World Socialist Web Site www.wsws.org |
US ultimatum on permanent occupation of Afghanistan ஆப்கானிஸ்தானை நிரந்தரமாக ஆக்கிரமிப்பது பற்றிய அமெரிக்காவின் இறுதிக்காலக்கேடு
Bill Van Auken ஒபாமா நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய்க்கு திங்களன்று ஓர் இறுதி காலக்கேட்டை முன்வைத்தார். ஒன்று கர்சாய் வாஷிங்டனுடன் உடனடியாக ஓர் இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் அல்லது அனைத்து அமெரிக்க இராணுவ படைகளும் திருப்பி எடுக்கப்படுவதுடன் மற்றும் 2014 இறுதிக்குள் மேற்கத்திய நிதியுதவிகளின் ஒரு வெட்டைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதே. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஆப்கானிய கைப்பாவையின் பரஸ்பர சமரச பேரங்களின் நடைமுறைகள், காபூலுக்கு இரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்ட ரைஸின் விஜயத்தின் போது கட்டவிழத் தொடங்கியது. ரைஸூடனான அவரது நள்ளிரவு கூட்டத்தில் கர்சாய் அவருக்குப் பிந்தையவரை தேர்ந்தெடுக்கும் அடுத்த ஏப்ரல் தேர்தல்கள் வரை எந்த உடன்பாட்டிலும் அவர் கையெழுத்திட போவதில்லை என்பதை மட்டும் வலியுறுத்தவில்லை, மாறாக இந்த தேர்தல்களில் அமெரிக்கா தலையீடு செய்யக்கூடாது, தாலிபான்களுடன் மேற்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும், மற்றும் குவண்டனாமோ சிறை கூடங்களில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 17 ஆப்கான் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் மீதான எவ்வித உடன்பாட்டின் மீதும் நிபந்தனைகளை விதித்தார். ஆப்கான் வீடுகளில் அமெரிக்க இராணுவத்தின் சகல சோதனை நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டுமென்ற அவரது கோரிக்கையையும் அவர் வலியுறுத்தினார். வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட எழுத்துபூர்வ விடையிறுப்பு மழுப்பலாக இருந்தது: “உடனடியாக கையெழுத்தில்லை என்றால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அல்லது நேட்டோ துருப்புகள் இல்லாத ஒரு 2014க்குப் பிந்தைய எதிர்காலத்திற்கான திட்டமிடல்களைத் தொடங்கச் செய்வதைத் தவிர அமெரிக்காவிடம் வேறெந்த மாற்றீடும் இல்லை." அந்த அறிக்கை தொடர்ந்தது, “நாம் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டோம் என்று ரைஸ் வலியுறுத்தினார்"—அதாவது வாஷிங்டன் கர்ஜாயிடமிருந்து எந்தவொரு புதிய கோரிக்கையையும் ஏற்கப்போவதில்லை. மேலும் அடுத்த ஏப்ரல் வரை உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் காலந்தாழ்த்துவது "ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல" என்று அவர் எச்சரித்தார். அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெறுவதென்பது, ஆப்கான் அரசும் அமெரிக்காவால் ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பு படைகளும் எதை முழுவதுமாக சார்ந்துள்ளனவோ அந்த பில்லியன் கணக்கான டாலர் அமெரிக்க நிதியுதவிகளை வெட்ட இட்டுச் செல்லும் என்பதையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறினார். அமெரிக்க அரசியலமைப்பும், ஊடகங்களும் இதை "வாய்ப்பில்லா நிலை" (zero option) என்றரீதியில் குறிப்பிடுகின்றன, பொதுவாக இது எண்ணிப் பார்க்க முடியாத ஒரு நிலையாக சித்தரிக்கப்படுகிறது, அதேவேளையில் இதுபோன்ற ஒரு ஆபத்தான விளைவுக்கு உட்படுத்துவதற்காக கர்சையையே கூட ஒரு மூடர் என்றரீதியில் வர்ணிக்கின்றன. "எந்த சாத்தியமுமில்லா நிலை" என்பதை நம்ப அமெரிக்க மக்கள் இட்டுச் செல்லப்பட்டார்களோ அது மொத்தமாக ஒபாமா நிர்வாகத்தோடு சேர்ந்த கொள்கைகள் மட்டும்தான் என்பதை ஒருவரால் எளிதில் ஊகிக்க முடியும். 