுவதிலும் ஒரு பிரதான அதிகார போட்டிக்கான திட்டங்களைக் குறித்து கூற வேண்டியதே இல்லை, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர்கள் ஆழ்ந்த விரோதமாக உள்ளனர்.

அமெரிக்க கொள்கையானது மேற்கொண்டு யுத்தங்களை முன்னெடுப்பதற்காக மட்டுமே நகர்த்தப்பட வில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தை எழுச்சியுற செய்ய ஏற்கனவே முன்னுக்கு இழுத்து வந்துள்ள மற்றும் எகிப்து, துனிசியா ஜனாதிபதிகளைக் கவிழ்த்து போட்ட ஆழ்ந்த வர்க்க மோதல்களைக் கையாள்வதற்காக நகர்த்தப்படுகிறது.

மனிதயினத்தை ஒரு மூன்றாம் உலக யுத்தத்திற்குள் தள்ளுவதில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளைத் தடுக்கக்கூடிய மற்றும் இராணுவவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரே சக்தி, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் மீது ஐக்கியப்பட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கம் மட்டுமே ஆகும். உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அத்தகையவொரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அர்பணிக்கப்பட்டுள்ளன.