சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German grand coalition to intensify austerity policies in Europe

ஜேர்மன் பெருங்கூட்டணி ஐரோப்பாவில் சிக்கன கொள்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளது

Peter Schwarz
29 November 2013

Use this version to printSend feedback

ஜேர்மனியின் பழமைவாத கட்சிகளுக்கும் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியம்), சமூக ஜனநாயக கட்சிக்கும் இடையே நடந்து வந்த இரண்டு மாத பேரங்களுக்குப் பின்னர் கையெழுத்தான கூட்டணி உடன்படிக்கையில் இருந்து ஒரு முக்கிய அரசியல் படிப்பினையை எடுக்க வேண்டி உள்ளது: அது, நடப்பில் உள்ள கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் இருந்து உழைக்கும் மக்கள் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என்பதாகும்.

அந்த உடன்படிக்கையின் "வலுவான ஐரோப்பா" பகுதியில் காணப்படும் முக்கிய பத்திகள் ஊடகங்களில் மேலோட்டமாக கூட விவாதிக்கப்படவில்லை, பெரும்பாலும் ஏனென்றால் கூட்டணியின் பங்காளிகள் ஆரம்பத்திலிருந்தே அவற்றின் மீது உடன்பட்டிருந்தனர். அமைதி காலக்கட்டத்தில் தோற்றப்பாட்டளவில் முன்னுதாரணம் இல்லா ஒரு சமூக பேரழிவுக்கு இட்டு சென்றுள்ள ஒரு போக்கைத் தொடர கூட்டணி கட்சிகள் பொறுப்பேற்றுள்ளன என்பதை அந்த பத்திகள் உறுதிபடுத்துகின்றன.

சாதனை அளவிற்கு உயர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மை, ஒரு ஒட்டுமொத்த இளைய தலைமுறையின் எதிர்காலம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது, மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதோடு சேர்ந்து, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஏனைய நாடுகளில் வர்ணிக்கவியலா அவலத்தை ஏற்படுத்தி உள்ள சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), மற்றும் சமூக ஜனநாயக கட்சி (SPD) உடன்பட்டுள்ளன.

அந்த 185 பக்க கூட்டணி உடன்படிக்கையில் பெரும்பாலானவை வெற்று சூத்திரங்களால் குணாம்சப்பட்டுள்ளன, ஆனால் இந்த விடயத்தில் மட்டும் அந்த ஆவணம் தெள்ளந்தெளிவாக உள்ளது. அது குறிப்பிடுகிறது, “நிதி திரட்டும் கொள்கை தொடர வேண்டும்.” “போட்டித்தன்மையை அதிகரிக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களும்", "கடுமையான, நீடித்த நிதி திரட்சியும்" "தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கான" பிரிக்கமுடியாத முன்நிபந்தனைகளாக உள்ளன என்று அறிவித்து செல்கிறது.

எவ்வித வடிவத்திலும் திரளும் இறைமை கடனை" அந்த உடன்படிக்கை நிராகரிக்கிறது, மேலும் கூட்டு அரசு பத்திரங்கள் (யூரோ பத்திரங்கள்) மற்றும் கடன்பட்ட நாடுகளின் வட்டி சுமையைக் குறைக்கக்கூடிய ஏனைய வழிமுறைகளை அது கைவிடுகிறது. ஐரோப்பிய நிதிய தொகையிலிருந்து எடுக்கப்படும் அவசரகால கடன்களைக் கடுமையான சிக்கன முறைமைகளோடு தொடர்ந்து இணைத்து வைக்க வேண்டும். அவை "ஒரு கடைசி புகலிடமாக,” மற்றும் "கடுமையான நிபந்தனைகளின் பரிமாற்றத்தோடு" வழங்க வேண்டும், அதாவது அதை பெறும் நாடுகளில் சீர்திருத்தங்கள் மற்றும் நிதி திரட்டும் முறைமைகள் செய்யப்பட வேண்டும்.

கடன்பட்ட நாடுகளின் மீது அழுத்தம் அளிப்பதைக் கைவிடக் கூடாது என்பதை உறுதிபடுத்த, "தேசிய வரவு-செலவுத் திட்டம் திட்டமிடுவதன் மீது ஐரோப்பிய கமிஷனின் கண்காணிப்பை" விரிவாக்க அந்த உடன்படிக்கை அழைப்புவிடுக்கிறது.

