World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

IMF calls for 10 percent wage cuts in Spain

ஸ்பெயினில் 10சதவிகித ஊதிய வெட்டுக்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுகிறது

By Alejandro López 
9 August 2013

Back to screen version

ஸ்பெயின் பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய அறிக்கை தொழிற்சங்கங்களும் மற்றும் முதலாளிகளும் ஊதியக் குறைப்புக்கள் உள்ளடங்கலான ஒரு சமூக உடன்பாடு ஒன்றிற்கு உடன்படுமாறு கூறியுள்ளது.

ஆகஸ்ட் 2ல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மக்கள்  கட்சியின் (Popular Party) 2012 தொழிலாளர் துறைச் சீர்திருத்தத்தை பாராட்டி, இது அனைத்து தொழிலாளர்களையும் எளிதில் பணிநீக்கவும், ஒருதலைப்பட்சமாக பணி நேரங்களை மாற்றவும் ஊதிய வெட்டுக்களைச் சுமத்துவும் உதுவுகிறது என்று கூறியுள்ளது. சீர்திருத்தம்சில சாதகமான விளைவுகளை கொடுத்துள்ளது என்றும் அது விளக்கியுள்ளது.

CC.OO தொழிற்சங்க தகவலின்படி, ஒரு வருடத்திற்கு சற்று முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் சாதகமான விளைவுகளால் 633.500 வேலைநீக்கங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொழிலாளர்களின் நிலைமைகளில் இன்னும் தாக்குதல்களை கோருவதுடன், சீர்திருத்தம் போதாது என்கிறது. ஊதியங்கள் மற்றும் பணி உடன்படிக்கைகள் இன்னும் வளைந்து கொடுக்கும் தன்மையை கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

ஒரு சமூக உடன்பாடு கட்டுமான சீர்திருத்தம் மூலம் புதிய வேலைகளை உருவாக்குவதை முன்கொண்டுவருவதை பற்றி ஆராய வேண்டும்என்று அறிக்கை கூறுகிறது. ஒப்பந்தம்கணிசமான பணிகள் அதிகரிப்புக்களுக்கு ஆர்வம் காட்டும் முதலாளிகள், மற்றும்கணிசமான இன்னும் ஊதியக்குறைப்புக்கும் சில நிதிய ஊக்கத்திற்கும் உடன்படும் தொழிற்சங்கங்களுக்கு இடையே ஒரு உடன்படிக்கை தேவை என்று அது பரிந்துரைக்கிறது.

ஊதியம்/விலைச் சரிவு என்பது மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 5% ஆக ஒரு உண்மையான குறைப்பினை இதன் விளைவாக கொண்டிருந்தாலும், இது ஏற்றுமதிகளை அதிகப்படுத்தி, இறக்குமதிகளை தாமதப்படுத்தும். இன்னும் முக்கியமாக, நம்பகத்தன்மை உடைய சமூக உடன்பாடு முதலீட்டின் மீது சாதகமான தாக்கத்தையும் கொண்டு, குறைந்த உற்பத்திச் செலவுகள் மற்றும் முன்னேற்றமான விளைவுகளையும் கொடுக்கும்என்றும் கூறியுள்ளது.

இந்த அறிக்கை இரண்டாண்டு காலத்தில் 10% ஊதிய வெட்டின் விளைவுகளைப் பற்றிய ஆய்வைக் காட்டுகிறது. அத்துடன் சமூகப் பாதுகாப்பு வழங்கும் பணத்தில் 1.66 சதவிகிதம் குறைவு இருக்கும். மதிப்புக்கூட்டு வரியை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகப்படுத்துவது குறித்தும் அது ஆராய்ந்துள்ளது. அது பெரும்பாலான உணவுப் பொருட்களுக்கு, சுகாதார சேவைகளுக்கு, போக்குவரத்திற்கு மற்றும் வீடுகளுக்கு அதிக செலவை ஏற்படுத்திவிடும்

ஆனால் இந்த நடவடிக்கைகளின் பொருள் ஏற்கனவே 27% ஆக துன்பத்தில் வேலையற்றுள்ள ஸ்பெயின் தொழிலாள வர்க்கம் மேலும் ஏழ்மையடைந்துவிடும் என்பதுதான். தொழிலாளர்கள் ஏற்கனவே தங்கள் ஊதியங்களில் மிருகத்தன வெட்டுக்களை பெற்றுள்ளனர். பொருளாதார வல்லுனர் Jean Paul Fitussi கூற்றுப்படி, சராசரி ஊதியங்களில் குறைவு என்பது ஸ்பெயினில் 7% அடைந்துவிட்டது.

