சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian military junta moves to free Mubarak

முபாரக்கை விடுவிக்க எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு செயல்படுகிறது

By Alex Lantier 
20 August 2013

use this version to print | Send feedback

ஆயிரக்கணக்கான நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்ட அல்லது காயப்படுத்தப்பட் படுகொலைகள் நடந்து ஒரு வாரத்திற்குப்பின், பெப்ருவரி 2011ல் ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சிகர எழுச்சியினால் அகற்றப்பட்டதிலிருந்து, சிறையிலுள்ள வெறுக்கப்படும் முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை விடுவிக்கும் முயற்சிகளில் எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு ஈடுபடுகிறது.

நேற்று ஒரு நீதிபதி முபாரக்கை ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தபின், முபாரக்கின் வக்கீல் பரிட் எல்-தீப் செய்தி ஊடகத்திடம் கூறினார்: “நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் எளிதான நிர்வாக நடைமுறை; அதற்கு 48 மணி நேரத்திற்கு மேல் ஆகக்கூடாது. வார இறுதியில் அவர் விடுவிக்கப்பட வேண்டும். முபாரக் மற்றொரு நிலுவையிலுள்ள ஊழல் குற்றச்சாட்டில் இருந்தும் விடுவிக்கப்படுவார் என்று எல்-தீப் நம்பிக்கையுடன் கணித்துள்ளார். அதே நேரத்தில் இராணுவத்தினர் எதிர்ப்பாளர்களை 2011ம் ஆண்டு எழுச்சியின் போது படுகொலைகளை நிறுத்தாத குற்றத்திற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து முறையீடு இருக்கும் நிலையில், அவர் சிறையில் இருந்து பிணையில் வெளியேறலாம். இராணுவ ஆட்சிக் குழு பல feloul   குழுக்களை கொண்டுள்ளது—முன்னாள் முபாரக் கட்சியின் கூறுகள் -- உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, அவர்களுடைய படுகொலைகள் கிட்டத்தட்ட 1,000 கொலைகள் மற்றும் 6,000 பேர் காயமுற்றதையும் கண்டுள்ளன, அவர்களும் முபாரக்கை அக்குற்றங்களிலிருந்தும் விடுவிக்கத் தீவிரமாக இருப்பார்கள்.

இராணுவ ஆட்சிக் குழு மேற்கொண்ட வெகுஜனப் படுகொலைகளும், வெறுக்கப்படும் சர்வாதிகாரி முபாரக்கிற்கு அது மறுவாழ்வு அளிக்க முற்படுவதும், போலி இடது சக்திகள், தாராளவாதிகள் ஆதரவளித்த தமரோட் (‘எழுச்சி’) கூட்டணியால், ஜூலை 3இல் நடாத்திய இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மக்களுக்கு எதிரான ஒரு சதித் திட்டம் என்பதைக் காட்டுகிறது. இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சிக்கு எதிராக தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கள் இப்பொழுது வெளிப்படுவதை முன்கூட்டி தவிர்க்கும் நோக்கத்தையும் எகிப்திய புரட்சிக்கு முன்பு இருந்த சூழ்நிலையை மீட்கும் நோக்கத்தையும் கொண்டது எனத் தெரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு feloul மற்றும் அவர்களுடைய மத்தியதர வர்க்க நட்பு அமைப்புக்கள் பற்களைக் கடித்துக் கொண்டு, தங்கள் வர்க்க விரோதப் போக்கையும் மறைத்து, தொழிலாளர்கள் வேலைகளை கோருதல், ஜனநாயக உரிமைகளைக் கோருதல், வறுமையை முடிவிற்கு கொண்டுவரக் கோருதல் ஆகியவற்றிற்கான எதிர்ப்பையும் மறைக்க முற்பட்டனர். தங்கள் நேரத்திற்குக் காத்திருந்து, முபாரக்கின் கீழ் இருந்த ஊழல் நிரம்பிய வணிகப் பேரரசுகளை மீண்டும் நிறுவவும் அதில் தங்கள் இலாபப் பங்குகளைப் பாதுகாப்பாக அனுபவிக்கவும் விரும்பினர். இப்பொழுது ஆட்சிக் குழு அவசரகால சட்டத்தை மீண்டும் சுமத்தி, அரசியல் சார்பு பொலிஸை மீட்டு, தெருக்களுக்கு எதிர்ப்பாளர்களை கொலை செய்ய டாங்குகளையும் அனுப்பியுள்ள நிலையில், அவர்கள் தங்களுடைய வாய்ப்பை பற்றிக்கொள்ள முயல்கின்றனர்.

