World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Dismal jobs report exposes claims of US recovery

உற்சாகமற்ற வேலை அறிக்கை அமெரிக்க பொருளாதார மீட்பு பற்றிய கூற்றுகளை அம்பலப்படுத்துகிறது

By Andre Damon
3 August 2013

Back to screen version

அமெரிக்க அரசாங்கம் 162,000 நிகர வேலைகளை ஜூலை மாதம் உருவாக்கியுள்ளது என்று தொழிலாளர் துறை வெள்ளியன்று தெரிவித்திருப்பது, நான்கு மாதங்களிலேயே மோசமான வேலை எண்ணிக்கையாகும். இந்த வேலைகளின் மொத்த எண்ணிக்கை, பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிடக் குறைவானதாக இருப்பதுடன் பெரும் வேலைவாய்ப்பின்மை மீதான ஒரு தாக்கத்தை கொடுப்பதற்கு தேவையான எண்ணிக்கைக்கு மிகக் குறைவானதாகவும் இருக்கிறது.

2008 நிதிச் சீர்குலைவுக்கு 5 ஆண்டுகள் பின்னரும், அமெரிக்கா கடும் பொருளாதார வீழ்ச்சியிலேயே இருக்கிறது என்ற உண்மையை இவ்வறிக்கை அடிக்கோடிட்டு காட்டியது. உழைக்கும் வயதுள்ள மக்கள்தொகை ஒரு மாதத்திற்கு 184,000 ஆக உயர்ந்து கொண்டிருக்கும் போதிலும், கடந்த 4 மாதங்களாக அமெரிக்க பொருளாதாரம் மாதத்திற்கு 173,000 புதிய வேலைகளை மட்டுமே சரசாரியாக கொண்டிருந்தது.

முக்கியமாக 2,40,000 பேர் தொழிற்துறையை விட்டுவிலகிய காரணத்தால், அதிகாரபூர்வ வேலை வாய்ப்பின்மை விகிதம் 0.2 சதவீதமாக குறைந்து ஜூலை மாதம் 7.4 சதவீதமானது.

2008-2009 மந்தநிலை காலகட்டத்தில், இழந்த 8.5 மில்லியன் வேலைகளில் கிட்டத்தட்ட 6 மில்லியன் வேலைகளை மட்டுமே அமெரிக்கா திரும்ப பெற்றிருக்கிறது. 2009 ஜூனில் மந்தநிலை முடிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை 6 மில்லியன்களாக அதிகரித்துள்ளது என்பது மக்கள் தொகை வளர்ச்சிக்கு சமாந்தரமாக வேலைகளில் அதிகரிப்பு குறிப்பாக பூஜ்ஜியமாக இருந்திருக்கிறது என அர்த்தப்படுகின்றது.

பணியமர்த்தப்படுகின்ற அமெரிக்க மக்கள்தொகையின் பங்கு ஜூலை மாதம் 58.7 சதவீதமாக இருந்தது. இது 2009 இருந்து வந்த மற்றும் 2007 டிசம்பரில் இருந்த 62.7 சதவீதத்திலிருந்து குறைந்து பெருமளவு மாற்றமின்றி இருந்தது. இதற்கிடையில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 0.1 சதவீதம் குறைந்து 63.4 சதவீதமானது. இது பத்தாண்டுகளில் அதன் மிகக்குறைவான மட்டத்திற்கு அண்மித்ததாகும்.

கடந்த மாதம் பொருளாதார காரணங்களுக்காக பகுதி-நேரம் பணியாற்றும் மக்களின் எண்ணிக்கை, ஜூன் மாதத்திலிருந்து 19,000ஆக உயர்ந்து, 8.2 மில்லியன்களாக இருந்தது. மேலும் வேலைவாய்ப்பில்லாத அல்லது முழு நேர வேலை செய்யவிருப்பமிருந்தும் பகுதிநேர வேலை செய்பவர்களின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியன்களாக இருந்தது.

