World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK Labour Party whips up anti-immigrant sentiment

ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சி குடியேற்ற விரோத உணர்வைத் தூண்டுகிறது

By Robert Stevens 
19 August 2013

Back to screen version

பிரித்தானியாவின் தொழிற் கட்சி அதனுடைய அரசியல் எதிர்காலத்தை ஒரு வெளிப்படையான குடியேற்றக்காரர்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் பணயம் வைத்து, “பிரிட்டஷ் வேலைகள், பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே” என்று கூறுகிறது.

எல்லைகள் மற்றும் குடியேற்றத் துறையின் நிழல் மந்திரி கிறைஸ் பிரையன்ட் கடந்த திங்களன்று கொடுத்த உரையில் “ஐக்கிய இராச்சியத்தில் தொழிற் சந்தையில் குடியேற்றத்தின் எதிர்மறை விளைவுகளைக்” குறைகூறினார்.

அவருடைய உரையை தொடர்ந்து முன்னைய நாள் Sunday Telegraph இல் பிரையன்ட் “மனச்சாட்சியற்ற முதலாளிகள், மிகவும் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை பெறவிரும்புவதுதான் தங்களுடைய நலன் என நினைப்பவர்கள், ஏராளமான எண்ணிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைவூதிய நாடுகளிலிருந்து சேர்த்துக்கொள்கிறார்கள், அவர்களை ஐக்கிய இராச்சியத்திற்குக் கொண்டு வருவதுடன், அவர்களின் பயணம், தரக்குறைவான தங்குமிடத்தின் செலவுகளையும் அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறார்கள், அப்படியிருந்தும் கூட தேசிய அடிப்படை ஊதியத்தை தக்க வைத்துக் கொள்ள மாட்டார்கள்” என்றார்.

“இது நியாயமற்ற செயல்” என அவர் சேர்த்துக் கொண்டார், இது “குடியேறும் தொழிலாளர்களைச் சுரண்டுகிறது” என்று குறிப்பிட்ட அவர், “இது குடியேறியுள்ள தொழிலாளர்கள் அடைமானக் கடன் பெற்றுள்ளவர்கள், குடும்பத்தை ஆதரிப்பவர்களை பிரித்தானிய விலைகளில் இயலாமற் செய்துவிடும்” எனச் சேர்த்துக் கொண்டார்.

பின்னர் சேர்த்துள்ள பகுதியில், பிரையன்ட் ஐக்கிய இராச்சியத்தின் பேரங்காடி டெஸ்கோவைக் குறிப்பாக மேற்கோளிட்டுள்ளார்; அது 230,000 தொழிலாளர்களை நியமித்துள்ளது; அதே போல் ஆடைத் துறை சில்லறை வணிக நிறுவனமான Next ஐயும் பிரித்தானிய தொழிலாளர்களுக்கு பதிலாக குடியேற்றத் தொழிலாளர்களை விரும்பும் நிறுவனங்கள் என்று கூறியுள்ளார். டெஸ்கோ ஒரு விநியோக மையத்தை கென்டிற்கு மாற்றியுள்ளது; அங்கு “ஏராளமான ஊழியர்கள்” கிழக்கு முகாம் நாடுகளிலிருந்து வந்துள்ளனர் என்றும் பிரையன்ட் கூறுகிறார். முதல் தளத்தில் இருக்கும் தொழிலாளர்கள், “பெரும்பாலானவர்கள் பிரித்தானியர்கள், புதிய மையத்திற்கு அவர்கள் ஊதியத்தில் குறைப்பை ஒப்புக்கொண்டால்தான் செல்ல முடியும் என்று கூறப்பட்டனர்.”