இந்த அறிக்கை மாட்ரிட் தொழிலாளர் சந்தையில்இரு முறைகள் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது. அதாவது, பொதுவாக அதிக ஊதியம் இருக்கும் நிரந்தர ஒப்பந்த வேலைகளுக்கும் குறைவான, தற்காலிக, வேலைகளுடன் பிணைந்துள்ள ஒப்பந்தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க கோருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை வணிக வட்டங்கள், செய்தி ஊடகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஸ்பெயினுக்கான அதிகாரிகள் ஆகியோர் கோரிய வேலைக்கான ஒரு தனிஒப்பந்தத்தின் சமீபத்தியதாகும். இவர்கள் அனைவரும் ஒரு தனி வேலை ஒப்பந்தத்தை கோரியுள்ளனர். அத்தகைய ஒப்பந்தம், ஏற்கனவே மிக அதிக தற்காலிக தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் ஒரு நாட்டில், நல்ல ஊதியமளிக்கும் நிரந்தர ஒப்பந்தங்களை அகற்றிவிடும்.

தேசிய புள்ளிவிவர அமைப்பின் (INE) கருத்துப்படி, சமீபத்திய குடிசன மதிப்பீடு (EPA) வேலையில் இருப்பவர்களுள் 16.4 சதவிகிதத்தினர் பகுதி நேர வேலை செய்கின்றனர் எனக்காட்டுகிறது. இது, 2008 நிதியக் கரைப்பிற்குப்பின் ஐந்து ஆண்டுகளில் 20%க்கும் அதிகமானது ஆகும். அதே நேரத்தில் முதலாளிகள், 2012 தொழிலாளர் சீர்திருத்தங்களை பயன்படுத்துகின்றனர். அது பகுதி நேரத் தொழிலாளர்கள் மேலதிக நேரம் பணி செய்வதை அனுமதிக்கிறது. INE கருத்துப்படி 2.2 மில்லியன் பகுதி நேர தொழிலாளர் ஒப்பந்தங்கள் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் ஏற்பட்டன. இது மொத்த ஒப்பந்தங்களில் 34% ஆகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை, வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு 27.2% எட்டும் என்று எதிர்பார்க்கிறது. இது 2014 இல் 27% விட அதிகமாகும், 2015இல் 26.9%, 2017இல் 26%, 2018இல் 25.3%ஐ விட அதிகமாகும். இது இந்த ஆண்டு பொருளாதாரச் சுருக்கம் 1.6% ஆக இருக்கும் என்றும் கணிக்கிறது. பொருளாதார வளர்ச்சி 2014ல் பூஜ்யமாகவும், 2015ல் 0.3% ஆக மட்டுமே இருக்கும்.

இந்த புள்ளிவிவரங்கள் பிரதம மந்திரி மரியனோ ரஜோய் சென்ற வாரம் வழங்கிய விபரத்தில் இருந்து வேறாக உள்ளது. அவர், அவருடைய கட்சிக்கு சட்டவிரோதமாக வரும் நிதி குறித்த விவாதத்தை திசை திருப்ப விரும்பினார். அது Bárcenas விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது. சமீபத்திய வேலையற்றோரின் புள்ளிவிவரங்கள் ஜூலை மாதம் 63,500 பேர் குறைந்துள்ளதை காட்டுகிறது என்றார். அன்றே பொருளாதார மந்திரி லூயி டி கிண்டோஸ் வேலையின்மையின்மை குறைப்பைப் பாராட்டும் வகையில், “20 தொடர்ந்த காலாண்டுகள் அதாவது ஐந்து ஆண்டுகளில்  இதைக்காண்பதற்கு ஸ்பெயின் பொருளாதாரம் பருவகாலத்திற்கு மட்டும் உரியதல்லாத வேலைகளைத் தோற்றுவிக்க முடியும்.” என்றார்.