கடந்த மாதம் முக்கியமாக உணவு வழங்கல் மற்றும் சுகாதாதாரத் துறையில் உருவாக்கப்பட்ட வேலைகளில், பெரும்பாலானவை குறைந்த-ஊதிய மற்றும் பகுதி-நேர வேலைகளே. ”கடந்த நான்கு மாதங்களாக, நாங்கள் ஒவ்வொரு முழு நேர வேலைக்கும் 4.2 பகுதி-நேர வேலைகளை உருவாக்கியிருக்கிறோம். அந்த போக்கு சரியான திசையில் சென்றுகொண்டிருக்கவில்லைஎன்று CNBC செய்திக்கு LPL Financial இன் பேர்ட் வொயிட் தெரிவித்தார்

கடந்த மாதம் உணவு வழங்கல் துறை 38,400 வேலைகளை சேர்த்தது. தொழிலாளர் புள்ளி விவர செயலகத்தின்படி, வழக்கமான உணவு தயாரிக்கும் தொழிலாளி மணிக்கு 9.18 டாலர்கள் அல்லது ஒரு வருடத்திற்கு 19,100 டாலர்கள் பெறுகிறார். வீட்டு சுகாதாரத் துறை சேவைகளில் 3,900 வேலைகள் உட்பட, தனியார் கல்வி மற்றும் சுகாதாரத்துறை 13, 600 வேலைகளை அதிகரித்தது, பெருமளவு மணிக்கு 9.70 டாலர்கள் சராசரி சம்பளம் கொண்ட வீட்டு சுகாதார உதவிகளை உள்ளடக்கியது.

மாநில அரசு 3,000 வேலைகளை இழந்த வேளையில், மத்திய அரசு 2,000 வேலைகளை இழந்தது. இது ஒதுக்கும்வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் விளைவாக ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக வேலையின்மை ஏற்பட்டு, அதனல் வருட சம்பளத்தில் 20 சதவீதம் வரை சம்பள இழப்பு ஏற்பட்டதன் தொடர்ச்சியாகும்.  

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 1.7 சதவீத விகிதத்தில் மட்டுமே வளர்ந்தது. அதே நேரத்தில், அரசாங்கம் முதல் காலாண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பீட்டை 1.1 சதவீதத்திற்கு குறைத்தது என்று புதன் கிழமையன்று வர்த்தகத் துறை தெரிவித்ததனை அடுத்து இந்த வேலை அறிக்கைகள் வருகின்றன.

கடந்த மூன்று காலாண்டுகளாக அமெரிக்க பெருளாதாரம் 0.96 சதவீத ஆண்டு விகிதத்தில் மட்டுமே வளர்ந்திருக்கிறது. பொருளாதாரமீட்புஎன்ற அரசாங்கத்தின் கூற்றுகளை இந்த எண்ணிக்கைகள் தகர்ப்பதுடன், ஐரோப்பா, ஆசியா மற்றும் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க பொருளாதாரங்களுடன் அமெரிக்க பொருளாதாரமும் வீழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இரண்டம் உலகப் போரின் சராசரியில் ஆறில் ஒரு பங்கு விகித வளர்ச்சியை மட்டுமே இன்று அமெரிக்காவால் அடைய முடிகிறது. கடந்த காலத்தில், அமெரிக்க வளர்ச்சியான 3 அல்லது 4 சதவீதம் மிதமானதாக கருதப்பட்டது. 3 சதவீதத்திற்கு குறைவான எதுவும் பலவீனமானதாகவும் மற்றும் 2 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சி விகிதம் ஆபத்தானதானதாகவும் கருதப்பட்டது.

இந்த நெருக்கடி இருந்த போதிலும், மொத்தத்தில் ஒபாமா நிர்வாகம் மற்றும் ஆளும் வர்க்கத்திடம் தீவிர பொருளாதார வளர்ச்சி அல்லது வேலைவாய்ப்பு- உருவாக்கத்திற்கான திட்டங்கள் இல்லை. உழைக்கும் வர்க்கம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதே அவர்களது பதில். ஒபாமாவின் மேற்சொன்னவேலைகள்திட்டம் முற்றிலும் வியாபாரத்திற்கான வரி வெட்டுகளையும் மானியங்களை வழங்குவதையும்  மற்றும் அதிகரித்துவரும் அமெரிக்காவின்போட்டித்தன்மைஎன்ற பெயரில் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நலன்களை குறைப்பதற்கான ஊக்கங்கள் மற்றும் வெளிநாட்டு மலிவுகூலி உழைப்பாளர்கள் சொர்க்கங்களில் இருந்து அமெரிக்காவின் வறுமைக்கு-அருகிலான ஊதியங்களின் சாதகமான தன்மையை பயன்படுத்தி வேலைகளை உள்நாட்டினுள் கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்களை நம்பவைப்பது ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

மேலும் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் சிக்கன கொள்கைகளுடன் இது இணைக்கப்படுகிறது.

