சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Tensions escalate over Chinese air defence zone

வான் பாதுகாப்புப் பகுதி மீது அழுத்தங்கள் பெருகுகின்றன

By John Chan 
29 November 2013

Use this version to printSend feedback

நேற்று ஜப்பானும் தென் கொரியாவும் இராணுவ விமானங்களை சீனாவின் புதிதாகக் குறிக்கப்பட்டுள்ள “வான் பாதுகாப்பு அடையாளப் மண்டலம்” (ADIZ) மீது பறக்க விட்டபோது அழுத்தங்கள் தொடர்ந்து பெருகின. ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசாங்கங்கள் இரண்டும் அமெரிக்க நிர்வாகத்தின் தலைமையைப் பின்பற்றி, அவற்றின் விமானங்கள்; சீன அறிவுறுத்தல்களான, பறக்கும் திட்டங்களை அளித்தல், தங்கள் தேசிய அடையாளத்தைக் கொடுத்தல், வானொலித் தொடர்பைத் தக்க வைத்தல் இவற்றைப் புறக்கணிக்கும் என அறிவித்தன.

ஆத்திரமூட்டும் வகையில் ADIZ  பற்றி கடந்த வாரம் அறிவித்தபின் சீனா இப்பொழுது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளில் இருந்து தொடர்ந்த சவால்களை எதிர்கொள்கிறதுசெவ்வாயன்று அமெரிக்கா,  சீன வழிவகைகளைப் பின்பற்றாமல் B52 குண்டு வீசும் விமானங்களை அதன் பகுதிக்குள் குவாம் வான் தளத்தில் இருந்து பறக்க விட்டது. அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி சக் ஹெகல் பகிரங்கமாக, அமெரிக்கா சர்ச்சைக்குரிய சென்காகு/டயோயு தீவுகள் குறித்து சீனாவுடன் எத்தகைய பூசல் ஏற்பட்டாலும் அது ஜப்பானை ஆதரிக்கும் என்று அறிவித்தார். ADIZ ல் இப்பகுதி அடங்கும்.

ADIZ செயல்படுத்த தவறியதற்காக உள்நாட்டில் தேசியவாத விமர்சனத்தை எதிர்கொண்ட சீன அரசாங்கம், ஒரு முன்கூட்டி எச்சரிக்கும் விமானத்தையும் சில நவீன SU 30, J11 போர் விமானங்களையும் வான் பகுதியில் ரோந்துக்கு அனுப்பியது. ஒரு சீன வான் படை செய்தித்தொடர்பாளர் இந்த நடவடிக்கை “ ஒரு தற்காப்பு நடவடிக்கை, சர்வதேச பொது நடைமுறையுடன் இசைந்தது” என வலியுறுத்தினார்.

சீனப் போர்விமானங்கள், ஜப்பானிய, தென் கொரிய விமானங்களை சவால் விட அனுப்பப்படவில்லை என்றாலும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டை மீறிப் போகலாம். தொடர்புடைய அனைத்து அரசாங்கங்கள் அனைத்தும் உள்நாட்டில் கூர்மையான சமூக பதட்டங்களை திசைதிருப்பும் ஒரு வழிமுறையாக, தேசியவாத உணர்வுகளை தூண்டி விட்டு வருகின்றன. இத்தகைய சூடான நிலையில் தவறான கணிப்புகள், எந்தக் கட்சியும் அது பின்வாங்க வேண்டும் என்ற உணர்வைக் கொள்ளவில்லை என்றால், விரைவில்  வான் மோதலுக்கு வகை செய்யும்இதில் சீனப் போர் விமானங்களும், ஜப்பான், அமெரிக்கா அல்லது தென் கொரிய போர் விமானங்களும் ஈடுபடும்.

ஒவ்வொரு கட்சி ஒரு கடின நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. தென் கொரியா அதன் இராணுவ உளவு விமானம் ஒரு “வாடிக்கையான” பணியை புதைந்துள்ள குன்று லியோடா (சீனாவில் சுயான் என அறியப்படுவது) மீது நடத்தியதாகக் கூறியது. இது சீனாவாலும் உரிமை கோரப்படுகிறது. தென் கொரிய துணைப் பாதுகாப்பு மந்திரி பெக் சியுங் ஜூ, பெய்ஜிங்கை இந்த பகுதி பற்றி மறுபரிசீலிக்க கோரினார்; இக்கோரிக்கையை சீன இராணுவ அதிகாரிகள் நேற்று நிராகரித்தனர்.

