World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : லிபியா Washington presses for talks between Egyptian army junta, Islamists எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு, இஸ்லாமியவாதிகளுக்கு இடையே வாஷிங்டன் பேச்சுக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறதுBy Johannes
Stern வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் எகிப்திய இராணுவத்திற்கு, முஸ்லிம் சகோதரத்துவத்துடனும், ஆட்சிக்கு எதிரான பரந்த தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்களை ஒட்டி ஜூலை 3 ஆட்சி சதியின்போது அகற்றப்பட்ட முன்னாள் இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சியுடனும் அதன் இரத்தம் தோய்ந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கின்றன. புதன் அன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் காத்திரின் ஆஷ்டோனும் ஒரு கூட்டு அறிக்கைய வெளியிட்டனர். அது கூறுவதாவது: “எகிப்தின் வருங்காலம் பற்றிய ஆழ்ந்த கவலையுடன், இந்த முக்கிய நேரத்தில் எது பணையத்தில் உள்ளது என்பதைக் கருத்திற்கொண்டும், நாங்கள் தற்போதைய நடைமுறை அழுத்தங்களை அமைதிப்படுத்தவும் எகிப்தியர்கள் உண்மையான அரசியல் கலந்துரையாடல் என்னும் பாலத்தை நோக்கிச் செல்லவும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளோம். இக்கருத்துக்கள் இப்பொழுது இரு கட்சிகளுக்கும் கிடைக்கப்பெறுகின்றன, நம் ஈடுபாடு இவற்றை அன்றாட அடிப்படையில் அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்த வலியுறுத்துவதாகும்.” புதன் அன்று முந்தைய முன்முயற்சிகள் தோல்வியுற்றபின், முஸ்லிம் சகோதரத்துவத்துக்கும் இராணுவ ஆட்சிக் குழுவிற்கும் இடையே சமாதானத்தை ஏற்பாடு செய்யும் ஏகாதிபத்திய சக்திகளின் தொடர்ந்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் இந்த அறிக்கை. கடந்த வெள்ளியன்று அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலர் வில்லியம்ஸ் பேர்ன்ஸ் எகிப்திற்குப் பயணித்து எகிப்தின் இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர், அவருடைய துணை ஜனாதிபதி மகம்மது எல்பரடேய் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தினார். முஸ்லிம் சகோதரத்துவத்தின் முக்கிய உறுப்பினர் கேய்ரட் அல்-ஷேடரையும் பேர்ன்ஸ் சந்தித்தார்; பிந்தையவர் இப்பொழுது கெய்ரோ சிறை ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். செவ்வாயன்று குடியரசுக் கட்சி செனட்டர்கள் ஜோன் மக்கெயினும் லிண்ட்சே கிரகாமும் கெய்ரோவில் உயர்மட்ட இராணுவ மற்றும் சிவிலிய தலைவர்களை சந்தித்து இராணுவ ஆட்சிக்கும் முஸ்லிம் சகோதரத்துவத்துக்கும் இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தினர். கிரகாம் கூறினார்: “ஒரு ஜனநாயகத்தில் நீங்கள் உட்கார்ந்து ஒருவரோடு ஒருவர் பேசவேண்டும்.” எம்.பி. தலைமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அவர், “சிறையில் இருப்பவர்களுடன் பேசுவது இயலாது.” என்றார். எந்த சமரசமும் இல்லையென்றால், அமெரிக்க எகிப்திய உறவுகள், குறிப்பாக எகிப்திய இராணுவத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்கா கொடுக்கும் 1.3 பில்லியன் டாலர்கள் ஆபத்திற்கு உட்படும் என்று கிரகாம் எச்சரித்தார். “காங்கிரசில் சிலர் உறவை துண்டிக்க விரும்புகின்றனர். சிலர் உதவியை தற்காலிகமாக நிறுத்த விரும்புகின்றனர்” என அவர் விளக்கினார். “நம் உறவுகள் எப்படி உள்ளன என்பது குறித்து நாம் நேர்மையாக இருக்க வேண்டும்... ஜனநாயகம் நோக்கிச் செல்லாத எகிப்தை நாங்கள் ஆதரிக்க முடியாது.” ஜனநாயகம் குறித்த வாஷிங்டனின் அக்கறை ஒரு இழிந்த மோசடி