2014 டிசம்பர் 31க்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் அனைத்தும் வெளியேற்றப்படும் என்ற உறுதிமொழியோடு, 2012இல் அப்போது பதவியிலிருந்த அந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் மறுதேர்தலில் பிரச்சாரம் செய்தார். அவரோடு துணை ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சக கூட்டாளி ஜோ பெடன், “நாங்கள் 2014 காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால், மற்றும் அல்லது என்றால் போன்ற எந்த வார்த்தைக்கும் அங்கே இடமில்லை," என்றார். அது தலைகீழாக மாறியதோடு, அந்த மூன்று வார்த்தைகளும் அங்கே நிறைய இருந்தன. அந்நாட்டில் பரவி கிடக்கும் ஒன்பது மூலோபாய தளங்களின் மீது அமெரிக்க படைகள் முழுவீச்சில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதோடு, குறிக்கப்படாத எண்ணிக்கையிலான துருப்புகளை—ஆப்கான் ஜனாதிபதி 15,000 வரை என்று கூறுகிறார்—ஆப்கானிஸ்தானில் காலவரம்பின்றி நிறுத்த அழைப்பு விடுக்கும் அந்த இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையில் உடனடியாக கையெழுத்திட ஒபாமா மற்றும் ரைஸ் கர்சாயைக் கோரி வருகின்றனர். தங்கள் நாட்டின் மீதான நிரந்தர அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களைக் கொல்லவும், வேட்டையாடவும், “பயிற்சியாளர்கள்" மற்றும் "ஆலோசகர்கள்" தவிர கூடுதலாக, ஆப்கானிஸ்தானில் சிறப்பு நடவடிக்கை துருப்புகளின் ஒரு பெரிய இராணுவ பிரிவையும் நிறுத்த பெண்டகன் திட்டமிடுகிறது. இதற்கிடையில் அமெரிக்க விமானப் படைபலம், கணக்கெடுப்பு உதவி மற்றும் உளவுத்துறை ஆகியவையும் கைப்பாவை ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு முட்டுக் கொடுக்க தங்கி இருக்கும். இந்த உடன்படிக்கையைக் கையெழுத்திடுவதில் கர்சாயின் தயக்கம் மற்றும் வாஷிங்டனிடமிருந்து இன்னும் நிறைய விட்டுகொடுப்புகளைப் பெற துடிக்கும் அவரது முயற்சிகளும் முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடியவையே. “சாம்ராஜ்ஜியங்களின் கொலைக்களம்" என்றரீதியில் மதிப்பை ஈட்டியுள்ள ஒரு நாடான ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் அது போன்றவொன்று முதல் உடன்படிக்கையாக இருக்கும். ஆப்கான் மண்ணில் அன்னிய துருப்புகள் இருக்கும் வரையில் யுத்தம் தொடரும் என்ற நனவோடு மற்றும் எதிர்ப்பை அடிபணிய வைக்க வாஷிங்டனின் 12 ஆண்டு கால முயற்சியின் இறுதி கதி குறித்து குறைந்த நேர்மறை கண்ணோட்டத்தோடு கர்சாய் அவரின் சொந்த பிழைப்பாதாரத்தைக் குறித்த கவலையில் உள்ளார். மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு பகடைக்காய் என்பதைவிட சற்று கூடுதலாக தன்னைத்தானே காட்டிக் கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார். முடிவாக, அவர் தன்னைத்தானே அமெரிக்காவிடம் விற்க ஆர்வமாக உள்ளார், ஆனால் மேம்பட்ட பாதுகாப்பும் நிறைய பணமும் விரும்புகிறார். அண்ணளவாக 3,000 சிறுகுழு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு லோயா ஜிர்காவை (மாமன்றத்திற்கான பாஷ்டோ) ஒன்று கூட்டுவதே பெரும்பாலும் அவரது கோட்பாடாக இருந்தது. வாஷிங்டனுடனான உடன்படிக்கையின் மீது இந்த அமைப்பிற்கு ஒரு வாக்கை வழங்குவதன் மூலம் உடன்படிக்கைக்கும் தனிப்பட்ட விதத்தில் கர்சாயிக்கும் இடையே சிறிது இடைவெளியை காட்டலாம் என்பதே நம்பிக்கையாக இருந்தது. நிச்சயமாக, அந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தனர், மேலும் ஆப்கானின் பரந்த மக்கள் அந்த கூட்டை ஓர் அர்த்தமற்ற நடைமுறையாக பார்த்தனர். எவ்வாறிருந்த போதினும் அமெரிக்காவில் ஜனநாயகமென்று வரும்போது ஒரு லோயா ஜிர்காவே கூட ஒரு கணிசமான முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடும். அமெரிக்க மக்களின் மிக மிக குறைந்த ஒப்புதலோடு காங்கிரஸில் எவ்வித விவாதத்திற்கோ அல்லது வாக்கெடுப்புக்கோ அப்பாற்பட்டு, ஆப்கானிஸ்தானில் துருப்புகளை நிறுத்தி வைக்க மற்றும் நிதி வழங்க மற்றும் அடுத்த தசாப்தத்திற்கு அதன் பாதுகாப்பு படைகளை ஆற்றலுடன் செயல்படுத்த ஒபாமா நிர்வாகம் ஒரு காலவரையறையற்ற பொறுப்புறுதிக்குள் நுழைகின்றது. அமெரிக்க மக்களின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மற்றும் நான்கில் மூன்று பங்கிற்கும் இடையிலான மக்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ தலையீடு தொடர்வதை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பிற்கு அடுத்து கருத்துகணிப்பு காட்டி உள்ளன. அக்டோபர் 2001 அமெரிக்க தாக்குதலுக்கு முன்னர் அந்நாட்டில் முகாம்களைக் கொண்டிருந்த