இதன்பின் பிரையன்ட் Next நிறுவனம் எப்படி 500 போலந்துத் தொழிலாளர்களை “அதனுடைய தெற்கு எல்சால் [மேற்கு ஜோர்க்க்ஷயர்] கிடங்கில் அவர்களுடைய கோடைக்கால விற்பனைக்காவும் மற்றும் 300 பேரை இக்கோடை காலத்திற்காகவும்” நியமித்துள்ளனர் என்று விளக்குகிறார். அவர்கள் போலந்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தங்கும் இடத்திற்காக 50 பவுண்டுகளும் வசூலிக்கப்பட்டது. இதில் Next நிறுவனத்திற்கு என்ன இலாபம்? அவர்கள் Agency Workers Regulations ஐத் தவிர்க்க முடியும்; அது ஒரு வேலை நாடுபவர் 12 வாரங்களுக்கு நியமிக்கப்பட்டுவிட்டால் பொருந்தும்; எனவே போலந்து தற்காலிக ஊழியர்கள் கணிசமான குறைந்த செலவில் உள்ளுர் தொழிலாளர் தொகுப்பைவிட நியமிக்கப்பட முடியும். உள்ளுர் தொகுப்பில் பல முன்னாள் Next நிறுவன ஊழியர்கள் உள்ளனர்.”

24 மணி நேரத்திற்குள் பிரையன்ட் தான் கூறியதைப் பின் வாங்க நேர்ந்தது; இதற்குக்காரணம் இரு நிறுவனங்களிலிருந்தும் தலையீடுகள் ஏற்பட்டன. டெஸ்கோ கென்டில் தனக்கு விநியோக மையமே கிடையாது என்று சுட்டிக்காட்டியது.

அவர் நிகழ்த்திய உரையில் அவர் “நல்ல உள்ளூர்த் தொழிலாளர்களை கண்டறிய சற்று கூடுதல் முயற்சி எடுப்பவர்கள் நல்ல முதலாளிகள்” என்று குறிப்பிட்டார்.

10,000 பவுண்டுகள் ஊதிய வெட்டை ஏற்பதற்குப் பதிலாக, டெஸ்கோ செயற்பாட்டாளர்கள் அதனுடைய செயற்பாடுகளை எசெக்சில் இருக்கும் டாகெனாமிற்கு மாற்றியபின், ஹார்லோவின் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் ரோபர்ட் ஹால்பன் அவருடைய தொகுதியில் பல தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

முதலாளிகளை குறைகூறலை கைவிட்டபின், பிரையன்ட் பின்னர் குடியேற்ற எதிர்ப்பு முரசை அடிக்க தொடங்கினார். முந்தைய தொழிற் கட்சி அரசாங்கம் “குடியேற்றத்தை பொறுத்தவரை தவறுகளைச் செய்துள்ளது” என்றார். “புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட முறையை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் சரியானவற்றைச் செய்தோம் [வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் நுழைவதற்கு] 2008” என்ற அவர் “அதை இன்னும் முன்னரேயே செய்திருக்க வேண்டும்” என்றார்.

அவர் தொடர்ந்து கூறியது: “புதிய A8 [கிழக்கு ஐரோப்பா இணைவு] நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தபோது, நாம் பொருளாதார வளர்ச்சியில் குவிப்பைக் காட்டினோம். அப்பொழுது ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி அனைத்தும் இடைமருவு கட்டுப்பாடுகளை புதிய ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர்கள் மீது சுமத்தினர்; நாம் தனியே நின்றோம். விளைவு? ஏராளமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்வதற்கு வந்தனர்.”

