World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Fascist Golden Dawn makes visit to Greek shipyards கிரேக்கத்தின் கப்பல்கட்டும் தளங்களுக்கு பாசிச கோல்டன் டவுன் செல்கிறதுBy John Vassilopoulos ஆகஸ்ட் 8ம் திகதி, தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதாக கூறிக்கொண்டு கிரேக்கப் பாராளுமன்றத்தின் மூன்று கோல்டன் டவுன் உறுப்பினர்கள் பெரமா கப்பல் திருத்தும் தளத்திற்கு ஒரு சில கறுப்புச் சட்டை அணிந்த கட்சிக் குண்டர்களுடன் வந்திருந்தனர். கப்பல் திருத்தும் பிராந்தியத்தின் தாயகமான பெரமா தொழிலாள வர்க்க மாவட்டமானது பிரயோஸ் கடற்கரைநகரிற்கு மேற்கே ஏதென்ஸிலிருந்து 15 மைல் தொலைவிலுள்ளது. ஆனால் ஒரு நேரத்தில் 5,000 பேர் கொண்ட தொழிலாளர் பிரிவு இருக்கவேண்டிய கப்பல் திருத்தும் ஒரு மையமாக விளங்கிய கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் இப்பொழுது ஒரு துருப்பிடித்த 350 அல்லது 500 பேர்தான் ஒரு சராசரி நாளன்று வேலை பெறும்நிலையில் கிட்டத்தட்ட சீர்குலைந்து காணப்படுகிறது. கிரேக்க கப்பல் உரிமையாளர்கள் தங்களுடைய கப்பல்களை தொழிலாளர் செலவுகளில் கால் பகுதி அல்லது ஏழில் ஒரு பகுதி குறைவாக இருக்கும் அருகிலுள்ள துருக்கி அல்லது ருமேனியாவில் திருத்துவதையே விரும்புகின்றனர். யூ ட்யூப்பில் பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியில் கோல்டன் டவுன் பாராளுமன்ற உறுப்பினர்களான யியானிஸ் லாகோஸ், நிகோஸ் மைக்கோஸ் மற்றும் இலியஸ் பனஜியோடரோஸ் இன்னும் ஒரு சில கப்பல்கட்டும் தளப் பகுதி சிற்றுண்டிச்சாலையிலுள்ள உள்ளூர் ஆதரவாளர்கள் அங்குள்ள நீண்டகால வேலையின்மை பற்றி விவாதிப்பதைக் காட்டுகிறது. காணொளியில் கோல்டன் டவுனைச் சேர்ந்தவர்கள் “திருத்தும் தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து மற்றும் கப்பல் சொந்தக்காரர்களை அதனால் விரட்டிவிட்டதை” செய்த பிரயோஸின் உலோகத் தொழிலாளர் தொழிற்சங்கத்தினை (Metalworkers Union of Pireaus) ஆதிக்கம் செலுத்திய PAME ஐக் கண்டிப்பது கேட்க கூடியதாக உள்ளது. “நாங்கள் கப்பல் உரிமையாளர்களுடன் உள்ளோம், அவர்களைத்தான் நம்பியிருக்கிறோம்” என்று கோல்டன் டவுன் ஆதரவாளர் ஒருவர் கூறினார். காணொளி இறுதியில் கொடுத்துள்ள அறிக்கையில் பனஜியோடரோஸ் “இங்குள்ள அழுகிய நிலை அனைத்துப் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.... PAME முடிவிற்கு வந்துவிடும்” என்று கூறியுள்ளார். PAME ஆனது கிரேக்கத் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினுள் இருக்கும் கிரேக்க ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் (KKE) பிரிவாகும். பாசிச இயக்கங்களின் தனிப்பட்ட அடையாளமானது பெருகும் நெருக்கடியின்போது தேசியவாதத்திற்கு அழைப்பிவிட்டுவதை அடித்தளமாக கொண்டு ஒடுக்கப்படுவர்களுக்கான போலிப்பரிவுணர்வைக் காட்டுவதாகும். ஆனால் கோல்டன் டவுனுடையடைய எழுச்சி மற்றும் அதனுடைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வார்த்தைஜாலங்களுக்கு ஆதரவாளர்களை சேர்க்கும் திறன் இறுதியில் PAME இனதும் மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னோடியில்லாத வகையில் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் விலை செலுத்துவதாகும். மூன்று
ஆண்டுகளுக்கு
முன்னே
WSWS
விடுத்த அறிக்கை
எடுத்துக்காட்டியதுபோல்,
பெரமாவில்
தொழிலாள
வர்க்கம்
முகம்கொடுக்கும்
நிலைமையானது
கிரேக்கம்
முழுவதுமுள்ள
தொழிலாளர்களின்
நிலையைத்தான்
பிரதிபலிக்கிறது.
