சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The release of Hosni Mubarak

ஹொஸ்னி முபாரக் விடுதலை

23 August 2013
Alex Lantier and David North

use this version to print | Send feedback

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களை அடுத்து அகற்றப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேற்று அமெரிக்க ஆதரவு எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை விடுவித்தது, ஜூலை 3 இராணுவ ஆட்சி சதிக்கு பின் எதிர்ப்புரட்சி முன்னோக்கி செல்வதை குறித்துக்காட்டுகின்றது.

மக்கள் முபாரக்கின் மீது கொண்டுள்ள வெறுப்பிற்கு முற்றிலும் இகழ்வுணர்வுடனும் மற்றும் தொழிலாள வர்கத்தின் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அதன் விரோதப்போக்கு என்ற நிலைப்பாட்டுடன் இராணுவ ஆட்சிக்குழு செயல்படுகின்றது. ஆட்சி கவிழ்ப்பின் பின்னர், இது 1,000 ஆயுதமற்ற எதிர்ப்பாளர்களை பல குருதி கொட்டிய வன்முறைகளில் படுகொலை செய்துள்ளதுடன் முக்கிய மானியங்களை வெட்டுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளதுடன், ரொட்டி மற்றும் எரிபொருள் விலைகளை பாரியளவில் உயர்த்தியுள்ளது.

முபாரக் கெய்ரோவிலுள்ள ஒரு இராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்படுகையில், வசதி படைத்தவர்களும் செல்வந்தர்களும் தங்கள் களிப்பை வெளிப்படையாக காட்டினர். அதே நேரத்தில் “எகிப்தின் 2011 மக்கள் எழுச்சிக்கு பின் சில மாதங்களுக்கு வெகுஜன சீற்றத்தை தூண்டியிருக்கக்கூடிய சட்டபூர்வ நுட்பத்தினால் எனக் கூறப்படும் முபாரக்கின் விடுதலை பற்றிய நீதிமன்றத் தீர்ப்பை சிலர் முபாரக் ஆட்சிக்கால ஒழுங்கை நினைவு கூர்ந்த வகையில் எதிர்கொண்டனர்.” என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

நவீன சகாப்தத்தில் நடைபெற்ற, பெரும் புரட்சிர எழுச்சிகளின் வெடிப்பு ஒன்று நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின், அரசியல் நிலைமை மீண்டும் மிகவும் பின்னோக்கி தள்ளப்பட்டு விட்டதுபோல் தோன்றுகிறது. இங்கு எழும் முக்கிய வினாக்கள் எப்படி இது சாத்தியமானது? எவர் இதற்குப் பொறுப்பு? என்பதாகும்.

பெப்ருவரி 2011ல் தஹ்ரிர் சதுக்கத்தில் பெருந்திரளான மக்கள் முபாரக்கின் குண்டர்களை எதிர்த்துப் போரிட்டு, அவருடைய ஆட்சியை வீழ்த்தி, மக்கள் மற்றும் இராணுவத்தின் ஒற்றுமையை பற்றிப் பாடி மகிழ்ந்தன. சமூகத்தின் பல பிரிவுகளில் இருந்தும் வந்து மக்கள் கூடுகையில், பல வர்க்க நலன்கள் பிரதிபலிக்கையில், அது அரசியல் நப்பாசைகளுக்கான நேரமாகிவிட்டது. செய்தி ஊடகத்தில் மேலாதிக்கம் கொண்டிருந்தவர்களின் குரல்கள், பெரிதும் தெளிவற்ற ஜனநாயக உணர்வுகளினால் எழுச்சியூட்டப்பட்டு இருந்ததுடன், ஒரு கடுமையற்ற ஆட்சி மற்றும் முபாரக்கினதும் மற்றும் அவருடைய கைக்கூலிகளுடைய செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும் என்பதற்கான  நம்பிக்கைகள் பிறந்தன.

ஆனால் இதற்கும் அப்பால், வறியநிலையில் இருந்த ஏராளமான தொழிலாளர்களும் நகர்ப்புற, கிராமப்புற வறியவர்களும் ஜனநாயகம் என்பது, இன்னும் ஆழ்ந்த மாற்றங்களை சமூகத்தில் கொண்டுவரக்கூடிய வழிவகை என புரிந்துகொண்டனர்.