பிரதம மந்திரி ஷின்சோ அபே இன் ஜப்பானிய அரசாங்கம் நாட்டை மீண்டும் இராணுவமயமாக்கும் திட்டங்களைத் தொடர, பிரச்சினையை வசதியான போலிக்காரணமாக கருதுகிறது. மந்திரிசபை தலைமைச் செயலர் யோஷிடே சுகா நேற்று ஜப்பானிய விமானங்கள் “தொடர்ந்து கண்காணிப்பு/ரோந்துப் பணிகளில் ஈடுபடும், நம் நிலப்பகுதியை சீனாவின் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு எதிராக பாதுகாக்க உறுதிப்பாடு கொண்டுள்ளதுஎன அறிவித்தார்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி, சீனா வான் பாதுகாப்பு வலயத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரும் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்தீர்மானம் சீன முடிவு, ஒருதலைப்பட்ச நடவடிக்கை, பெய்ஜிங்கின் “நியாயமற்ற விரிவாக்கத்தின்” வெளிப்பாடு என்று விமர்சித்துள்ளது. அரசாங்க உத்தரவின் பேரில், ஜப்பானிய விமான நிறுவனங்கள் அப்பகுதியில் பறப்பது குறித்த திட்டங்களை சீன அதிகாரிகளுக்கு அளிப்பதில்லை.

வாஷிங்டன், அமெரிக்க விமான நிறுவனங்களை பெய்ஜிங்கிற்கு விமானத் திட்டங்களை தெரிவிக்குமாறு கேட்கவில்லை. மாறாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜேன் சகி நேற்று அமெரிக்க விமானங்கள் கிழக்கு சீனக் கடல் வழியாக பறப்பது குறித்து பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டார்.

நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் ஜப்பானிய கோரிக்கைக்கு விடையிறுத்தார்: “அவர்கள் இது அகற்றப்பட வேண்டும் என்றால், நாங்கள் ஜப்பான் அதன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை முதலில் அகற்ற வேண்டும் என்று கேட்போம்.” டயோயு/சென்காகு தீவுகளைச் சுற்றிய ADIZ பகுதியில் சீனக் கண்காணிப்புக் கப்பல்கள் நுழையும்போது துன்புறுத்தப்படுவதற்கு ஜப்பானை அவர் விமர்சித்தார்.

அதே நேரத்தில் யாங் சற்றே பாதுகாப்பாக, சீன ADIZ  ஒரு “பறக்கக் கூடாது பகுதி” அல்ல, சீனாவின் வான் பகுதியின் விரிவாக்கமும் அல்ல என்று விளக்கினார். இது முன்கூட்டி எச்சரிக்கும் மண்டலமாகும். அவர் சீனா ADIZ ல் இசைவின்றி பறக்கும் விமானங்களை சுட்டுத்தள்ளும் வாய்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார்; ஆனால் சனிக்கிழமை சீன அதிகாரிகள் பெயரிடாத “பாதுகாப்பு நெருக்கடி நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இந்த மோதல் ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” தூண்டிவிட்டுள்ள பெருகும் அழுத்தங்களின் விளைவாகும். இதில் இராஜதந்திர தாக்குதல், இராணுவக் கட்டமைப்பு என பிராந்தியம் முழுவதும் சீனாவை எதிர்த்து உள்ளன. வாஷிங்டன் முக்கிய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பெய்ஜிங் மீது கடல் பகுதி பூசல்கள் குறித்து கடின நிலைப்பாடு கொள்ளுமாறு ஊக்கம் கொடுத்துள்ளது.

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் டயோயு/சென்காகு தீவுகள் குறித்த மோதல், வியத்தகு அளவில் கடந்த ஆண்டு டோக்கியோ பாறைகள் நிறைந்த, வசிப்போர் இல்லாத பகுதியை “தேசியமயமாக்கியதை” தொடர்ந்து விரிவாகியது. அபே அரசாங்கம் பகுதியில் ரோந்துகளை அதிகரித்துள்ளது; ஆளில்லாத சீன டிரோன்கள் ஜப்பானிய வான் பகுதியில் நுழைந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் கூறியுள்ளது.

சீனா கடந்த வாரம் ADIZ  ஐ அறிவித்துள்ளது, பூசலுக்குரிய தீவுகளின் மீது ஜப்பானியக் கட்டுப்பாட்டை சவால்விடும் திட்டமிட்ட முயற்சி ஆகும்; மற்றும் டோக்கியோவிற்கு வாஷிங்டன் கொடுக்கும் ஆதரவிற்கும் சவால் ஆகும். இது கடல் மற்றும் சீன தரைப்பகுதி, வான்வெளியில் அடிக்கடி நடைபெறும் அமெரிக்க இராணுவ உளவு நடவடிக்கைக்கு எதிரானது.

