தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Australian SEP candidate arrives in Colombo ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் கொழும்பு வருகை
By our
correspondent
use this version to print | Send
feedback
கோகன் முறையே ஆகஸ்ட்
15 மற்றும் 17ம் தேதிகளில் கொழும்பு மற்றும் காலியில் கூட்டங்களில் உரையாற்றுவதோடு,
ஆகஸ்ட் 16 அன்று கொழும்பில்
நிப்பான் ஹோட்டலில் ஒரு செய்தியாளர் கூட்டத்திலும் பங்கேற்பார். அவரது
சுற்றுப்பயணம்,
செப்டம்பர் 7 அன்று நடக்கவுள்ள
ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலுக்கான சோ.ச.க.யின்
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே ஆகும். சீனாவிற்கு விரோதமாக அமெரிக்கத்
தலைமையில் வளர்ந்து வரும் யுத்த ஆபத்துக்கு எதிராக, ஆசியா-பசிபிக்
பிராந்தியத்திலும் சர்வதேசம் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை
அணிதிரட்டுவதே சோ.ச.க.யின் தேர்தல் பிரச்சாரத்தின் மைய இலக்காகும்.
போருக்கான எதிர்ப்பு,
ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று
கோகன் கூறினார். ஐ.நா. மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு அடிபணிந்து
போனதால், 2003ல் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பிற்கு எதிராகத்
தோன்றிய போர் எதிர்ப்பு இயக்கம், அரசியல் ரீதியில் பலவீனமாகிப் போனது. "தொழிலாள
வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு
முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் இதுவேயாகும்,"
என்று
அவர் கூறினார். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் பிரிவான, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள், பொது கூட்டங்களுக்காக கொழும்பில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் பல பல்கலைக்கழகங்களிலும் பிரச்சாரம் செய்தனர். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்களுடன் பேசியவர்கள், கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ள உலக நிதி நெருக்கடி, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஏகாதிபத்திய போருக்கான உந்துதல், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் அவசியம் போன்ற விடயங்கள் பற்றி ஆர்வங் காட்டினர். |
|
|