பெரமா
தொழிலாளர்கள்
தங்களுக்குள்ளேயே
போராளித்தனத்தையும்
போரிடுவதற்கான
விருப்பத்திற்கும்
எந்தக்
குறைவும்
இருக்கவில்லை.
ஆனால்
அவர்களுடைய
போராட்டங்கள்
தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன. காரணம்
தொழிற்சங்கங்கள்
தொழிலாள
வர்க்கத்தின் ஏனைய பிரிவினரை அணிதிரட்ட
மறுக்கின்றன
அல்லது
கப்பல்கட்டும்
தளத்
தொழிலாளர்களை
பாதுகாப்பதற்கோ,
எந்த
உண்மையான
போராட்டமும்
தொடர்ச்சியான
அரசாங்கங்கள்
சுமத்தும்
சிக்கன
நடவடிக்கைகளுக்கு
எதிராக
அவர்களுக்காக நடத்தவோ
விரும்பவில்லை. மே 2012 தேர்தல்களில் கோல்டன் டவுன் பெரமா நகரசபையில் 11.49% வாக்குகளைப் பெற்றது. இது 2009 தேர்தல்களை விட 0.54 % அதிகம் ஆகும். 2009ல் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி பெரமாவில் 12.15% வாக்குகளைப் பெற்றது. ஜூன் 2012 பொதுத் தேர்தலின் இரண்டாவது சுற்றில் இது 6.57% எனக் குறைந்து விட்டது. கோல்டன் டவுன் கப்பல் உரிமையாளர்களின் நலன்களைக் காப்பதில் தீவிரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக நலன்களை அழிப்பதும் மற்றும் சர்வாதிகார ஆட்சியைச் சுமத்துவதும் என்ற அவர்களுடைய உண்மையான நிகழ்ச்சிநிரலாக உள்ளது. இப் போராட்டத்தில், கோல்டன் டவுன் எந்தக் கணிசமான எதிர்ப்பையும் தொழிற்சங்கங்களிலிருந்து காணவில்லை. பெரமா நிகழ்வுகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதில் எந்தவித எதிர்ப்புமில்லாதுள்ளமை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீதானது மட்டுமல்லாது சிரிசாவில் உள்ள தொங்குதசைகளான போலி இடதுகளினதும் (தீவிர இடது கூட்டணி – ஒன்றுபட்ட சமூக முன்னணி) மற்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மீதானதுமான குற்றச்சாட்டாகும். இந்நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சனிக்கிழமை Rizospastis இல் ஒரு கட்டுரையில் விடையிறுப்பை காட்டியிருந்தது. PAME ஆனது தன்னுடைய வலைத் தளத்தில் ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. கோல்டன் டவுன் அதனுடைய இணைய தளத்தில் வெளியிட்ட கட்டுரையொன்றில், அதனுடைய உறுப்பினர்கள் கப்பல் திருத்தும் தளத்திற்குச் சென்றிருந்தபோது, “PAME எங்கும் காணப்படவில்லை” என பெருமையாக குறிப்பிட்டிருந்தது. தேசிய POEM (Federation of Metalworkers) தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோல்டன் டவுனின் வருகை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக உள்ளூர் POEM உடைய உலோகத் தொழிலாளர்கள் சங்கம், கப்பல்கட்டும் தச்சுவேலையாளர்களின் Panhellenic தொழிற்சங்கம் மற்றும் கப்பல் மின்சாரவியலாளர்களின் தொழிற்சங்கமும் ஒரு பெயரளவு அறிக்கையை கோல்டன் டவுன் வருகையை எதிர்த்து வெளியிட்டது. POEM ஐ போலவே PAME உம் முக்கியமான சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த குறிப்பிடத்தக்க ஒரு இழிவான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. கடந்த ஆண்டு POEM, Halyvourgia Ellados ஆலையில் எஃகுத் தொழிலாளர்களின் ஏராளமான பணிநீக்கங்களுக்கு எதிரான ஒன்பது மாதகால வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டது. பெயரளவிலான ஒற்றுமை நடவடிக்கைகள் சிலவற்றைத் தவிர, PAME மற்றய ஆலைகளிலும் தொழில்துறைப் பகுதிகளிலும் ஒருங்கிணைந்த வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க மறுத்துவிட்டது. இந்த அடிப்படையில் வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டு இறுதியில் அரசாங்கத்தின் மிருகத்தன அடக்குமுறையால் தோல்வியடைந்தது. பெரமா கப்பல்கட்டும் தளத்தில் கோல்டன் டவுனின் தலையீட்டிற்கான உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கம்தான். