World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Russian government implements austerity as economy falters

பொருளாதாரம் தடுமாறுகையில் ரஷ்ய அரசாங்கம் சிக்கன நடவடிக்கையை செயல்படுத்துகிறது.

By Andrea Peters
10 July 2013

Back to screen version

அரச வரவு-செலவுத் திட்டம் நெருக்கடியில் இருப்பதாக வியாழன் அன்று ரஷ்ய நிதி மந்திரி ஆண்டன் சுலியநோவ் அறிவித்தார். உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி, அடுத்த 3 ஆண்டுகளில் அரச செலவினங்களில் ஒரு “வரவு-செலவுத் திட்ட தந்திரோபாயம்“ (உ.ம். வெட்டு) தேவைப்படுமளவிற்கு, 2013 -ம் ஆண்டில் மட்டும் ஒரு டிரில்லியன் ரூபிள்கள் (33 பில்லியன் டாலர்கள்) பற்றாக்குறை இருக்கிறது.

அரச ஓய்வூதிய நிதிக்கான தொகையை குறைத்தல் உள்ளிட்ட, அரச கொள்முதலை ஐந்து சதவீதமாகக் குறைத்தல் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றின் மீதான செலவினங்களைக் குறைத்தல் போன்ற உழைக்கும் வர்க்கத்தின் மீதான கடும் தாக்குதல்கள் மூலமாக “ஓட்டைகளை“ அடைக்க அரசாங்கம் உத்தேசிக்கிறது.

மேலும், மந்திரிசபை ரஷ்யாவின் ரிசர்வ் நிதியிலிருந்து (அரச இறையாண்மை நல நிதி) 300 பில்லியன் ரூபிள்களை எடுத்து, வரவு-செலவுத் திட்ட குறிக்கோளை எதிர்கொள்வதற்காக வழக்கமாக ரிசர்வ் நிதியை அதிகரிக்க பயன்படுத்தும் வருவாயை திசை திருப்பலாம். ரஷ்ய சிலவராட்சி மற்றும் பெரு வணிகங்களை பிணையெடுக்க க்ரெம்ளின் இந்நிதியை பயன்படுத்தியபொழுது, அதாவது பொருளாதார நெருக்கடி காலகட்டமான 2008-2009-ல் கடந்த முறை இது போன்ற சூழல் ஏற்பட்டது.

உலகின் முன்னணி 100 பில்லியனியர்களில் ரஷ்யாவில் 11 பேர் இருந்தபோதிலும், ரஷ்யாவின் தடுமாறும் பொருளாதாரத்திற்கு சிக்கன நடவடிக்கைகளே ஒரே தீர்வு என்று அரசு வலியுறுத்துகிறது. 2008 பொருளாதார நெருக்கடியிலிருந்து வளர்ச்சி விகிதம் உயரவே இல்லை. இவ்வருடம் அவ்விகிதம் திட்டமிடப்பட்ட 3.6 சதவீதத்திலிருந்து குறைந்து 2.4 சதவீதம் அளவினை எட்டும். 2008-2009 உலக நிதி சீர்குலைவுக்கு முன்பாக, சில வருடங்களில் ரஷ்யாவின் பொருளாதாரம் 8-9 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருந்தது. இது மேலும் பலவீனமடையுமென்று தற்போது பல பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ரஷ்யா அதன் பொருளாதாரப் பரவலாக்கலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்னும் தொடர்ச்சியான கொள்கை அறிவிப்புகள் இருந்தபோதிலும், நாட்டின் செல்வமும் அரச வரவு-செலவுத் திட்டமும் பெருமளவு எரிசக்தி துறையிலிருந்து ஈட்டப்படும் வருமானத்தையே சார்ந்திருக்கிறது. 20013-ன் முதல் காலாண்டில், மொத்த வரவு-செலவுத் திட்ட வருவாயில் எண்ணெய் ஏறக்குறைய 50 சதவீதத்தினை அளித்தது. 2014-க்கான குறைவாக மதிப்பிடப்பட்ட எண்ணெய் விலைகள் ரஷ்யாவின் வரவு-செலவுத் திட்டத்தினை ஆபத்தில் தள்ளுகிறது என்ற எச்சரிக்கையினை அடுத்து, சர்வதேச நாணய நிதியத்திற்கு வெட்டுக்கள் தேவைப்படுகிறது.  

அதே நேரத்தில், முதலீட்டாளர்கள் தங்களது இலாபங்களை வெளியே எடுப்பதுபோல், ரஷ்யா பெரும் அளவிலான மூலதன வெளியேற்றத்தினையும் எதிர்கொள்கிறது. 2013 மே மாதத்தில் மட்டும், 9 பில்லியன் டாலர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளதாக The Economist தெரிவிக்கிறது.