எளிய வார்த்தைகளில் கூறுவதானால், ஜேர்மனியும் உட்பட ஐரோப்பாவின் பரந்த நிலப்பரப்பு முழுவதும், ஜேர்மன் சான்சலரோடு தொடர்புபட்டுள்ள அந்த சமூக வறுமையின் கொள்கையைத் தீவிரப்படுத்துவதென்பதே இதன் பொருளாகும்.

ஏற்கனவே ஒரு பாரிய மலிவுக்கூலி துறையைக் கொண்டுள்ள ஜேர்மனியில் இன்னும் கூடுதல் வெட்டுக்களைச் செய்ய, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படும் வருவாய் சரிவுகளை பெருவணிகங்கள் ஓர் உந்துகோலாக உபயோகிக்கும்.

கூட்டணியின் பங்காளிகளுக்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டபூர்வ குறைந்தபட்ச கூலி, இவற்றை மாற்றுவதில் ஒன்றும் செய்யப் போவதில்லை. அதற்கு மாறுபட்ட விதத்தில், வெறும் 8.50 யூரோ என்ற அளவில் முடிவு செய்யப்பட்ட, மற்றும் 2017இல் முழுமையாக நடைமுறைக்கு வரவிருக்கின்ற மற்றும் 2018 வரையில் உயர்த்தாமல் வைக்க செய்யப்பட்டிருக்கும் குறைந்தபட்ச கூலியானது, கூலிகளின் பொதுவான அளவைக் கீழிறக்கம் செய்யும்.

தங்களின் கொள்கைகள் ஆழ்ந்த சமூக மோதலைத் தூண்டுமென்பது வரவிருக்கும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு நன்றாக தெரியும். அதற்கான தயாரிப்பில், பழமைவாத கட்சிகளும், சமூக ஜனநாயக கட்சியும் பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பங்கு இடங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் அந்த பெருங்கூட்டணியோடு மட்டும் அவர்களை மட்டுப்படுத்தி கொள்ளவில்லை. அவர்கள் தொழிற்சங்கங்களையும், பசுமை கட்சியினரையும் மற்றும் இடது கட்சியையும் குழுவில் கொண்டு வந்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள், கூட்டணி உடன்படிக்கையை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றன. ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (DGB) தலைவர், மிக்கேல் சோமெர், அதை "முற்றிலும் சாதகமானதாக" குறிப்பிட்டார். EVG ரெயில் தொழிற்சங்கத்தின் தலைவர், அலெக்சாண்டர் கிர்ச்னெர், அதற்கு சாதகமாக வாக்களிப்பதாக அறிவித்தார்.

கடந்த வாரயிறுதியில், IG Metall engineering தொழிற்சங்க மாநாட்டின் 500 பிரதிநிதிகள், CDU தலைவர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் SPD தலைவர் சிக்மார் காப்ரியேலை பாராட்டினர். தொழிற்சங்கங்களுக்கு அதிருப்திகரமாக எந்தவொரு விடயத்திலும் தாம் கையெழுத்திட போவதில்லையென காப்ரியேல் அந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.

பழமைவாத "ஒன்றிய" கட்சிகளுடன் ஒரு ஆளும் கூட்டணியை உருவாக்க பசுமை கட்சி தயாராக இருப்பதாக ஏற்கனவே ஆரம்பநிலை பேச்சுவார்த்தைகளிலேயே அது தெளிவுபடுத்திவிட்டது. ஹெஸ்ஸே மாநிலத்தில் CDU உடன் ஒரு கூட்டணிக்கு சம்மதித்தன் மூலமாக, SPD உடன் கூட்டணி முடியாமல் போனால் ஒரு மாற்றீடாக உள்ளே நுழைய அவர்கள் தயாராக இருப்பதை பசுமை கட்சியினர் சமிக்ஞை செய்துள்ளனர். கூட்டணி உடன்படிக்கை மீது அந்த கட்சியின் விமர்சனம் வலதிலிருந்து வருகிறது: ஓய்வூதிய தாய்மார்களின் பலன்களுக்கு நிறைய பணம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அது குறை கூறுகிறது. 1992க்கு முன்னால் குழந்தை பெற்ற பெண்களின் ஓய்வூதிய வருவாய் மாதத்திற்கு 28 யூரோவாக உயர்த்தப்படுமென கூட்டணி ஆவணம் நிர்ணயிக்கிறது.