ரென்னெஸ்ஸீ, சட்டநூகாவில் பொருளாதாரம் குறித்த தனது சமீபத்திய பேச்சில், உள்கட்டமைப்பு, சமூகசேவைகள் மற்றும் கல்வி வழங்குவதற்காக அரசாங்கத்தைதனியார் துறையுடன் கூட்டாளியாககேட்டுக் கொள்ளும் வேளையில்,  பெருநிறுவன வரி விகிதத்தை 35 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகவும் உற்பத்தியாளர்களுக்கு 25 சதவீத குறைப்பதை ஒபாமா முன்மொழிந்தார். இது தனியார்மயமாக்கல் மற்றும் செலவின வெட்டுக்கான   குறியீட்டு வார்த்தைகள்.

ஜூலை 18 அன்று திவால் நிலைமையை அறிவித்த டெட்ரொயிட் நகருக்கு ஒபாமா நிர்வாகம் எந்த மத்திய அரசின் உதவியையும் மறுத்திருக்கும்  நிலைமையின் கீழ் நடக்கின்றது. வங்கிகள் மற்றும் பிரதான பத்திரதாரர்களின் தேவைகளைக் குறிப்பிட்டு, மாநில மற்றும் நகர அதிகாரிகள் 20,000 நகர ஊழியர்களின் ஓய்வூதிய ஆதாயங்களை வெட்டவும், உலகப் புகழ்வாய்ந்த டெட்ராய்ட் கலைக் கூடத்தின் சேகரிப்புகள் உள்ளிட்ட நகரின் சொத்துக்களை தனியார்மயமாக்கவும் இந்த திவால் நிலைமையை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு, அதன் ஒரு மாதத்திற்கு 85 பில்லியன் டாலர்கள் பணம்-அச்சடிக்கும் செயல்பாட்டையும் கிட்டத்தட்ட-பூஜ்ஜிய விகித வட்டிக் கொள்கையையும் தொடரும் என்பதை இவ்வாரம் தனது சமீபத்திய அறிக்கையில் தெளிவாக்கியது. சட்டப்படி-கட்டாயமான டெட்ரோயிட் பணியாளர்களின் ஓய்வூதியத்தை செலுத்துவதற்காக அங்குபணம் இல்லாதவேளையில், நிதி மேலடுக்கினை செழிப்பாக்க நிதியளிப்பதற்காக கிட்டத்தட்ட வரம்பற்ற பணம் கிடைக்கிறது என்ற இந்த வேறுபாடுகளின் காட்சியைவிட வேறெதுவும் அப்பட்டமாக இருக்க முடியாது:

இந்த பாரிய பணக்கொடுப்பு நடப்பு பங்கு சந்தை எழுச்சியை உந்தித்தள்ளுகின்றது. குறைவான வேலை வாய்ப்பு எண்ணிக்கை இருந்தபோதிலும், Dow Jones Industrial Average மற்றும் S&P 500 குறியீடுகள் இரண்டுமே வெள்ளியன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய சாதனை படைக்கின்றன.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பெரும் அமெரிக்க வங்கிகளின் இலாபங்கள் தொடர்ந்து உயர்ந்தன. கடந்தமாதம் பெரும் அமெரிக்க வங்கிகளுள், Goldman Sachs, JPMorgan Chase மற்றும் Wells Fargo ஆகியவை அதிக காலாண்டு இலாபத்தினை அறிவித்தன. Wells Fargo 20 சதவீதம் உயர்வாக, 5.27 பில்லியன் டாலர்கள் இலாபமீட்டிய வேளையில், JPMorgan 6.1 பில்லியன் டாலர்கள் இலாபமீட்டியது. இது கடந்த வருடத்திலிருந்து 32 சதவீதம் அதிகம்.

30 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடான ஆப்கானிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக, இவ்வாண்டு JPMorgan Chase, 25 பில்லியன் டாலர்கள் இலாபமீட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் இதழுக்காக Equilar Inc. ஆல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, 200 அமெரிக்க நிறுவனங்களின் செயலதிகாரிகள், 1 பில்லியன் டாலர்கள் வருவாயுடன் 2012 ல் சராசரி உயர்வான 15.1 மில்லியன் டாலர்களுடன் 16 சதவீதம் சம்பள உயர்வைக் கண்டனர்.  

நீடித்த பொருளாதார சரிவு மற்றும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கையில், பெரும்பான்மை மக்களை வறுமைக்குள் தள்ளுவதனூடாக, பெரும் ஸ்தாபனங்களின் இலாபத்தையும் மற்றும் பெரும் பணக்காரர்களின் செல்வத்தையும் அதிகரிக்கும் ஒரு திட்டமிட்ட கொள்கையை அமெரிக்க ஆளும் வர்க்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.