கடந்த மாதம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 2014-2016 க்கான தனது வருடாந்தர உத்தேசிக்கப்பட்ட வரவு-செலவு அறிக்கை சொற்பொழிவில், நாட்டின் மெதுவாகும் வளர்ச்சிக்கு, நாடு செலவினத்தை இனிமேலும் அதிகரிக்க முடியாது என்று பொருள் என்பதாக வலியுறுத்தி, சிக்கன திட்டங்கள் வரவிருப்பதை எச்சரித்தார். இந்த நேரத்தில், செய்தி நிறுவனமான RIA உடனான ஒரு நேர்காணலில், அது ஒருதங்கியிருக்கும் மனோநிலையை ஏற்படுத்தியதுடன் தீபகற்பத்தை சமூக சீர்கேட்டாளர்களுக்கான கவர்ந்திழுக்கும் துருவமாக மாற்றியது என்று வலியுறுத்தி ஐரோப்பிய சமூக நல மாதிரியின் எச்ச சொச்சங்களை புட்டின் தாக்கினார்.

அதிகரித்து வரும் சமூக அதிருப்தி இருந்தபோதிலும், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக அதிகரித்துவரும் அரச செலவினங்களின் உத்தரவாதங்களை புட்டின் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். செலவினங்களை 33 பில்லியன் டாலர்களாக குறைக்கும் அரசின் திட்டத்தினை அவரது நிதியமைச்சர் அறிவித்தபோதிலும், வாக்காளர்களுக்கு கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது வழங்கப்பட்ட குறையக்கூடும்என்ற தனது சமூக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று புட்டின் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். ஆயினும், அவரது அரசாங்கத்தின் திட்டங்களுடன் இந்நிலைமைகள் முற்றிலும் பாதகமாகவே உள்ளன.

இலஞ்சம் மற்றும் வரி ஏய்ப்பினை சீர் செய்து கொண்டிருக்கிறது என்ற க்ரெம்ளினின் கூற்றுகள் இருந்தபோதிலும், நிதியமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பு நாட்டின் பொருளாதார மற்றும் நிதிச் சரிவு சுமையை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் வைக்க நினைப்பதைக் காட்டுகிறது.

1991ல் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் ரஷ்யாவிலும் முதலாளித்துவ புனருத்தாரணத்தை அடுத்து ரஷ்ய தொழிலாளர்களின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களின் பல அலைகளில் புதியதொன்றிற்கு புட்டின் ஆட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில், குறிப்பாக ஓய்வூதிய நிதி குறிவைக்கப்படுகிறது. மட்டுப்படுத்தும் பரிமாற்றங்களிலிருந்து அரச ஓய்வூதிய நிதி வரையிலான முன்மொழியப்பட்ட வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள், ஓய்வூதியங்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகின்ற அடிப்படையை மாற்றுவதன் மூலம் சரிப்படுத்தப்பட உள்ளன.

தனிநபர் சம்பளப்பட்டியல் மற்றும் சேவை காலத்தினை அடிப்படையாக வைத்து ஓய்வூதியத்தை நிர்ணயிப்பது; ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு ஒரு நபர் பணியாற்றியிருக்க வேண்டிய வருடங்களின் எண்ணிக்கையை 5 லிருந்து 15 வருடங்களாக அதிகப்படுத்துவது; அவனது / அவளது சொந்த பங்களிப்பினால் நிதியளிக்கப்படும் ஒரு நபரின் ஓய்வூதிய சதவீதத்தினை உயர்த்துவது; மற்றும் அதிகாரபூர்வ பணி ஓய்வு வயதினைத் தாண்டி பணியாற்ற முடிவெடுப்பவர்களுக்கு நிதி ஊக்கத்தொகையினை வழங்குவது; ஆகியவற்றை இந்த மாற்றங்கள் உள்ளடக்கும்.

2014 ஜனவரி 1 லிருந்து நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற இந்த சீர்திருத்தங்கள், ரஷ்யாவில் ஓய்வூதியத்திற்கு தகுதியுள்ள நபர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை பங்களிப்பு செய்வதற்கான தனி நபரின் தேர்வினை அதிகம் சார்ந்திருப்பதாக செய்வதன் மூலம் ஓய்வூதிய நிதியினை சீர்குலைத்து, பணி ஓய்வு வயதினை அதிகரிக்கும்.