நேற்று பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒன்று சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள சர்ச்சையில் குவிப்புக் காட்டியது. அது கூறியது: “இன்னும் கவலை தரும், நம்பத்தகுந்த விளக்கம் பெய்ஜிங் அமெரிக்காவுடன் மேற்கு பசிபிக் பகுதியில் சமன் செய்து கொள்ள முயல்கிறது என்பதாகும். கிழக்கு ஆசியா இன்னும் கூடுதலான ஆபத்தான இடமாகத் தெரிகிறது.”

கட்டுரை தொடர்கிறது: “முழு உணர்வுடனோ அல்லது மற்றப்படியோ, பெய்ஜிங் இப்பொழுது சென்காகுஸைச் சுற்றிய வான்பகுதிமீது கட்டுப்பாட்டை காட்ட விரும்புகிறது; கிழக்கு ஆசியாவில் அமெரிக்கப் பாதுகாப்பு உறுதிப்பாட்டை ஒரு லிட்மஸ் சோதனைக்கு உட்படுத்துகிறது. வாஷிங்டனை பொறுத்தவரை, சீன கட்டுப்பாடுகளை ஏற்பது பிராந்தியங்களில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு, அமெரிக்கா சீன விரிவாக்கத்திற்கு எதிரான தற்போதைய நிலையைக் காக்க நம்பமுடியாது என்பதைக் காட்டும்.”

ஒபாமா நிர்வாகம் அத்தகைய அடையாளத்தைக் காட்ட விரும்பவில்லை. அது அணுத்திறன் உடைய B52 விமானங்களை பொறுப்பற்ற முறையில் அப்பகுதிக்கு அனுப்பி, மிகவும் உறுதியான தன் நிலைப்பாட்டைக் காட்டியுள்ளது. மேலும் இது,சீன விரிவாக்கம்” அல்ல, ஆனால் அமெரிக்கா ஆசியாவில் அதன் ஆதிக்கத்தை தக்க வைக்கும் உறுதிப்பாடுதான் இந்த அழுத்தங்களுக்கு எரியூட்டுகிறது. தற்போதைய நிலையைத் தக்க வைக்கும் விருப்பத்தைத்தான் வாஷிங்டன் கொண்டுள்ளது; இதில் அமெரிக்கா, சீன நிலப்பகுதிக்கு அருகே ஜப்பானிலும் தென் கொரியாவிலும் தளங்களை கொண்டுள்ளது, சீனாவைச் சுற்றி வளைக்க அதன் இராணுவ இருப்பை நீட்டிக்க விரும்புகிறது.

அமெரிக்க விடையிறுப்பு  சீனாவை சங்கடத்தில் வைத்துள்ளது. பைனான்சியல் டைம்ஸ் முடிவாக கூறுவது: “சீன கொள்கை வகுப்பாளர்கள் வரலாறு குறித்த தீவிர உணர்வுடையவர்கள். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜேர்மனி எழுச்சி பெற்றது நீண்டகாலம் பெய்ஜிங்கின் வெளியுறவுக் கொள்கை உயரடுக்கிற்குப் பாடமாக இருந்தது. சீனா, கைசரின் தவறான கணக்கான ஜேர்மனியின் அண்டை நாடுகளை அதன் பெரும் சக்தி அந்தஸ்துக்கு எதிராக ஒருங்கிணைக்காது என்று வருகைபுரிபவர்களுக்கு கூறுகிறது.”

ஆயினும் ADIZ ஐ அறிவித்ததின் மூலம் பெய்ஜிங் அதைத்தான் துல்லியமாகச் செய்வதில் வெற்றி அடைந்துள்ளது. தென் கொரியா, ஜப்பானையும் ஆஸ்திரேலியாவையும் பெரிதும் நாட விரும்புவது, அனைத்து முடிவிற்கும் எதிராக உள்ளது. பைனான்சியல் டைம்ஸ் விரிவாகக் கூறவில்லை என்றாலும், 2013ன் ஆசியா, பெருகிய முறையில் 1913 ஐரோப்பாவைத்தான் ஒத்துள்ளது. ஜேர்மனி எழுச்சி இது தொடர்பான குறிப்பாகும். முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி, பெருகிய முறையில் போட்டியிடும் சக்திகளிடையே அழுத்தங்களை அதிகரித்துள்ளது; அதுதான் முதலாம் உலகப் போர் என்னும் காட்டுமிராண்டித்தன போரை வெடிக்க வைத்தது.