தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan SEP to hold election meeting in Jaffna இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி யாழ்ப்பாணத்தில் தேர்தல் கூட்டத்தை நடத்தவுள்ளது22 August 2013 use this version to print | Send feedback இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், கட்சியின் மாகாண சபை தேர்தல் பிரச்சாராத்தின் முதலாவது கூட்டத்தை நடத்தவுள்ளன. இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 24 யாழ்ப்பாணம் காரைநகரில் இடம்பெறவுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி, இராணுவவாதத்தின் வளர்ச்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியிலேயே செப்டெம்பர் 21 இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஏனைய நாடுகளில் போலவே, இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கமும், உலக நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிக்கும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடுகின்றது. அதே சமயம், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் யுத்தத் தயாரிப்புகளுடன் அணிதிரளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கின்றது. வடக்கில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் கொடூரமான யுத்தத்தினால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது ஒடுக்குமுறையான இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ளதோடு அநேகமானவர்களுக்கு தங்குமிடம், தொழில், சுகாதாரப் பராமரிப்பு அல்லது கல்வி வசதிகள் போதாமல் உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ம்ற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ் கட்சிகளும் இந்த தீர்க்கமான பிரச்சினைகள் தொடர்பாக மௌனம் காக்கின்றன. உழைக்கும் மக்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் அழிவுகரமான நிலைமைகளில் அன்றி, தமிழ் ஆளும் தட்டின் நலன்களை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதிலேயே தமிழ் கட்சிகள் அனைத்தும் பிரதானமாக மூழ்கிப் போயுள்ளன. ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் விரோதமாக, யுத்த ஆபத்துக்கும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது உக்கிரமடைந்துவரும் தாக்குதல்களுக்கும் எதிரான ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத் திட்டத்துக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. வடக்கு கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களும் நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற வேண்டும் எனக் கோரும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் இலக்கு, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் ஒன்றை கட்டியெழுப்புவதே. யாழ்ப்பாண பிரதேசத்தில் இருக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் எமது கூட்டத்திற்கு வருகை தருமாறும் இந்த முக்கியமான அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இடம்: அன்டர்சன் மண்டபம், ஊரி, காரைநகர், யாழ்ப்பாணம் காலம்: ஆகஸ்ட் 24, சனி, பி.ப. 3.30 மணிக்கு
|
|
|