அல்கொய்தாவிற்கும் மற்றும் பயங்கரவாதத்திற்கும் எதிரான ஒருபோதும் முடிவில்லா ஒரு யுத்தத்திற்கு அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் அவசியப்படுவதாக கூறப்படுகின்றன. இன்று ஆப்கானிஸ்தானில் உண்மையில் அல்கொய்தாவின் இருப்பு இல்லை என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, அல்கொய்தா மற்றும் அதனோடு இணைந்த அமைப்புகளோடு வாஷிங்டனின் நெருக்கமான ஒத்துழைப்பால் இந்த போலிக்காரணம் அம்பலப்பட்டுள்ளது. லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க யுத்தத்தில் அவை தான் முக்கிய பகடை துருப்புகளை வழங்கி உள்ளன. இந்த ஏற்பாடுகள் சோவியத்திற்கு எதிராகவும் மற்றும் ஆப்கானிஸ்தானிலேயே 1980களில் சோவியத் ஆதரவிலான ஆட்சிக்கு எதிராகவும் அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த நீடித்த யுத்தத்தில் சிஐஏ மற்றும், ஒசாமா பின் லேடன் உட்பட, இஸ்லாமிய போராளிகளுக்கு இடையே இருந்த விஷயங்களை எதிரொலிக்கிறது. அந்த சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் பின்வருமாறு எச்சரித்தார்: “ஒரு சோவியத்-ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் இரண்டையும் அச்சுறுத்துகிறது. மேலும் உலகின் பெரும்பாலான எண்ணெய் வினியோகங்களின் மீது சாத்தியமான அளவிற்கு கட்டுப்பாட்டைப் பெற அது முதற்படியாகவும் உள்ளது.” சோவியத்துக்கள் மீது சாட்டப்பட்ட பெரும்பாலான அதே உள்நோக்கத்தோடு இப்போது நிரந்தர ஆக்கிரமிப்பில் வாஷிங்டன் இறங்கி உள்ளது. இது ஏதோ எங்கும் பரவி இருக்கும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் இல்லை, மாறாக அதைக்காட்டிலும் ஆப்கானிஸ்தானில் நிரந்தர இராணுவ தளங்களை அமைக்க அமெரிக்காவைக் கோரச் செய்திருக்கும் அரசியல் பூகோள உந்துதல்களின் அச்சுறுத்தலாகும். மேற்கில் ஈரானுக்கு எதிராக, கிழக்கில் சீனாவிற்கு எதிராக, எண்ணெய் வளம்மிக்க முன்னாள் சோவியத் மத்திய ஆசிய குடியரசுகளுக்கு எதிராக மற்றும் வடக்கில் ரஷ்யாவிற்கே கூட எதிராக மற்றும் தெற்கில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு எதிராக அதன் இராணுவ பலத்தைக் காட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அந்நாடு ஒரு அடித்தளத்தை வழங்குகிறது. சிரியாவில் அது நேரடியான இராணுவ தலையீட்டிலிருந்து பின்வாங்கி இருந்தாலும் கூட, மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மீது பேரம்பேசி ஒரு தீர்வை எட்ட விரும்பினாலும் கூட, வாஷிங்டன் அதன் எஞ்சியுள்ள இராணுவ மேலாதிக்கத்தின் மீது சார்ந்திருப்பதன் மூலமாக அதன் பொருளாதார பலத்தின் ஒப்பீட்டுரீதியான வீழ்ச்சியை ஈடுகட்டுவதற்கான அதன் முயற்சிகளை எந்தவிதத்திலும் அது விட்டுவிடவில்லை. உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் வாஷிங்டனின் பிரதான போட்டியாளர்கள் குறிப்பாக சீனாவிற்கு எதிராக, ஆப்கானிஸ்தான் ஓர் உடைமையாக பார்க்கப்படுகிறது. இவ்விதத்தில், அமெரிக்க யுத்தத்தின் 12 ஆண்டுகளில் அந்நாட்டில் சிந்திய இரத்தம், மேலும் கூடுதலாக வரவிருக்கின்ற பயங்கர மோதல்களுக்கு ஒரு முன்தொகை மட்டுமே ஆகும். ஆப்கானிஸ்தானில் யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்குள் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பு தற்போதைய அரசியல் அமைப்பிற்குள்ளேயோ அல்லது ஊடகங்களிலோ எந்தவொரு வெளிப்பாட்டையும் காணவில்லை. ஒருசமயம் யுத்தத்திற்கு எதிராக போராடிய குட்டி முதலாளித்துவ போலி இடது குழுக்கள் இப்போது, லிபியாவிலும் சிரியாவிலும் போல, ஏகாதிபத்திய தலையீட்டிற்கு உற்சாகமூட்டும் வெட்கங்கெட்ட தலைமைகளாக மாறி உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து துருப்புகளையும் திருப்பி அனுப்ப மற்றும் இன்னும் கூடுதலான பேரழிவுமிக்க இராணுவ மோதல்களைத் தடுக்கக்கூடிய ஓர் உண்மையான யுத்த-எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் அபிவிருத்தியானது, யுத்தம் மற்றும் இராணுவவாதத்தின் மூல ஆதாரமாக விளங்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒன்றுதிரட்டுவதன் மீது சார்ந்துள்ளது. |
|