இடது கட்சியும் கூட்டணி உடன்படிக்கையை ஆதரிக்கிறது, பசுமை கட்சியினர் போல வெளிப்படையாக மட்டுமே இல்லை. அது தொழிற்சங்கங்களுடன் அதன் சொந்த நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது, மேலும் SPD மற்றும் பசுமை கட்சியினரோடு ஒரு கூட்டணியில் அது சேர்ந்து நிற்பதற்கான காரணத்தையும் அதன் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது. இடது கட்சியுடனான ஒரு கூட்டணியோடு மட்டும் தான் SPD அதன் சொந்த வேலைதிட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியுமென அறிவித்து அதன் தரப்பை நியாயப்படுத்தியது. SPD தேர்தல் வேலைத்திட்டத்தை கூட்டணி உடன்படிக்கையில் "ஓர் ஓரக் குறிப்பாக சிறந்த முறையில்" காண முடிவதாக இப்போதும் கூட, இடது கட்சி தலைவர் கிரிகோர் கீசி குறை கூறுகிறார்.

கூட்டணி உடன்படிக்கையே SPDஇன் வேலைதிட்டமாக உள்ளது என்பதே எதார்த்தமாகும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் SPD சான்சலர் ஹெகார்ட் ஷுரோடரால் கொண்டு வரப்பட்ட சமூகநல விரோத 2010 செயற்பட்டியல் அறிமுகத்திற்குப் பின்னர், இந்த விடயத்தில் அங்கே எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

முந்தைய பெருங்கூட்டணி அரசாங்கத்தில் (2005-2009) நிதி மந்திரியாக இருந்த பீர் ஸ்ரைன்புரூக் 2013 தேர்தலில் SPDஇன் தலைமை முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டமை, SPD நிபந்தனையின்றி பெரு வணிகங்கள் மற்றும் நிதியியலின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியது. SPDஇன் தேர்தல் அறிக்கையில் வெற்று பிரச்சார வாக்குறுதிகளை விட ஸ்ரைன்புரூக்கின் பிரபலத்தன்மையையே உள்ளடக்கி இருந்தது.

இடது கட்சிக்கு சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரி கொள்கைகளுடன் எந்த அடிப்படை கருத்து வேறுபாடுகளும் இல்லை என்பதை SPD உடன் ஒரு கூட்டணிக்குள் நுழைய இடது கட்சி வழங்கிய சம்மதம் தெளிவுபடுத்துகிறது. கூட்டணி உடன்படிக்கையின் மீது இடது கட்சியின் ஆரம்ப கருத்துக்கள் அதன் ஏதோசில இரண்டாந்தர விடயங்களை விமர்சிக்கின்ற அதேவேளையில், அது ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கை தொடர்வதைக் குறித்து குறிப்பிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல மாநில அரசாங்கங்களிலும் மற்றும் உள்ளூர் கவுன்சில்களிலும், அதுபோன்ற கொள்கைகளை மக்கள் மீது இரக்கமில்லாமல் திணித்ததன் மூலமாக அது அவற்றை முழுமையாக ஆதரிக்கிறது என்பதை இடது கட்சி நடைமுறையில் நிரூபித்துள்ளது.

வரவிருக்கின்ற சமூக மோதல்களில், தொழிலாளர்கள் பெருங்கூட்டணியை மட்டுமல்ல, மாறாக அனைத்து நாடாளுமன்ற கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை உள்ளடக்கி உள்ள ஒரு சதிக்கூட்டத்தையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சக்திகள் எவ்வித மற்றும் அனைத்து சமூக எதிர்ப்பையும் ஒடுக்க மற்றும் தணிக்க அவர்களால் முடிந்தமட்டிற்கு அனைத்தையும் செய்வர்.

எதிர்வரவிருக்கின்ற போராட்டங்களில், தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த கட்சி அவசியமாகிறதுஅதுதான் ஒரு சோசலிச சமூகத்திற்கான போராட்டத்தில் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அவர்களின் நலன்களை நிபந்தனையின்றி பாதுகாக்கிறது. அந்த கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஜேர்மன் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியாகும் (Partei für Soziale Gleichheit—PSG).