இராணுவத்தின் வலிமையான நபரான ஜெனரல் அப்டெல்பட்டா அல்-சிசி இன்னும் எதிர்ப்புக்கள் வந்தால் புதிய வன்முறை அடக்குமுறைகள் இருக்கும் என நேற்று அச்சுறுத்தினார். “நாடு, மக்கள் அழிக்கப்படுவதையும் அல்லது தேசம் தீ வைக்கப்படுவதையோ குடிமக்கள் அச்சுறுத்தப்படுவதையோ” நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

உண்மையில் இராணுவ ஆட்சிக் குழுவும் அதன் நட்பு அமைப்புக்களும் அவற்றின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன அரசியல் போராட்டங்கள் வெடிப்பதை தவிர்க்க எகிப்திய மக்களை அச்சுறுத்துகின்றன. அவர்கள் முபாரக்கின் கீழிருந்த சர்வாதிகார ஆட்சி வகைகளை மீண்டும் சுமத்தியிருப்பது மட்டும் இல்லாமல், முக்கியமான உணவு, எரிபொருள் மானிய உதவித் தொகைகளையும் நிறுத்தியுள்ளனர்; பல மில்லியன் எகிப்திய தொழிலாளர்கள் இவைகளை நம்பியிருந்தனர்.

ஆட்சிக் குழு நேற்று இன்னும் 36 எதிர்ப்பாளர்கள் கொலையுண்டதை அறிவித்தது; அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அவர்கள் கெய்ரோவின் அல்-படா மசூதியில் ராம்செஸ் சதுக்கத்திற்கு அருகே கைப்பற்றப்பட்டனர். ஆட்சிக் குழு எதிர்ப்பாளர்களை ஏராளமாக கைதும் செய்கிறது; இதில் வெள்ளி எதிர்ப்புக்களில் 1,004 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதும் அடங்கும்.

நேற்று உள்துறை அமைச்சரகம், “மக்கள் பாதுகாப்புக் குழுக்களை” தடைசெய்துள்ளதாக அறிவித்தது; மாறாக எகிப்தியர்கள், ஆட்சிக் குழு சுமத்தியுள்ள மாலை 7 முதல் காலை 6 வரையான ஊரடங்கு உத்தரவை மதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. ஓரளவு இது முர்சி சார்பு எதிர்ப்பாளர்களை தாக்க கண்காணிப்புக் குண்டர் குழுக்களுக்கு தமரோட் விடுத்துள்ள அழைப்பு குறித்த பெருகிய புகார்களைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இது ஆட்சிக் குழுவின் தொழிலாள வர்க்கம் குறித்த ஆழ்ந்த அச்சத்தையும் குறிக்கிறது; அவர்கள் மக்கள் குழுக்களை அமைத்து தங்களை 2011 எழுச்சிகளின் போது பொலிஸ் குண்டர்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டனர்.

கூடுதல் எதிர்ப்புக்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வெடிப்பிற்கு ஊக்கம் கொடுக்கும் என அஞ்சும் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவமும் அதனுடைய ஒன்பது திட்டமிடப்பட்ட எதிர்ப்புக்களில் மூன்றைத் தவிர மற்றவற்றை நிறுத்திவிட்டது. இந்த எதிர்ப்புக்களை திட்டமிட்ட வழிகளிலிருந்து தள்ளி திசைதிருப்பியுள்ளது—அதனால் இராணுவத்துடன் மோதலைத் தவிர்க்கலாம் என.

போலி இடது ஏமாற்றுவாதிகள் போன்ற புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), எதிர்ப் புரட்சி தமரோட் அமைப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கையில், தாங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிர்ப் புறத்தில் இருப்பதாக அவர்கள் காட்டிக் கொள்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் அடுத்த புரட்சிகரத் தாக்குதல் இந்தப் பிற்போக்குத்தன சக்திகளை எதிர்த்து மட்டும்தான் அபிவிருத்தி அடையமுடியும்; இவர்களையும் அதனுடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களையும் இராணுவ ஆட்சிக் குழு அரசுடன் முற்றிலும் ஒருங்கிணைத்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

மனித ஆற்றல் மந்திரி கமால் அபு ஐடா ஒரு சட்டவரைவை, “தொழிற்சங்க சுதந்திரங்கள்” என்ற  தலைப்பில் இறுதி செய்து கொண்டிருக்கிறார்; இது RS போன்ற அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு பதவிகள், அரச நிதி இவற்றைப் பெறும் “சுதந்திரத்தை” அளிக்கும். (See: How Egypt’s Revolutionary Socialists helped pave the way for military repression)அபு ஐடா பேர்சிய வளைகுடாவிலிருக்கும் பிற்போக்குத்தன எண்ணெய் ஷேக் அரசர்களுடனும் நெருக்கமாக வேலைசெய்கிறது. அவர் இதுவரை 2 மில்லியன் டாலர்கள் நன்கொடையை ஷார்ஜா ஷேக் சுல்தான் பின் மகம்மத் அல் காசிமியிடமிருந்து பெற்றுள்ளார்: இது “எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு”  பயன்படுத்தப்படும், தொழிலாளர் துறை அமைச்சரகத்திற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் புரட்சிக் காலத்தில் மூடப்பட்ட ஆலைகளை திறக்க வைக்க உதவும்.