பிந்தையது அரசாங்க ஊழியர்களுக்கான குறிப்பிட்ட இலக்காகும். முறைப்படி பெண்கள் 55 வயதிலும் ஆண்கள் 60 வயதிலும் ஓய்வு பெற அனுமதிக்கப்படும் வேளையில், ஓய்வூதியங்களை எடுக்காமல் கூடுதல் வருடங்கள் பணியாற்றுபவர்கள் ஓய்வு பெறும்போது பெறுவதைவிட 50 சதவீதம் அதிகமாக பெறுவார்கள். தற்போது ரஷ்யாவில் மாத சராசரி ஓய்வூதியம் 350 டாலர்கள் மட்டுமே கொடுக்கப்படுகையில், பலர் இதைத் தேர்வு செய்வார்கள். நாட்டில் ஆண்களின் வாழ்நாள் காலம் 64 வருடங்களாக இருக்கையில், பல ஆண்கள் ஓய்வூதியத்தை எடுப்பதற்கு முன்னதாகவே இறந்துவிடுவார்கள் சந்தேகமின்றி கொள்கை தயாரிப்பாளர்கள் வரவேற்கும் ஒரு உண்மையாகும்.  

தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்ற அரச ஓய்வூதியங்களில் சிறு அதிகரிப்பின் குறைந்தபட்ச ஆதாயங்களையும் இந்த ஓய்வூதிய சீர்திருத்தம் பலவீனமாக்கும். 2014 ஏப்ரலில், ரஷ்யாவில் சராசரி ஓய்வூதியம் ஒரு மாதத்திற்கு 11,144 ரூபிள்களை (400 டாலர்களை விட குறைவாக) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ல் அது ஒரு மாதத்திற்கு 13,200 ரூபிள்களாக (கிட்டத்தட்ட 440 டாலர்கள்) உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அரச ஓய்வூதிய நிதிக்கான பரிமாற்றங்களை நிறுத்துவதற்கான தற்போதைய திட்டம் இவையனைத்தையும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது.

வாக்குறுதியளிக்கப்பட்ட உயர்வுகள் செயல்படுத்தப்பட்டன என்றாலும், வறுமை விகிதங்கள் இருக்கின்றன, அதன் தாக்கம் பண வீக்கத்தின் வாயிலாக அடிப்படைத் தேவைகள் மற்றும் குறிப்பாக, சுகாதாரத்திற்கான அரச ஆதரவினைக் குறைப்பதன் மூலமாக அழிக்கப்படும். உத்தேசிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் பிராந்திய அரசாங்கங்களை பாழாக்கும். சுகாதாரம், கல்வி மற்றும் பயன்பாடுகள், கூட்டாட்சி செலவினங்களை குறைப்பதை கடந்து, இச்சேவைகளை வழங்குவதற்கான பொறுப்புகள் உள்ளூர் நிர்வாகத்திற்கெதிராக பெருமளவு குறைக்கப்படும்.

அதிகரித்துவரும் சிக்கலான பொருளாதார நிலைமைகள் இருந்தபோதிலும், இந்த செலவினங்களை தடுக்க முடியாமையால், ரஷ்யாவில் பிராந்திய அதிகாரிகள் சமூக திட்டங்களை சுலபமாக வெட்டிவிடுவார்கள் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் விளைவாக ரஷ்ய மாநிலங்களில் அமைதியின்மைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் வர்த்தக செய்தி நிறுவனமான Finmarket.ru எச்சரித்துள்ளது. மக்கள் மீது சிக்கனங்களை சுமத்தும் வேளையில், இராணுவ மற்றும் உள் கட்டமைப்பு உருவாக்கத்தில், எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் மேற்சொன்னபொது-தனியார் கூட்டு செயல்பாடுகள் மூலமாக அரசு செலவினங்களில் மாற்றம் செய்ய புட்டின் ஆட்சி திட்டமிடுகிறது. ஒரு வளர்ச்சி-சார்ந்தமூலோபாயம் என்று சொல்லப்பட்ட பிந்தையது, செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பெரும் நிறுவன நலன்கள் மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு தேவையற்ற செலவாக இருக்கும். திட்டமிடப்பட்ட 450 பில்லியன் ரூபிள்கள் (13.6 பில்லியன் டாலர்கள்) திட்டத்தின் பெரும் பலனடைபவர்களாக அவர்கள் இருப்பார்கள்.   

தீவிரமாக அதிகரித்துவரும் இராணுவச் செலவினம், 2013 லிருந்து 2016 வரை 63 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்ட பாதுகாப்புத்துறை மீதான செலவினங்கள் ஆகியவற்றிலும் க்ரெம்ளின் உறுதியாக இருக்கிறது. தேசியப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மீதான செலவினங்களிலும் குறிப்பிடும்படியான அதிகரிப்பு இருக்கும், அதே காலகட்டத்தில் அது 9 சதவீதமாக உயரும். தாராளவாத எதிர்ப்பு பிரிவுகள், குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் அலெக்ஸி குட்ரின், இராணுவ செயவினங்களை பல டிரில்லியன் ரூபிள்களாக அதிகரிக்கும் திட்டத்தில் உறுதியாக இருப்பதற்காக, புட்டினை விமர்சித்துள்ளனர். குட்ரின், ஓய்வூதிய வயதினை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட சமுதாய வெட்டுக்களுக்கான பிரபல வழக்கறிஞராவார்.