2011புரட்சியின் பின்னே தீர்மானகரமான சக்தியாக நின்ற தொழிலாள வர்க்கம், முபாரக்கை கவிழ்த்தபின் மேலும் உறுதியுடன் முன்வந்தது. புரட்சிக்கு முந்தைய ஆண்டுகளில் ஆண்டு ஒன்றிற்கு 200 வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன என்றால், 2011 மட்டும் 1,000 வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. 2013 இல் இதுவரை இல்லாதளவிற்கு 5,500 வேலைநிறுத்தங்களும், சமூக எதிர்ப்புக்களும் நடைபெற்றுள்ளன. இது இறுதியில், ஜூன் 30, 2011ல் தொடங்கிய, மில்லியன் கணக்கான எகிப்தியர்களின் இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சியின் செல்வாக்கற்ற ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

வசதி படைத்த மத்தியதர வர்க்கம் பீதி மற்றும் சீற்றத்தில் சுருண்டது. தம் சமூக நிலைமை பற்றி அச்சம் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகள், அவற்றின் வாழ்க்கை முறை பற்றிய கவலைகளான கூடுதலான பாலியல் சுதந்திரம் மற்றும் இன்னும் விலையுயர்ந்த பொருட்கள் நவீன கடைத் தொகுப்புக்களில் வேண்டும் என்பதற்கு மிகவும் அப்பால் சென்றது என்பதை உணர்ந்தது. அவர்கள் புரட்சி என்னும் நடிப்பைக் கைவிட்டு, முபாரக்கையும் ஆட்சிக்குழு தலைவர் தளபதி அப்தெல் பஃத் அல்-சிசியையும் தங்களை காப்பாற்றுபவர்கள் என வரவேற்றனர். தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதல் பரவுவதை எதிர்த்துப் போராட அவர்கள் தங்களை செல்வம் படைத்தவர்களுக்கு வாடகைக்கு விட்டதுடன், தமரோட்டின் (எழுச்சி) சதிக்கு வழிதிறந்துவிட்டனர்.

தமரோட் என்பது, மறைந்த எகிப்திய உளவுத்துறைத் தலைவர் மற்றும் CIA இன் தலைமை சித்திரவதையாளர் ஜெனரல் ஒமர் சுலைமானுடைய ஆதரவாளர்கள், முபாரக்கின் முன்னாள் அதிகாரிகளான அமர் மௌசா, தளபதி அஹ்மத் ஷபிக், காப்டிக் பில்லியனர் நகிப் சவரிஸும் தாராளவாத தேசிய மீட்பு முன்னணியின் மகம்மது எல்பரடேயும் உள்ளடங்கிய கூட்டணியாகும்.

இப்பிற்போக்குத்தன சூழ்ச்சியில் முக்கிய பங்கை வகித்தது; போலி-இடது அரசியல் பாசாங்குத்தனத்தை அரவணைத்துக்கொண்டுள்ள புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) என அழைக்கப்படும் அமைப்பாகும். AFL-CIO அதிகாரத்துவத்தின் ஒரு அரசியல் கருவியாக செயல்படும் இக்குழு, பல செய்தி ஊடக நலன்களையும், சந்தேகத்திற்கு உரிய அரசுசாரா அமைப்புக்களையும் கொண்டு தமரோட்டுடன் பிணைந்து நின்று அதற்கு நம்பகத்தன்மையை கொடுக்க முற்பட்டது.

தமரோட், ஜூலை 3 சதிக்கு தளபதிகளுடன் பல வார பேச்சுக்களுக்குப் பின் ஆட்சிக் குழுவிற்கு “சாலை வரைபடத்தை” தயாரிக்கையில், புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் அதற்கு அரசியல் மூடுதிரையை கொடுத்து, அதை “புரட்சிகர இளைஞர்கள் குழு.... புரட்சிப் பணி மற்றும் கீழிருந்து அனுபவம் ஆகியவற்றிற்கு இடமளிக்கும்” எனப் போற்றியது. தமரோட்டிற்குள் இருக்கும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் பிற இளைஞர் குழுக்களும், கட்சிகளும், எதிர்ப்புரட்சி சதி தயாரிப்புக்களை முர்சிக்கான மக்கள் விரோதப் போக்கிற்கு ஒரு “புரட்சிகர” பதில் என  இடைவிடாது காட்டின.

உலக சோசலிச வலைத் தளம், தமரோட் மற்றும் அதன் நட்பு அமைப்புக்கள் ஜூன் 30க்குப் பின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் பிற்போக்குத்தன பங்குவகிக்க முனைவது குறித்து எச்சரித்திருந்தது. “இந்த எதிர்ப்புக்கள் அரசியல்ரீதியாக தமரோட் (எழுச்சி) அரங்கின் மேலாதிக்கத்தில் உள்ளது, அது பல தாராளவாத, இஸ்லாமியவாத, போலி இடதுக் கட்சிகள் மற்றும் முபாரக் ஆட்சியின் எச்சசொச்சங்களின் ஆதரவைக் கொண்டது” என்று உலக சோசலிச வலைத் தளம் ஆட்சி சதிக்கு முன்பு எழுதியது. ஆட்சி சதி இராணுவத்தால் “எதிர்ப்புக்களை சட்டபூர்வமற்றதாக்கவும், இராணுவத்திற்கு இன்னும் நசுக்குவதற்கான வன்முறை தயாரிப்புக்களை மேற்கொள்ளவும்” உதவும் என்றும் எழுதியது.