இச்செயற்பாட்டின் நோக்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் போலி இடது கட்சிகளுக்கும் வசதியான பதவிகளை தொழிலாளர்களை சுரண்டுவதற்கு அளித்து, தொழிலாள வர்க்கப் போராட்டங்களை பொருளாதாரத்தின் மிக முக்கிய மூலோபாயத் துறைகளில் அடக்குவதற்கு நேரடி நிதிய நலன்கள் அளிப்பதாகும். அபு ஐடா கூறினார்: “இலத்தீன் அமெரிக்க அனுபவத்தை பயன்படுத்தி மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க விரும்புகிறோம்.”

ஏகாதிபத்திய சக்திகள் எதிர்ப் புரட்சிக்கு நிதியையும் கொடுக்கின்றன. எதிர்ப்பாளர்களை படுகொலை செய்கையில், பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் தங்களுடைய அதிருப்தியை இராணுவ ஆட்சிக் குழுவிற்குக் கொடுப்பது, இது உள்நாட்டில் மக்கள் எதிர்ப்பை தூண்டும் என்னும் அச்சத்தில் அதை வெளிப்படுத்தினாலும், அவர்கள் தொடர்ந்து ஆதரவைத்தான் கொடுக்கின்றனர். ஒபாமா நிர்வாகம் ஆண்டுக்கு அமெரிக்க உதவியாக எகிப்து இராணுவத்திற்கு 1.3 பில்லியன் டாலர்கள் என்பதை இன்னும் நிறுத்திவிடவில்லை; இன்னும் திறம்பட ஆட்சிக் குழுவின் ஒடுக்குமுறைக்கு பணத்தைத்தான் கொடுக்கிறது.

விரைவில் எதிர்ப்புக்களை நசுக்கினால், இராணுவ ஆட்சிக் குழு வாஷிங்டனிடமிருந்து எதிர்ப்பைச் சந்திக்காது என்ற அடையாளத்தை வெள்ளை மாளிகை காட்டியுள்ளது. ஒபாமா நிர்வாக அதிகாரி ஒருவர் இழிந்த முறையில் நியூ யோர்க் டைம்ஸிடம் “வன்முறை பொறுக்க  முடியாது என்றாலும், வன்முறை  விரைவில் முடிந்தால் இம்முடிவுகளை இறுதியில் ஏற்கும்” என்றார்.

எகிப்திய இராணுவம், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டின் முக்கிய கருவியாகும். இது அமெரிக்கப் போர்க் கப்பல்களுக்கு சூயஸ் கால்வாயைக் கடக்க உடனடி உரிமைகளைக் கொடுக்கிறது, அமெரிக்க போர் விமானங்கள் மத்திய கிழக்கு இலக்குகள் மீது குண்டெறிய மேலே பறந்து செல்லும் உரிமைகளையும் கொடுக்கிறது. இது அமெரிக்கப் படைகளுக்கு தரையிறக்கத்திற்கான நேரத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. 2003ல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோது, இந்த வசதி முக்கிய பங்காக இருந்தது; அப்பொழுது துருக்கி அமெரிக்கப் படைகள் துருக்கியில் இருப்பவற்றை, ஈராக்கை தாக்க அனுமதிக்க மறுத்தது. இதன்போது அமெரிக்க கடற்படையை (விமானத் தாங்கிக் கப்பலை) சூயஸ் கால்வாய் மூலம் மாற்று தரையிறக்கம் செய்துகொள்ள முடிந்தது.

வாஷிங்டனுடைய உறவுகள் ஆட்சிக் குழுவுடன் வலுவாக உள்ளன என்பதற்கு மற்றொரு அடையாளமாக, விமானத் தாங்கிக் கப்பலான USS Harry Truman இரண்டு வழிகாட்டும் ஏவுகணை அழிப்பு முறைகள் பாதுகாப்புடனும் மற்றும் இரண்டு க்ரூசர்கள் பாதுகாப்புடனும் சூயஸ் கால்வாய் வழியாக நேற்று எந்த நிகழ்வும் ஏற்படாமல் கடந்தது.

எகிப்திய இராணுவத்தை பற்றிப் பேசுகையில், ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ்  நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “நாங்கள் சூயஸ் கால்வாய்க்கான அதனுடைய தேவையை கொண்டுள்ளோம். இஸ்ரேலுக்கு எதிரான சமாதான உடன்படிக்கைக்கான அவர்களின் தேவை உண்டு. மேலே பறந்து செல்லும் உரிமைகளுக்காக அவர்கள் தேவை; எகிப்தின் ஜனநாயகத்திற்கா மாற்றத்தின் அச்சுறுத்தலில் பெரும்பாலாகவுள்ள தீவிரவாதிகளை வன்முறையில் அடக்குவதற்கும், அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவும் அவர்கள் தேவை.”