தொழிற் கட்சி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது, இதில் குடியேறுபவர்களும் அடங்குவர். பிரையன்டின் தவறு ஆளும் உயரடுக்கு குடியேற்ற எதிர்ப்பு வனப்புரைக்கு ஆதரவு கொடுக்கையில், பெருகும் பொருளாதார நெருக்கடிக்கு தங்கள் பொறுப்பை திசை திருப்ப ஒரு வகை என்னும் முறையில், புதிய குறியீடுகள் அனைத்துத் தொழிலாளர்களையும் நிர்ணயிப்பதற்கு அவர்கள் நாட்டிற்குள் குடியேற்றத் தொழிலாளர்கள் தேவையான அளவிற்கு வருவதை நிறுத்த விரும்பவில்லை; ஏனெனில் இது தொடர்ந்து குறைவூதியங்கள், நிலைமைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

டைம்ஸின் தலையங்கம் “தொழிற் கட்சியினுடைய வேதனைகள்—பெருநிறுவனங்களின் வெளிநாட்டு தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பது குறித்து புரிந்துகொள்ளாத தாக்குதல்கள் பின்னடைவைக் கொடுக்கின்றன” என்பது பிரையன்ட்டின் உரை “மோசமான பொருளாதாரம், எரியூட்டும் சொற்றொடர்களில் கூறப்பட்டுள்ளது” என விளக்கியுள்ளது. இந்த உரை “வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பொருளாதாரத்தின் திறனை முன்னேற்றுவிக்கும் என்பதை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது.” 

பிரையன்ட் ஒரு முன்னாள் கன்சர்வேடிவ் உறுப்பினர், தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கன்சர்வேடிவ் சங்கத்தில் வகிக்கிறார். பல பின்வரிசை  தொழிற் கட்சி எம்.பி.க்கள் கடந்த வாரங்களில் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் நேர்த்தியான கொள்கைகளை முன்வைக்கவில்லை என்று குறைகூறியபின் தன்னுடைய உரையை அவர் நிகழ்த்தினார்.

நிழல் சுகாதார மந்திரி ஆண்டி பர்ன்ஹாம் கட்சி “இன்னும் உரக்கக் கூவ வேண்டும்”, “மேசையில் நம் உத்திகளை அடுத்த வசந்த காலத்திற்குள் வைக்க வேண்டும்” என்றார். பின்வரிசை எம்.பி. கிரகாம் ஸ்ட்ரிங்க்கரும் தன் கவலையை தொழிற் கட்சி தலைவரின் “பெரும் மௌனம்” மற்றும் அவருடைய நிழல் மந்திரி சபையின் மௌனம் கோடை முழுவதும் இருப்பது குறித்துக் கவலை தெரிவித்தார். நிழல் அமைச்சரவைக்கு முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயரின் நெருக்கமான ஆலோசகர் பீட்டர் மண்டெல்சன் பிரபு திரும்ப வேண்டும், அது “தகவலை நன்கு வெளிப்படுத்தும்” என்றார்.

மிலிபாண்டே இக்குறைகூறல்களுக்கு விடையிறுக்கும் வகையில் இன்னும் ஜனரஞ்சகக் குரலை எடுத்து வாழ்கைத் தரங்கள் சரிவிற்கு எதிர்ப்பை தெரிவித்தார் தொழிற் கட்சி “வாழ்க்கைச் செலவுகள் நெருக்கடியில்” குவிப்புக்காட்டும் என்று கூறிய அவர், தெற்கு லண்டன் சந்தையில் பேசியபோது, “எங்களிடம் முற்றிலும் விடைகள் உண்டு. ரயில் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள், ஊதிய தினத்தன்று வசூல் செய்ய வரும் கடன் கொடுத்தவர்கள், நியாயமான வரிவிதிப்பு முறை ஆகியவை குறித்து” என்றார்.

ஆனால் மிலிபாண்டின் விடையிறுப்பு பெரும்பாலான ஊடகத்தில் ஏற்கப்படவில்லை. ரூபர்ட் மர்டோக்கின் சொந்தப் பத்திரிகையான டைம்ஸ் செவ்வாயன்று ஒரு தலையங்கத்தில் “தொழிற் கட்சி இன்னமும் கல்வி, சுகாதாரம், பொதுநலம் பற்றி ஏதும் கூறவில்லை.... தொழிற் கட்சி அது எப்படிக் கட்டுப்பாட்டிற்குள் செலவைக் கொள்ளும் என்று ஏற்கும் குறிப்பைக் கொடுக்கும் வரை, அதையொட்டி உண்மையில் துறைகளுக்கு எத்தகைய குறிப்பான வெட்டுக்கள் வரும் என்று கூறுவதன் அர்த்தம், நிதியம் குறித்து தான் எச்சரிக்கையாக இருக்கும் என்று அது உறுதியளிப்பதில் எத்தகைய அரசியல் ஆதாயமும் இல்லை....