இராணுவம் மற்றும் புரட்சிகர சோசலிஸ்டுகள் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் எச்சரிக்கைகள் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளன. முர்சிக்கு எதிரான எதிர்ப்பை ஒரு ஆட்சிச் சதியின் முன்னோக்கிற்கு பின்னே திசைதிருப்பியவகையில், அவை குட்டி முதலாளித்துவத்தின் பரந்த பிரிவுகளை சர்வாதிகார, எதிர்ப்புரட்சி முகாமிற்கு திருப்பும் உந்துதலுக்கு உதவியது. இவைதான் ஆட்சி சதியை கொண்டுவந்து முபாரக்கிற்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கான சூழலை உருவாக்கின.

இடதுசாரி சொற்றொடர்களை கூறிக்கொண்டு முதலாளித்துவத்தை தான் ஆதரிக்கும் ஒரு பிற்போக்குத்தன போலி இடது அரசியலை கொண்டுள்ள முறையைத்தான் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் உருவகமாகக் கொண்டுள்ளது. எகிப்திய புரட்சியின் இரண்டு ஆண்டுகளில், இவை எகிப்தின் அரசியல் நடைமுறையின் ஒவ்வொரு வலதுசாரிப் பிரிவுடனும் அவை இராணுவமாயினும், முஸ்லிம் சகோதரத்துவமாயினும் அவற்றுடன் கூட்டில் இருந்தது. அவர்களுடைய அரசியலின் ஒரே தொடர்ச்சியான கருப்பொருள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்திற்கு தீவிரமான எதிர்ப்புத்தான்.

எகிப்திய புரட்சி அவர்களுடைய முழு முன்னோக்கிற்கும் ஒரு முழுமையான நிராகரிப்பாக உள்ளது. தொழிலாள வர்க்கம் புரட்சியில் முக்கிய பங்கை வகித்து மீண்டும் மீண்டும் சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் ஒரு புரட்சிகரக் கட்சி அதை வழிநடத்தாத நிலையில், தொழிலாள வர்க்கம் நோக்குநிலை தவறி, போலி இடதின் சமீபத்திய பிற்போக்குத்தன சூழ்ச்சி நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்க்க முடியவில்லை.

மீண்டுமொருமுறை, ஒரு பெரும் புரட்சிகர அனுபவம் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தத்துவம் காலங்கடந்து முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளில், ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியால் வழிநடத்தப்படும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தினால்தான் வெற்றிபெற முடியும். எந்தவொரு நாட்டிலும் புரட்சி வெற்றி பெறுவது உலகத்தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாக முடியும்.

கேள்விக்கிடமின்றி தொழிலாள வர்க்கம் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவை அடைந்துள்ளது. இராணுவம் கட்டளைகளை சுமத்த முற்படும். ஆனால் எகிப்திய புரட்சி நிச்சயமாக இன்னமும் அதன் போக்கை முடித்துவிடவும் இல்லை, தொழிலாள வர்க்கமும் அதன் இறுதி வார்த்தையை கூறிவிடவில்லை. ஏகாதிபத்திய போர்கள் மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியால் தூண்டிவிடப்பட்ட மத்திய கிழக்கு முரண்பாடுகளை தீர்ப்பது ஒருபுறம் இருக்க கல்லறையில் இருந்து முபாரக்கை எழுப்புதல் எகிப்திய முதலாளித்துவத்தின் இற்றுப்போன இரத்த நாளங்களில் புதிய உயிர்ப்பை கொண்டுவந்துவிடாது. முதலாளித்துவம், ஜனநாயகத்திற்கான ஒரு சக்தியாக இருக்கக்கூடிய மதிப்பிழந்துள்ள எகிப்திய இராணுவத்தின் டாங்குகளால் காப்பாற்றப்பட்டால்தான் அதிகாரத்தை வைத்திருக்க முடியும்.  

தீர்க்கமான கேள்வி, வரவிருக்கும் போராட்டங்களுக்கு தயார்செய்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையை கட்டியமைப்பதாகும். இதன் அர்த்தம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை எகிப்திலும், மத்திய கிழக்கு, சர்வதேச அளவிலும் கட்மைத்தல் ஆகும்.