ஆகும். தொழிலாள வர்க்க இயக்கம் ஒரு புரட்சிகர இயக்கமாக வெளிப்படைதை தடுப்பதற்காக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் முர்சிக்கு எதிரான இராணுவ ஆட்சி சதிக்கு ஆதரவு கொடுத்தன, ஆனால் முன்பு அவருக்குத்தான் இவை ஆதரவு கொடுத்திருந்தன. எனினும் அவர்கள், இராணுவம் முஸ்லிம் சகோதரத்துவத்தை வன்முறையில் அடக்குவது எகிப்தையும் முழு மத்திய கிழக்கையும் இன்னும் உறுதிகுலைத்துவிடச் செய்வதோடு இறுதியில் அது புதுப்பிக்கப்படும் வெகுஜன போராட்டங்களைத் தூண்டிவிடும் என்று கவலை கொண்டுள்ளனர். தங்கள் அறிக்கையில் கெர்ரியும் ஆஷ்டனும் எச்சரிக்கின்றனர்: “இது ஒரு பலவீனமான நிலைமையாக உள்ளது, இதில் இன்னும் குருதி கொட்டுதல், மக்கள் எதிரெதிர் முகாம்களில் இருப்பும் ஆபத்து இருப்பது மட்டும் இல்லாமல், பொருளாதார மீட்பையும் தடைசெய்கிறது; அதுதான் எகிப்தின் வெற்றிகர மாற்றத்திற்கு அடிப்படையாகும்.” ஆனால், அமெரிக்க ஆதரவு கொண்ட எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு முஸ்லிம் சகோதரத்துவத்துக்கு எதிரான அடக்குமுறையை தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்துகிறது. புதன்கிழமையன்று எகிப்தின் இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் ஓர் அறிக்கையில் “இராஜதந்திர முயற்சிகளின் கட்டம் முடிவடைந்துவிட்டன” என்று அறிவித்தார். “அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் செய்ய இடம் அளித்தது, அதையொட்டி முஸ்லிம் சகோதரத்துவமும் அதன் ஆதரவாளர்களும் வன்முறையை நிராகரிக்க, குருதி சிந்துதலை தவிர்க்க, வருங்கால எகிப்திய சமூகம் தடைக்கு உட்படுவதை தடுக்க” என்றும் அவர் கூறினார். முஸ்லிம் சகோதரத்துவமும் அதன் நண்பர்களும் “தோல்விக்கு முழுப் பொறுப்பு ஆகும், அதேபோல் பின்னர் நடக்கும் நிகழ்வுகளுக்கும் பொறுப்பாகும் -- இவை இத்தோல்வியில் இருந்து விளையலாம், சமூக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சட்டத்தை முறிக்கலாம்.” என்றார். பிரதம மந்திரி ஹசேம் எல் பெப்லவி மற்றொரு அறிக்கையில் எம்.பி. ஆதரவாளர்களின் உள்ளிருப்புப் போராட்டங்கள் வன்முறையாக அகற்றப்படும் என்னும் அச்சறுத்தல் தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார் —அவர்கள் ஆட்சிமாற்றத்திற்கு எதிராக இருப்பதுடன் முர்சி மீண்டும் பதவியில் இருத்தப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர். உள்ளிருப்புக்களை கலைக்கும் முடிவு இறுதியானது, அரசாங்கத்தின் “பொறுமை” முடிய உள்ளது என்றும் அவர் கூறினார். எதிர்ப்பாளர்கள் வன்முறையை தூண்டுகின்றனர் என்றும், சாலைகளை தடுப்பிற்கு உட்படுத்துகின்றனர் என்றும், குடிமக்களை கைது செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டிய அவர், அத்தகைய நடவடிக்கைகள் “கடுமையான வலிமையுடன், உறுதியுடன்” எதிர்க்கப்படும் என்றார். வியாழன் அன்று பெப்லவி தன் அச்சுறுத்தல்களை, உள்துறை மந்திரி மகம்மது இப்ரஹிமுடன் மற்றும் பாதுகாப்பு தலைவர்களுடன் பேசுகையில் மீண்டும் வலியுறுத்தினார்—அவர் கெய்ரோவின் மத்திய பாதுகாப்பு தலைமையகம் உள்ள எல் தரசாவிற்குச் சென்றிருக்கையில். “பாதுகாப்புதான்” அவருடைய அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை எனினும், பாதுகாப்புப் படையினர் “பாதுகாப்பை காத்தல், தேசத்தையும் மக்களையும் காப்பதில்” கொண்டுள்ள “பெரும், தொடர்ந்த” பங்கிற்கு பாராட்டையும் தெரிவித்தார். ஆட்சி கவிழ்ப்பிற்கு பின், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கில் காயமுற்றுள்ளனர். இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 8ம் திகதி பாதுகாப்புப் படையினர் குறைந்தப்பட்சம் 51 முர்சி ஆதரவு