உண்மையில் EPA கருத்துப்படி, ஏப்ரல்-ஜூன் காலத்தில் உழைத்த மக்கள் எண்ணிக்கை 149,000 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை 225,200 சரிந்து 5.9 மில்லியன் என ஆயிற்று. முந்தைய மூன்று மாதங்களில் மிக அதிக 6.2 மில்லியனை இது அடைந்திருந்தது. பருவக்காலத்திற்குரிய கூறுபாடுகள், சுற்றுலாவுடன் தொடர்புடையதை அகற்றினால், சமீபத்திய காலாண்டில் தோற்றுவிக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை 13,000 தான்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைஅரசாங்கம் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ளது, 2015 கடைசி வரை பொதுத் தேர்தல்கள் இல்லை, அரசாங்கம் குறைந்தபட்ச சமூக அமைதியன்மையைத்தான் எதிர்கொண்டுள்ளது. ஆனால் பொருளாதார உள்ளடக்கம் இரண்டு முக்கிய கட்சிகளின் செல்வாக்கையும் குறைத்துவிட்டது. இது புதிய கடின சீர்திருத்தங்களுக்கான மக்கள் ஆதரவு பெறுவதை சவாலாக்கும்.” என்ற எச்சரிக்கையுடன் முடிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, நிதிய விவகாரங்களின் ஆணையர் ஒலி ரெஹான், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமான தொழிலாளர்கள் குறைந்த ஊதியங்களை ஏற்க வேண்டும் என்ற கருத்திற்கு தன் சொந்த வலைத் தளத்தில் ஆதரவைக் காட்டியுள்ளார். ஐரோப்பிய ஆணையாளரின் செய்தித்தொடர்பாளர் சான்டல் ஹ்யூஜிஸ் மறுநாள் ரெஹானுடைய கருத்துக்கள் சொந்தக் கருத்துக்கள் என்றும் ஆனால் அவை ஐரோப்பிய ஆணையத்தின் நிலைப்பாட்டுடன் இணைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்த வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைக்குறையை குறைப்பு, தனியார்மயமாக்குதல், தொழில்துறை சீர்திருத்தங்கள் மற்றும் வேலைகள், பணி நிலைமைகள், ஓய்வூதியங்கள் அடிப்படை சமூக உரிமைகள் ஆகியவற்றில் பேரழிவு விளைவுகளை கொடுக்கும் வரி அதிகரிப்புக்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்திருக்கும் சமூக உடன்பாடு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தொழிற்சங்கங்கள் நேரடியாக சீர்திருத்தங்களை இயற்ற, செயல்படுத்த ஒத்துழைக்கின்றன. அவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்களில், அவை தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை தவிர்த்து, அரசாங்கம் ஆணைகள் மூலம் அவற்றை சுமத்த அனுமதித்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் PP, முந்தைய PSOE சோசலிஸ்ட் அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஊழியர்கள் ஒய்வுதியம் பெறத் தகுதி உடைய வயது 65ல் இருந்து 67 என உயர்ந்துள்ளதையும், முழு ஓய்வுத் தொகையை பெறத் தேவையான ஆண்டுகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதையும் காண்கின்றனர்; தொழிலாளர்துறை சீர்திருத்தங்கள் கூட்டுப் பேரமுறையை முடித்துவிட்டது; பணிநீக்க இழப்பீட்டுத் தொகையை குறைத்துவிட்டது; தொழிலாளர்கள் நியமனம், பணிநீக்கம் ஆகியவற்றை எளிதாக்கிவிட்டது. தொழிற்சங்கங்கள் சமீபத்திய தொழிலாளர் சீர்திருத்தங்களை பயன்படுத்தி தம் ஊழியர்களையே பணிநீக்கம் செய்துள்ளன.

கடந்த மே மாதம் தொழிற்சங்கங்கள் பெரும் சமூக உடன்படிக்கையை PP அரசாங்கத்துடன் மேற்கொண்டு, ஸ்பெயின் இப்பொழுது கொண்டுள்ளசமூக நெருக்கடி பற்றியும்பொது வெளியேறும் மூலோபாயத்தை கொண்டுவரும் நோக்கத்தையும் மேற்கொண்டுள்ளது. இந்த அழைப்பு மதிப்பிழந்த PP அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கு வந்துள்ளது; அனைத்து அரசியல், சமூக சக்திகள் இன்னும் வெட்டுக்களைச் சுமத்தவும், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எந்த எதிர்ப்பையும் தடுப்பதற்கும் ஆகும்.

இரண்டு முக்கிய தொழிற்சங்கங்கள், பொதுவாக சர்வதேச நாணய நிதியத்தின் ஊதிய பரிந்துரைகளை எதிர்த்துள்ளன. UGT  அதிகாரி டோனி பெரர், “இதில் வேலையின்மையில் பாதிப்பு ஏதும் இல்லைஅதே நேரத்தில் நுகர்வோர் செலவு, முதலீடு இவற்றில் எதிர்மறை விளைவுகள் இருக்கும் என்ற அடிப்படையில் இது உள்ளது என்றார். UGT வேலைகளைக் பாதுகாப்பதற்கு ஈடாக ஊதிய வெட்டுக்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தியது. ஆனால் நிறுவனங்கள் இந்த உடன்பாட்டில் தங்கள் பங்கை நிறைவேற்றவில்லை. நிதானமான ஊதியங்களுக்காக தமது இலாபங்களை கட்டுப்படுத்தவில்லை. நிறுவனங்களின் வருமானங்கள் கடந்த ஆண்டு 2.2% அதிகரித்துவிட்டன, ஊதியங்களோ 5.4% குறைந்துவிட்டனஎன்றார்.