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கிரேக்க அரசாங்கமும் இணைந்து பெரமாவின் கப்பல் திருத்தும் பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் Piraeus துறைமுக அதிகார சபையை தனியார்மயமாக்க உள்ளது. காஸ்கோ (Cosco) என அழைக்கப்படும் China Ocean Shipping (Group) நிறுவனமானது துறைமுகம் மற்றும் பெரமா கப்பல் திருத்தும் தளத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறது. காஸ்கோ ஏற்கனவே பிரயோஸின் கொள்கலன் துறைமுகத்தின் ஒரு பகுதி மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அங்கு பணி நிலைமைகள் கொடூரமானவையாகவும், விபத்துக்கள் வாடிக்கையானவையாக இருக்கிறது. கோல்டன் டவுன் குறைந்தப்பட்சம் ஒரு கப்பல் முதலாளியால் நிதியளிக்கப்படுகின்றது என்னும் வலுவான வதந்திகள் உள்ளன. இதனுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை பாராளுமன்றத்தில், கிரேக்க கப்பல் உரிமையாளர்களுக்கு கிரேக்கத்தில் அவர்களுடைய கப்பல்களை திருத்துவதற்கும் கிரேக்கத்தை மட்டும் சேர்ந்த தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துவதை ஊக்குவிப்பதற்கும் வரிச்சலுகைகளை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். கிரேக்க கப்பல் உரிமையாளர்கள், தங்களை இன்னும் செல்வக் கொழிப்படைய செய்வதில், ஜனநாயக விரோத வகைகளில் நம்பிக்கை கொண்டிருப்பது ஒன்றும் புதிதல்ல.1967ல் இராணுவ ஆட்சிசதி பதவிக்கு கொண்டுவந்த கேர்னல் ஜோர்ஜ் பாப்பாடோபௌலோஸ் 11 மாதங்களுக்குப் பின் அவர் கிரேக்க கப்பல் உரிமையாளர்கள் சங்கத்திற்கு வருகை புரிந்து ஓர் உரையில், “எங்களிடம் வாருங்கள், நாங்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் எனக் கூறுங்கள். அரசாங்கம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என அறிவித்திருந்தார். அவர்களுடைய சொந்த கொள்கைளை சுதந்திரமாக வரைய கப்பல் முதலாளிகள் வரலாற்றிலேயே பிரயோஸ் துறைமுகத்தில் முழுமையான வரிவிலக்கு உட்பட மிகவும் சாதகமான வடிவமைப்பை உருவாக்கியிருந்தார்கள். கோல்டன் டவுன், ஒரு முதலாளித்துவ அரசின் உருவாக்கமாகும். பல பொலிஸ் அதிகாரிகள், குறிப்பாக கலகப் பிரிவுத் துறையைச் சேர்ந்தவர்கள் கோல்டன் டவுனில் உறுப்பினர்கள் ஆவர். குறைந்தப்பட்சம் ஏதென்ஸில் பாதிப் பொலிசாராவது கடந்த தேர்தலில் பாஸிஸ்ட்டுக்களுக்கு வாக்களித்தனர். இதனுடைய தலைவர் நிக்கலோஸ் மைக்கேலோலியகோஸ் அரசுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர். அவர் 1970 இல் சிறையிலிருக்கையில் இராணுவச் சதியின் தலைவர்களை சந்தித்ததுடன், விக்கி லீக்சினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி அவர் அரச உளவுத்துறையான KYP இனதும் பின்னர் கிரேக்க உளவுத்துறை அமைப்பான EYP இனதும் சம்பள பட்டியலில் இருந்திருக்கின்றார். பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாளர்களுடைய அதிகாரத்திற்கான போராட்டத்துடன் இணைந்துள்ளது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கு முதலாளித்துவ அரசிற்கு எதிரான ஒரு மாற்றீடின் அடிப்படையிலான ஒரு போராட்டத்திற்கு, அதாவது சோசலிச முன்னோக்கில் போராடுவது அவசியமாகிறது. அத்தகைய போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் மற்றும் தங்களுடைய சொந்தச் சலுகைகளை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதே ஒரே அக்கறையாக கொண்ட மத்தியதர வர்க்கத்தின் வசதியான அடுக்கின் சார்பில் பேசும் அவைகளினுடைய போலி இடது பின்தொங்கல்களையும் ஒரு அரசியல் எதிரியாக எதிர்கொள்கிறது. |
|