எதிர்ப்பாளர்களை கொன்றனர், பின் மற்றொரு படுகொலையில் 80 பேரை ஜூலை 27 அன்று கொன்றனர். புதன் அன்று, இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இராணுவம் ஜூலை 5ல் இருந்து சினாயில் நடத்திய வன்முறையில் 60 பேரைக் கொன்றுள்ளது, 103 “பயங்கரவாதிகளை” கைது செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். முஸ்லிம் சகோதரத்துவம் இன்னும் கூடுதலான குருதி கொட்டுதல் குறித்து எச்சரித்துள்ள அதேவேளையில், தான், இராணுவத்துடன் பேச்சுக்கள் நடத்தத்தயார் என்று சமிக்ஞை செய்துள்ளது. முஸ்லிம் சகோதரத்துவத்தின் செய்தித் தொடர்பாளர் கெஹட் எல்-ஹடட் ராய்ட்டர்ஸிடம் கூறினார்: “இதன் பொருள் அவர்கள் இன்னும் பாரிய படுகொலைக்கு தயாரிப்புக்கள் கொண்டுள்ளனர் என்பதாகும். அவர்கள் எங்களுக்கு சாதகமான சமிக்ஞைகளை அனுப்பவேண்டும், உன்மையான தோட்டாக்களை அல்ல.” முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் போது நடக்கும் உண்ணாவிரதம் முடிந்த, ஈத்தின் முதல் நாளான வியாழன் அன்று நெறித்தன்மையை ஆதரிக்கும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமையிலான தேசியக் கூட்டணி, அதன் உறுப்பினர்களை “வெற்றிகரமான ஈத்தைக்” கொண்டாட தெருக்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. சமரசப் பேச்சுக்களில் கெய்ரோவில் பங்கு கொண்ட டச்சு வெளியுறவு மந்திரி பிரான்ஸ் டிம்மெமன்ஸ், வரவிருக்கும் நாட்களில் படுகொலைகள் புதுப்பிக்கப்படும் வாய்ப்புக்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். “இன்னும் அதிக மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க தெருக்களுக்கு வருவர், ஆயுதப்படையினரின் போக்கு, செலுத்த இருக்கும் வன்முறையின் மீதுதான் உள்ளது” என்று ராய்ட்டர்ஸிடம் அவர் கூறினார். இராணுவ வன்முறையின் உடனடி இலக்கு, முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் அதன் இஸ்லாமியவாத ஆதரவாளர்கள் என்றபோதிலும், ஆட்சியின் இறுதி இலக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்கி, வெகுஜன புரட்சிகரப் போராட்டங்களின் விளைவாக அமெரிக்க ஆதரவு பெற்ற நீண்டநாள் சர்வாதிகாரியான ஹொஸ்னி முபாரக், பெப்ருவரி 11, 2011ல் அகற்றப்படுவதற்கு முன்பிருந்த அரசியல் அமைப்பை மீட்பதாகும். எகிப்திய ஆளும் உயரடுக்கின் எதிர்ப் புரட்சி தாக்குதல், தாராளவாத, நாசரிச, போலி இடது அமைப்புக்களின் பங்கை அம்பலப்படுத்துகிறது, இவை, முர்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்துக்கு எதிரான மக்கள் அதிருப்தியை இராணுவத்திற்கும் முன்னாள் முபாராக் ஆட்சிக் கூறுபாட்டிற்கும் பின்னால் திசை திருப்ப முற்பட்டன. எகிப்தின் மத்தியதரக் குழுக்களில் இழிந்த அழுகிய அமைப்பான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), தங்களை ஆட்சி சதியில் இருந்து பிரித்துக்காட்ட பெரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது; அதே நேரத்தில் அவர்களுடைய நட்பு அமைப்புக்கள் இராணுவத்திற்கு வெளிப்படையான ஆதரவைத் தொடர்ந்து கொடுக்கின்றன. முன்பு முஸ்லிம் சகோதரத்துவம் பிரச்சாரம் செய்திருந்த தமரோட் (“எழுச்சியாளர்கள்”), இராணுவ சார்பு ஈத் பிரார்த்தனைகளை தஹ்ரிர் சதுக்கத்தில் நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இப்பிரார்த்தனைகளுக்கு சோசலிஸ்ட் மக்கள் கூட்டணிக் கட்சி மற்றும் நாசரிச அரசியல்வாதியும் தேசிய மீட்பு முன்னணியின் தலைவருமான தலைவர் ஹம்தீன் சபாஹியின் ஆதரவும் உண்டு; அவர் இழிந்த முறையில் ஒரு வானொலிப் பேட்டியில் “முஸ்லிம் சகோதரத்துவம் மக்கள் விருப்பத்தை ஏற்க வேண்டும். என்னால் அரசியல் தீர்வு எதையும் கற்பனை செய்து பார்க்க முடியாது.” என்றார். |
|