“அரசாங்கத்தினுடைய தகவல் தெளிவாக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கு நடுவே தொழிற் கட்சி ஏதும் கூறவில்லை. இப்பொழுது நேரம் குறுகிவிட்டது” என அது முடித்துள்ளது.

ஆளும் வர்க்கத்தால் தொழிற் கட்சி அதன் விருப்பத்தை ஏற்குமாறு கூறப்பட்டுள்ளது—சிக்கனத்தைச் சுமத்துவது, குடியேற்ற எதிர்ப்பு உணர்வைத் தூண்டி மிருகத்தன வெட்டுக்களுக்கு குடியேறுவோரை பலிகடாக்களாகச் செய்தல் என்று. இரு பிரச்சினைகளுக்கும் அதன் விடையிறுப்பு “எந்த அளவிற்கு?”

2015ல் திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலை ஒட்டி, கன்சர்வேடிவ்கள், லிபரல் டெமக்ராட்டுக்கள் மற்றும் தொழிற் கட்சியினரும் இடையே உள்ள வேறுபாடுகள் பிரித்துப் பார்க்க முடியாதவையாக இருக்கும்.

மிலிபாண்டின் தலைமை ஏற்கனவே குறிப்பிடத்தக்க வகையில் வலது புறம் மாறியுள்ளது. இவரை “நீல தொழிற் கட்சி” போக்கிற்கு ஆதரவாளர் ஆவார்; அது குடியேறுவோர் எதிர்ப்பு சோவனிசத்தை ஊக்குவிக்கிறது, தடையற்ற சந்தைக்கு ஆதரவு கொடுக்கிறது, பிரித்தானியாவில் பொது நல அரசில் எஞ்சியிருப்பதையும் கண்டிக்கிறது. பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே, கட்சியின் தற்போதைய கொள்கைப் பரிசீலனைக்கு தலைமை தாங்கும் வகையில், ஜோர் க்ருட்டஸ் என்னும் நில தொழிற் கட்சியின் நிறுவன உறுப்பினர் உள்ளார்.

எனவே பிரையன்டின் “கிழக்கு முகாம்” நாடுகளைப் பற்றிய குறிப்பு, அப்படி அவை இல்லை என்றாலும், குடியேற்ற எதிர்ப்பு உணர்வைத் தூண்டத்தான் பயன்படும். அவருடைய உரை, மார்ச் மாதம் மிலிபாண்ட் குடியேற்ற எதிர்ப்பை விளக்கிப் பேசிய கூட்டத்தை தொடர்கிறது; அதன் பின் அதே பொருளுரையில் நிழல் உள்நாட்டு மந்திரி ஒய்வேட் கூப்பரின் கொள்கைப் பேச்சு வந்துள்ளது. வலதுசாரிக் கொள்கைகளை தொடர்வதில் கன்சர்வேடிவ்களிலிருந்து பிரிக்க முடியாததாக உள்ளது என்று கூறிய கூப்பர் “ஒரு கனிந்த உணர்வு, பலவித குடியேற்றங்கள் உள்ளன என்பது இருக்க அங்கீகாரம் வேண்டும் –  வேலை செய்யும் குடியேற்றம், உரிய வேலை செய்யாத குடியேற்றம் என; இரண்டும் குடியேற்றத்திற்கும் நாட்டிற்கும் பொருந்தும்” என்றார்.